(Reading time: 10 - 19 minutes)

 

5 வருடங்களுக்கு முன்பு......

"என்னங்க....ரொம்ப நாள்

கழிச்சி ஊருக்குப் போறோம்.வேலை இருக்கு,இல்லைன்னு சீக்கிரம் கூட்டிட்டு வந்திட மாட்டீங்களே???அத்தை,மாமாவைப் பார்த்து ரொம்ப நாளாச்சு!"-கீதா.அதைக் கேட்ட ரகு,அவள் கையை பிடித்து இழுத்து தன் மடி மீது அமர வைத்தான்.

"என்னடி நீ??இந்தக் காலத்துல இப்படி இருக்க?அவ,அவ அப்பா, அம்மாகிட்ட இருந்து பையனை பிரிச்சிட்டு வர பார்க்கிறா....நீ என்னன்னா!அத்தை,மாமாகிட்ட இருந்து சீக்கிரம் கூட்டிட்டு வராதீங்கன்னு சொல்ற???"

"எனக்கு அவங்களும் அம்மா,அப்பா மாதிரி தான்."

"சரி தான்...ஆனா,அப்பா இன்னும் கொஞ்சம் கோபத்துல தான் இருக்காரு!"

"என்ன?என்கிட்ட நல்லா தாங்க பேசினாரு!!!"

"ஆனா,என்கிட்ட அப்படி பேசலையே!2 நாள் முன்னாடி போன் பண்ணி நான் என் மருமக கிட்ட பேசணும்னு சொல்றார்.என்னை,கவனிக்கவே இல்லை.உன்கிட்ட நான் தான் ஃப்லாட்னா,என் வீட்டில இருக்கிறவங்களும் அப்படி தான் போல??"-என்று கண்ணடித்தான்.

"ம்...அப்போ மாமாக்கு உங்க மேல இன்னும் கோபம் போகலையா?"

"ம்ஹீம்..."

"இப்போ என்ன பண்றதுங்க?"

"வேணும்னா...ஊருக்குப் போற ஐடியாவை கேன்சல் பண்ணிட்டு,அடுத்த வருஷம் என்னை மாதிரியே இல்லை உன்னை மாதிரியே ஒரு குட்டி ரகுவோட,இல்லை...கீதாவோட போய் நின்னா சமாதானம் ஆயிடுவார்.என்ன சரியா?"

"சும்மா இருங்க..."-என்றபடி அழகாய் முகம் சிவந்தாள் கீதா.

"அப்படியெல்லாம் விட முடியாது...சரியா???இல்லை...வேணாமா??"

"நீங்க ரொம்ப மோசம் போங்க."

"வேண்டாம்டி.....அப்பறம் நான் எதாவது பண்ணிடுவேன்.அப்பறம்,என்னை திட்டக் கூடாது!"

"அப்படின்னா..."

"அதுசரி....நீ தேரமாட்ட!உனக்கு எப்பப்பாரு லைவ் டெமோ தான் காட்டணும்."-என்று அவளை இழுத்து,அவள் இதழில்,தன் இதழ் பதித்தான்.தன் கணவனது அன்பினில்,விடு பட முடியாது தவித்தவள்,பின் மெதுவாக இவ்வுலகிற்கு வந்தாள்.

"இப்போ புரிஞ்சிதா?"

"உங்களை....சும்மாவே இருக்க மாட்டீங்களா?"

"வேற வேலை என்னம்மா இருக்கு?"

"போங்க...போய் குளிச்சிட்டு வாங்க!"

"போடி!அப்பறம் குளிக்கலாம்...."

"இன்னிக்கு வெள்ளிக்கிழமை போய் குளிங்க."

"நான் எந்த கோவில்ல போய் மணி அடிச்சுட்டு இருக்கப் போறேன்??"

"என்னங்க?"

"என்ன??"

"போங்க...போய் குளிங்க."

"ம்....சரி வா!"

"எங்கே?"

"நீ தானே குளிக்க சொன்ன?அதான்...வா!"

"ஐயோ...விடுங்க! விளையாடிட்டு இருக்கீங்க?"

"என்ன நீ இதுக்கும் ஒத்துக்க மாட்ற! அதுக்கும் ஒத்துக்க மாட்ற?"

"அதுலாம்...ஒத்துக்க முடியாது."

"போடி..."

"என்ன கோவமா?"

"போ..."

"குழந்தைத் தனமா அடம் பிடிக்காதீங்க."

"ஏ...நமக்கு குழந்தைப் பிறந்தா அவனை கவனிப்பியா?என்னையா?"

"சும்மா இருக்க மாட்டிங்களா?"

"சொல்லு...."

"எனக்கு இந்த குழந்தை தான் முதல்ல....அப்பறம் தான் மற்றவங்க எல்லாம்..."-என்று அவன் மூக்கின் நுனியை செல்லமாக பிடித்து ஆட்டினாள்.

"அப்போ...இந்த குழந்தைக்கு ஒண்ணு தருவியா?"

"என்ன?"-ரகு,அவள் காதில் ஏதோ கூறினான்.

"உங்களை என்ன பண்றேன் பாருங்க!!!"

"ஏ....வேணாம்டி!நான் பாவம்..."-காதலித்து திருமணம் செய்வது அழகு!!!அதுவே,திருமணத்திற்கு பின்பும் காதலிப்பது என்பது கொள்ளை அழகு!!!!சில இடங்களில் இவை கல்லாக போய்விடுகிறது.சில இடங்களில் இவை சிலையாகி மிளிர்கிறது.திருமணத்தின் அர்த்தம் விளங்காதவர்களுக்கு அது சிற்பியாய் தெரிகிறது.அர்த்தம் விளங்கியவர்களுக்கு அது சிற்பிக்குள் இருக்கும் முத்தாய் தெரிகிறது.

ராஜசிம்மபுரம்.....

"என்னங்க கீதாவும்,ரகுவும் வந்துட்டாங்க.ஸ்ரேயா அந்த ஆரத்தி தட்டை எடுத்து வாம்மா!!!"

"இதோ வந்துட்டேன் அத்தை."-ஸ்ரேயா  ஆரத்தி தட்டை எடுத்து வந்து தர,ரகுவின் தாயார் பாலசௌந்தரி அவர்களுக்கு ஆரத்தி எடுத்தார்.கீதா அவர் பாதங்கள் பணிந்து வணங்கினாள்.

"நல்லா இரும்மா!"-மனதார வாழ்த்தினர் ரகுவின் பெற்றோர்.அதைக் கண்ட ரகு,'நானும் இங்கே இருக்கிறேன்.'-என்பது போல தொண்டையை செறுமினான்.அதைக் கண்ட பாலசௌந்தரி மெல்ல நகைத்தார்.

"அவனை உள்ளே வர சொல்லு பாலா!"-என்று கூறிவிட்டு,"நீ உள்ளே வாம்மா!"-என்று கீதாவை மட்டும் அழைத்துவிட்டு சென்றார்.கீதா,அவனை பார்த்தாள்.அவன் இதழ்களில் மெல்லிய புன்னகை தவழ்ந்தது.

"என்னடா சிரிக்கிற?"

"ஒண்ணுமில்லம்மா...உன் புருஷன் செம டென்ஷன் பார்ட்டி தான் போல!"

"ஆரம்பிச்சிட்டியா??"-ரகு ஸ்ரேயாவை பார்த்து,

"ஓய்....டாக்டர் மேடம்...அதிசயமா ஊருக்கு வந்திருக்க??"

"நீங்க கூடதான் அதிசயமா வந்திருக்கீங்க...நான் எதாவது கேட்டேனா??சும்மா சொல்ல கூடாது மாமா உன் வைப் சூப்பரா இருக்காங்க....உனக்குன்னு அமையுதுப் பார்."

"எனக்கென்னடி குறை??"

"நீ எப்பவுமே எனக்கு சுமார் மூஞ்சி குமார் தான்."-அவர்கள் பேசுவது புரியாமல்,கீதா விழித்தாள்.

"மாமா உங்க கீதாவுக்கு ஒண்ணும் புரியலை போல,நீங்க கூட்டிட்டுப் போய் புரிய வைங்க."-என்று அவர்களை பார்த்து  கண்ணடித்தாள்.

"நான் ரெடி தான்....மேடம் ஒத்துக்கணுமே!"

"போதும்டா!என் மருமகளை ரொம்ப கிண்டல் பண்றீங்க!நீ வாம்மா!"-என்று கீதாவை அழைத்துக் கொண்டு பாலசௌந்தரி உள்ளே சென்றார்.

"மாமா!கடைசில நம்மள விட்டுட்டாங்களே!"

"விடு மச்சி! பார்த்தக்கலாம்.."-ரகு.

இதைப் படித்தவுடன் நிச்சயம் அனைவருக்குள்ளும் பல வினாக்கள் எழும்பும்.இது என்ன புது கதையாக உள்ளது?ரகுவிற்கும் ஸ்ரேயாவிற்கும் பிறந்தவனா ராகுல்?இது கீதாவிற்கும் தெரியுமா?ஆதித்யாவின் மனதில் இருந்த குழப்பம் இது தானா?ரகுவிற்கு தெரியாமல் இவை எப்படி நடந்தது?ரகுவின் முடிவு என்ன?காஷ்மீரில் என்ன நிகழ போகிறது?விடைகள் அடுத்த வாரம் வெளியிடப்படும்.

தொடரும்...

Go to EUU # 11

Go to EUU # 13

{kunena_discuss:722}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.