(Reading time: 33 - 65 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

“சொல்லுங்க தாத்தா”

   

“இல்லை ஒவ்வொருத்தர்கிட்டயா சொல்றதை விட மற்ற பெண்களும் வரட்டும் மொத்தமா சொல்லிடறேன்”

   

“ஓகே நானும் மத்தவங்களுக்காக காத்திருக்கேன் என் கூட போட்டி போட்டு தோத்துப்போக யார் யார் வரப்போறாங்கன்னு நானும் பார்க்கனுமே”

   

”கண்டிப்பா சாப்பிட்டியாம்மா”

   

“சாப்பிட்டேன் தாத்தா”

   

“நல்லது மத்த பொண்ணுங்க வந்தப்பின்னாடி பொதுவான சில விசயங்கள் விதிமுறைகளை பத்தி விளக்கமா சொல்றேன் உனக்கு விருப்பம் இருந்தா ரிஷிகிட்ட பேசலாம்”

   

“நோ தேங்ஸ் இங்கதானே இருக்கப்போறாரு அவர்கிட்ட எப்ப வேணும்னாலும் பேசலாம் எங்க போயிட போறாரு” என அவள் அலட்சியமாக ரிஷியை பார்த்து பேசவும் அவனுக்கு உள்ளுக்குள் எரிய தன் தாத்தாவை பார்த்து முறைத்தவன் அவரிடம் மட்டும்

   

”இப்ப நான் இதை கேட்டேனா அவள் என்கிட்ட பேசினா என்ன பேசாட்டி போனா என்ன சும்மாவேயிருக்க மாட்டீங்களா என்னை ஏன் கோத்துவிடறீங்க பாருங்க அவள் எப்படி என்னை அவமானப்படுத்தறாள்ன்னு”

   

“சின்ன பொண்ணுடா விவரம் தெரியலை விடு விடு 1 மாசம் இங்க இருந்தா தானா அவளுக்கு உன்னை பிடிச்சி போயிடும்”

   

“ஆஹா அப்ப கூட எனக்கு அவளை பிடிக்கனும்னு அவசியமில்லை அப்படித்தானே”

   

“அவள்கிட்ட என்னடா குறைச்சல் அழகில்லையா, அறிவில்லையா, பணம் இல்லையா”

   

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.