(Reading time: 23 - 45 minutes)

ரிக்கா. நீ நேத்து ஏதோ இண்டர்வ்யூக்கு போயிருந்தியாமே. அதுவும் வித்யாக்கா தான் சொன்னாங்களாமே. அந்த ஜாப் என்ன ஆச்சி”

“அது கிடைக்க கொஞ்சம் சான்ஸ் இல்லை டீ. வித்யா வேறவொரு இண்டர்வ்யூ டூ டேஸ் ல இருக்குன்னு சொல்லி இருக்கா, பார்க்கலாம்”

“ஏன்க்கா கிடைக்காது, நீ இண்டர்வ்யூ சரியா பண்ணலையா”

“அப்படி இல்லை. எங்களுக்கு என்ன அப்படி பெரிய இண்டர்வ்யூ. ஜஸ்ட் சும்மா பார்மலா நாலு கேள்வி கேட்டாங்க. அப்புறம் டெமோ கிளாஸ் எடுக்கறீங்களான்னு கேட்டாங்க. நானும் எடுத்தேன். அது வரைக்கும் ஓகே தான். பட் லாஸ்ட்டா அங்க படிக்கற ஒரு பையன் ஒரு மாதிரி பேசினான். நான் அதுக்கு ரிப்ளை பண்ணிட்டு வந்தேன். அது அங்க மேனேஜ்மெண்ட் லெவல்ல இருக்கற ஒருத்தருக்கு பிடிக்கலை. சோ அது கிடைக்க வாய்ப்பு இல்லை”

“ம்ம்ம். சரி விடுக்கா. உன்னை மிஸ் பண்றவங்க தான் அன்லக்கி.”

ருவரும் கீழே இறங்கி செல்லும் போது கௌசல்யா யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்தார்.

“அந்த உங்க ஊருல நாராயணன்னு ஒரு ஆளு கிட்ட ஜோசியத்துக்கு போனோமே, அவன் என்ன சொன்னான், ரொம்ப பெரிய மாற்றம் நடக்க போகுது, இந்த பொண்ணு வாழ்க்கை அமோகமா இருக்கும்ன்னு தானே சொன்னான். ஆனா இப்ப என்ன நடந்திருக்கு. ஒரு நாள் அந்த ஆளை பார்த்து திட்டிட்டு வரணும்” என்று கூறிக் கொண்டிருந்த தாயை பார்த்து புன்னகைத்தாள் தேன்மொழி.

புன்னகைத்த அக்காவையே உற்று பார்த்துக் கொண்டிருந்தாள் மலர்விழி.

“என்னடி” என்று தேன்மொழி கேட்கவும்,

“எப்பவும் இப்படி சிரிச்சிக்கிட்டே இருக்கா. சிரிச்சா நீ ரொம்ப அழகா இருக்க” என்றாள் குரலில் ஒரு ஏக்கத்துடன்.

ஏதோ கூற வந்தவள், தங்கையின் குரலிலும், அவள் முகத்தையும் பார்த்து “சரி டா” என்று திரும்ப புன்னகைத்தாள்.

“கௌசி செல்லம் பசிக்குது டா” என்று தாயை அழைத்து பரிமாற சொன்னாள் மலர்விழி.

தாயையும் தங்கையையும் பார்த்துக் கொண்டிருந்த தேன்மொழி, ‘சிரிக்கலாம் மலர், இது சரி, இது தப்புன்னு மனசு அறுதியிட்டு சொல்லும் போது நம்ம எதிர்ல இருக்கறவங்க அதை ஒத்துக்க மாட்டாங்க, ஏத்துக்க மாட்டாங்கன்னு தெரியும் போது, நம்மளையே ஏமாத்திக்கிட்டு அது எல்லாத்தையும் மறந்துட்டு இருந்தா சிரிக்கலாம்’ என்று எண்ணியவளுக்கு ‘தான் மட்டும் ஏன் தாயை போலோ தங்கையை போலோ இல்லை’ என்ற கேள்வி எழுந்தது.

சென்னையில் சுபஸ்ரீ வீட்டில் போன் அலறிக் கொண்டிருந்தது.

சுபஸ்ரீ கிட்சனில் இருக்க ஹாலில் போன் அலறியது.

“கீர்த்தி மாமா போன் அடிக்குது போல, பார்த்து மாமா கிட்ட குடும்மா” என்று அவள் மகளிடம் சொல்ல எந்த பதிலும் இல்லை.

எந்த பதிலும் வரவில்லை, போனும் நின்று போய் விட்டது.

திரும்ப போன் அலற, இந்த முறை பொறுமை இழந்து சுபஸ்ரீயே வெளியே சென்றார். அங்கு அந்த மொபைலின் பக்கத்தில் தான் கீர்த்தி லேப்டாப்பில் கேம் விளையாடிக் கொண்டிருந்தாள். ஆனால் அந்த மொபைல் அடிப்பதோ, தன் அன்னையின் குரலோ அவள் காதுகளுக்கு கேட்கவே இல்லை.

அவளை முறைத்து விட்டு, அவள் தம்பியின் மொபைலை எடுத்துக் கொண்டு அவன் அறைக்கு கொண்டு போய் சின்னதாக அவனை அர்ச்சித்து விட்டு சென்றாள்.

‘ம்ம். யாருடா காலைலேயே என்ன இப்படி திட்டு வாங்க வைச்சது’ என்று எண்ணிக் கொண்டே மிஸ்ட் காலை ஓபன் செய்வதற்குள் கௌஷிக் காலிங் என்று போன் வந்தது.

“ஹலோ”

“ஹலோ பாஸ்”

“கௌஷிக். அடி தான் டா வாங்க போற. ஒழுங்கா பேசு. இந்த பாஸ்னு எல்லாம் கூப்பிடற வேலை வச்சிக்கிட்ட அடி தான் சொல்லிட்டேன்”

“ஓகே. சில் டா”

“சரி. நீ தான் இதுக்கு முன்னவும் கூப்பிட்டியா.”

“ஆமா. நீ ஏன் இவ்வளவு நேரம் எடுக்கலை. ஒரு அர்ஜென்ட்க்கு கூப்பிட்டா எடுக்க மாட்டியா”

“ஹேய் மொபைல் கீழே ஹால்ல வச்சிட்டு வந்துட்டேன் போல, அதான். சரி சொல்லு, அப்படி என்ன அர்ஜென்ட். என்னடா ஏதாச்சும் பொண்ணு செட் ஆகிடுச்சா, ஆன்டி ஓகே சொல்லலையா, பரவால்ல விடுடா மச்சான், நான் உனக்கு சைன் பண்ணி மேரேஜ் பண்ணி வைக்கறேன்” என்று நீளமாக பேசியவனை நடுவில் கெஞ்சி கதறி நிறுத்தினான் கௌஷிக்.

“ஏன் டா. ஏன் டா உனக்கு என் மேல இந்த கொலைவெறி”

“என்ன ஆச்சி டா”

“போதும். ரொம்ப நல்லவன் மாதிரி இந்த சீன்க்கு ஒன்னும் குறைச்சல் இல்லை, நீ இங்க வருவ இல்ல, முதல்ல நீ சொன்னதை எல்லாம் அம்மா கிட்ட சொல்லி போட்டுக் கொடுக்கறேன்”

“ஹே ஹே. அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம், ஏதோ அர்ஜென்ட்ன்னு சொல்லிட்டு ஏன் டா இப்படி வெட்டியா பேசிட்டிருக்க”

“எல்லாம் என் நேரம். நேத்து சொன்னேன் இல்ல, நம்ம இன்ஸ்டிடியூட்க்கு ஹிஸ்டரிக்கு ஒருத்தவங்க இண்டர்வ்யூக்கு வந்தாங்கன்னு”

“ஆமாம். அதுக்கென்ன டா. அது தான் நான் அப்பவே சொன்னேனே உனக்கு ஓகேன்னா ஓகே பண்ணிடுன்னு”

“ஹேய் ஏன் டா நீ வேற, நேத்து தான் ஏதோ அவசரம்ன்னு என் பேச்சை முழுசா கேட்கலை, இப்பவாச்சும் கேளேன் டா”

“சரி சொல்லு டா. நேத்து கரெக்ட்டா இண்டர்வ்யூ டைம்க்கு உங்க மாமா மிஸ்டர் சுந்தரம் வந்திட்டார்.”

“மாமாவா, அவர் வந்தா கண்டிப்பா ஏதாச்சும் பிரச்சனை பண்ணி இருப்பாறே”

“ம்ம்ம். நேத்து வந்தவங்களை அவர் செலக்ட் பண்ணக் கூடாதுன்னு ஒத்த கால்ல நிக்கறாரு”

“சரி. பர்ஸ்ட் நீ சொல்லு, நேத்து வந்த லேடி ஓகே வா”

“ம்ம்ம். எனக்கென்னவோ அவங்க இதுல சரியா பிக்ஸ் ஆவாங்கன்னு தோணுது, பட் மாமா இதை ஸ்ட்ராங்கா அப்போஸ் பண்றாரு. சரி சொல்லு. இப்ப என்ன பண்றது”

“ஏன் மாமா இப்படி சொல்றாரு கௌஷிக். அவங்களை ஏன் அவருக்கு பிடிக்கலை.”

“அதுக்கு முதல்ல இருந்து சொல்லணுமே”

“சொல்லு டா. மாமா என்ன தான் பண்ணாருன்னு தெரியனும்ல்ல”

ண்டர்வ்யூ என்றவுடன் அங்கு நிறைய பேரை எதிர்ப்பார்த்த தேன்மொழிக்கு வியப்பு தான். ஏனெனில் அங்கு இண்டர்வ்யூவிற்கு அவளை தவிர வேறு யாரும் வந்திருப்பதாக தெரியவில்லை. வித்யா ஏதோ பெரிய ஐஏஎஸ் கோச்சிங் இன்ஸ்டிடியூட் என்று கூறினாலே என்று எண்ணிக் கொண்டாள்.

‘சரி பார்க்கலாம்’ என்றவாறு அமர்ந்திருந்தாள்.

அவளை நெடுநேரம் காத்திருக்க வைக்காமல் அழைத்து விட்டார்கள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.