(Reading time: 33 - 65 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

தொடர்கதை - தூறல் போல காதல் தீண்ட - 09 - சசிரேகா

   

ரிஷிகேசன் வீட்டில் இருந்த அனைவருமே ரிஷியை கல்யாணம் செய்துக்கொள்ள வரப்போகும் பெண்களுக்காக காத்திருந்தனர். நினைத்த மாதிரியே காலை மணி 9க்கு ஒரு பெண் வீட்டிற்குள் வந்தாள். பார்க்க அழகான பெண்ணாக இருந்தாலும் அவள் முகத்தில் இருந்த மெச்சூரிட்டியும் அவளது உடையும் அவளது நவநாகரிகமும் ஏதோ பெரிய பிசினஸ்வுமென் போன்ற தோற்றத்தில் இருந்தாள். அவளது நடையிலும் ஒரு அலட்டல் தெரிந்தது உதட்டில் ஒரு அலட்சிய புன்னகையும் கண்களில் ஒரு பணக்கார திமிரும் தெரிந்தது.

   

கையில் அவள் கொண்டு வந்த ஹாண்ட்பேக் மட்டுமே சொல்லும் அதன் விலை லட்சங்களை தாண்டும் என. நல்ல அலங்காரம் என சொல்லாவிட்டாலும் டீசன்டாக தன்னை ஒப்பனை செய்திருந்தாள். கழுத்திலும் கையிலும் வைரம் பதிக்கப்பட்ட பிளாட்டின நகைகளை அணிந்திருந்தாள். வெள்ளை நிற  உடையில் அந்த வைரத்தின் ஒளியில் அவளே ஒரு வைரம் போல ஜொலித்தாள். 

   

அவளுடன் வந்த ரிஷியின் தந்தை மோகனசுந்தரத்தை பார்த்ததும் அனைவரும் அவள் அவரின் வரவழைப்பு எனவும் அவள் பெரிய பிசினஸ்மேனின் தவப்புதல்வி எனவும் புரிந்துக்கொண்டனர். தாத்தாவும் மற்றவர்களும் அந்த பெண்ணை வரவேற்று ஹாலில் இருந்த சோபாவில் அமர வைத்தனர்.

   

அந்த பெண்ணும் நேராக அனைவரையும் பார்த்து ஒரு சின்ன ஸ்மெல் சிந்திவிட்டு அங்கிருந்த சோபாவில் அமர்ந்துக்கொண்டாள். அவளுக்கு நேராக தாத்தாவும் ரிஷியும் இருந்தார்கள். அவள் வந்த உடனே அவளது பந்தாவை பார்த்துவிட்டு முகத்தில் பேருக்கு கூட சிறிய புன்னகையை வரவழைக்க கூடாதென முகத்தை இறுக்கமாக வைத்திருந்தான் ரிஷி. அதைக்கவனித்த தாத்தா அவனிடம் மெதுவாக யாருக்கும் கேட்காதபடி

   

”கொஞ்சம் சிரிச்ச மேனிக்கு இரு அந்த பொண்ணு உன்னையேதான் பார்க்குது” என்றார் அவனுக்கு மட்டும் கேட்கும்படி

   

“அது தெரிஞ்சிதான் இப்படி உட்கார்ந்திருக்கேன் தாத்தா அவளைப்பார்த்தாலே தெரியலையா அப்படியே அப்பாவோட ஜெராக்ஸ் காப்பி மாதிரியிருக்கு. இவளை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா அப்பாவுக்கும் அவளுக்கும் எந்த வித்தியாசமும் இருக்காது. அவர் எப்படி 

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.