(Reading time: 15 - 29 minutes)

வர்களின் வலவலப் பேச்சுக்கிடையே விஷயத்திற்கு வந்தார் பாலா..

 

“மாப்பிள்ளை, அப்போ சிக்கிரம் கல்யாண செய்தியை எதிர்பார்கலாமா?.”

 

“கண்டிப்பா மாமா” விரமாய் சொன்னான் ஹரி..

 

“இன்னொரு விஷயம் மாமா.. அம்மாவை அப்பாவுடன் சேர்க்கணும் ...”

 

“அது முடியாது மாப்பிள்ளை, நானும் முயற்சி செய்து தோற்றது தான் மிச்சம்...”

 

“இந்தமுறை முயற்சி செய்து பாருங்கள், வெற்றி நிச்சயம்...”

 

“எப்படி ?..”

 

“மாமா , அப்பாவிற்கும் அம்மாவிற்கும் சிறு மனவேற்றுமை தான்.. அதை சரி செய்தாள் போதும்....”

 

“சிறு மனவேதனைக்காகவா.. இத்தனை வருடம் பிரிந்திருந்தார்கள்?...”

 

“அந்த சூழ்நிலை தான் மாமா இதற்குக் காரணம்...”

 

“விளக்கமாக சொல்லுங்கள் மாப்பிள்ளை..”

 

“அப்பாவிற்கும் அம்மாவிற்கும் ஒரு பெண்ணால் பிரச்சனை என்பது மட்டும் எனக்கு தெரியும். ஆனால் என்ன பிரச்சனை என்று தெரியாது. அப்பாவிடம் கேட்டபோது அவருக்கே தெரியவில்லை என்று கூறினார்.”

 

இதைக் கேட்டவுடன் பாலாவும் பிரேமாவும் ஏன் விஷ்ணுவுமே அதிர்ச்சி அடைந்து விட்டான்..

 

“என்ன சொல்கிறீர்கள் அண்ணா..!!!”

 

திருமணத்திற்கு சென்றார். அப்பா அவர்களோடு வரவில்லை. அதனால் அம்மா மட்டும் சென்று வந்தார்கள். அப்பா அழுவலகம் சம்மந்தமாக கோவை சென்றிருந்ததால் சிறிது தாமதமாக வீடு திரும்பினார். அவர் திரும்பிய போது அம்மா வீட்டில் இல்லை. டிரைவரிடம் விசாரித்தார் அப்பா. அவன் அம்மா என்னை(ஹரியை) கூடிக்கொண்டு எங்கோ வெளியில் சென்றார்கள் என்றும் கார் வேண்டாம் என்று டாக்ஸ்யில் சென்றதாகவும் சொல்லியிருக்கிறான். அதிர்ச்சி அடைந்த அப்பா, மாமாவிற்கு அழைத்திருக்கிறார். மாமா அழைப்பை எடுக்காததனால் காரைக் கிளப்பிக்கொண்டு சோலைபுரம் வந்திருக்கிறார். இங்கே வந்து மாமாவிடம் விசாரித்தார். அப்போது தான் அம்மா எங்கோ சென்று விட்டார் என்று மாமாவிற்கும் தெரிந்திருக்கிறது. இருவரும் ஆளுக்கொருபுறம் தேடியிருக்கிறார்கள். கடைசி வரை நல்ல பதிலே கிடைக்கவில்லை. நான்கு வருடம் கழித்து அம்மா மாமாவை அழைத்திருக்கிறார்கள். அதன்பின் நடந்தது எல்லோருக்குமே தெரியும்.”

 

“ஆமாப்பா ஹரி. நாங்களும் உன் அப்பாவையும் அம்மாவையும் சேர்த்து வைக்க எவ்வளவோ முயன்றோம். இருவருமே பிடி கொடுக்கவில்லை..” பாலா

 

“அதற்கு ஒரே வழி தான் இருக்கு மாமா ...”

 

“என்ன வழிப்பா?”

 

அவனும் கூறினான்.

 

“அம்மாவிற்கு அபியை ரொம்பப் பிடிக்கும். அதுமட்டுமில்லாமல் அவள் தான் வீட்டு மருமகளாக வரவேண்டும் என்று அவர்களுக்கு கொல்லை ஆசை.அப்பாவின் விருப்புமமும் அதுவேதான். விஷயம் என்னவென்றால் அந்த விருப்பும் இப்போதும் நீடிக்கிறது என்பது தான். அதை வைத்தே அவர்களை சேர்க்க முடியும்.”

 

“எப்படி ?” ஒன்றுசேர்ந்து ஒலித்தன மூன்றுப் பேரின் குரலும்.

 

“அப்படித்தான் ..”

 

“சொல்லுங்கண்ணா...”

 

“சொல்கிறேன்.. ஆனால்...”

 

“ஆனால் என்னப்பா..” பாலா

 

“அதற்கு அபியை என் வழிக்கு கொண்டுவர வேண்டும்.... அதற்காக நான் கையாளப்போகும் உத்திகளை, நீங்கள் யாரும் கண்டுக்கொள்ள கூடாது..”

 

“போ அண்ணா.. நீ செய்வாய் என்ற நம்பிக்கையே எனக்கு இல்லை..”

 

“அடேய் தம்பி. முக்கியமாய் நீ தான் எனக்கு உதவி செய்யணும். அவள் என்மேல் கடுப்பாகும் போதெல்லாம் எதாவது வில்லத்தனமாய் பிளான் போடுவாள். அதை நீ தான் கண்டுப்பிடித்து எனக்கு முன்கூட்டியே சொல்ல வேண்டும்.. அப்போது தான் என்னால் தப்பிக்க முடியும். இல்லையென்றால் அந்த ஸ்வீட் மேட்டர் போல் ஆகிவிடும்..”

 

“எந்த ஸ்வீட் மேட்டர்..” பாலா.

 

“அந்த  காமெடி உங்களுக்கு தெரியாதா.. உங்க சீமந்த புத்திரி எங்க அண்ணனுக்கு ஸ்வீட்ல சர்க்கரைக்கு பதிலாய் உப்பை அள்ளிக்கொட்டிடாங்க..” நடந்ததை எல்லாம் விஷ்ணு சொல்லவும் பாலாவும் பிரேமாவும் வியந்தனர் சிரித்தனர்.

 

ஒருவழியாய் பேசி முடித்து திருவிழாவிற்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டு அவர்களின் அறைகளுக்கு சென்றனர்.

 

என்னதான் புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் மட்டும் வரவில்லை ஹரிக்கு.

 

என்ன நினைத்தாலும் யோசித்தாலும் நினைவு அபியிடமே வந்து நின்றது. மனது நிறையக் காதலை வைத்துக் கொண்டு அவளிடம் வெளிப்படுத்த தெரியாமல் அவன் படும் பாடு இருக்கிறதே ... அப்பப்பா... சிறுவயதில் ஒன்றாக விளையாடியது பின்பு இருவரும் சேர்ந்து செய்த திருட்டுத்தனங்கள் இப்படி பல நினைவுகள் வந்து அவனை அலைக்கழித்தது.. ஒருவழியாக நித்திராதேவி தழுவ உறங்கிப்போனான்.

 

னால், அபியோ இவனுக்கு நேர் எதிரான மனநிலையில் இருந்தாள். ’எவ்வளவு திமிர் அவனுக்கு. என் அப்பாவையே விழவைத்துவிட்டானே.. அவனை சும்மா விடக் கூடாது. கண்டிக்க வேண்டும். அவனுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும். என்னையே வளைக்கப் பார்கிறானே.. விடக்கூடாது.. என்ன செய்யலாம்.....???? யோசித்து ஒரு வழிக் கொண்டுபிடித்த திருப்தியில் உறங்கி விட்டாள்..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.