(Reading time: 7 - 14 minutes)
Unathu kangalil enathu kanavinai kaana pogiren
Unathu kangalil enathu kanavinai kaana pogiren

விக்கிராந்த்...

  

அப்போது தான் கடையை திறந்துக் கொண்டிருக்கும் அறிகுறியாக இரண்டு கடை சிப்பந்திகள் பொருட்களை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தனர்...

  

"சாரி, கொஞ்சம் அர்ஜன்ட்டா இரண்டு ஃபீடிங் பாட்டில் வேணும்..." என்றான் விக்கிராந்த்!

  

ஐந்து நிமிடத்தில், வேண்டியதை வாங்கிக் கொண்டு பணத்தை செலுத்தி விட்டு, மீண்டும் அபார்ட்மென்ட்டுக்கே திரும்பி சென்றான். ப்ரியா கிளம்பி இருக்க கூடாதே என்ற எண்ணத்துடன் வேக வேகமாக பைக்கை ஸ்டான்ட் போட்டு நிறுத்தி விட்டு, முன்பு அவளை பார்த்திருந்த இடத்தைப் கவனித்தான்! ப்ரியா இன்னமும் அங்கேயே தான் இருந்தாள்...!

  

நாய் குட்டிகள் பாலை குடிக்காமல் அவள் அங்கே இருந்து கிளம்ப மாட்டாள் போலும், என மனதில் நினைத்தபடி அவளருகே சென்றான்... மீண்டும் அவனின் உதட்டில் புன்னகை உதயமானது!

  

ப்ரியாவின் பக்கத்தில் சென்று, "இதை யூஸ் செஞ்சு பாருங்களேன்..." என்றான்.

  

எதிர்பாராமல் திடீரென அவனின் குரல் கேட்கவும், கொஞ்சம் திகைப்புடன் ப்ரியா திரும்பி அவன் பக்கம் பார்த்தாள்...

  

'நீ எப்போது இங்கே வந்தாய்', என்ற கேள்வியும், திகைப்புமாக விழிகள் விரித்து அவள் பார்த்த அந்த பார்வை விக்கிராந்தின் மனதில் அழுத்தமாக பதிந்தது..!

  

"சாரி ஃபார் ஸ்டார்ட்லிங்க் யூ... இந்தாங்க இதை யூஸ் செய்ங்க..." என்று வாங்கி வந்திருந்த ஃபீடிங் பாட்டிலை ப்ரியாவிடம் கொடுத்தான்...

  

ஆச்சர்யத்துடன் அதை கையில் வாங்கியவள், முகம் மலர,

  

"தேங்க்ஸ்..." என்றாள்...

  

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.