(Reading time: 29 - 57 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

திட்டனும் அதை விட்டுட்டு பேசாம இருந்துட்டா எப்படி, என்கிட்டயே இவளால பேசி ஜெயிக்க முடியாதப்ப என் வீட்ல இருக்கறவங்களோட அதுலயும் என் பாட்டி தாத்தாவோட எப்படி பேசி ஜெயிப்பா. நான் வீட்ல இருக்கேன் சரி நான் பார்த்துக்குவேன் நான் இல்லாதப்ப அவளை அவளேதானே பார்த்துக்கனும் அது ஏன் அவளுக்கு புரியவேமாட்டேங்குது. 

   

இதுக்கு மேல அவள்கிட்ட பேசறது தப்பு அவளை பத்தி நினைக்கறது தப்பு முதல்ல என்னை சுத்தியே வந்தவ திடீர்ன்னு அர்ஜூன் வரவும் அப்படியே மாறிட்டா. அண்ணா சொல்றதுதான் சரி அவர் விருப்பம்தான் எல்லாம்ங்கறா, இந்த முடிவை அவளால எப்படி எடுக்க முடிஞ்சது. தப்பில்லையா. அர்ஜூனை அண்ணனா தேர்ந்தெடுக்க உடனே முடியும்ங்கறப்ப என்னை அவளுக்கு கணவனா தேர்ந்தெடுக்க முடியலையாம்மா இதை நான் நம்பனுமா 

   

இல்லை அவள் மனசுல வேற ஏதோ ஒண்ணு இருக்கு அதை நான் தெரிஞ்சிக்கனும். இப்படியே விட்டா நான் பைத்தியமாயிடுவேன் போலிருக்கு. இல்லை என் மனசுல இருக்கறத அவள்ட்ட சொல்றதுக்கு முன்னாடி அவள் மனசுல என்னதான் இருக்குன்னு நான் தெரிஞ்சிக்கனும் இப்பவே போன் பண்றேன்” என நினைத்தவன் சட்டென தன் மொபைலை எடுத்துப்பார்த்தான் மணி நடுஇரவு 2 என காட்ட 

   

”அடச்சே இப்பதான் மணி 2 ஆகனுமா நான்கூட விடிஞ்சிடுச்சின்னு நினைச்சேனே. இப்ப போன் பண்ணா எப்படி பேசுவா இல்லை அவள் தூங்கிட்டு இருப்பா காலையில நாம ஜாக்கிங் போறப்ப பேசனும் அதான் சரி. அவளோட ஹாஸ்டல் தான் தெரிஞ்சிடுச்சே முடிஞ்சா ஒரு முறை நேர்ல போய் பார்க்கனும் ஆனா விசிட்டிங் அவர் 7-8தானே சொன்னாங்க. காலையில போனா பார்க்க விடமாட்டாங்க. 

   

சரி வேணாம் அவளும் நம்மளை நினைச்சி யோசிச்சிட்டு இருப்பா யோசிக்கட்டும் நல்லா யோசிக்கட்டும். இப்பதான் என் மைன்ட் தெளிவாயிருக்கு நான் கரெக்டா இருக்கேன் இனிமே முடிவு எடுக்க வேண்டியது நான் கிடையாது அந்த நந்தினிதான் அதை அவள் புரிஞ்சிக்கிட்டு வீட்டுக்கு வந்தா சரி இப்ப நாம தூங்கலாம் என தனக்குள்ளே எதை எதையோ பிதற்றிக்கொண்டே கட்டிலில் படுத்து உறங்கலானான்.

   

ஹாஸ்டலில் நந்தினிக்கு ஒரு சொட்டு தூக்கம் கூட வரவில்லை. அவள் அர்ஜூன் சொன்ன 

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.