(Reading time: 15 - 29 minutes)

சுபா ரவியின் நினைவிலும், ரவி சுபாவின் நினைவிலும் இருந்தார்கள்.. ஒரு சிறிய உரையாடல் என்றாலும் ஏனோ மனம் திரும்ப திரும்ப அதையே நினைத்துக் கொண்டிருந்தது.. சுபா இதை அசட்டுத் தனமாக நினைத்தாலும் அதை தவிர்க்க முடியவில்லை. ஒரு சுகமான உணர்வு பரவுவதை ரவியால் மட்டுமல்ல சுபாவாலும் தடுக்க முடியவில்லை..

 

இருவரும் மற்றவர் நினைவில் இரவைக் கடத்தினர்.

 

லி அதிகம் இருந்ததால் தூக்கம் வராமல் விழித்திருந்தான் சோழன். அவ்வளவு நேரம் அவனுக்கு பணிவிடை செய்து உறங்க சென்ற தன் தாய் விழித்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தான்.

 

அண்ணனும் தம்பியுமாய் சேர்ந்து என்னமாய் திட்டம் போடுகிறார்கள் . பொறுத்திருந்தது போதும் இனி அவர்களை விடக் கூடாது.. ஆசை பைங்கிளி அபியின் முன் இன்று அவமானம். இன்று நேர்ந்தது அவனை வெகுவாக பாதித்திருந்தது. பிச்சை எடுத்தாராம் பெருமாளு அதை பிடுங்கி தின்னாராம் அனுமாரு. அந்த கதையாய் ஆகிவிட்டதே. இவ்வளவு காலம் அபியிடம் வாங்கிய நல்ல பெயரை இவர்கள் கெடுத்து விடுவார்கள் போல் இருக்கிறதே.. நல்ல பெயரை மட்டுமா?.. அவளுடன் எனக்கிருக்கும் திருமண ஆசையில் கூட மண்ணள்ளி போட்டு விடுவார்கள் போல் இருக்கிறதே.. விடக்கூடாது.. நம் நிலையை காப்பாற்றி கொள்ள வேண்டும் அதே சமயத்தில் அபியோடு திருமணமும் முடிக்க வேண்டும்.. இதற்கான ஆவணக் காரியங்களைத் திட்டமிட்டு தூங்கினான் சோழன்..

 

ன்றையப்  பொழுது இனிதாகவே பிறந்தது ஹரிக்கு. அப்படித்தான் ரவிக்கும் . இருவருமே தங்கள் காதலை வெளிப்படுத்தத் திட்டமிட்டுருந்ததாலோ என்னவோ இருவருக்கும் இனிய பொழுதாய் அமைந்தது.

 

வெளியில் கிளம்ப அயத்தமானான் ஹரி. அன்று மாமா சொன்ன வேலைகளை விஷ்ணுவின் துணையோடும் கருப்பனோடும்(வேலையாள் ) செய்யத் திட்டமிட்டிருந்தான். சொல்லி வைத்தார் போல் விஷ்ணுவும் ஹரியும் ஒன்றாய் அறையிலிருந்து வெளிவந்தனர். காலை வணக்கம் சொல்லி முடித்து அன்று  செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றி பேசிக்கொண்டே கிழே பிரார்த்தனை அறைக்கு சென்றனர்.

 

செய்யும் வேலை வெற்றி பெற வேண்டி விஷ்ணுவும், சீக்கிரம் அபியை தன்னோடு சேர்த்து வைக்க சொல்லியும் அப்பா அம்மாவை சேர்த்து வைக்கவும் பிரார்த்தித்தான். அதன் பின் இருவரும் காலை உணவை முடித்து கிளம்ப ஆயுத்தமாயினர். இவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்த அபி தன் தாயிடம்,

 

“என்னம்மா அண்ணனும் தம்பியும் எங்கோ கிளம்புகிறார் போல் தெரிகிறதே...?!”

 

“ஆமாம்மா.. உங்கப்பாவிற்கு உடம்பு சரியாகும் வரை திருவிழா வேலைகளை கவனிக்க அவர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார் உங்க மாமா..”

 

“என்னம்மா இது...! விஷ்ணு சின்ன பையன் அவனுக்கு என்ன தெரியும் திருவிழாவைப் பற்றி .. சரி அவனை விடு.. ஹரிக்கு தான் என்ன தெரியும்?.. அவனுக்கு நம் பண்பாடைப் பற்றி என்ன தெரியும் ?.. இத்தனை வருடம் வெளிநாட்டில் இருந்துவிட்டு இப்போது திடீர் என்று சொந்தம் கொண்டாடுகிறான். இத்தனை வருடத்தில் ஒரு முறையாவது இங்கே வந்து நம்மோடு இருந்திருப்பானா? அதை கூட விட்டுடலாம்.. அவனின் தாய் தந்தையை சேர்த்து வைக்க இதுவரை ஏதாவது முயன்றிருக்கிறானா? முன்னே தான் எதோ சிறுப் பிள்ளை என்று அவனுக்கு எல்லோரும் வக்கலத்து வாங்குவீர்கள். இப்போது தான் பெரியவனாய் ஆகிட்டான்லா.. இப்போது சேர்த்து வைக்கலாம்மல்லவா?.....”

 

“அபி ஏன் இப்படி பேசுகிறாய்?.. வெளிநாட்டில் இருந்தாள் நம் பண்பாடு தெரியாதா என்ன? அவன் ஹேமாவின் வளர்ப்பாக்கும்.. அதை நினைவில் வைத்துக்கொள்.. அதுமட்டுமில்லாமல் ஹரி அவனின் பெற்றோர்களை சேர்த்து வைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று எதை வைத்து சொல்கிறாய்?.. ஒருவரை பற்றி அறியாமல் பேசுவது மிகத் தவறு.. அவன் ஒன்றும் திடீர் என்று வந்து சொந்தம் கொண்டாடவில்லை.. இந்த வீட்டில் விஷ்ணுவிற்கு என்ன உரிமை இருக்கிறதோ, அதைவிட அதிகமாகவே ஹரி உள்ளது... என்ன சொன்னாய் அவனா!.. ஹரி உன்னை விட வயதில் மூத்தவன்.. உன்னை விட பெரியவர்களுக்கு நீ கொடுக்கும் மரியாதை இது தானா? நான் உன்னை அப்படியா வளர்த்திருக்கிறேன்?.. இன்னொன்றும் சொன்னாயே பண்பாடு என்று..

 

வெளிநாட்டில் அன்னையோடு மட்டும் வளர்ந்த ஹரி பண்பில் இன்று சொந்தங்கள் சூழ வளர்ந்த உன்னையும் மிஞ்சி விட்டான்.. இனி மற்றவர்களை பற்றி பேசும் பொழுது சற்று நிதானித்து பேசு... என்ன புரிகிறதா?...

 

சற்றும் எதிர்பார்காத இந்த தாக்குதலால் சற்று நிலைக் குழைந்து போய் இருந்தாள் அபி... அபி இப்படி பேசுபவலும் கிடையாது. நேற்றின் தாக்கத்தில் சற்று அதிகமாகவே பேசிவிட்டாள்.. தன் தவறுக்கு வருந்தி மன்னிப்பை சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள்..

 

தன் கைப்பேசியை மறந்து உணவு மேடையிலே விட்டு சென்ற ஹரி அதை எடுக்க வந்த பொழுது இந்த உரையாடலைக் கேட்டு விட்டிருந்தான்.. இது அவனுள் சிறு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் கைபேசியை எடுத்து சென்று விட்டான்.

 

திருச்சியை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது அவர்களது கார்.. அன்றைய வேலைகளை திருந்த செய்த திருப்தியில் கடைசி வேலையை முடிக்க திருச்சியை நோக்கி சென்றுக் கொண்டிருந்தனர் ஹரியும் விஷ்ணுவும்....

 

அது முக்கியமான வேலை இல்லை என்பதால் அதை விஷ்ணுவைப் பார்க்க சொல்லிவிட்டு திருச்சி சாரதாசில் இறங்கிக்கொண்டான்.

 

நாளை அபிக்கு பிறந்தநாள் என்பதால் அவளுக்கு பரிசுக் கொடுக்க ஒரு சேலை வாங்க வந்திருந்தான். அவளுக்கு ஆரஞ்சும் மெருனும் பிடித்த கலர் என்பதால் அந்த கலரில் புடவையைத் தேடிக் கொண்டிருந்தான்.

 

எப்படியோத் தேடிப் பிடித்து இரண்டு சேலைகளை வாங்கிக்கொண்டு அதில் ஒரு சேலைக்காண பொருத்தமான தங்க நகைகளை வாங்கிக்கொண்டு தம்பியை அழைத்து வேலை முடிந்ததா? என்று விசாரித்தான். வேலையும் முடிந்திருக்கவே விஷ்ணு ஹரியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றான்..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.