(Reading time: 23 - 45 minutes)

சீகர புன்னகையுடன் கௌஷிக் அமர்ந்திருக்க, சிடு சிடுவென்று ஒரு வயதானவரும் அங்கிருந்தார்.

எல்லாம் பொதுவான கேள்விகளாக இருக்க, தேன்மொழியும் எல்லாவற்றிற்கும் தெளிவாக பதில் கூறிக் கொண்டிருந்தாள்.

இடையிலேயே கௌஷிக்கின் பார்வையில் பாராட்டு தெரிய இண்டர்வ்யூ தொடர்ந்துக் கொண்டிருந்தது.

கடைசியாக கௌஷிக் “ஓகே. உங்களால இப்பவே எங்களுக்கு ஒரு டெமோ கிளாஸ் எடுத்து காண்பிக்க முடியுமா” என்றான்.

தேன்மொழியும் “வொய் நாட்” என்றவாறு எந்திரிக்க, அவள் ப்ரொபைலை பார்த்துக் கொண்டிருந்த அந்த பெரியவர் “ஏன்ம்மா சென்னைலயா நீ வொர்க் பண்ணிட்டிருந்த” என்று கேட்டார்.

“எஸ் சார்”

“சென்னைல அப்படி ஒரு நல்ல காலேஜ்ல வொர்க் பண்ணிட்டு இருந்திட்டு திருச்சிக்கு ஏன் வந்தீங்க” என்றார்.

ஒரு நிமிடம் என்ன சொல்வது என்று யோசித்த தேன்மொழி பொய் ஏதும் கூற தோன்றாமல் “இட்ஸ் மை பெர்சனல் சார்” என்றாள்.

கௌஷிக்கிற்கோ அவள் கூறியது ஆச்சரியமாக இருக்க, சுந்தரத்திற்கோ அவமானமாக இருந்தது.

அவர் ஏதும் பேசவில்லை. சில வினாடிகள் அங்கு அமைதி நிலவியது.

கௌஷிக் ஏதோ சொல்ல வர, அவனை சுந்தரம் கை அமர்த்தி விட்டு “எப்படி நீங்க இப்படி ஒரு பதில் சொல்லலாம். உங்களை இங்க நாங்க வேலைக்கு எடுக்க போறோம்ன்னா உங்களை பத்தி எங்களுக்கு முழுசா தெரிய தேவை இல்லையா” என்றார்.

“நீங்க சொல்றது சரி தான் சார். பட் நீங்க இந்த ஜாப் எனக்கு தறீங்கன்னா அதுக்கு என்ன ரிகுவயர்மென்ட்டோ அந்த தகுதி எனக்கு இருக்கான்னு பாருங்க. இப்ப டெமோ கிளாஸ் எடுக்க சொன்னீங்க, அதை பாருங்க, இன்னும் என்னை நாலு கேள்வி கூட கேளுங்க, எனக்கு நாலேஜ் இருக்கான்னு பாருங்க.”

ஆனால் அவளின் இந்த பதிலிலெல்லாம் சுந்தரம் சமாதானம் ஆகவில்லை.

“அதெப்படி நாங்க ஒன்னு கேட்கும் போது நீங்க பதில் சொல்லலைன்னா எப்படி, நீங்க பழைய காலேஜ்ல என்ன பண்ணிட்டு விட்டுட்டு வந்துட்டீங்களோன்னு எங்களுக்கு தோணாதா” என்றார்.

அவரை ஊன்றி பார்த்த தேன்மொழி, “என்னோட காலேஜ் நம்பர் ப்ரொபைலில் இருக்கு சார், வேணும்னா எங்க பிரின்சிபல் நம்பர் கூட தரேன், என்னைப் பற்றி தாராளமா கேட்டுக்கோங்க. என்ன சார் நம்பர் கொடுக்கட்டுமா” என்றாள்.

“வேண்டாம்” என்றார் சுந்தரம் ஒரே வார்த்தையில்.

“இன்னும் ஒரு விஷயம் சார், நீங்க கேட்ட கேள்விக்கு நான் வேற ஏதாவது கூட பொய்யா ஒரு ரீசன் சொல்லி இருக்கலாம். நீங்களும் சமாதானமாகி இருப்பீங்க. பட் எனக்கு அதுல விருப்பம் இல்லை.”

அதன் பின்பு அங்கு கனத்த அமைதி நிலவியது. பின்பு சுதாரித்த கௌஷிக், “ஓகே நீங்க வெளில வெயிட் பண்ணுங்க. நான் கொஞ்ச நேரத்துல வந்து கூப்பிடறேன்” என்றான்.

“ஓகே சார்” என்று அவளும் வெளியே சென்றாள்.

இதுக்கு தான் மாமா வேண்டாம்ன்னு அடம் பிடிக்கிறாரா. அவங்க சொன்னதும் கரெக்ட் தானே கௌஷிக். அவங்க ஏதோ பெர்சனல்ன்னு பீல் பண்றதை சொல்லுன்னு அடம் பிடிக்கறது என்ன நாகரீகம். அதுவும் அவங்க அவ்வளவு கான்பிடென்ட்டா நம்பர் தரேன்னு சொல்றாங்கன்னா அவங்க மேல எந்த தப்பும் இருக்க வாய்ப்பில்லை.”

“ம்ம்ம். ஆனா இது மட்டும் மாமா வேண்டாம்ன்னு சொல்றதுக்கு ரீசன் இல்லை.”

“வேறென்ன. அவங்க டெமோ கிளாஸ் நல்லா எடுத்தாங்களா இல்லையா”

“அதெல்லாம் சூப்பரா எடுத்தாங்க. அதுவும், அவங்க கிட்ட ஒரு ஆனஸ்ட் இருக்கு டா, இது ரெண்டுத்துக்காகவும் தான் அவங்களை அப்பாய்ன்ட் பண்ணலாம்ன்னு எனக்கு தோணுது”

“அது சரி டா. வேறென்ன பிரச்சனை”

“கிளாஸ் எடுத்து முடிச்ச உடனே லஞ்ச் பிரேக்காக ஸ்டுடென்ட்ஸ் எல்லாரும் வெளியே போயிட்டிருந்தாங்க. பாதி பேர் அங்கேயே சாப்பிட்டுட்டு இருந்தாங்க. அதுல அந்த சுரேஷ் இல்ல, அந்த ரகு சார் பையன், அவன் ஹிஸ்டரி எல்லாம் ஒரு சப்ஜெக்ட்டா அப்படின்ற லெவல்க்கு அவன் பிரண்ட்ஸ் கிட்ட பேசிட்டிருந்தான். இந்த மேடம் நேரா அவன் கிட்ட போயிட்டு ஒரு லெக்சர் எடுத்துட்டாங்க. அவன் ஹிஸ்டரி இந்த எக்ஸாம்ல ஏன் இருக்க கூடாதுன்னு ஏதேதோ சொன்னான் டா, இவங்க அதுக்கெல்லாம் சரியான பதில் சொல்லி அவனை வாயே திறக்க விடலை. அங்க வேற நிறைய ஸ்டுடென்ட்ஸ் இருந்ததுல அவனுக்கு இன்சல்ட் ஆகிடுச்சி. கோபமா கிளம்பிட்டான்”

“ஓ அவன் நமக்கே எப்பவும் பிரச்சனை தான். அவங்க அப்பாக்காக பார்த்து தான் அவனை விட்டு வச்சிருக்கோம். சரி அவன் ஏதோ சொன்னான், இவங்க அதுக்கு பதில் சொன்னாங்க. ஏன்னா யாரா இருந்தாலும் அவங்கவங்க சப்ஜெக்ட்டை சொன்னா கோபம் வர தான் செய்யும். இதுல மாமாக்கு என்னவாம்”

“என்னவாமா. கிளாஸ்ல இருந்து கேபின்க்கு போன உடனே திரும்ப நீங்க எப்படி ஒரு ஸ்டுடென்ட் கிட்ட அப்படி பேசலாம்ன்னு மாமா திரும்ப பிரச்சனையை ஆரம்பிச்சாரு. அதுக்கு அவங்க, சார் நான் அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன்.ரெண்டு வருஷம் லெக்சரரா இருந்திருக்கேன் சார். இந்த டிகிரியையும் ரொம்ப பிடிச்சி படிச்சேன். என் சப்ஜெக்ட்டை ஒருத்தவங்க இப்படி பேசும் போது நான் எப்படி சார் அமைதியா இருக்க முடியும். அப்பவும் நான் ஏதும் அவங்க கிட்ட தப்பாவோ, கோபமாவோ பேசலையே, ஜஸ்ட் எக்ஸ்ப்ளைன் தானே பண்ணேன்னு சொன்னாங்க”

நான் தான் நடுவுல புகுந்து இன்னும் சண்டை வரர்துக்கு முன்னே “மிஸ் தேன்மொழி. நான் உங்களுக்கு கால் பண்றேன். எங்க பாஸ் அவுட் ஆப் ஸ்டேஷன். சோ பைனல் டெசிஷன் அவரோடது தான்” அப்படின்னு சொன்னேன்.

“மறைமுகமாக உங்க மாமாக்கு இதில் தலையிட உங்களுக்கு உரிமை இல்லை அப்படின்னு புரிய வைக்க தான் ட்ரை பண்ணேன். ஆனால் அவர் அதை வலுக் கட்டாயமாக புரிந்துக் கொள்ள மறுக்கும் போது என்ன செய்வது” என்றான் சோகமாக.

“ம்ம்ம். அவரு சும்மாவே ஆடுவாரு. இப்ப கேட்கணுமா. இப்ப என்ன தான் சொல்றாரு.”

“அந்த பொண்ணு ரொம்ப திமிர் பிடிச்சதா இருக்கு. என் கிட்ட பேசினதை கூட விடு. ஒரு ஸ்டுடென்ட் கிட்ட அப்படி பேசினது தப்பு. சோ வேலைக்கு அவங்களை எடுக்க கூடாது, இது தான் அவர் சொல்றது. இப்ப நீ என்ன சொல்ற”

“ஆனா அவர் சொல்ற மாதிரி அவங்க சுரேஷ் கிட்ட எதுவுமே ஹார்ஷா பேசலை டா. அவங்க முகத்துல கோபத்துக்கான சாயல் ஒண்ணுமே இல்லை. அதை அவனுக்கு புரிய வைக்கற தன்மை மட்டும் தான் இருந்துச்சி.”

“ம்ம்ம். ஓகே. நீ இவ்வளவு சொல்றன்னா அவங்க அவ்வளவு கேப்பபல் பெர்சனா தான் இருப்பாங்க. சோ அப்பாய்ன்ட் பண்ணிடு. நமக்கும் ஹிஸ்டரிக்கு சரியாவே ஆள் செட் ஆகலை இல்லை”

“ம்ம்ம். ஓகே. அப்ப மாமா”

“அவர் ஏதாச்சும் கேட்டா நான் தான் அப்பாய்ன்ட் பண்ண சொன்னேன்னு சொல்லு”

“சரி டா. ஓகே. நீ எப்ப இங்க வர.”

“நான் வரர்துக்கு எப்படியும் போர் டேஸ் ஆகும்”

“சரி ஓகே. பாய்”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.