(Reading time: 15 - 29 minutes)

வீட்டில் அடுத்தநாள் ஏற்பாடுகள் படுவேகமாய் நடந்துக் கொண்டிருந்தது.. நாளை அக்காவின் பிறந்த நாள் என்பதால் விடுமுறை எடுக்கும் உற்சாகத்தில் தங்கைகள், மற்றும் பல்வேறு நற்பணி மன்றத்திலிருந்து நன்கொடைக்காக வந்திருந்தார்கள்.. வீட்டில் செய்திருந்த ஏற்பாடுகளை பார்த்த சுபா மூக்கின் மேல் விரல் வைக்காத குறை தான்..

 

பரபரப்பில் அன்றைய நாள் இறுதியடைய மறு நாள் உதயமாகும் பொழுது  அனைவரும் அபிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி கேக் வெட்டியபின் உறங்க சென்றனர்.. ஹேமாவும் அபியை அழைத்து பிறந்தநாள் வாழ்த்துக் கூரினாள்.

 

காலை விடியலுக்கு பின் அவரவர்களின் பரிசைக் கொடுத்தனர். பாலாவும் அவளுக்கு ஒரு அழகிய வெள்ளை நாய் குட்டியை பரிசளிக்க, பிரேமா நீண்ட நாட்களாய் அபிக் கேட்டுக் கொண்டிருந்த அந்த நகையை பரிசளித்தால், கைலாஷ் அவரின் காபி எஸ்டேட்டின் முப்பது பெர்சென்ட் சாரை அவளின் பெயருக்கு மாற்றி பரிசாகக் கொடுத்தார். விஷ்ணு ஓர் அழகிய கிளியைப் பரிசளித்தான்.அபியின் தங்கைகள் ‘அனைவரும் டூர் சென்றிந்த போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களில் சிலவற்றை மறைத்து வைத்திருந்தனர். அதை அழகாக பிரேம் செய்து பரிசளித்தனர். கடைசியில் ஹரி தன் தாய் சார்பின் பரிசாக ஒரு பார்செலையும், அவனின் பரிசு என்று இன்னொரு பர்செல்லையும் கொடுத்தான். ஹேமாவின் பரிசை ஆவலோடு பிரித்துப்பார்த்தாள் . அது ஒரு அழகியப் பட்டுச் சேலையும் அதற்கு பொருத்தமான ஆபரணங்களும்.அவளுக்கு பிடித்த ஆரஞ்சு வண்ண நிறத்தில் உடலும், இளம் பச்சை நிறத்தில் பார்டரும், தங்க நிற பட்டு நூலினால் சிறிய மற்றும் பெரிய பூக்கள் சேலை முழுவதும், மஞ்சள் மற்றும் இளம் பச்சையில் முந்தாணையும் இருந்தது. அவளுக்கு அது மிகவும் பிடித்து போனது. உடனே அத்தையை அழைத்து பரிசு நன்றாய் இருப்பதாகவும் மிகவும் பிடித்து இருப்பதாகவும் கூறினாள். சிறுது நேரம் பேசிவிட்டு போனை வைத்து விட்டாள்.. பின் ஹரி கொடுத்த பர்செல்லை பிரித்தாள். அதில் ஹன்டல் வித் கேர் என்று போட்டிருந்ததை வைத்து அதை பொறுமையாய் பிரித்துப் பார்த்தாள்.. அது ஒரு கண்ணாடி.. மேலும் ஒரு கடிதம்..

 

என் அன்புக்குரியவளுக்கு ,

 

 இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .. இன்று போல் என்றும் நீ சந்தோஷமாய் வாழவேண்டும் .. இது நான் பெல்ஜியம் போனபோது வாங்கிய கண்ணாடி.. உனக்காகவே நான் வாங்கினேன்.. பெண்ணே இந்த கண்ணாடியை போன்றது நான் உன் மேல் வைத்திருக்கும் காதல்.. பத்திரமாக பேணிகாக்க வேண்டியது.. அடுத்து , இதோடு ஒரு புத்தகமும் இருக்கிறது. நிச்சயம் இந்த பரிசு உனக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்..

 

                                                                        என்றும் காதலுடன் ,

 

                                                                                ஹரி.

 

புத்தகத்தையும் எடுத்துப் பார்த்தாள். அது பண்டைய தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் புத்தகம்.  கல்கியின் புத்தகம் . அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.. அதை உரிய இடத்தில் வைத்து விட்டு திரும்பியவளின் கண்ணில் பட்டது அந்த பார்சல். அதில் யார் தந்தது என்று குறிப்பிடவில்லை. பிரித்துப் பார்த்தாள் அசந்து போய் விட்டாள். அவளுக்கு பிடித்த மெருன் கலர் பட்டு புடவை. விலை கொஞ்சம் கூடுதலாக இருக்கும் போல் இருக்கிறதே.. ஆனால் யார் அனுப்பினார்கள் என்று தெரியவில்லையே.? பிரித்துப் பார்த்தாள், உடல் முழுவதும் கொடிப் போல் தங்க நிறத்தில் டிசைன். மிக அருமையாக இருந்தது..

 

அதை யார் கொடுத்திருப்பார்கள் என்று யோசித்தவாறே உரிய இடத்தில் வைத்து விட்டு, தான் அத்தை கொடுத்த புடவையை அணிந்துக் கொண்டு அதற்கான ஆபரங்களை அணிந்துக் கொண்டு படியிறங்கி வந்தாள்... 

Go to Episode # 04

Go to Episode # 06

தொடர்ந்து பாயும்.......

{kunena_discuss:685}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.