(Reading time: 27 - 54 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

”இப்ப அவன் உன் கூட வாழ மறுக்கிறான் உன் முடிவு என்ன”

   

“டைவர்ஸ்”

   

“அப்ப ஹாஸ்டல் கட்டறது”

   

“என்னால முடியாது”

   

“உன் தாத்தாவை நினைச்சி பாரு. உன்னோட சின்ன தப்பால அவர் மானம் போச்சி, நீ இதை கட்டினாதான் அவர் மானம், மரியாதை, பதவி, பேர், புகழ் திரும்பக் கிடைக்கும்”

   

“அப்படின்னா நான் என் தாத்தாவோட இந்த ஹாஸ்டல் கட்டறேன்”

   

“இதுவரைக்கும் நான் இதுல எவ்ளோ பணம் போட்டு இருக்கேன் அதுவுமில்லாம என் உழைப்பும் இருக்கு”

   

“நான் அதுக்கான பணத்தை கொடுக்கறேன்”

   

“அப்ப நீ போறேங்கற”

   

“ஆமாம்”

   

“சரி வா உன் விருப்பம் வா உன்னை கொண்டு போய் உன் தாத்தாகிட்டயே விடறேன். அவரையே நியாயம் கேட்கறேன் என் பையன் மேல தப்பில்லை அவனை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணதால உங்க பேத்திதான் இப்ப கஷ்டப்படறா, அவள் வாழ்க்கைதான் கெட்டிச்சின்னு சொல்வேன் பரவாயில்லையா”

   

“எனக்கு வெறும் 6 மாசம்தான் கஷ்டமே ஆனா நான் இப்படியே இருந்தா வாழ்க்கை முழுக்க தேவா எனக்கு கிடைக்கவேமாட்டாரு. அதனால நான் போறேன். எனக்கு தேவாவை பார்க்க பார்க்க கோபமும் வெறுப்பும்தான் வருது”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.