(Reading time: 14 - 27 minutes)

 

ட் ஃபோன் பத்தி கேட்டால்............”

“என்னை கடத்தினவன் ஃபோன்னு சொல்லு. இது அவனிதுதான்.”

“டிரேஃஸ் பண்ணிணால்.............உங்களை பத்தி.................”

“தெரிய வராது, டிரேஃஸ் பண்ணவே முடியாது. இது லேட்டஃஸ்ட் டெக்னாலஜி”

“ஓ”

ஃபோனை கையில் வாங்கிக் கொண்டாள். கண்ணுக்கெட்டிய தூரத்தில் கடல் தளும்பிக் கொண்டிருந்தது அவள் மனதை போல. ‘இன்னும் எவ்வளவு நேரம் இவனோடு?’ ‘இனி என்று பார்ப்போம் இவனை?’

“இனி நாம எப்ப மீட் பண்ணலாம்?”

அதிர்ந்து பார்த்தான் அவன்.

“ஹேய் உனக்கு ஏன் இப்படிபட்ட விபரீத ஆசையெல்லாம் வருது............ நான் உயிரோட இருப்பது உனக்கு பிடிக்கலையா?”

சட்டென தன் மென் கரத்தால் அவன் வாயை மூடினாள்.

“நான் உயிரோடு இருக்கிறவரை நீங்களும் இருக்கனும் ஆரிக்...... நீங்க எப்படி திரும்பி போக போறீங்க, எங்க போக போறீங்க, ஏன் உங்க பெயரென்ன எதுவுமே எனக்கு தெரியாது. தெரிஞ்சிகிடும் உரிமையும் எனக்கு கிடையாது. ஆனால் கண்டிப்பா நான் உயிரோடு இருக்கிறவரை நீங்களும் இருக்கனும்....நீங்க இல்லாத உலகத்தில என்னால இருக்க முடியாது..”

அவள் கண்களில் நீர் வழிய, உணர்ச்சியற்று பார்த்திருந்தான் அவன்.

“ப்ளீஃஸ் உங்க மெயில் ஐ டி யாவது தாங்களேன்.............”

“ப்ளீஃஸ் நிரல்யா, அது எனக்கு எவ்வளவு ரிஸ்க்னு யோசி..”

“சரி வேண்டாம் என் ஐ டி தாரேன் “ என தன் ஐ டி யை ஒப்புவித்தவள், “நீங்க ஸேஃபா உங்க வீட்டுக்கு போய்ட்டீங்கன்னு மட்டுமாவது மெயில் பண்ணுங்க......பெரிசாகூட வேண்டாம் ஒரே ஒரெ ‘எஸ்’ மட்டும் டைப்பண்ணி அனுப்புங்க, ஏதாவது ஒரு மெயில் ஐ டி யிலிருந்து அனுப்புங்க. என் வாழ்நாளுக்கும் அந்த ஒரு மெயில் போதும்..”

“நிரல்யா............ ப்ளீஸ்................”

“என் ஐ டிக்கு கூட அனுப்ப வேண்டாம்------------912014னு ஒரு ஐ டி, ஜி மெயிலில் ஓபன் பண்றேன், அதுவும் ஏதாவது பப்ளிக் ஹப்பிலிருந்து. நீங்க அதுக்கு அனுப்புங்க போதும் ப்ளீஃஸ்  ப்ளீஃஸ்...............”

“நிரல்யா” என்றவன்  அவள் தந்தையின் எண்ணை அழுத்தியே அவளிடம் நீட்டினான். வாங்கி விஷயத்தை அவன் சொன்னவிதமாக சொல்ல அவரும் கடலுக்குள் ரகசியமாக வரச்சொன்னவர், இணைப்பை துண்டித்தார்.

“அப்பா இப்படிதான் சொல்லுவாங்கன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கு..........எல்லார் மனசையும், நடவடிக்கைகளயும் புரிஞ்சிக்க முடியுற உங்களால என்னை புரிஞ்சிக்க முடியாதா ஆரிக்?........ப்ளீஃஸ் உங்க பெயரையாவது சொல்லுங்களேன்.”

“நிரல்யா உன் பதினெட்டு வயது, உன்னோட சூழ்நிலைக்கு உன்னிடம் யார் நல்லா நடந்துகிட்டாலும் இப்படிதான் தோணும்....நாலைந்து வருஷம் கழிச்சி நினைச்சு பார்த்தால் உனக்கே இந்த ஆசை, தவிப்பு எல்லாமே யாருக்கோ நடந்ததுபோல உணர்ச்சி பாதிப்பு இல்லாம நினைவா மட்டும்தான் இருக்கும்..........சே இப்படி நடந்திருக்கோமேனு உனக்கே தோணும்.....”

“அப்படின்னா நாலைந்து வருஷம் கழிச்சும் நான் உங்களுக்காக காத்திருந்தால் வருவீங்களா? இன்னும் ஏழு இல்ல எழுபது வருஷமானாலும் எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது உங்க கூடதான். நான் எங்கே போனாலும், என்னை எப்படி மீட் பண்ணனும்னு உங்களுக்கு தெரிஞ்சிக்க முடியும். நான் உங்களுக்காக காத்திட்டு இருப்பதை புரிஞ்சிக்க முடியும். அப்ப நீங்க என்னை தேடி வந்து கல்யாணம் பண்ணுங்க. நான் உங்களை தேட முயற்ச்சியே செய்ய மாட்டேன்... அது உங்களுக்கு ஆபத்துங்கிறதால.....”

அவள் குரலில் இரும்பளவு உறுதி வந்திருந்தது. மனதின் நிறைவை வாய் பேசியது.

“பட் ப்ளீஃஸ் இப்ப இந்த ப்ராஜக்ட் முடிஞ்சு வீட்டுக்கு போனதும் எனக்கு ஒரு ‘எஸ்’ மட்டும் அனுப்பிடுங்க....ப்ளீஃஸ்......” மீண்டும் மன்றாடினாள்.

“நிரல்யா உங்க சாப்பர்ஸ் இந்த பக்கம் வர ஆரம்பிச்சிருக்கும்.”

நேராக சென்று அவர்கள் படகில் ஏறி அமர்ந்து கொண்டாள். சில நொடிகள் கழித்து வந்த அவன் இப்பொழுது காக்கி கார்கோ பேண்ட்ஃஸ் மற்றும் கறுப்பு டி ஷர்ட்டுக்கு மாறியிருந்தான். முகத்திலிருந்த சிறு ஒட்டு தாடி காணாமல் போயிருந்தது. உண்மையன பெருந்தாடியை மறைத்திருந்த மீசை தாடியற்ற மாஸ்க்கை மாஸ்க் என கண்டே பிடிக்காதபடி ஒப்பனை செய்திருந்தான் அவன். தலையில் ஒரு கறுப்பு தொப்பி.

படகு உள்நோக்கி செல்ல முன்பு கல்லோடு கட்டியிருந்த உடையோடு சற்று முன்பு அவன் அணிந்திருந்த குர்தா பைஜாமா, இவள் களைந்திருந்த உடைகள், அணைத்தையும் இணைத்து கடலினுள் புதைத்தான்.

“இத்தனை மாறுவேஷ ஏற்பாடு எப்படி?”

“என்ன பத்தி கேட்க்காத நிரல்யா.........”

“ம்...............ஏழு வருஷம் கழிச்சு நீங்களே சொல்லுவீங்க......”

“ப்ளீஸ் இவ்வளவும் செய்துட்டு போறப்ப நான் மனகஷ்டத்தோட போணுமா?”

“ஓ.கே இனி இப்படி பேசலை. பட் அந்த ‘எஸ்’ ஐ மட்டும் அனுப்பிருங்க ஜாஷ்வா ப்ளீஸ்...........”

“என்ன திரும்பவும் ஜாஷ்வா?”

“அதான் கடலுக்கு வந்துட்டமே..............”

தூரத்தில் ஹெலிகாப்டரின் ஒலி, இவள் முகம் மறைத்திருந்த துப்பட்டாவை எடுத்துக் கொண்டவன் கடலினுள் குதித்தான்.

“ஜாஷ்வா ப்ளீஃஸ்.........ஸேஃபா போங்க......அந்த ‘எஸ்’ ஐ அனுப்பிடுங்க..........நான் உங்களை ரொம்பவே மிஸ் பண்ணபோறேன்...............நீங்க இல்லாம எப்படித்தான் இன்னும் ஏழு வருஷம் கழிக்க போறேனோ?............ ரொம்பவும் உங்களை மிஸ் பண்ணுவேன் ஜாஷ்.............தயவு செய்து என்னை மறந்திடாதீங்க............. நீங்க என்னை மறக்கமாடீங்க, ஆனால் நான் உங்களை தவிர யாரையும் நினைக்கவே மாட்டேன்............அவள் கதற கதற தண்ணீருக்குள் திரும்பி பாராது மூழ்கி மறைந்தான் அவன்.

“’பை’ கூட சொல்லாம போய்டீங்களே...........ஜாஷ்..” என இவள் அழ சற்று தொலைவில் நீருக்கு மேல் எழுந்தவன் “குட் பை நிரல்யா” என்றுவிட்டு மீண்டும் தண்ணீருக்குள் மறைந்தான்.

பிறகென்ன ஹெலிகாப்டர் அவளை மீட்க்க, வீடு வந்து சேர்ந்தாள். மறு வினாடியிலிருந்து அந்த ‘எஸ்’ஸிற்காக காத்திருக்க ஆரம்பித்தாள். ஆனால் மறுநாள் ஒரே நேரத்தில் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்த தீவிரவாத காம்புகள் அழிக்கப்பட்ட செய்தி வெளியானது. பல்வேறு நாடுகள் சேர்ந்து அதை நிகழ்த்தியிருந்தன. அதற்கும் இவளது ஜாஷ்வாவிற்கும் நிச்சயம் தொடர்பிருக்கும் என இவளுக்கு புரிந்தது. இத்தனைக்கும் மூளையாக செயல்பட்டது எந்த நாடு என கூட வெளியிடபடவில்லை. அவன் நாட்டின் பெயரே வெளிவராத போது அவன் பற்றிய தகவலா வெளி வரும்? அப்படி தகவல் வருவது அவனுக்கு பேராபத்தாகிவிடாதா?

கேம்ப் டேவிட் என அந்த ஆப்பரேஷன் அழைக்கப்பட்டது. அவனை சி டி ஒன் என குறிப்பிட்டது ஞாபகம் இருந்தது. ஆக அந்த சி டி  கேம்ப் டேவிட். 1 என்றால்..........இவன் தான் தலைவன் அல்லது ஒன் மேன் ஆர்மி. ஏற்ற ஆளைத்தான் அனுப்பியிருக்கிறார்கள்.

ஆனால் அதற்கு மேல் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இவள் முயற்சியும் செய்யவில்லை. இந்த கேம்ப் டேவிட்டில் இவர்கள் பக்க கேஷுவாலிட்டி என எதையும் குறிப்பிடவில்லை. அதனால் அவன் பத்திரமாகத்தான் இருப்பான் என இவள் மனதை தேற்றினாலும், நாட்கள் வாரங்களாகி, மாதங்களாக மாறி வருடங்களாக வழிந்தோடிய போதும் அவனிடமிருந்து அந்த ‘எஸ்’ வரவே இல்லை. ‘கல்நெஞ்சன்’ என ஒரு கணம் மனதிற்குள் குமைந்தால் மறுகணம் அவன் உயிருடன் இல்லையோ என எண்ணி துடித்தாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.