(Reading time: 12 - 23 minutes)

 

ம்… அவன் பத்தாது என்று சொன்னாலே, அதற்கு அர்த்தம்… அவனுக்கு அவள் பாட வேண்டும்…

“புரியலைங்க…”

“ஹேய்… என் செல்லம்ல… அம்முல… ப்ளீஸ்டி…”

“கொஞ்சினா பாட மாட்டேன்…”

“சரி.. சரி.. சாரிடா… ஹ்ம்ம்… பாடு…”

“நீ இல்லாமல் என்றும் இங்கே இயங்காது பூமி…

நீ அறியா சேதி இல்லை எந்தன் கிருஷ்ண சுவாமி…

பின் தொடர்ந்து பெண்கள் வந்தால் புன்னகைத்து பார்ப்பாய்…

கொஞ்ச நேரம் ஆன பின்பு அங்கிருந்து மறைவாய்…

உன் ஞானம் போற்றிடாத விஞ்ஞானம் ஏது…

அறியாதார் கதை போலே அஞ்ஞானம் ஏது…

அன்று அர்ஜுனனுக்கு நீ உரைத்தாயே பொன்னான கீதை… இன்று

உன் மொழி கேட்க உருகுகிறாளே இங்கே ஓர் கோதை…

வாராது போவாயோ வாசுதேவனே…

வந்தாலே வாழும் இங்கு என் ஜீவனே…

ஜெய்..முகிலன் முகிலன்

கிருஷ்ணா முகிலன் முகிலன்

எனக்குள் உனையே நான் நிதமும் வரைந்தேன்…

 ------------------------------

மச்சமாக நீரில் தோன்றி மறைகள் தன்னை காத்தாய்

கூர்மமாக மண்ணில் தோன்றி பூமி தன்னை மீட்டாய்

வாமணன் போல் தோற்றம் கொண்டு வானளந்து நின்றாய்

நரன் கலந்த சிம்மமாகி ஹிரணியனை கொன்றாய்

ராவணன் தன் தலையை கொய்ய ராமனாக வந்தாய்

கண்ணனாக நீயே வந்து காதலும் தந்தாய்

இங்கு உன்னவதாரம் ஒவ்வொன்றிலும் தான் உன் தாரம் ஆனேன்

உன் திருவடி பட்டால் திருமணமாகும் என்றே ஏங்குகிறேனே

மயில்பீலி சூடி நிற்கும் மன்னவனே

மங்கைக்கு என்றும் நீயே மணவாளனே

 ------------------------------

முகிலன் முகிலன் எந்தன் முகிலன் முகிலன்

வரமே வரமே என்றும் தருவான் அவனே…

என்ன செய்ய நானோ தோல் பாவைதான்

உந்தன் கைகள் ஆட்டி வைக்கும் நூல் பாவைதான்

முகுந்தா முகுந்தா

வெண்ணை உண்ட வாயால் மண்ணை உண்டவா

பெண்ணை உண்ட காதல் நோய்க்கு மருந்தாக வா

முகிலன் முகிலன் இந்த மயூரி முகிலன்…

இனி காலம் முழுதும் இவள் மயூரி முகிலன்…”

அவளின் குரலில் மெய்மறந்தவன் அவளின் வரி மாற்றத்தை கவனித்து சிலிர்த்துப்போனான்….

“மயூ………………….. எப்படி டீ இப்படி… உன்னால தான்டி இப்படி எல்லாம் பாட முடியும்… என் மயூ….”

“போதும் போதும் கொஞ்சினது… இப்படியே எங்கிட்ட பேசிட்டிருந்தா அண்ணா வீட்டு ஃபங்ஷன்க்கு எப்போ கிளம்புறதா உத்தேசம்… ???”

“அட என் அறிவுஜீவியே… நான் இப்போ ஊட்டியில் தான் இருக்கிறேன்…”

“என்னது???!!!”…

“இப்படியே ஷாக்ல இரு… நான் சீக்கிரம் இங்க இருந்து திரும்பி என் மயூகிட்ட வந்துடுவேனாம்… அதுவர கனவுலயாச்சும் என்கூட டூயட் பாடுடி என் தங்கமே… வச்சிடவா.. மிஸ் யூ டி… “ என்று அவளின் பதிலை எதிர்பாராது செல்போனை அணைத்தான்.. அவனுக்கு தெரியும் அவள் என்ன பதில் சொல்வாள் என்று… அவளின் திட்டு கேட்க அவன் என்ன லூசா?.. முகிலன் ஆச்சே…

அவனும் அந்த வளைந்து நெளிந்த சாலையில் சீக்கிரம் போக முயற்சிக்கின்றான்… ஆனால் அவனுக்கு முன் சென்று கொண்டிருந்த லாரி டிரைவர் அதற்கு விட்டால் தானே…

அந்த நேரம் அவனின் கைபேசி ஒலிக்க,

“கிளம்பிட்டியாடா?...”

“கிளம்பிட்டேன் டா…”

“நிஜமாவா?...”

“ஆமா டா.. அப்போவே வந்துட்டேன்…”

“வந்தவன் என்னப் பாக்காம எங்கடா இருக்குற…?.. உன் கண்ணன் வேலையை ஆரம்பிச்சிட்டியா?...”

“ஏன் டா நீ வேற…?”

“என்னடா?..”

“உன்னப் பாக்கணும்னு தான் வந்தேன்.. எங்க… இவன் விட்டா தான?...”

“யாருடா?...”

“சரியாப் போச்சு… எனக்கு முன்னாடி லாரியில் போறவன், யானை மேலப் போறதுபோல போறான்.. இன்னைக்கு நான் உன் வீட்டு ஃபங்க்ஷங்க்கு வந்த் மாதிரிதான் டா நண்பா…”

“ஹாஹாஹா… அப்போ நீயும் அந்த யானைக்கிட்ட லிஃப்ட் கேட்டு வந்துசேர்…”

“ஹ்ம்ம்… வரேன்டா… நல்லவனே…”

“ஒகே டா.. ஹவ் அ நைஸ் ஜர்னி..”

ந்த குட்டியானை அதோட அம்மாகிட்ட போய் சேர்ந்துட்டாம்… அவ்வளவுதான்.. கதை முடிஞ்சது..” என்ற அபி ரிகாவின் முன்னே சிரித்து அவள் கை தொட்டு அழைத்தாள்…

“மிஸ் கதை நல்லா இருந்துச்சா?...” என்று கேட்க…

ஏதோ ஒரு நிலையிலிருந்து வெளிவந்தவள் அவளிடம், “ஹ்ம்ம் நல்லா இருந்ததுமா..” என்று அவளைக் கட்டிக்கொண்டாள்…

“ஹ்ம்ம் ஷன்வி மிஸ்கிட்டேயும் இந்த கதை சொல்லலாமா?.. என்று அபி கேட்க… “ஹ்ம்ம் ஓ.கே” என்று ரிகாவும் பதில் சொன்னாள்…

அப்போது தான் ஷன்வியை தேடியவள், தனக்கு முதுகுக்காட்டி அமர்ந்திருந்த ஆடவனையும், அவனுக்கு எதிரே இருந்த ஷன்வியையும் கண்டாள்…

“யாரிவன்?... இவன் ஏன் இங்கு அமர்ந்திருக்கிறான்?.. இவன் ஷன்வி நண்பனா?... எனில் தனக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லையே… இவன் ஷன்வியிடம் பேசுவதைப் பார்த்தால் நிச்சயம் ஏற்கனவே ஒருவருக்கொருவர் பரிச்சயம் ஆனது போல் உள்ளதே… இவன் யார்???... என யோசித்தவளுக்கு அதிக நேரம் கஷ்டம் தராது அவன் திரும்பினான்..”

சட்டென அவன் முகம் பார்த்தவள் ஸ்தம்பித்துப் போனாள்…

“இ……வ…..னா………………………………………. ???!!!.............”

தொடரும்

Go to episode # 01

Go to episode # 03

{kunena_discuss:739}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.