(Reading time: 51 - 101 minutes)

 

" பெத்தவங்களோட  மனநிலையை என்னால புரிஞ்சுக்க முடியுது .. அதுனாலத்தான் இதை எல்லாம் நான் விளக்குறேன்.. பேரன்ட்ஸ் கு எப்பவும் அவங்க பிள்ளைகள் குழந்தைங்க மாதிரிதான் ... அப்படி இருக்குற பட்சத்துல, அவங்க தங்களுடைய துணையை தேடிகிட்டாங்கனு சொன்னா, பெற்றோருக்குன்னே இருக்குற இயல்பான கவலைகள் உங்களுக்கு  வரும் ... அவங்க தப்பான ஒருத்தரை சூஸ் பண்ணிட கூடாதுன்னு நினைப்பிங்க ... சிலர் பிள்ளைங்க மேல அதீத நம்பிக்கையும் உரிமையும் வெச்சிருக்குறதுனால அவங்க பிள்ளைகள் இந்த விஷயத்துல சுயமுடிவு எடுக்கறதை விரும்ப மாட்டாங்க .. இதுல சரி தப்புன்னு சொல்ல எதுவும் இல்ல.. இரு கையால் தட்டினால்தான் ஓசை வரும் ..அந்த மாதிரித்தான் .. பெத்தவங்க காதலை எதிர்த்தா அதை ஏன்னு காரணத்தை  எடுத்து சொல்லுற கடமை அவங்களுக்கு  இருக்கு ..அதே மாதிரி பிள்ளைங்க  அவங்களுக்கு இவங்கதான் வேணும்னு ஒரு முடிவில் இருந்தால், அது ஏன்னு விளக்க வேண்டியது அவங்க பொறுப்பு ..... நான் இப்போ எனக்காக மட்டும் இல்ல சுபத்ராவுக்கும் சேர்த்துதான் பேசுறேன் "

"... "

" உங்களுக்கு சுபத்ரா எப்படியோ அப்படிதான் எனக்கும் மாமா ... அவளுக்கு எந்த விதத்திலும் கஷ்டமோ சோகமோ நெருங்க கூடாதுன்னு நான் நினைக்கிறேன் .. அப்படியே அவளுக்கு ஏதும் பிரச்சனைன்னா அது என்னை தாண்டி தான் அவளை சேரனும் ... அது மட்டுமில்லாம "

" போதும் மாப்பிள்ளை ... "

" மாமா ...."

" உங்களை விட நல்ல மாப்பிள்ளை நிச்சயமா எங்களாலே தேட முடியாது மாப்பிளை ... இது கடவுளோட செயல்தான் ... நீங்க உங்க காதல் சொன்னாலும் சொல்லலனாலும், நாங்க உங்களுக்கும் சுபாவுக்கும்  கல்யாணம் பண்ணி பார்க்கணும்னு ஆசை பட்டோம் ... அதிர்ஷ்டவசமா எல்லாமே கை கூடி வந்துடுச்சு ... சுபா  சின்ன பொண்ணு .. அவளுக்கு காதல் வந்தது எங்களுக்கு ஆச்சர்யம்தான் ..ஆனா அதிர்ச்சி இல்ல ... நம்ம வீடுக்கு வந்தபோது, நீங்களும் சுபாவும் பரிமாரிகிட்ட பார்வையிலேயே எங்களுக்கு இந்த விஷயம் தெரிய வந்திருச்சு ..... " என்றார் சூர்ய பிரகாஷ் ....

" ஆமா  அர்ஜுன் ... நடக்குறது எல்லாமே நல்லதுக்குதான்... உங்க காதலை நாங்க மனசார ஏத்துகிட்டோம் ... வீட்டுல அண்ணி, சிவாவுக்கு கூட இதுல விருப்பம் இருக்கு ...  சுபா படிப்பு முடியத்தான் நாங்களும் காத்திருக்கோம் ... அது மட்டுமில்ல , ரகு ஜானகி பத்தியும் எங்களுக்கு தெரியும் "

" என்ன சொல்றிங்க மாமா ? "

" ரகு, எல்லாத்தையும் அவங்க அம்மா கிட்ட சொல்லிட்டான் பா ..... எங்க மருமகள் ஜானகி மனசு மாறின அடுத்த முகுர்த்ததுல கல்யாணத்தை நடத்திடலாம்"

" ஜானகியை பத்தி ? "

" தெரியும் அர்ஜுன் ... அவளும் எங்களுக்கு சுபா மாதிரிதானே .. எங்களுக்கு முக்கியம் ஜானகியின் சம்மதம் தான் ... வேறெதுவும் இல்ல "

" உங்களுக்கு பெரிய மனசு மாமா " என்றவனுக்கு லேசாய் குரல் கம்மியது  ....

" இல்ல அர்ஜுன் ... உண்மைய சொல்லனும்னா உங்க எல்லாருக்கும்தான் பெரிய மனசு... பெரியவங்களுக்கு மதிப்பு கொடுக்கணும்னு நினைக்கிற அர்ஜுன், அண்ணன் கிட்டயாவது  உண்மையை சொல்லியே ஆகணும்னு  நெனைச்ச சுபா, இவ்வளவு விஷயம் தெரிஞ்சும் அதை பெருசு  பண்ணாமல்  பொறுமையா கையாளுற கிருஷ்ணன், ஜானகிகாக காத்திருக்கும் ரகுராம், எல்லாரும் சந்தோஷமா இருக்கணும்னு நெனைக்கிற ஜானகி, யாருக்கும் எந்த வருத்தமும் வரகூடாதுன்னு எல்லாத்தையுமே மனசுக்குள்ள வெச்சுக்குற மீரா ....உங்க எல்லாரையும் பார்க்க சந்தோஷமாவும்  பெருமையாகவும் இருக்கு " என்றவரின் குரலில் அவர் உணர்ச்சிவசபட்டது புரிய, சூழ்நிலையை இலகுவாக்கும் வித்தத்தில்,

" ஐயோ நித்யாவை விட்டுடிங்களே மாமா "என்றான் அர்ஜுன் ...

" அய்யயோ ஆமா மாப்பிளை ... நீங்க அவ கிட்ட மாட்டிவிட்டுடாதிங்க " என்றார் சூர்யா ...

" என்ன மாமா இது .. ? காலையிலதான் 'நீ வா போ' நு உரிமையா ஒருமையில் பேசுனிங்க..இப்போ மாப்பிளைன்னு ஆனதும் வாங்க போங்கன்னு சொல்லி அந்நியபடுத்துறிங்களே ! "

" அச்சோ அப்படி எல்லாம் இல்லப்பா... இதெலாம் பழக்க வழக்கத்தை சார்ந்தது அர்ஜுன்.. சில விஷயங்களை நம்மனால மாத்தவே முடியாது ... அபிராமி அப்பா அதான் என் மாமா கிட்ட  இருந்து கத்துகிட்டது " என்று கண்ணடித்தார் சூர்யா...

" ஆமா ஆமா... உங்க ரெண்டு பேருடைய காதல் கதையையும் நான் கேள்வி பட்டேனே "

" ஓஹோ சுபா  வாலு சொன்னாளா ? "

" இல்ல கிருஷ்ணன் சொன்னான் "

" ஹ்ம்ம் அவனும் உங்களுக்கு கூட்டணியா ? "

"  அதென்னா அவனும்? நீங்களும் இனி என் கூட்டணிதான் " என்று வசீகரமாய் சிரித்தான் அர்ஜுனன் .....

" கண்டிப்பா கண்டிப்பா ... அப்போ நம்ம வருத்தபடாத வாலிபர் சங்கத்தின் அடுத்த பிளான் என்ன மாப்பிள்ளை ? " என்று சந்துரு சிரிக்க,

" நம்ம சுபத்ரா தேவி அவங்க படிப்பை முடிக்கும்வரை இப்போ பேசிய ராணுவ ரகசியங்கள் காக்கப்பட வேண்டும் " என்று சிரித்தான் அர்ஜுன் ...

(போதும் போதும் அதுக்கு மேல் என்ன நடந்திருக்கும் ? நம்ம மாமா ரெண்டுபேரும் அர்ஜுனுக்கு குலப் ஜாமுன்  ஊட்டி விட, அர்ஜுன் பதிலுக்கு ஊட்டி விட, விக்ரமன் சார் படம் மாதிரி பின்னாடி " ல ல ல ல " நு மியுசிக் வந்திருக்கும் ... சோ அவங்க ஊட்டிவிட்ட கதையை பார்க்காமல், ஊட்டிக்கு போகவேண்டிய நம்ம சுபத்ரா இளவரசி பிளாஷ் பேக் கேட்டுட்டு என்ன பண்ணாங்கன்னு பார்ப்போம்  வாங்க )

ண்களில் கண்ணீர் தேங்க, இதழ்கள் துடிக்க, இமைகள் படபடக்க, காதலும் நிறைவும் போட்டியிட தன்னவனிடம் ஒரு நிறைவான பார்வையை செலுத்தினாள் சுபத்ரா ... அந்த பார்வைக்கும்தான் எவ்வளவு ஷக்தி ? வேறேதும் பேசாமல் இரு கரங்களை நீட்டி வா என்று பார்வையாலே அழைத்தான் அர்ஜுன் ...

இம்மியளவும் இனி பிரிவதில்லை என்பதுபோல் வேகமாய் அவனை அணைத்துக்கொண்டு அழுதாள் சுபத்ரா ... எத்தனை முறை அவளை அவன் ஆரத்தழுவி இருப்பான்? .. எத்தனை முறை அவள் வெட்கத்தில் அவன் மார்பில் புதைந்திருப்பாள் ? எத்தனை முறை அவன் குறும்புடன் அவளை அணைத்திருப்பான்? அதெல்லாம் கடந்து இன்று அவள் அவனை அணைத்த விதம் கூற வந்த வாசகம்  ஒன்று தான் .. வேறென்ன வேணும் நீ போதுமே ...!!

மெல்ல நிமிர்ந்தவள், நாணம் என்ற எல்லையை தாண்டி காதலுடன் அவனின் கன்னங்களில் அழுந்த இதழ் பதித்தாள் சுபத்ரா ...கடன் அன்பை முறிக்கும்னு அர்ஜுனனுக்கு தெரியாதா என்ன? அவள் இதழ்கள் தந்த கடனை வட்டியுடன் திருப்பி தந்தான் அர்ஜுனன் .. நம் காதல் குயில்களுகாகவே ஒலித்தது அந்த பாடல் .... ( காதலில் சங்கமித்த இருவருக்கும் இந்த பாடல்  பூவியின் ஸ்பெஷல் டெடிகேஷன் )

என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா

என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா

கிளிகள் முத்தம் தருதா அதனால் சத்தம் வருதா

அடடா..

என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா

என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா

கிளிகள் முத்தம் தருதா அதனால் சத்தம் வருதா

அடடா..

அவனின் இதழ் ஒற்றுதலில் நெகிழ்ந்தவள் அவனுடன் ஒன்றிபோனாள்..சற்றுமுன்பு அருகில் அமர அவன் சொன்னபோது விளையாட்டு காட்டியவள், இப்போது தானாகவே தடைகளை நீக்கினாள்... அருகில் அமர்ந்தவள் எப்போது மார்பில் சாய்ந்தாள் ? மார்பில் சாய்ந்தவள் எப்போது அவன் மடியில் சரிந்தாள் ? இருவருமே அதை உணரவே இல்லை !

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.