(Reading time: 51 - 101 minutes)

 

ன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே

கண்களில் ஏனிந்த கண்ணீர் அது யாராலே

கன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணமாகவில்லையே

காதலன் மடியில் பூத்தாள் ஒரு பூப்போலே

மீண்டும் அவள் கண்கள் கண்ணீர் சொரிய காத்திருக்க, தன் இதழ்களால் அவளின் கண்ணீரை நிறுத்தினான் அர்ஜுனன் ...

" ஷ்ஷ்ஷ்ஷ் " என்றவன் அவள் முதுகை ஆதரவாய் தட்டி கொடுத்து தந்தை போல தாலாட்டினான்...

மன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு

ஆதரவாய்ச் சாய்ந்துவிட்டாள் ஆரிரரோ பாடு

ஆரிரரோ இவர் யார் எவரோ

பதில் சொல்வார் யாரோ

மெல்ல விழி உயர்த்தி அர்ஜுனனை பார்த்தாள்  சுபத்ரா ... அவனின் அருகாமையை இப்போது உணர்ந்தவள் அழகாய் முகம் சிவந்தாள்... அவளின் தாடையை தொட்டு முகத்தை பார்த்தவன் அவளை பார்த்து குறும்பாய் கண் சிமிட்டினான் .... அதற்குமேல் அவனை பார்க்க முடியாமல் அவள் அவனை அணைத்துக்கொள்ள, அவளின் கூந்தலை விரல்களால் அளந்து நெற்றியில் முத்தமிட்டான் அர்ஜுனன் ... அவன் மார்பில் முகம் புதைத்திருந்தவளுக்கோ, அவனின் இதயத்துடிப்பு துல்லிதமாய் கேட்டது.. அதையே சங்கீதமாய் உணர்ந்தவள் நிம்மதியாய் கண்மூடினாள்...

கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுதோ

தன்னிலை மறந்த பெண்மை அதைத் தாங்காதோ

உதட்டில் துடிக்கும் வார்த்தை அது உலர்ந்து போனதோ

உள்ளங்கள் துடிக்கும் ஓசை இசையாகாதோ

மங்கையிவள் வாய் திறந்தால் மல்லிகைப்பூ வாசம்

ஓடையெல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும்

யாரிவர்கள் இரு பூங்குயில்கள்

இளங்காதல் மான்கள்

நேசத்தால் இணைந்த பூங்குயில்கள் இதழ்களால் இணைந்தவேளை அழகாய் சிணுங்கியது அர்ஜுனனின் செல்போன் ( அப்படி முறைக்காதிங்க அர்ஜுன் சார் ... நீங்க உண்மையிலேயே ஜெண்டல்மென் அர்ஜுன் ஆச்சே ..அதுனாலத்தான் நான் உங்க கேரக்டரை உங்களுக்கு ஞாபகபடுத்தனுமே நு  கால் அனுப்பினேன் ... இல்லேன்னா கல்யாணம் முன்பே எல்லை மீறினான் அர்ஜுனன்னு உங்க மேல பழிபெயர் வந்திடுமே ... வரலாறு முக்கியம் அர்ஜுனரே ... சோ கொஞ்சம் தரையிறங்கி வந்து  போனை  எடுங்க  )

" ஹெலோ "

" ............"

" யா யா இன்னும் அஞ்சு நிமிஷத்துல அங்க இருப்போம் "

" ........"

" அதெல்லாம் என் சுபியை விட்டுடு பஸ் கிளம்ப விட்டுடுவேனா ?"

" ...."

" ஓகே பை "

" யாரு அர்ஜுன் ? "

" சர்ப்ரைஸ் "

" சொல்லுங்க பா "

" அங்க வந்தா உனக்கே தெரியும் குட்டிமா ... அடம்பிடிகாத ... இங்க வா " என்றவன் அருகில்  இருந்த பாட்டிலில் இருந்த நீரில் கைக்குட்டையை நனைத்து அவள் முகத்தல் அழுந்த துடைத்தான் அர்ஜுனன் ...

" என்னடா நீ ..? இப்படியா அழுது வைக்கிறது ? முகம் எல்லாம் சிவந்துடுச்சு என் செல்லத்துக்கு .... ஏற்கனவே உடம்பு சரி இல்ல உனக்கு... இதுல வேற நீ இப்படி அழுது வைக்கிறியேடா? அங்க போனதும் உடம்பு சரி இல்லனா உடனே திரும்பி வந்துடு குட்டிமா ... சரி திரும்பு " என்றவன் கலைந்திருந்த அவளின் கூந்தலில் அழகாய் வாரி பின்னலிட்டான்.... மீண்டும் அவளை தன்புறம் திருப்பி

" சிரி " என்று அவன் செய்கையில்  காட்ட அழகாய் புன்னகைத்தாள்... மேல அவன் நெற்றியில் இதழ் பதித்தவன்

" என் சுபி எப்பவும் இப்படித்தான் சிரிச்சுகிட்டே இருக்கணும் " என்றான்.... 

காலேஜ் ......

ஸ்வாதி, நிவிதா, கார்த்திக், கீதாவுடன் அவர்களுக்காக காத்திருந்தனர் கிருஸ்ணனும் மீராவும் !

தூரத்தில் இருந்து அவர்களை பார்த்த சுபத்ரா துள்ளலுடன் ஓடி வந்து கிருஷ்ணனை கட்டி கொண்டாள்...

" அண்ணா "

" செல்லம் "

" எங்க உங்களை பார்க்காம கிளம்பிடுவேனோ நு கவலையா இருந்துச்சு அண்ணா ...... " என்றவள் மீராவை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள்...

" இதோ உன் அண்ணியை ஆபீஸ் ல இருந்து கடத்திட்டு வரத்தான் லேட்டாச்சு டா "

" அண்ணி " என்றவள் புன்னகை மின்ன மீராவுடன் கை கோர்த்து கொண்டாள்....

" பத்திரமா போய்ட்டு  வா சுபா ... நல்லா என்ஜாய் பண்ணு, ஒழுங்கா சாப்பிடு ..அப்போ போன் பண்ணு " என்று மீரா அக்கறையாய் சொல்ல கிருஷ்ணன் குறும்புடன் சிரித்தான் ... ( இந்த சிரிப்புக்கு பின்னாடி என்ன ரகசியம் இருக்குனு அப்பறம் சொல்லுறேன் )

அவள் சொன்னது அனைத்திற்கும்  சரியென தலையாட்டிய சுபத்ரா, அர்ஜுனனை தேடினாள்.... நம்ம யுவராஜர் அங்கு தன் ஒற்றர்களுடன் அவரச சந்திப்பு நடத்தி பேசிகொண்டிருந்தார் ....

அவங்க என்ன பேசுறாங்க ஒட்டு கேட்போம் வாங்க ....

" எல்லாரும் செல்போனை அக்டிவ் ஆ வெச்சுருக்கணும் "

"எஸ் பாஸ் "

" கீதா பஸ் ல நீ சுபி பக்கத்துல உட்காரு "

" எஸ் பாஸ் "

" கார்த்திக் நீ, அவங்க சீட் கு பக்கத்துல "

" உட்கார்ந்துக்குறேன் பாஸ் "

" கொன்னுடுவேன்..... உட்காராதேன்னு சொல்ல வந்தேன் ...நீ கீதா பக்கத்துல இருந்தா ஓவரா ஜொள்ளு விடுவே ...அப்பறம் சுபத்ராவை யாரு பார்த்துகுறது ... "

" பாஸ் !!!!!!!! ... இதுக்கு நீங்களே எங்ககூட வந்துரலாம்ல ? "

" அதை எப்போ செய்யணும்னு எங்களுக்கு தெரியும் ... இந்த ட்ரிப் முடியும் வரை நீயும் கீதாவும் ப ப க வாக இருங்க !"

" ப ப க  ?? அப்படின்னா என்ன? " என்று அனைவரும் கேட்க,

அப்படின்னா " பக்குவ பட்ட காதலர்கள் " என்றான் அர்ஜுன் ... அனைவரும் சிரிக்க,

" சரி கவனமா கேளுங்க .... ஸ்வாதி அண்ட் நிவிதா உங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப பொறுப்பான வேலையை கொடுக்க போறேன் "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.