(Reading time: 13 - 26 minutes)

 

வரின் மந்திரத்துக்கு கட்டுப் பட்டு, அப்பெண்ணின் உடலில் இருந்து வெளியே வந்த கொடுரமான அந்த உருவம், புகையை மாறி காற்றை போல் சுழந்து அவரின் கையில் இருந்த காலி பாட்டலுக்குள் சென்றது. அதை அவர் தக்கையை கொண்டு அடைத்தார்.

அந்த பாட்டிலை பார்த்து “இனி நீ இதில் தான் இருக்கனும்… இதில் இருந்து உன்னால் வெளியாக முடியாது” சொல்லி அதை ஒரு கூடையில் வைத்தார்.

அங்கே என்ன நடத்தாலும் அனுவின் பெற்றோர் அவளை நெருங்க கூடாது என அவர் முன்பே எச்சரித்ததால் அந்த உருவம் அனுவின் உடலில்யிருந்து வெளியேரியவுடன் அவள் மயங்கி சரிந்தவளை அவர்கள் உட்காந்த இடத்தில் இருந்து அசையாமல் அங்கேயே இருந்தனர்.

அவர் பூஜையில் வைத்து இருந்த செம்பு நீரை எடுத்து மந்திரம் படித்து அவளின் முகத்தில் அடிக்க, அவள் அலரிக் கொண்டு எழுத்து அமர்ந்தாள்.

தான் எங்கே இருக்கிறாம் என யோசித்தவள் அவள் இருக்கும் இடத்தை கண்களை சுலற்றி பார்க்கையில் அங்கே ஒரு நடுதார வயத்தில் இருந்த ஒருவர் அம்மனுக்கு முன் அமர்ந்து ஏதோ மந்திரத்தை ஜெபித்துக் கொண்டிருந்தார்.

அந்த இடத்தை பார்க்கையில் அவளுக்கு மனதில் பயம் தோன்ற அவளின் அம்மாவின் கையை இருக்க பற்றிக் கொண்டாள்.

பூஜையில் வைத்து இருந்த தாயத்தை எடுத்து அனுவின் கையில் கட்டி,

“அம்மா சூரியன் உதயமாகும் முன் வெளியே இருக்கும் குளியல் அறையில் தலைக்கு குளித்து, இப்போ அணிந்து இருக்கும் இந்த ஆடைகளை பையில் போட்டு விடிங்க. நீங்க கொண்டு வந்து இருக்கும் மாத்து துணியை எடுத்துட்டு போங்க….”

“நான் திரும்ப வரும் வரை நீங்கள் மூவரும் இந்த இடத்திலே இருக்க வேண்டும், வேற எங்கேயும் செல்லக்கூடாது” என சொல்லி அந்த மண்டபத்தில் மூலையில் உள்ள கூடையில் இருந்த இரு பாத்தலையும், மண்வெட்டியும் அதில் இருந்த கயிற்றை இரண்டு துண்டுகலாய் வெட்டி எடுத்துக் கொண்டவர் அப்பெண்ணின் பெற்றோரின் அருகில் வந்து

“மறந்து விட வேண்டாம், நான் வரும் வரை இங்கேயே தான் இருக்க வேண்டும்” என எச்சரித்து சென்றார்.

டச் லைட் வெளிச்சத்தில் அவரின் வீட்டை விட்டு நடந்தவர் ஓர் ஒற்றை அடி பாதையில் முன்னூறு மீட்டர் தூரம் வரை நடந்து, ஓர் காடுக்கு வந்து சேந்தவர் சற்று உள்ளே சென்று மண்வெட்டியை கொண்டு மண்ணை தோண்ட ஆரம்பித்தார்.

இரண்டு இடத்தில் மூன்று அடி ஆழம் வரை தோண்டியவர் இரு பாட்டிலில் ஒர் பாட்டலை எடுத்து காயிற்றை கட்டும் போது அதன் உள்ளே இருந்த அந்த உருவம் அவரை பார்த்து முறைத்து கத்தியது.

அதை சாட்டை செய்யாமல் காயிறுடன் அந்த பாத்திலை மெல்ல உள்ளே இறக்கினார். இன்னோரு பாத்திலை எடுக்க அதில் இருந்த உருவம் மட்டியிட்டு, கை இரண்டையும் கூப்பி அதை வெளியில் விடும் படி கெஞ்சியது..

“ஏற்கனவே ஒரு முறை உன்னை மன்னித்து விடுவித்தேன். நீ அதை தவறாக பயன் படுத்தி வேறு சிலரின் உடலுக்குள் நுழைந்து அவர்களை மிகவும் துன்புரித்து விட்டாய். அதனால் நீ இந்த குழியில் இருப்பது தான் மற்றவர்களுக்கு நல்லது” சொல்லி காயிறுடன் அந்த பாத்திலையும் மெல்ல உள்ளே இறக்கினார்.

மீண்டும் மண்ணை மூடியவர் அங்கேயே உட்கார்ந்து சில மந்தரங்களை சத்தமாக உச்சரிக்கும் போது பல அக்க்ரோஷமாக குரல்கள் அவருக்கு ஏச்சரிக்கை விடுக்க, அது அணைத்தும் அவரின் காதில் விழுந்தலும் இன்னமும் சத்தமாக மந்திரதை சொல்லி அந்த மண்ணில் விரலால் ஒரு முத்திரையை வரைந்து, திரும்பி பார்க்கமால் அங்கே இருந்து சென்றார்.

காலை உணவை முடித்து பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்த அமுதாவிற்க்கு அந்த அலரல் சத்தம் கேட்டது. மூன்று ஆண்டுகளுக்கு முன் கேட்ட அதே சத்தம்…!

ஏனோ அவளுக்கு அப்போழுதே பக்கத்து வீட்டிக்கு செல்ல வேண்டும் என தோன்ற, ஒரு பாத்திரத்தில் உப்புமாவை அள்ளி போட்டு வீட்டை விட்டு வெளியே சென்றாள்.

அழைப்பி மணியை அழுத்தி நின்றவளுக்கு நெஞ்சம் பட பட வென அடித்திக் கொண்டது.

கலைந்த முடியுடன் கண்ணில் இன்னும் தூக்கத்தில் இருந்த வினிதா “என்னக்கா இவ்வளவு காலையில் வந்து கூப்படறிங்க”

“மணியை பாரு 11.45..”

“ஓ”

வினிதாவிடன் பேசினாலும் அமுதாவின் கண்கள் அந்த வீட்டையே அலசியது

அவளை போலவே தூக்கத்தில் வந்த சித்ரா அமுதாவை பார்த்து “தன்க்ஸ் அக்கா, பசிக்குதுன்னு எழுந்து வந்தேன் நீங்க சப்பாதோடு வந்து இருக்கிங்க”

“இவ சரியான சாப்பட்டு ராமயி அக்கா”

இவர்கள் பேசிக் கொண்டு இருக்க கையில் travel beg கூடன் உள்ளே வந்த அனிதாவை பார்த்து இருவரும் அதிச்சியனர்…!

“அனிதா எங்கே இருந்து வர”

இன்னைக்கு தான் நான் வரேன், நீங்க இரண்டு பேரும் ஏன் என்னை இப்படி பார்க்கிரிங்க”

“இன்று காலையில் நாங்க வேலை முடிந்து வரும் போது உன் ரும் கதவு சாத்தும் சத்தம் கேட்டது” சித்தா சொல்ல

“நீ மட்டும் என்னவாம் தூக்கம் வருதுன்னு சொன்ன, நான் தண்ணிர் குடிக்க வரும் போது பேய் மாதிரி டிவி பார்த்துக் கொண்டு இருந்த” என வினிதா சொல்லிய போது

“நானா?” ரும் போனவுடன் துணியை மாற்றமல் அப்படியே தூங்கி இப்போது தான் எழுந்து வரேன்” சொன்னவளை பார்த்து வினிதா அதிச்சி அடைந்தாள்

இன்று காலையில் அவள் பார்த்தது யார்?

சித்ரா இல்லை என்றால் அப்போ யார் நேற்று இரவு டிவியை பார்த்தது வினிதா யோசிக்கையில்….

அமுதா அங்கு என்ன நடக்கிறது என புரியாமல் மூவரின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்….!

தொடரும்

Go to episode # 01

Go to episode # 03

{kunena_discuss:753}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.