(Reading time: 14 - 27 minutes)

ட்டென நிறுத்து என்று கையில் செய்கை செய்தார்

"அவன் இவன் என்று பேசுகிற நீ யார் அந்த தம்பிக்கு"

"ப்ரெண்ட்! நடக்க பழகின நாள் முதல்... விவரம் தெரிந்த நாள் முதல்.. எங்க வீட்டு பெரியவங்களை நாளைக்கு கூட்டி வந்து பேசுறோம், ஆனால் நீங்க தெரிந்துக்கொள்ள கொஞ்சம் இருக்கு அங்கிள் அதை பற்றி மட்டும் தான் பேச வந்திருக்கிறோம்" என்று உறுதியான குரலில் சொன்னாள்.நேர்மை குரலில் தெரிந்தது.

அவர் பின் தலை குனிந்தப்படி கவி நின்றிருந்தாள். கொஞ்சம் இடைவெளி விட்டு அந்த பக்கம் இருந்த சாப்பாட்டு மேஜையில் அவள் அக்கா பரிமாற அவள் மாமா சாப்பிட்டு கொண்டிருந்தார். எல்லார் முகத்திலும் திகைப்பு, ஏமாற்றம், கவலை ரேகை.

கவியின் அப்பா முகத்தில் யோசனை ரேகை!!, பிடித்துக்கொண்டாள் மீரா

"கிருஷ்ணா கவியை மட்டும் தான் நேசிக்கிறான் அங்கிள், கவியை மதிப்பவன், கவியை கேட்டுபாருங்க, அமெரிக்காவில் படித்து முடித்து இங்க வந்து பிஸ்னெஸ் பார்த்துக்கிறான்" என்று இழுத்து முடித்தாள்.

கிருஷ்ணாவின் பின்புலம் அவன் வந்திருந்த பளப்பளப்பான நீள போர்ட் கார் வைத்தே சொல்லிவிடலாம் கொஞ்சம் பலம் வாய்ந்தது தான் என்று.நினைக்க குமாரவேல் கவியின் மாமாவிற்கு எரிந்தது உள்ளுக்குள்.

கிருஷ்ணா "எனக்கு கவியை கல்யாணம் செய்துகொடுங்க அங்கிள், என் அம்மாவிற்கு பெண் குழந்தை என்றால் பிடிக்கும் அதனால் கவியை நல்லா பார்த்துப்பாங்க, அப்பாவிற்க்கு அம்மா மகிழ்ச்சியும் என் சந்தோஷமும் தான் முக்கியம் அதனால் எதிர்ப்பு என் பக்கம் இல்லை அங்கிள், கவி மேல காதல், மதிப்பு,மரியாதை எல்லாமே எனக்கு இருக்கு,நல்லா பார்த்துப்பேன் கொடுங்க" என்று கண்ணில் காதலுடன் முகத்தில் மரியாதையுடன் கேட்டான்.

"நீங்க ஏதும் பேசலைங்களே தம்பி " என்று மஹியை பார்த்தார் அவர்.

மஹி "எனக்கு இரண்டு பேரையும் தெரியும் அங்கிள், கவியோட குணத்திற்கு கிருஷ்ணா ஏற்றவன், கவியோட மனசு புரிந்து நடந்துக்கொள்வான், உங்க பொண்ணுக்கு பாதுகாப்பு இருக்கும் அங்கிள்"

பத்து நிமிடம் அமைதி நிலவியது. "நாளைக்கு பெரியவங்க வர சொல்லுங்க தம்பி பேசலாம் மற்றதெல்லாம்" என்று முடித்து விட்டார்.

இவர்கள் வெளியே வந்துவிட்டனர். வீட்டினுள் அவர்களுக்குள் அலசல் நடந்தது,

வெளியே வந்ததும்

"நீ எதுக்கு மதிப்பு மரியாதை என்று தேவையில்லாமல் பேசின" என்றான் கிருஷ்ணா அவள் செய்வதெல்லாம் தப்பு என்ற தொனியில்

"அவங்க அப்பா வீக்பாயிண்ட் அது,அதனால தான் அப்படி பேசினேன்" - மீரா

"அப்போ மத்தவங்க வீக்பாயிண்ட் பார்த்து அடிக்கிறது யாரு???" என்று குரல் உயர்த்தி கேட்டான் கிருஷ்ணா.

மீரா பதிலே பேசவே இல்லை. சிறு மணித்துளி அசையாமல் நின்று பின் சகஜமாகிவிட்டாள்.

"என்ன பண்ணறதுங்க...??" சுந்தரி, கவியின் அம்மா

"இரண்டாவது பொண்ணும் கட்டிகொடுத்தா திருப்தி ஆவாங்கனு நெனச்சி தான் இப்படி முடிவு எடுத்தேன். அவ விதி எப்படி என்று தெரியலம்மா, மனசு பாரமா இருக்கு "

அப்போது அங்கே வந்த கவியின் அக்கா "அப்பா, நான் நல்லா தான் இருக்கேன். நீங்க அவ மனசுப்படி செய்ங்க.எனக்கு நல்லது பண்றேன் சொல்லி மேல மேல விட்டு கொடுத்து அவள் வாழ்கையும் கெடுக்காதீங்க"முடிந்த அளவு அவர் கோபத்தை அடக்கி திட்டவட்டமாக பேசி முடித்து சென்று விட்டார்.

"பெற்றோரை மதுரைக்கு வர சொல்லி விட்டு ஊர் சுற்றினார்.அந்த தூங்கா நகரத்தின் அழகை ரசிக்க. பஞ்சுப்போல் இட்லி, மணக்கும் மல்லி, ஜிகர்தண்டா, வாசனை குங்குமம் என்று தெரிந்தெல்லாம் ரசித்தாள் மீரா.

மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் அமர்ந்தப்படியே மஹியை கவனித்தாள். அவன் இயல்புகளை மனம் அசை போட்டது. பிறர் கோபத்தை அவன் பொறுமையான பேச்சில் கட்டுப்படுத்துவான், மீராவால் மறைமுகமாக நிறைய அவதிப்பட்டிருக்கிறான், அந்த நான்கு ஆண்டுமே நண்பர்கள் இருவருமே இவளால் அடிதடியில் சிக்கியிருக்கிறார்கள், அவன் ஊக்குவிப்பு மனதார இருக்கும், துவளும் நேரத்தில் தோள்கொடுப்பான். சிரிக்க வைப்பதில் வல்லவன். துன்புறுத்துவதில் ராட்சசன். அவனையே பார்த்துக்கொண்டு இருந்தவள் அருகில் வந்த கிருஷ்ணா

"எத்தனை போடலாம் இந்த மஹிக்கு"

மீரா அவனை பார்க்க, அவன் கண் சிமிட்டினான்

கிருஷ்ணா ரசிப்பதுப்போல் பார்த்து மச்சி என் கவிக்கு நான் துரோகம் செய்ய மாட்டேன் என்றான் கிண்டலாக.

"ஜோக் சகிக்கல" சொல்லி மீரா அகன்றாள்.

நண்பர்கள் சிரிப்பை பரிமாறிக்கொண்டனர். அதற்கும் எரிந்து விழுந்தாள் மீரா.

நாள் இனிதாக முடிந்து அடுத்த நாள் பெரியவர்கள் கூடி பேசினர். இனிதான முடிவே கிடைத்தது, கிருஷ்ணாவின் மகிழ்ச்சியை வார்த்தையில் சொல்ல முடியவில்லை.

சென்னை திரும்பும் போதும் கவிதா இவர்களுடனே வந்தாள் கிருஷ்ணா செய்த அட்டகாசத்தில். இம்முறை மஹி காரை ஓட்ட மீரா அவன் பக்கத்தில். கிருஷ்ணா கவியிடமே பேசிக்கொண்டு வந்தான். கிண்டல் கேலி என்று விடிகாலை வீடு சேர்ந்தனர்.

காரில் உள்ளதை எடுத்துக்கொண்டு மீராவையும் மஹியையும் தனியாக விட்டு கிருஷ்ணா கவியுடன் சென்றுவிட்டான்.

"மீரா " தீவிரமான தொனியில் கூப்பிட்டான் மஹி.

மீரா திரும்பி பார்த்து "சொல்லுங்கள் மிஸ்டர் மகேந்திரன் " அவ்வளவு தான் நமக்குள் இடைவெளி என்பதுப்போல் பேசினாள்.

நெருஞ்சி முள் குத்தியதுப்போல் இருந்தது மஹிக்கு பொறுத்துக்கொண்டு பேச தொடங்கினான்

"எனக்கு உன் பக்கத்திலே இருக்க வேண்டும் போல் இருக்கு, நாம் கல்யாணம் செய்துக்கொள்வோம்"

மீராவிற்கு அழுகை தொண்டை அடைத்தது.

"இன்னைக்கு மட்டும் எப்படி உங்க கண்களுக்கு நான் உத்தமியா தெரியறேன் மகேந்திரன்"

"மீரா??" புரியாமல் பார்த்தான்

"நான் தான் காரக்டர்லெஸ் ஆச்சே"

மஹிக்கு அவள் சொல்வதே புரியவில்லை. சமாதனம் செய்யும் முயற்சியில் அருகே ஓரடி எடுத்து வைத்தான்.

"அங்கே நின்று பேசலாம் மகேந்திரன்"

"மீரா " என்று அவள் பேச்சை கேட்காமல் அருகிலே போனான்

முகத்தை கைகளில் மூடி அழுக ஆரம்பித்துவிட்டாள் மீரா. அழும் குரலிலே

"உன்னால் நான் மாறியது போதும், பட்ட காயமெல்லாம் போதும், போய்விடு என்னை விட்டு போய்விடு " என்று சொல்லி அழுதாள்.

அவனை அவன் காதலை உணர்த்தும் பொருட்டு "நான் ரசித்த முதல் பெண்ணும் நீ தான், ஆழமாக என்னுளே சென்றவளும் நீ தான் மீரா, இதுவரை நடந்தெல்லாம் மறந்து இப்போதிருந்து காதலிப்போம் மீரா " என்றான்

மீரா பேசாமல் அவள் அறைக்கு சென்று விட்டாள்.

"மீரா நீ இப்படி பேசாமல் போவது கோபம் வருகிறது" என்று சீறினான்

"என்ன பண்ண முடியும் உன்னாலே" என்று திரும்பி வந்து பதிலுக்கு சீறினாள்

பதிலுக்கு அவன் பார்வை மட்டும் தான் பார்த்தான், அது சென்ற இடம் அவள் உதடுகள்.

"ச்சீ..." என்று சொல்லி சிவந்த முகத்துடன் கதவுகளை சாத்திக்கொண்டாள்.

இதயம் வேகமாக துடித்தது. வெளியே அவன் சிரிப்பு சத்தம் மறைந்த பின். அவன் சென்று விட்டான் என்று கதவுகளை திறந்து எட்டி பார்த்தாள்.

சட்டென வலப்பக்கமிருந்து இழுத்து அணைத்து அவள் கண்களை நேராக பார்த்து "நீ எங்கே வேண்டுமானாலும் போ, எப்படி வேண்டுமானாலும் கோபபடு, எனக்கு வாழ்கை துணை என்றால் அது நீ மட்டும் தான்" என்று சொல்லி இன்னமும் இருக்க அணைத்தான். அவள் முகத்தை பின்னே இழுத்துக்கொண்டே போக குனிந்து முத்தம் கொடுத்து விடுவித்தான். அசையாமல் நின்றாள் மீரா.

"யோசி நமக்குள்ள இருக்கும் காதல், பிணைப்பை பற்றி யோசி, தவிர்ப்பதை பற்றி யோசிக்காதே என்று அவள் காதில் ஓதி விட்டு சென்று விட்டான்.

அடுத்த அத்தியாயத்துடன் நிறைவு பெறும்!

Go to Ninaikkatha naal illai rathiye 10

Go to Ninaikkatha naal illai rathiye 12

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.