(Reading time: 13 - 26 minutes)

 

டுவில் நின்னு போய் விட்டால் காலை 7 மணி வரைக்கும் நாம் அதில் இருக்கனும்… வேண்டும் என்றால் நீ அதில் வா… நான் மாடிப்படி வழியாக போகிறேன்…” சொல்லிக்கொண்டு மாடிப்படி ஏறிய வினிதாவை பார்த்து

“ஏ ராட்சசி நில்லுடி நானும் வரேன்… என்னை மட்டும் தனியா விட்டுட்டு போற” கோபத்தில் அரம்பித்து பயத்தில் சொல்லி முடித்தாள் சித்ரா..

இருவரும் பேசிக் கொண்டு மூன்றாம் தலத்திற்க்கு ஏறும் போது அவர்களுக்கு முன் யாரோ வேகமாக நடந்து போவது தெரிந்தது.

“வினி அது யாரு…?” பயத்துடன் சித்ரா கேட்ட

“எனக்கும் தெரியல சித்ரா” அப்படி வினிதா சொன்னலும் அவள் அதையை தான் யோசித்துக் கொண்டிருந்தாள். அவர்களுக்கு முன் யாரும் செல்லவில்லை, கீழ்லிருந்து யாரும் மாடிப்படி ஏறினால் கண்டிப்பாக சத்தம் கேட்டு இருக்கும். அப்படி இருக்க அவர்களுக்கு முன் செல்லுவது யார்?

சித்ரா பயத்தில் வினிதாவின் கையை பற்றி நடக்க, இருவரும் அமைதியாக மாடிப்படியை ஏறினர். அவர்கள் தங்கி இருக்கும் வீட்டின் கதவை திறக்கும் போது டிவியை அணைத்து அனிதாவின் அறைக்கதவை சாத்தும் சத்தம் கேட்ட, அப்போழுது ஏதோ ஒர் உருவம் மின்னல் வேகத்தில் இவர்களை கடந்து உள்ளே சென்றது.

“யாரது யாரது” படலில் வினிதாவின் கைதொலைபெசி சினுங்க

“இந்த நேரத்திர்க்கு உனக்கு யார் போன் பண்றங்க….” சித்ரா வினிதாவை பார்த்துக் கொண்டே அவளின் அறைக்கு சென்றாள்.

“ஹாலோ அம்மா நாங்க இப்போது தான் வீட்டிற்க்கு வந்தோம்”

………….

“இன்றைக்கு வேலை அதிகம் அதான் லேட்….”

…………

“சரி கண்டிப்பாக வரேன்….”

------------

“அம்மா எனக்கு தூக்கம் வருது.. நான் காலையில் உங்களுக்கு கால் பண்ரேனே… குட் நைட்ம்மா..”

வினிதா உடை மாற்றி, தாகமாக இருப்பதால் தண்ணிர் குடிக்கலாம் என அறைகதவை திறக்க, மீண்டும் அவளின் தொலைபேசியை சத்தம் போட்டது…

“என் ஜான்சி ராணி என்ன பண்ணற….”

“அண்ணா யாரவது போன் எடுத்தா முதலில் ஹெலொன்னு சொல்லனும்” சொல்லிய படி வெளியே செல்ல…

இருட்டில் அமர்ந்து டிவி பார்த்தவளை பார்த்து “நீ தூங்க போறன்னு சொல்லி இப்போ டிவி பார்க்குறே” சத்தமாய் கேட்டவள் மெல்லிய குரலில் “உங்க ஜான்சி ராணி தான் டிவி பார்க்கிறது” சொல்லி ருபனின் பதிலுக்காக அமைதியானால்

“அது ஏன் கடைசி வாக்கியம் மட்டும் மெதுவாக வருது” ருபனின் குரலில் தூக்கத்திலும் சந்தோஷம் இருந்தது”

“சத்தமாக சொல்லி இருந்த இந்த நேரம் என்ன நடக்கும் உங்களுக்கு தெரியாதா?”

“ஓ நல்ல தெரியுமே, என் ஜான்சி ராணி என்னுடன் சண்டை போடுவா” என்றான்.

சமையலறையிலே சிறிது நேரம் பேசிக் கொண்டு இருக்கும் போது எங்கேயோ உடுக்கையின் சத்தம் கேட்ட

“வினி என் அப்பா ஆரம்பிச்சிட்டார் நீ போன்னை வை… உனக்கு பிறகு கால் பண்ணறேன்…” சொல்லி அவளின் பதிலுக்கு காத்து இருக்காமல் போனை வைத்து விட்டான்.

வினிதா தண்ணீர் குடிக்கும் போது டிவியை அனைத்து சித்ராவின் அறை கதவு சாத்தும் சத்தம் கேட்டது.

(காலை 4.30 ருபனின் வீட்டில் என்ன சத்தம் வாங்க நாமும் போய் பார்க்கலாம்)

ம்மா….. அப்பா இதை விடவே மாட்டாரா...” கேட்டவனின் குரலில் கோபமும் ஏறிச்சலும் இருந்தது

உடுக்கையின் சத்தம் இன்னும் வேகமாக கேட்க, அவனின் அம்மாவை பார்த்து முறைத்தான்.

“கண்ணா அப்பாவை பற்றி தான் உனக்கு தெரியுமே, உதவி கேட்டு வருபவரிடம் அவரால் முடிந்ததை செய்கிறார்” மகனை சமதானம் செய்ய முயச்சி செய்ய அது முடியாமல் போக…

“கண்ணா உன் ரும் கதவை சாத்தினால் உடுக்கை சத்தம் கேட்காதுப்பா” என்றார்

“இரவில் கூட நிம்மதியாக தூங்க முடியால… ச்செ” சலிப்பாக சொல்லி சென்றவனை அமைதியாக பார்த்தார் கல்யாணி.

ஒவ்வோரு வீட்டிலும் அப்பாவிற்க்கும் மகனுக்கும் நடக்கும் போரில் நடுவில் சிக்குவது அன்னைமார்கள் தானே…!

ருபனின் வீட்டிற்க்கு பக்கத்தில் ஒர் சிறிய மண்டபம் உள்ளது. அதில் தான் ருபனின் தந்தை, மேல் சட்டை இல்லாமால் வேட்டி கட்டி, சம்மனம் போட்டு அமர்ந்து இருந்தார். அவரின் கையில் உள்ள உடுக்கையை தட்டி ஒலியை எழுப்பிக் கொண்டு இருந்தவரின் கண்கலோ எதிரே அமர்ந்து இருந்த பெண்ணின் மீது இருந்தது. அந்த பெண்ணிற்க்கு பின் அவளின் பெற்றோர்கள் சற்று தள்ளி அமர்ந்து இருந்தனர்.

மிகவும் அலட்சியமாக இருந்தளுக்கு அமர்ந்து இருந்தவள் கண்களின் வெறியுடன், “அதை நிப்பாட்டுறியா? எனக்கு காது வலிக்குது…” என கத்த

அவர் உடுக்கையை கீழே வைத்து, அருகில் இருக்கும் சாட்டையை கையில் எடுத்துக்கொண்டார்.

“நீ பெரிய வித்தைகாரன் போல” என்றாள் ஏலனாமாக

அவர் அந்த பெண்ணின் சொல்லை காதில் வாங்காமல், அவரின் இஷ்டமான தெய்வத்திடம் மனம் உருகி பிரத்தைனை செய்து அந்த பெண்ணை பார்த்து, “நீ யார்…?” என கேட்க

“நான் அனு” என்றவள் அவரை பார்த்து பெரிதாக சிரித்தாள்

கையில் இருக்கும் சாட்டையை கொண்டு வேகமாக தரையில் அடிக்க, எதிரே இருந்த அந்த பெண் வலியால் துடித்தாள்….

தரையின் சாட்டையை அடித்தால் இந்த பெண் ஏன் வலியால் துடிக்கிறாள் என புரியாமல் அனுவின் பெற்றோர் அவர்களுக்கு எதிரே அமர்ந்து இருந்த மாந்திரிகரை பார்க்க, அவரோ அவர்களை அங்கேயே இருக்கும் படி கண்ணால் சைகை செய்தார்.

மீண்டும் அந்த சாட்டையை அவர் தரையில் அடிக்க…..

“ஆ…… அதை கீழே வை, எனக்கு உடல் முழுக்க வலிக்குது” அந்த பெண் கத்த அவளின் பெற்றோர் அரண்டு போயினர் ஏனெனில் அவர்கள் கேட்டது ஒரு ஆணின் குரல்….!

“அந்த பெண்ணில் உடலில் இருந்து வெளியே போ”

“ஹாஹாஹா முடியாது. நீ இவளை என்னுடன் அனுப்பி வை….”

“அந்த சின்ன பெண்ணை ஏன் தும்புருத்துகிறாய்?” அவரின் கேள்விக்கு அனுவின் கண்கள் இங்கும் அங்கும் அலைபாய்ந்து, வாசலுக்கு செல்ல ஒட இருந்தவளை அவரின் கண்கள் கண்டுக் கொண்டது.

கண்களை மூடி மனதை ஒரு நிலைக்கு கொண்டு வந்து, சற்று சத்தமாக மந்திரத்தை உச்சரிக்க, அவளோ அதை கேட்ட முடியாமல் கத்தினால்…

அதை அவர் கண்டுக் கொள்ளமால் தன் வேலையில் கவனமாக இருந்தார்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.