(Reading time: 51 - 101 minutes)

 

காதல் குயில் இருவரும் பார்வையை பரிமாறிக்கொள்ள, ரகுவும், மகரந்தனும் ஒரே நேரத்தில் தொண்டையை செருமிக்கொண்டனர் ... தங்களின் ஒரே மாதிரியான செயல் புன்னகை வர வைக்க, சட்டென கூட்டணி அமைத்து இருவரும் ஹை 5 கொடுத்து கொண்டனர் .... அவர்களின் சிரிப்பொலியில் திரும்பிய அர்ஜுன்,

" டேய், நீயெல்லாம் டாக்டரா ? எவ்வளவு முக்கியமான வேலையா உன்னை இங்க அழைச்சிட்டு வந்தா, கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம கேம் விளையாடிகிட்டு இருக்கே " என்றான் பொய் கோபத்துடன் ...

" டேய் முதல்ல என் பேஷண்ட்டை கண்ணுல காட்டுடா ... சும்மா நீயே டாக்டர் மாதிரி கண்ணால ஸ்கேன் பண்ணிட்டு இப்போ என்னை சொல்றியா? "

அவன் சொன்னதில் முகம் சிவந்தாள் சுபத்ரா.. அதற்குமேல் அவர்களை சோதிக்காமல், சுபத்ராவை சோதித்துவிட்டு , சில மருந்துகளை தந்துவிட்டு  அர்ஜுனை முறைத்தான் மகரந்தன்....

" டேய் "

" என்ன மச்சான் "

" ஸ்லைட் பிவர் கூட இல்லடா ..... ஆனா நீ , ஏதோ ஹார்ட் பேஷண்ட்டை பார்க்க போற மாதிரி பில்ட் அப் கொடுத்துட்டியே ! "

" ஹீ ஹீ விடு மச்சான் ... இப்போ வராத பிவர் அப்பறம் வந்துடலாம் இல்லையா ?  எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கை தானே ? "

" வேணாம்டா  என்னை பேச வைக்காதே "

" டேய் டாக்டர் நா பொறுமையா சாந்தமா அன்னை தெரேசா மாதிரி இருக்கணும்.. நீ என்னடான்னா தாம் தூம்னு குதிக்கிறே ? "

" எல்லாம் என் நேரம்டா .... "  என்றவன் சுபத்ரா பக்கம் திரும்பினான் ...

" தங்கச்சி எது பண்ணாலும் பார்த்து பண்ணுமா .... தனி ஒரு மனிதனுக்கு உணவில்லைனா ஜகதையே அழிதிடுவோம்னு பாரதியார் சொன்னாரு ... ஆனா உன் ஆளு பண்ணுற வேலைய பார்த்தா, உன் கண்ணுல தூசி விழுந்தாலே உலகத்தை எரிச்சிடுவான் போல "

என்ன சொல்வதென்றே தெரியாமல் ஒரு வெட்கபுன்முருவல் பூத்தாள் சுபத்ரா ....

" சரி சரி .. டைம் ஆகுது .. அர்ஜுன் நீ சுபாவை டிராப் பண்ணிடு ... மகரந்தனை நான் டிராப் பண்ணிட்டு  ஆபீஸ் போறேன் " என்று கிளம்பினான் ரகுராம் ... அதுவே சரி என்று தோன்ற, அனைவரும் சுபாவுக்கு பிரியாவிடை கொடுக்க, உற்சாகமும் ஏக்கமும் இணைய அனைவரையும் அணைத்து ஆயிரம் கதை பேசிவிட்டு சென்றாள் சுபத்ரா ... கிருஷ்ணனை மட்டும் பார்க்கவில்லையே என்று ஏக்கமாய் இருந்தது அவளுக்கு ... அவன் செல்போனுக்கு பல முறை அழைத்தும் பதிலில்லை ... அதை வாய்விட்டே அர்ஜுனனிடம் புலம்ப, அவனோ ரகசியமாய் சிரித்தான்....

" என்ன அர்ஜுன் நீங்க ? நான் எவ்வளோ பீல் பண்ணி சொல்லுறேன் ? நீங்க என்னடான்னா சிரிக்கிரிங்களே ? " என்று கேட்டவள் லேசாய் கண் கலங்கினாள்...

"  அடடா ... ஏண்டி , தொட்டசினுங்கியா நீ ? ஆ ஊ நா உனக்கு டக்குனு கண்ணுல தண்ணி வந்துடுதே ,? நான் முதல் முதலில் பார்த்த சிரிப்பழகியா நீ ? " என்று கேலியாய் கேட்டான் அர்ஜுனன் .. அவன் தன்னை இயல்பாய் மாற்றத்தான் இப்படி செய்கிறான் என்று உணர்ந்தவள், அவனுக்கு அதிகம் சிரமம் கொடுக்காமல் லேசாய் புன்னகைத்தாள்..

" குட் ....

அழுதபிள்ளை சிரிக்கிது

கழுதை பாலை குடிக்கிது " என்று ராகமாய் பாடினான் அர்ஜுனன் ...

" ஹெலோ  பாஸ் , யாரு கழுதை நானா ? "

" ச்ச ச்ச  அத போயி  என் வாயல சொல்லி உன்கிட்ட அடி வாங்குவேனா செல்லம் ? "

" அய்யே ... ரொம்பதான்... சரி அது  இருக்கட்டும் ...முதல்ல என் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க "

" சான்ஸ் ஏ இல்ல "

" ஏனாம் ? "

" பின்ன நீ இவ்வளோ தூரமா உட்கார்ந்திருந்தா எப்படி என்னால, உன் கேள்விகளை சரியாக உள்வாங்கி பதில் சொல்ல முடியும் ? "

அவனின் கேள்வியில் இருவருக்கும் இடையில் இருந்த இடைவெளியை கவனித்தாள் சுபத்ரா .... " அப்படி ஒன்னும் தூரம் இல்லையே ... இவன் வேணும்னே வம்பு பண்ணுறான்" என்று மனதிற்குள் நினைத்து கொண்டவள்,

" நோ நோ எனக்கு இதுதான் கம்பார்டபல் ஆ  இருக்கு " என்றாள்...

" சரி போ அப்போ நானும் பதில் சொல்ல மாட்டேன் "

"  பச்ச் அர்ஜுன் .............."

" ம்ம்ம்"

" அஜ்ஜு "

" சொல்லுடா "

" ரொம்ப வம்பு பண்ணுரிங்க பா நீங்க ! " என்று அழகாய் சிணுங்கினாள்....

" ஹஹஹ சோ  கியூட் " என்றபடி உதடுகளை குவித்து காற்றில் தன் முத்தத்தை அனுப்பினான்  அர்ஜுன் ....

" என் பொண்டாட்டிகிட்ட நான் வம்பு பண்ணுறேன் .. யாரு கேக்க போறாங்கலாம் ? நாங்கலாம் லைசன்ஸ் வாங்கின ரோமியோ  " என்று கொலரை தூக்கிவிட்டு கொண்டான் அர்ஜுன் ...

" அதான்.. அதான் .. அதேதான் .,. என் ரோமியோவுக்கு  எப்போ  இந்த லைசன்ஸ் கிடைச்சதுன்னு கேட்டேன் ? "

" காது கேக்கலை சுபி .. உனக்கு பதில் வேணும்னா கிட்ட  வந்து கேளு" என்று நடித்தான் அர்ஜுன் .. லேசாய் சிணுங்கியவள் அவனின் பிடிவாத குணம் அறிந்து  மெல்ல அவன் பக்கம் வர, இடது கையால் அவள் இடையை சிறைபிடித்து  நெருக்கமாய் அமர்ந்தான் அர்ஜுன் ...

" ஐயோ அர்ஜுன் இது ரோடு "

" இல்ல செல்லம் .. இது இடுப்பு..அதோ அதுதான் ரோடு ... "

" ஐயோ ... வண்டிய பார்த்து ஓட்டுங்க "

" அதெல்லாம் அய்யா பக்காவா பார்த்துப்பேன் " என்றவன் அவளை இன்னும் நெருங்கி அமர்ந்தான்....

" என் மடி சும்மாதானே இருக்கு ..வந்து உட்கார்ந்துகொங்களேன் " என்று சலித்துகொண்டாள் சுபத்ரா ....

" நான் உட்கார்ந்தா நீ தாங்குவியா ? சுண்டைக்காய் சைஸ் ல இருந்துகிட்டு உனக்கு ஏன் செல்லம் இந்த ஆசையெல்லாம்? கல்யாணத்துக்கு அப்பறம் உன்னை குஷி ஜோதிகா மாதிரி மாத்தறேன் இரு "

" ம்ம்ம்ம்கும்ம்ம் இவரு பெரிய காக்க காக்க சூர்யா....என்னை ஜோதிகாவாக மாத்த போறாராம் ....சொல்லுங்க அஜ்ஜு ப்ளீஸ் ....."

" ஓகே ஓகே சொல்றேன் " என்றவன் காரை ஓரமாய் நிறுத்திவிடு அவளை பார்த்து அமர்ந்தான்.

" தங்களுடைய கேள்வி கணைகளை தொடுங்கள் இளவரசியே ..தங்களின் குழப்பத்தை  தீர்க்க யுவராஜன்  அர்ஜுனன் சித்தமாக உள்ளேன் "

" அப்பாவுக்கு நம்ம விஷயம் எப்படி தெரியும் ? எப்போ அவர் ஓகே சொன்னாரு ? நீங்க இதை எல்லாம் என்கிட்ட சொல்லவே இல்லையே அர்ஜுன் ... எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்துச்சு தெரியுமா ? " என்றவள் அவன் கரம் பிடித்து கொள்ள, அர்ஜுனனை அவளின் பூங்கரத்தை தன் கன்னத்தோடு அழுத்தி பேச ஆரம்பித்தான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.