(Reading time: 21 - 42 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

எடுக்கலையே அத்தான்”

   

“என் முடிவுதான் நான் அன்னிக்கே சொல்லிட்டேனே உன்னை கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்னு”

   

“அப்ப என்னை விரும்பலையா அத்தான்”

   

“விரும்பாம யாராவது கல்யாணம் செஞ்சிக்குவாங்களா”

   

“என்னால இந்த போட்டியில வெற்றியடைய முடியலைன்னா”

   

“அப்படி சொல்லாத உன்னால முடியும்”

   

”முடியலைன்னா”

   

“ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்”

   

“அத்தான்” என அவள் செல்லமாக கோபப்படவும்

   

”வேற என்னம்மா செய்றது நான் லேட் பண்ணிட்டேன் என் வீட்ல இருக்கறவங்க இப்படி 3 பொண்ணுங்களோட வருவாங்கன்னு தெரிஞ்சிருந்தா நான் உன்னை எப்பவோ என் வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருப்பேன்”

   

“சரி விடுங்க அத்தான் ஆமா நீங்க ஏன் வேலைக்கு போகலை காலையில உங்கப்பா வந்து கூப்பிட்டும் ஏன் போகலை”

   

“நான் வேற மாதிரி ஆளு இந்த காலையில 10 மணிக்கு போய் 5 மணிக்கு வர்றதெல்லாம் எனக்கு பிடிக்காது. என்னோட திறமையை காட்ட கருணாவை போல 12 மணி நேரம் உழைக்கனும்னு அவசியம் இல்லை. இப்ப கூட ஏதாவது மீட்டிங் டீலிங்கன்னு கூப்பிட்டா நான்தான் முதல் ஆளா போய் நிப்பேன் அந்த இடத்தில என் திறமையை காட்டுவேன் அது போதும் என் கம்பெனிக்கு நான் நிறைய ஆர்டர்களை பிடிச்சிக்கொடுத்திருக்கேன் பல கோடி 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.