(Reading time: 19 - 37 minutes)

மொபைலை எடுத்து இனியாவிற்கு “என்ன பண்ற மாமா பொண்ணே. இங்க உன் அத்தை பையனுக்கு தூக்கம் வரலை” என்று அனுப்பினான்.

அவன் எதிர்பார்த்ததை போலவே அங்கிருந்து ரிப்ளை வரவில்லை.

இருந்தும் மனம் தளராமல் “நீ தூங்கி இருக்க மாட்டன்னு எனக்கு தெரியும். என் நிலைமை தான் அங்க உனக்கும் இருக்கும்னு எனக்கு தெரியும். சும்மா ஒரு மெசேஜ் பண்ணா நான் கொஞ்சம் ரிலாக்ஸா தூங்குவேன்ல. உன் கூட சண்டை போட்டு இன்னும் ஒழுங்கா தூக்கமே இல்லை. இன்னைக்கு மனசு நிறைவா இருக்கு. இருந்தாலும் தூக்கம் வரலை. நீ மட்டும் தூங்குங்க மாமான்னு ஒரு மெசேஜ் அனுப்பினா கூட போதும். நான் நிம்மதியா தூங்கிடுவேன் தெரியுமா” என்று அனுப்பினான்.

இனியாவும் அவன் நினைத்ததை போலவே மெசேஜ் பார்த்துவிட்டு தான் ரிப்ளை செய்யாமல் இருந்தாள்.

“இருந்தாலும் இவனுக்கு ரொம்ப தான் தைரியம். இவனை மாமான்னு வேற கூப்பிடனுமாம். நான் மெசேஜ் அனுப்பிட்டா இவன் தூங்கிடுவானாமா, என்ன தூங்க விடாம இம்சை தான் பண்ணுவான்” என்று எண்ணிக் கொண்டாள்.

திரும்பவும் இனியா ரிப்ளை செய்யவில்லை.

சிறிது நேரம் பார்த்து விட்டு இளவரசனே “ஏய் செல்லம் நீ என் மாமா பொண்ணுன்னு தெரிஞ்ச உடனே நான் ரொம்ப உரிமை எடுக்கறேன்னு அங்க என்ன திட்டுற இல்ல, நீ மட்டும் என்னவாம், தியேடர்ல என்ன மிஸ்டர் மிரட்டுறியான்னு கேட்ட”

“மிஸ்டர் எல்லாம் போட்டு மிரட்டுரியான்னு ஒருமைல கூப்பிடுற, என்ன செல்லம் இது, நான் இதை கம்ப்ளைன்ட்டா எல்லாம் சொல்லல்ல. எனக்கு நீ எப்படி கூப்பிட்டாலும் பிடிக்கும் செல்லம்.”

இனியா இதை படித்து நான் எப்படி இப்படி கூப்பிட்டேன். ஆமா அது உண்மை தான். இப்பக் கூட அவன் இவன்னு தானே நினைச்சேன், எனக்கும் அத்தை பையன்னு தெரிஞ்ச உடனே தைரியம் வந்துடுச்சா என்று குழம்பிக் கொண்டிருந்தாள்.

மறுமடியும் இளவரசன் “ஓகே. செல்லம் நீ ரிப்ளையும் செய்ய மாட்ட. பட் நான் மெசேஜ் பண்ற வரைக்கும் தூங்கவும் மாட்ட. சோ நான் இத்தோட என் மெசேஜ் முடிச்சிக்கறேன். நாம நாளைக்கு மீட் பண்ணுவோம். என்னால ரொம்ப நாளைக்கு எல்லாம் இப்படி தாங்கிக்க முடியாது டார்லிங். ப்ளீஸ் என் சாரியை அச்செப்ட் பண்ணிட்டு என் கிட்ட பேசிடும்மா. ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ், ஓகே. குட் நைட் செல்லம்ஸ்.. ஸ்வீட் ட்ரீம்ஸ்...”

இந்த மெசேஜ் பார்த்த இனியா, குட் நைட் வேற. இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. இனி நான் தூங்கின மாதிரி தான் என்று நினைத்துக் கொண்டாள்.

இப்போதைக்கு தூக்கம் வர போவதில்லை என்று எண்ணிய இளவரசன் தனது லேப்டாப்பை எடுத்து வேலை செய்ய ஆரம்பித்தான். தனது அசிஸ்டன்ட்டிற்கு நாளை வர இயலாது என்றும் நாளை என்ன செய்ய வேண்டும் என்பதை மெயில் அனுப்புவதாகவும் மெசேஜ் அனுப்பி விட்டு, நாளை செய்ய வேண்டிய வேலையை மெயில் அனுப்பினான்.

நள்ளிரவு தாண்டியும் இருவரும் தூங்காமல் மற்றவரை பற்றியே எண்ணிக் கொண்டிருந்தனர். எப்போது தூங்கினார்கள் என்றே தெரியாமல் உறங்கி போயினர்.

காலையில் தாமதமாக விழித்த இளவரசன் ப்ரஷ் மட்டும் செய்து விட்டு அவசர அவசரமாக விரைந்து கீழே வந்தான். அங்கே ஏற்கனவே தயாராகி இருந்த சந்துரு தன் அண்ணனை பார்த்து சிரித்தான்.

“என்னடா ஏன் என்னை பார்த்து சிரிக்கிற”

“இல்லை அண்ணா. உன்னை இப்படி அவசர அவசரமா வர மாதிரி நான் பாத்ததே இல்லை. அதான், அது சரி, அப்படி என்ன அவசரம்” என்றான்.

“அதெல்லாம் ஒன்னும் இல்லை.”

“சரி. என்ன கண்ணெல்லாம் சிவந்து இருக்கு. நைட் எல்லாம் தூங்கவே இல்லை போல” என்றான்.

(இளவரசன் மனதிற்குள் இவன் ஏதும் தெரிஞ்சி இப்படி பேசுறானா, இல்லை இவன் எதேர்ச்சையா பேசுறது நமக்கு இப்படி தோணுதா என்று நினைத்துக் கொண்டான்)

“ம்ம்ம். நைட் கொஞ்சம் வேலை இருந்துச்சி. இன்னைக்கு வீட்டுக்கு மாமா பாமிலி எல்லாம் வராங்க இல்லை. அதனால இன்னைக்கு ப்ரீ பண்ணிக்க நைட் வொர்க் பண்ண வேண்டியதா போச்சி”

“ஓ ஓகே. ஓகே.” என்று இழுத்தான்.

“சரி இன்னும் அவங்க யாரும் வரலையா. அம்மா எங்க” என்று வீட்டை சுற்றி பார்வையை சுழற்றினான்.

“இப்ப தான் போன் பண்ணாங்க. மாமாக்கு முக்கியமான வேலை இருக்குதாம். அவரும் அத்தையும் மதியத்துக்கு மேல வராங்களாம். இப்ப இனியா, ஜோதி அண்ணியை மட்டும் அனுப்பி வக்கறேன்னு சொன்னங்க, எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க, அவங்க இங்க வந்து தான் சாப்பிடணும்ன்னு அம்மா கண்டிஷன் வேற போட்டிருக்காங்க” என்றான்.

“ஓ ஓகே. அப்ப நான் போய் சீக்கிரம் குளிச்சிட்டு வந்திடுறேன்” என்று விட்டு அவன் பதிலை கூட எதிர்பார்க்காமல் மாடிக்கு ஓடி விட்டான்.

இளவரசன் குளித்து விட்டு அவன் அறையை விட்டு வெளியே வரும் போதே கீழே பேச்சுக் குரல் கேட்டது.  உடனே அவன் கீழே இறங்கி வந்தான். மாடி வளைவில் அவன் நிற்கும் போது இனியாவின் பார்வை அவனை தேடுவதை கவனித்தான். அவனுக்கு இப்போது தான் பெரும் நிம்மதியாக இருந்தது.

கீழே அவன் சென்ற உடன் இனியா அவனை கவனிக்காதது போல் சந்துருவிடமும் அவன் அன்னையிடமும் பேசிக் கொண்டிருந்தாள். இளவரசன் மனதிற்குள் சிரித்துக் கொண்டான்.

ஜோதி தான் இளவரசனிடம் பேசிக் கொண்டிருந்தாள். அபியும் கூட வந்திருந்தாள். அவள் தான் அந்த வீட்டிற்கே கேட்கும் அளவுக்கு சலசலத்துக் கொண்டிருந்தாள்.

பின்பு அனைவரும் பேசிக் கொண்டே சாப்பிட்டார்கள். இளவரசனின் பார்வை இனியாவிடமே தான் இருந்தது. ஆனால் அவள் தான் கண்டுகொள்ளாமல் இருந்தாள்.

சாப்பிட்டு முடித்தவுடன் ராஜலக்ஷ்மி தனது இரண்டு மருமகள்களையும் அருகில் அமர வைத்து பேசிக் கொண்டிருந்தார். இனியாவிற்கு தான் மாறி மாறி நன்றிக் கூறிக் கொண்டிருந்தார்.

“நீ இல்லன்னா நான் கடைசி வரைக்கும் என் அண்ணனை பார்க்காமலே போய் சேர்ந்திருப்பேன். பெரிய கூட்டு குடும்பத்துல பிறந்துட்டு இவங்க அப்பா மேல இருந்தா பிரியத்தால எல்லாரையும் பிரிஞ்சி வந்துட்டேன். என்ன தான் இங்க இவங்க அப்பா சந்தோசமா வச்சிருந்தாலும் அவ்வளவு பெரிய குடும்பத்துல எல்லார் கூடவும் இருந்துட்டு இங்க தனியா இருக்கறது எனக்கு கஷ்டமா தான் இருந்துச்சி. அதுவும் ராஜா அண்ணன்னா எனக்கு ரொம்ப இஷ்டம்.” என்று பேசிக் கொண்டே சென்றார்.

“விடுங்க அத்தை. நாம எல்லாம் சேரணும்னு இருக்கு. அதான் அதுக்கு ஏத்த மாதிரி சூழ்நிலை அமைஞ்சி நாம சேர்ந்திட்டோம். இதுல என் பங்குன்னு எதுவும் இல்லை”

“நீ என்ன சொன்னாலும் உன்னால தான் நம்ம குடும்பம் சேர்ந்துது மா”

“சரி அதை விடுங்க அத்தை” என்று இனியா எப்படியோ பேச்சை மாற்றினாள்.

சந்துரு தான் “அம்மா. நானும் அண்ணனும் இங்க தான் இருக்கோம். எங்களையும் கொஞ்சம் கவனிங்க” என்றான்.

“போங்க டா. நீங்க எங்க போக போறீங்க. எனக்கு ஒரு பொம்பள குழந்தை இல்லையேன்னு எனக்கு எப்பவுமே ஏக்கம் தான். இப்ப என் மருமகள்களை பார்த்தாச்சும் அந்த குறையை தீர்த்துக்கறேன்” என்றார்.

“அது சரிம்மா. நேத்து மாமா வீட்டுல நம்மளை எப்படி கவனிச்சாங்க. இப்ப நாம சாப்பிட்டு எவ்வளவு நேரம் ஆச்சி. ஒரு ஜூஸ் எடுத்துட்டு வர சொல்லி இருக்கலாம்ல. அப்புறம் அண்ணிங்க நம்ம கவனிப்பு சரி இல்லைன்னு சொல்லிட போறாங்க” என்றான்.

“ஆமா டா. அது சரி. நானே போய் என் மருமகள்களுக்கு எடுத்துட்டு வரேன்” என்று உள்ளே சென்றார்.

இனியாவும் ஜோதியும் வேண்டாம் அத்தை, அப்புறம் சாப்பிடலாம்னு எவ்வளவோ சொல்லியும் அதை கேட்காமல் உள்ளே சென்று விட்டார்.

பின்பு இவர்கள் அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

ஜோதிக்கு போன் வரவும் அவள் போனை எடுத்துக் கொண்டு சென்றாள்.

திடீரென்று இளவரசன் “சந்துரு உனக்கு கும்கி படத்துல பிடிச்ச சாங் சொல்லேன்” என்றான்.

“ஏன் அண்ணா. திடிர்னு கேட்கற.”

“இல்ல டா. நைட் அந்த பிலிம் சாங்ஸ் கேட்டுட்டு இருந்தேன். எனக்கு ஒரு சாங் பிடிச்சது. அந்த பிலிம்ல மோஸ்ட்லி எல்லாம் சாங்ஸ் நல்லா தான் இருக்கு. உனக்கு எந்த சாங் பிடிக்குதுன்னு கேட்டேன்” என்றான்.

“நான் இன்னொரு டைம் கேட்டுட்டு சொல்றேன் அண்ணா. உனக்கு என்ன சாங் பிடிச்சிருக்கு”

“எனக்கு ‘ஒன்னும் புரியல’ அந்த சாங் ரொம்ப பிடிச்சிருக்கு டா, அதுல எனக்கு பிடிச்ச லைன் கட் பண்ணி வச்சிருக்கேன், கேளேன் என்று விட்டு இனியாவை பார்த்தவாறே தன் மொபைலை எடுத்து அந்த சாங் ப்ளே செய்தான்.

“அலையற பேயா அவளது பார்வை

என்னை தாக்குது வந்து என்னை தாக்குது

பரவுர நோயா அவளது வாசம்

என்னை வாட்டுது நின்னு என்னை வாட்டுது”  

தொடரும்

En Iniyavale - 10

En Iniyavale - 12

{kunena_discuss:679}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.