(Reading time: 19 - 37 minutes)

ந்துருவும் இளவரசனும் அவரவர்க்கு வாங்கியதை அவரவர் கையில் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

இளவரசன் இனியாவிற்கு ப்ரூட்டியை கொடுத்தான். அவள் நிமிர்ந்தே பார்க்காமல் “தேங்க்ஸ்” என்று கூறி வாங்கி கொண்டாள்.

“சந்துரு சென்று அவன் இடத்தில் அமர்கையில் இனியாவின் தந்தை அவனிடம் சந்துரு நீ போய் அங்க உட்காரு. என் தங்கச்சியை கொஞ்சம் இங்க வர சொல்லுப்பா” என்றார்.

சந்துரு எழுந்து வந்து “அம்மா மாமா உன்ன அங்க வர சொல்றாரு” என்றான்.

அவன் தாய் எழுந்து சந்துருவின் இடத்திற்கு சென்று விட்டார்.

சந்துரு சிரித்துக் கொண்டே இனியாவிற்கும் அவன் அண்ணனிற்கும் இடையில் அமர்ந்துக் கொண்டான்.

இனியா கையில் இருந்த ப்ரூட்டியையே பார்த்துக் கொண்டிருந்தாள். இளவரசனோ இப்படியும் அப்படியும் திரும்புகிற சாக்கில் இனியாவை பார்த்துக் கொண்டிருந்தான்.

சந்துரு அவன் அண்ணனிடம் திரும்பி “அண்ணா. நீ இங்க வரியா. நான் கார்னர் சீட்ல உட்கார்ந்துக்கிறேன்” என்றான்.

உடனே இளவரசன் முகம் பிரகாசமாக மாறி உடனே சரி என்று தலை அசைத்து உடனே மாறி அமர்ந்தான்.

இனியாவிற்கு தான் இதெல்லாம் இம்சையாக இருந்தது. இந்த சந்துரு இதெல்லாம் தெரிந்து தான் செய்கிறானா, இல்லை தெரியாமல் செய்கிறானா”

மறுபடியும் படம் ஆரம்பித்து விட்டது. இனியா படம் பார்க்கும் சாக்கில் திரையை விட்டு பார்வையை விளக்கவேயில்லை.

இளவரசனுக்கு மனதில் குதூகலமாக இருந்தது. அவனின் மனம் யாஹூ என்று குதித்துக் கொண்டிருந்தது. இனியா என் மாமா பொண்ணு. இனி எனக்கு எந்த பயமும் கிடையாது. இனியாக்கு என் மேல கோபம் இருந்தாலும் அவளுக்கு என்ன பிடிக்கும்ன்றது அவ என்ன திரும்பி திரும்பி தேடினதுலையே தெரிஞ்சி போச்சி. “ஓ காட் தேன்க் யூ” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டிருந்தான்.

எப்படியோ மனம் தெளிஞ்சி அவன் திரையை பார்க்கையில் நஸ்ரியா ரிங்க ரிங்கா என்ற பாடலோடு டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தார். இளவரசன் இது என்ன படம் என்று யோசிக்கையிலே ஆர்யாவை காண்பிக்கவும் “ஓ ராஜா ராணிக்கு வந்திருக்கோமா, இவ்வளவு நேரம் என்ன படம்னு கூட தெரியாமலா இருந்தேன்” என்று எண்ணி சிரித்துக் கொண்டான்.

“என் இனியா கூட பார்க்கிற முதல் படம் இப்படி இருக்கும்னு நான் நினச்சே பாக்கல” என்று நினைத்து அதற்கும் அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.

திரும்பி தம்பியை பார்த்தான். அவன் தீவிரமாக படம் பார்த்துக் கொண்டிருந்தான். இளவரசன் இனியாவின் புறம் திரும்பி அவளின் பக்கத்தில் யார் அமர்ந்திருக்கிறார் என்று பார்த்தான். ஜோதி தான் இனியாவின் பக்கத்தில் அமர்ந்திருந்தார். ஜோதியும் பாலுவிடம் ஏதோ பேசியவாறே படத்தை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார். சரி அவரும் இப்போதைக்கு இந்த புறம் திரும்ப மாட்டார் என்று எண்ணி இனியாவிடம் தலையை சரித்து,

“நாம் பார்க்கும் முதல் படம் இப்படி பார்ப்போம்னு நினைக்கவே இல்லைல” என்றான்.

இனியா அவனை திரும்பி உஸ்னமாக ஒரு பார்வை பார்த்தாள்.

இளவரசன் “இனியா இங்கே பார்த்தாயா, நானும் ப்ரூட்டி தான் வாங்கிட்டு வந்திருக்கேன். ஏன் தெரியுமா, அங்க பாரு, உங்க அக்கா, மாமா ரெண்டு பெரும் 7up, என் மாமா அத்தை பாப் கார்ன், நம்ம ரெண்டு பெரும் ப்ரூட்டி. எப்படி, நான் என் மாமனாரை தான் பாலோ பண்ணுவேன்ப்பா” என்றான்.

இனியா திரும்பி முறைத்தாலே தவிர வேறு ஏதும் பேசவில்லை.

இளவரசனோ இனியாவின் முறைப்பை கண்டு கொள்ளாமல் வசீகரமாக புன்னகைத்தவாறே “ஒரு மாமா பொண்ணு அத்தை பையனை இப்படியா டார்லிங் பார்ப்பா. உனக்கு நான் நிறைய சொல்லிக் கொடுக்கணும் போல இருக்கே” என்றான்.

இனியா கோபத்துடன் திரும்பி “வேண்டாம், நான் ஏதும் பேச வேண்டாம்னு பார்க்கறேன், என் வாயை கிளறாதீங்க, அப்புறம் உங்களுக்கு தான் கஷ்டம்” என்றாள்.

“என்ன ஸ்வீட்டி, ஐ நோ நீ என் மேல கோபமா தான் இருப்ப, பட் இப்ப நம்ம ரெண்டு பாமிலியும் சந்தோசமா இருக்கும் போது நீ அதை கெடுக்க மாட்டனும் எனக்கு தெரியுமே.” என்று சிரிப்புடனே சொல்லி முடித்தான்.

“என்ன மிஸ்டர் மிரட்டுறியா”

“ப்ளீஸ் டார்லிங். என்ன வழக்கம் போல இளான்னு கூப்பிடு, நீ இப்படி என்ன யாரோ மாதிரி கூப்பிடறதை என்னால தாங்கிக்க முடியல”

அவன் குரலில் இருந்த வருத்தத்தால் இனியாவால் அதற்கு மேல் அவனுடன் வாதாட இயலவில்லை. இளவரசன் எவ்வளவோ பேசியும் அவள் அமைதியாகவே இருந்தாள்.

ரு வழியாக படம் முடிந்து எல்லோரும் வெளியே வந்த பிறகு ராஜலக்ஷ்மி தன் அண்ணனை அவர் குடும்பத்தோடு மறுநாள் அவர்கள் வீட்டுக்கு வர வேண்டும் என்று கூறினார்.

ராஜகோபாலும் சரி என்று கூறுகையில் சந்துரு இடையிட்டு “அம்மா. இன்னைக்கு அண்ணனுக்கு ஒரு பெரிய காண்ட்ராக்ட் சைன் ஆகி இருக்கு. வழக்கமா நாம இப்படி ஏதும் பெரிய ஆர்டர் கிடைச்ச வெளிய ஹோட்டல்க்கு போய் அதை செலிப்ரேட் பண்ணுவோம் இல்ல. இன்னைக்கு நமக்கு எத்தனை முக்கியமான விஷயம் நடந்திருக்கு. நாம இதை கொண்டாட வேண்டாமா, வெறும் சினிமாவோட முடிச்சிடுவீங்களா. நாம இன்னைக்கு வெளிய போய் டின்னர் சாப்பிடறோம்” என்றான்.

ராஜலக்ஷ்மியும் சிரிப்புடனே அதை ஆமோதித்து “என்ன அண்ணா சொல்றீங்க. சந்துரு சொல்ற மாதிரி நாம எல்லோரும் வெளிய போய் சாப்பிடலாமா” என்றார்.

“சரிம்மா. அதுக்கென்ன. போனா போச்சி. நீ என்னம்மா சொல்ற என்று மனைவியை பார்த்துக் கேட்டார்.”

(இளவரசன் இனியாவை பார்த்தான். அந்த பார்வையில் “பார்த்தாயா, நாமும் இப்படி தான் இருக்கணும் என்ற பொருள் பொதிந்திருந்தது”)

“போலாங்க. இவ்வளவு நாள் கழிச்சி நாம எல்லாம் ஒன்னா சேர்ந்திருக்கோம். அதை நாம கொண்டாட வேண்டாமா”

அனைவரும் ஒரு பெரிய 5 ஸ்டார் ஹொடலிற்கு சென்றனர். இந்த முறை ராஜகோபாலும் லக்ஷ்மியும் இளவரசனை நடுவில் உட்கார வைத்துக் கொண்டு அவனுடன் பேசிக் கொண்டிருந்தனர்.

இளவரசனின் தாய் தந்தை காதல் திருமணம் செய்திருந்ததால் அவர்களுக்கு உறவினர் என்று யாரும் இல்லை. ஆதலால் அவன் தாய் தந்தையை தவிர யாரும் இப்படி உரிமையாய் பேசி அவனுக்கு பழக்கம் இல்லை. அதனால் இது அவனுக்கு புது அனுபவமாக இருந்தது. இப்படி அக்கறையாக பேச உறவினர் இல்லை என்பதை அவன் உணர்ந்ததே இல்லை. ஆனால் இன்று அவர்களின் பேச்சு இத்தனை வருடங்கள் இப்படி உறவினர் என்று யாரும் இல்லாமல் வாழ்ந்து விட்டோமே என்று அவனுக்கே கஷ்டமாக இருந்தது.

அவன் தாயின் நிலையோ அதற்கு மேல் உணர்ச்சி வசப் பட்டிருந்தார்.

ஒரு வழியாக வீடு வந்த பிறகு இளவரசன் சந்துருவிடம் விவரம் கேட்க ஆரம்பித்தான். சந்துரு கேலியாக சிரித்தவாறே அவன் கேட்ட விவரம் சொல்ல ஆரம்பித்தான்.

“எப்படி டா சந்துரு, அவங்க நம்ம சொந்தக் காரங்கன்னு தெரிஞ்சிது. நானும் அம்மாவும் நேத்து அவங்க வீட்டுக்கு போன போது கூட எங்களுக்கு தெரியலையே டா”

“அண்ணா. நீங்க போன போது அங்க நம்ம மாமா இல்லை. நம்ம அம்மா கல்யாணம் பண்ணிக்கிட்ட அப்ப மாமாக்கு கல்யாணமே ஆகலையே. சோ அத்தைக்கு நம்ம அம்மாவை தெரியலை. அதுவும் இல்லாம அம்மாவை மாமா ராஜி ராஜின்னு தான் கூப்டுவாராம். அத்தைக் கிட்ட அம்மாவை பத்தி சொல்லும் போதும் ராஜீன்னு தான் சொல்லி இருக்காரு. அதனால நீங்க போன போது தெரிய வரலை. ஆனா நாங்க எல்லாம் யாரு” என்று அவன் தற்பெருமையை கூறிக் கொண்டிருந்தான்.

“டேய் டேய் நிறுத்துடா. உன் பெருமையை எல்லாம் நான் அப்புறம் கேட்கறேன். முதல்ல எனக்கு டீடெய்லா சொல்லு டா.”

“ஓகே. ஓகே. நான் அவங்க வீட்டுக்கு போய் இனியாகிட்டவும் அத்தைக்கிட்டவும் பேசிட்டு இருந்தேன். அப்ப தான் திடிர்னு மாமா வந்தாரு. வந்துட்டு என்ன யாரு என்னன்னு கேட்டுட்டு இருந்தாரு. நானும் நம்ம பாமிலி பத்தி எல்லாம் சொல்லிட்டு இருந்தேன்.”

“அவர் எதேர்ச்சையா சொந்த ஊரு எதுன்னு கேட்டாரு. நானும் தஞ்சாவூர் பக்கம் திருக்காட்டுப்பள்ளி. அம்மா அப்பா லவ் மேரேஜ், அதனால அங்க எங்களுக்கு யாரும் இல்லைன்னு சொன்னேன்.”

“அவர் அம்மா அப்பா பேரு என்னன்னு கேட்டாரு. நான் சொன்ன உடனே அவர் முகமே எப்படி மாறிடுச்சி தெரியுமா அண்ணா. அம்மா போட்டோ இருக்கான்னு கேட்டாரு. நான் என் மொபைல்ல இருக்கற நம்ம அம்மா அப்பா போட்டோ காண்பிச்சேன். அப்புறம் தான் அவர் நம்ம மாமான்னு சொன்னாரு.”

அப்புறம் அம்மாவை ஏதும் சொல்லாம கொஞ்சம் சீக்கிரம் அவங்க வீட்டுக்கே வர சொன்னோம். அம்மாவும் என்னவோ ஏதோன்னு பயந்து சீக்கிரம் வந்தாங்க. அப்புறம் மாமாவை பார்த்து சந்தோசத்துல அழுதாங்க. அப்புறம் என்ன. எல்லோரும் இத்தனை வருஷத்து கதையையும் பேசிட்டே இருந்தாங்க.

இவங்க பேசி பேசியே எங்கள எல்லாம் போர் அடிச்சாங்க. நான் ஜோதி அண்ணி, பாலு அண்ணா எல்லாரும் பிளான் பண்ணி எல்லாரும் எங்கயாச்சும் போலாம்னு முடிவு பண்ணி கடைசியா அபி மூவிக்கு தான் போகணும்ன்னு அடம் பண்ணதால ஓகே.ன்னு மூவிக்கு வந்தோம். அப்புறம் நடந்தது எல்லாம் உனக்கே தெரியும்ல. ஓகே. வா. இன்னும் வேற எதாச்சும் டவுட் இருக்கா.

“வேற ஒன்னும் இல்லடா. நான் ரூம்க்கு போறேன். நீயும் போய் படு. நாளைக்கு அவங்க எல்லாம் வராங்க இல்ல. நாளைக்கு கொஞ்சம் வேலை இருக்கும். நீ போய் சீக்கிரம் படு”

“ம்ம்ம். உன் வேலை முடிஞ்ச உடனே என்னை கழட்டி விடுற இல்லை, பாத்துக்கறேன் பிரதர். எனக்கு ஒரு டைம் வரும்.”

“டேய் ரியல்லி ஐயம் டையர்ட்.”

“ஓகே. குட் நைட். ஸ்வீட் ட்ரீம்ஸ் அண்ணா” என்று கண் சிமிட்டு விட்டு போனான்.

தன் அறைக்கு சென்ற இளவரசனுக்கு தான் தூக்கம் கண்களை தழுவ மறுத்தது. இனியா இனியா என்று அவன் மனம் முழுக்க அந்த பெயரே நிறைந்திருந்தது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.