(Reading time: 23 - 46 minutes)

ளவரசனின் போன் அடித்து ஓய்ந்தது.

அவன் பில்லிங் செச்ஷன் மேனேஜரிடம் பேசிக் கொண்டிருந்தான். அவன் போன் அடிப்பது அவனுக்கு கேட்டாலும், முக்கியமாக பேசிக் கொண்டிருந்ததால் அதை எடுக்கவில்லை.

திரும்ப அவன் போன் அலற போனை கவனித்த இளவரசன் ஒரு நிமிடம் எல்லாம் மறந்து போனை எடுத்து “ஹேய். ஹௌ ஆர் யூ” என்றான்.

பின்பு தான் அங்கு நிற்பவரை கண்டு “சாரி. நான் உங்களை திரும்ப கூப்பிடறேன்” என்று கூறி அனுப்பி வைத்தான்.

“இளா. பிஸியா”

“ஹ்ம்ம். கொஞ்ச நேரம் முன்னாடி வரைக்கும். இப்ப உன் போன் வந்ததுல இருந்து நோ வொர்க். ஒன்லி உன் கூட பேசறது தான் இப்ப இம்பார்டன்ட். போதுமா. சொல்லு. இப்ப ஓகே தானே. பீலிங் பெட்டெர்” என்றான்.

“ம்ம்ம். ஐ’ம் கம்ப்ளீட்லி ஆல் ரைட்”

“போடி என்னை ரொம்ப கலங்கடிச்சிட்ட.”

“ம்ம்ம்”

“என்ன ம்ம்ம். மேடம் எப்படி பயமுறுத்திட்டீங்க தெரியுமா. ஒரு நிமிஷம் ஒன்னும் புரியாம நின்னுட்டேன். மைன்ட் சுத்தமா வேலை செய்யாம போயிடுச்சி” என்றான் ஒரு மாதிரி குரலில்.

“இளா. போதும். அதைப்பத்தி ஏதும் பேச வேண்டாம்.”

“ம்ம்ம். உன்னை பார்க்கணும் போல இருக்கு”

“வாங்க. வந்து பாருங்க. உங்களை யார் வேண்டாம்ன்னு சொன்னா”

“யாரும் வேண்டாம்ன்னு சொல்லலை. ஆனா அத்தை என்னை முறைப்பாங்களே. வேண்டாம்மா. இன்னொரு முறை ரிஸ்க் எடுக்க வேண்டாம். எனக்கு பயமா இருக்கு” என்றான்.

“ஆமா நீங்க ரொம்ப பயந்தவராக்கும். நேத்து என்ன பண்ணீங்க. என்னை இந்த பவித்ராவும், அக்காவும் ஒரே கிண்டல் தெரியுமா”

“ஏய். ஹாஸ்பிடல்ல இருந்து வந்ததுக்கு அப்புறமும் நீ சோர்வா தான் இருந்த. என்னவோ மனசே சரியில்லை. உன்னை பார்க்கணும் போல தோணிட்டே இருந்துச்சி. வரலாம், வேண்டாம், வரலாம், வேண்டாம்ன்னு எனக்குள்ளவே ஆயிரம் முறை வாக்குவாதம் எல்லாம் வச்சி பார்த்தேன், வேண்டாம்ன்னு தான் என் மூளை சொல்லுது, ஆனா அதை பாலோ பண்ண முடியலையே. திடீர்னு முடிவு பண்ணி வந்துட்டேன், வந்த பிறகும் கொஞ்சம் உதறல் தான். அத்தையை எப்படி பேஸ் பண்றதுன்னு, அப்புறம் மாமாவை வச்சி கரெக்ட் பண்ணி உன்னை பார்த்துட்டு போயிடலாம்னு பார்த்தா, அத்தை தான் முதல்ல என் கண்ணுக்கு தெரியறாங்க. எனக்கு எப்படி இருந்துச்சி தெரியுமா, எப்படியோ சமாளிச்சிட்டு வந்தேன், மாமா வேற வீட்ல இல்லை, திரும்பவும் மனசுக்குள்ளே வேண்டாம் இப்ப உன்னை பார்க்காமலே கிளம்பிடனும்ன்னு நினைச்சி கதவு வரைக்கும் வந்துட்டு லாஸ்ட் மினிட்ல எப்படியோ அத்தை கிட்ட ஸ்ட்ரெய்ட்டா கேட்டுட்டேன். எனக்கே கொஞ்சம் அதிர்ச்சி தான். ஆனா அத்தை எப்படியோ ஒத்துக்கிட்டாங்க. நானும் உன்னை பார்த்துட்டேன். உன்னை மட்டும் பார்க்காம போயிருந்தேன்னு வச்சுக்க மனசே சரி இருந்திருக்காது. தெரியுமா”

“இளா”

“என்னடி”

“ஐ லவ் யூ வெரி மச். இந்த உலகத்துலேயே உங்களை தான் ரொம்ப பிடிச்சிருக்கு”

மென்மையாக சிரித்தான் இளவரசன்.

திடீரென்று சத்தமாக சிரித்தாள் இனியா.

“என்னடி இப்படி சிரிக்கற”

“இல்ல நம்ம பர்ஸ்ட் டே மீட்டிங் நினைச்சிக்கிட்டேன். அன்னைக்கு உங்க மேல எவ்வளவு கோபம் தெரியுமா. ஆனா பார்த்தா அன்னைக்கு நைட் கனவுலயும் நீங்க வரீங்க”

“ஹேய் பார்த்தியா. நீ இதெல்லாம் சொல்லவே இல்லை”

“ஹிஹிஹி”

“சரி. சொல்லு. கனவுல என்ன நடந்துச்சி. சம்திங் சம்திங்” என்றான்.

“சீ. ஒன்னும் இல்லை. என் கனவுல வந்து சிரிச்சீங்க.”

“நான் என்னம்மா சொன்னேன், நீ சீன்னு எல்லாம் சொல்ற”

“வவ்வ வவ்வ”

“சரி சொல்லு. அவ்வளவு தானா. இல்லை எதாச்சும் கட், காபி, பேஸ்ட் நடந்திருக்கா. சொல்லு சொல்லு”

“ஹாஹஹா. ரொம்ப தான் ஆசை. வேற ஒன்னும் இல்லை. இது மட்டும் தான். அடுத்த நாள் எழுந்து எனக்கு கூட கோவம். இவன் எதுக்கு நம்ம கனவுல வரான். அதுவும் சிரிக்கவே தெரியாதவன் கனவுல வந்து சிரிக்கிறான்னு”

“ஹேய் இதே சாக்குல அப்ப நினைச்சேன்னு சொல்லிட்டு, அவன் இவன்னு சொல்ற”

“ஏன் சொல்லக் கூடாதா. நான் இப்ப கூட தான் சொல்வேன். என்னடா”

“அது சரி. நானே வாய் குடுத்து மாட்டுறேன். நீ நடத்து”

“அது”

“இளா”

“என்னடா”

“பவித்ராவை கொஞ்சம் நல்லா பார்த்துக்கறீங்களா. அவ கொஞ்சம் கம்பர்ட்டா பீல் பண்ணலைன்னு நினைக்கறேன்”

“ஏய் என்ன சொல்ற. அம்மா அவளை நல்லா தானே பார்த்துக்கறாங்க”

“இல்ல. என்ன தான் இருந்தாலும், அவளுக்கு அது புது இடம் தானே, அதுவும் இல்லாம சித்தப்பா வேற கிளம்பறாராமே. அதனால அவ பீல் பண்ணுவான்னு நினைக்கறேன், கொஞ்சம் பார்த்துக்கோங்க”

“ம்ம்ம். சரி. மேடம் பேச்சுக்கு அப்பீல் ஏது”

“இதே மாதிரி சொன்ன பேச்சை எல்லாம் கேட்டீங்கன்னா குட் பாய்ன்னு சொல்லுவேன்”

“போடி. உன் குட் பாய் பட்டம் யாருக்கு வேணும். எனக்கு பேட் பாய் பட்டம் தான் வேணும். அதுக்கு ஏத்த மாதிரி ஏதாச்சும் சொல்லட்டுமா”

“இளா வேண்டாம்”

“இப்ப நான் என்னடி செஞ்சேன். அதுக்குள்ளே இப்படி சொல்ற. அதுவும் ஜஸ்ட் போன்ல பேசிட்டிருக்கேன்”

“சேட்டை. அது இருக்கட்டும். நானா உங்களை நேர்ல வர வேண்டாம்ன்னு சொன்னேன்” என்று சிரித்தாள்.

“சிரிடி நல்லா சிரி. உனக்கு நல்லா தெரியும். நேத்து அவ்வளவு நடந்த பிறகு நான் அங்க வர மாட்டேன்னு தெரிஞ்சிக்கிட்டு தானே நீ இப்படி பேசற. பேசு பேசு. இதெல்லாம் நோட் செஞ்சி வச்சிக்கறேன். உனக்கு இதுக்கெல்லாம் பனிஸ்மென்ட் இருக்கு. அதை அப்புறம் சொல்றேன்”

“பார்க்கலாம் பார்க்கலாம்”

“நிஜமாவே நீ பண்ற சேட்டையை எல்லாம் நம்பர் நோட் பண்றேன். அப்புறம் வந்து கணக்கு இடிக்கிதுன்னு சொல்லக் கூடாது, வேணும்னா நீயும் நோட் செஞ்சி வை”

“வவ்வ வவ்வ”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.