“இப்ப நான் என்ன செய்யனும்”
“இன்னும் 4 நாள் டைம் இருக்கு நல்லா யோசி 5 வது நாள் நான் உன்னை தேடி காலையில வரேன் பதில் சொல்லு நீ சரின்னு சொன்னா உன்னை கூட்டிட்டு போய் அந்த வீட்ல விடறேன் ஒரு மாசம் தங்கியிருந்து அங்க நடக்கற போட்டியில நீ ஜெயிச்சிட்டா நல்ல அன்பான வீட்டுக்கு நீ மருமகளா போயிடலாம். அழகான பையனுக்கு மனைவியாகலாம் என்ன சொல்ற”
“ஆனா அவரு என்னை லவ் பண்ணலையே”
“அவருக்கும் நான் டைம் கொடுத்துட்டுதான் வந்திருக்கேன். 4 நாள் டைம் கொடுத்துட்டேன் ரெண்டு பேரும் யோசிங்க 5வது நாள் முடிவு சொல்லுங்க நானே உங்களை சேர்த்து வைக்கிறேன் அண்ணா கொஞ்சம் தெளிவாயிட்டா போதும் உன்னை எக்காரணத்தை கொண்டும் விடவேமாட்டாரு. இப்ப கொஞ்சம் குழப்பமாயிருக்காரு அதுவும் உன்னாலதான் குழப்பம் தீர்ந்துடுச்சின்னா தானா வழிக்கு வருவாரு என்ன சொல்ற”
“அப்ப அவர் முதல்ல சொல்லட்டும் நான் வரேன்”
“இது தப்பு அவர் சொல்லாட்டி போறாரு நீ அவரை காதலிச்சா உடனே சொல்லு நான் உன்னை கூட்டிட்டு போறேன் போட்டியில ஜெயிக்கறதோட அண்ணாவோட மனசையும் ஜெயிக்கப்பாரு ஏன் உன்னால முடியாதா. சொல்லு”
“முடியும் ஆனா நான் கொஞ்சம் யோசிக்கனும் அண்ணா”
“தாராளமா யோசிம்மா 4 நாள் டைம் இருக்கு 5வது நாள் சாயங்காலம் 6 மணி வரைக்கும்தான் டைம் அதுக்கு மேல நீ நினைச்சாலும் அந்த வீட்டுக்குள்ள என்ன அண்ணா மனசுக்குள்ள கூட நுழைய முடியாது புரியுதா”
”புரியுதுண்ணா”
“சரி ஹாஸ்டல் வந்துடுச்சி இறங்கு போ போய் யோசி நல்லா யோசி தெளிவா முடிவெடு.
good epi Sasi.waiting for next epi.thanks & good luck.