(Reading time: 19 - 37 minutes)

 

வளின் முக மாற்றங்களையும் கண்ணா சிவப்பையும் கண்டு மேகா அவளை கிண்டல் செய்ய மது தான் வாய் மூடி மனதில் அழ வேண்டி இருந்தது. இருவரும் அவளை திரும்பி பார்க்க அவள் சிறு புன்னகையுடன் வேறு பக்கம் திரும்பி கொண்டாள்.

"மது நீ கவிதை சூப்பரா எழுதற, உன்  கவிதைக்கு ஒரு ஓவியமே தீட்டி வெச்சுருக்கேன் உன் கவிதை எல்லாம் சோ லவ்லி அதுல ஒரு தனி தன்மையான அழகு இருக்கு"

"ம்ம் விளையாட்ட ஆரம்பிச்சது இப்போ அப்டியே தொடறது இதுல பெருசா ஒண்ணுமே இல்ல ஸ்வேதா"

"அவ்வளவு தான இன்னும் வேற எதாவது இருக்கா?"

( அவ்வளவு தான இன்னும் வேற எதாவது இருக்கா) அன்று கடற்கரையில் தான் கவிதை சொன்ன போது அவன் கேட்ட அதே வார்த்தைகள். உங்களுக்குள்ள பொருத்தம் நல்ல தான் இருக்கு என்று நினைத்துக் கொண்டு,

"அவ்வளவு தான்" என்றாள்.

"ம்ம்ம் நீங்க ரெண்டு பேருமே RJ மட்டும் தான் பண்றீங்கள? வேற வொர்க் ஏதும் போகலையா? பகல் நேரத்தில போர் அடிக்குமே"

"இல்ல நாங்க மார்னிங் டேன்ஸ் ஸ்கூல் போய்டுவோம் சோ டைம் கரக்டா இருக்கும்"

"ஒ டேன்ஸ் வேற கத்துகறிங்கள? சூப்பர்"

"ஹே நீ நினைக்கிற மாதிரி கத்துகல கத்து கொடுக்கறோம், கோவைல ஒரு டேன்ஸ் ஸ்கூல்ல வேலை பார்த்தோம் இப்போ இங்க இவளோட பாசக்கார அண்ணன் ஒரு டேன்ஸ் ஸ்கூலே வெச்சு குடுத்துட்டாரு"

"ஒ மது யூ ஆர் சோ லக்கி, எனக்கு இப்படி அண்ணா இல்லையே இப்படி நிறைய பிரெண்ட்ஸ் இல்லையேன்னு எப்படி ஏங்கிருப்பென் தெரியுமா"

சிறு வயதில் அடம் பிடித்து

வாங்கிய கரடி பொம்மை முதல் 

கல் மண்ணால் தூண் கொடுத்து

அண்ணன் கட்டி எழுப்பிய கட்டிடம் உட்பட

சலங்கை ஜதி கொடுக்க

விழி விரித்து நான் பயின்ற

அபிநயம் வரை

புண்ணியமும் வேண்டாமென

தாரை வார்த்த கர்ணனை போல் நானும்

தாரை வார்க்கிறேன்...

கைமாறாக ஒன்று தான் யாசிக்கிறேன் 

விட்டு விட்டு சென்றிடடி என் மன்னவனை நீயும்...

"என்ன மது யோசனை?! "

"அஆங்... என்ன ஸ்வேதா?!"

"என்ன யோசனைன்னு கேட்டேன்"

"யோசனை எல்லாம் ஒன்னும் இல்லையே"

"அப்போ உன்  டேன்ஸ் கிளாஸ்க்கு நான் வரலாமா எனக்கும் கத்து கொடுக்கறிங்களாநு கேட்ட எதும் சொல்லாம இருக்க ?! நான் வர வேண்டாமா?"

"ஐயையோ அப்படி இல்ல, இன்னும் நிறைய வேலை பாக்கி இருக்கு, இன்னும் யாருமே ஜாயின் பண்ணல அதுக்கு விளம்பரம் கொடுக்கணும், கிளாஸ் டைமிங் எல்லாம் முடிவு பண்ணனும், நானும் மேகாவும் இல்லாத டைம்ல ஸ்கூல பாத்துக்க ஆள் போடணும் இத்தனை வேலை இருக்கே அதன் உன்ன எப்போ வர சொல்லலாம் அப்படின்னு யோசிச்சேன்" என்று கோர்வையாக பொய்யும் அல்லாது உண்மையும் அல்லாது ஒன்றை சொன்னாள்.

"ஒ அப்படியா? நான் வேணும்னா ஒரு ஐடியா தரவா?!"

"சொல்லு" 

"நீயும் மேகாவும் இல்லாதப்போ நான் பாத்துக்கவ?, பர்ஸ்ட் கொஞ்ச நாள் எப்படியும் ஆள் சேராது அப்போ  நான் அப்டியே வரவங்க கிட்ட பேசி அட்மிசன் பண்ற வேலைய பாத்துகறேன், கொஞ்ச நாள் போகட்டும் ஒரு நல்ல ஆழ செலக்ட் பண்ணி போட்டுக்கலாம், எப்புடி" என்று அவள் படபடக்க,

மேகாவும் அதுவே சரி என்று சொல் அரை மனதாய் ஒப்புக் கொண்டாள்.

டுத்த ஓரிரு நாட்கள் அவள் இந்தியாவை சுற்றி பார்க்க செல்வதால், சனிக்கிழமை வருவதாக கூறினாள். நேரம் ஆவதை உணர்ந்து மீண்டும் பெரியவர்கள் இருந்த இடம் நோக்கி நடந்தனர்.

அப்போது தான் இவ்வளவு நேரம் உறைக்காத ஒன்று மதுவிற்கு உறைத்தது. ரகு ஆதியுடன் அல்லவே சென்றான்?! அவனுக்கு எல்லா விஷயமும் தெரியுமே! அப்படி என்றால் ஆதியிடம் என்ன பேசியிருப்பான்?! நினைக்கும் போதே மிகவும் அயர்வாக உணர்ந்தாள். எதையும் வெளிக் காட்டி கொள்ளாமல் அமைதியாக உட்கார்ந்து கொண்டாள்.

சற்று நேரத்தில் எல்லாம் ஆதியும் ரகுவும் வர ரகுவின் முகத்தில் ஏதோ ஒரு தெளிவு இருந்தது. ஆனால் ஆதியோ தலைகீழ், குழப்பும் கோபம் வருத்தம் என எந்த உணர்ச்சியை மேலாக காட்டுவது என தத்தளித்த மனது எல்லாவற்றையுமே காட்டியது.

வந்தவன் மதுவை ஒரு முறை கூர்ந்து பார்த்தான். என்ன தெரிந்ததோ?! என்ன புரிந்ததோ?! அது காதலர்கள் மட்டுமே அறிந்த ரகசியம் போலும் ... மனதில் எதையோ நினைத்து கொண்டு

அவனும் அமைதியாக அமர, எல்லாரும் கிளம்புவதாக முடிவு செய்து இரு வீட்டாரும் விடை பெற்று சென்றனர்.

கார் பார்கிங் சென்று தங்கள் கார்களுக்கு செல்லும் முன் ஒரு முறை வினாடிக்கும் குறைவான நிமிடத்தில் மதுவும் ஆதியும் பார்க்க, முன் இருந்த காரின் சைடு கண்ணாடியில் இடித்து கொண்டவனின் கையை ஸ்வேதா அவசரமாக பற்றி "என்ன மாமா பாத்து வர ..........."

அதற்கு மேல் அங்கு நிற்கவில்லை அவள்.

ன்று இரவு, 'அனைவரும் நிம்மதியாக உறங்க நான் மட்டும் தான் உறங்காமல் இந்த வலியில் துடிக்கிறேனே' என்று நினைத்து கொண்டே உறங்காமல் இருந்தது மது,ஆதி மட்டும் அல்ல, ரகுவும், பிரஷாந்தும் இன்னும் மூவரும் கூட தான்.

மெத்தையில் புரண்டு புரண்டு படுத்தவளுக்கு அலுப்பாக இருந்தது, எழுந்து தன் மொபைலை எடுத்து ஹெட்செட்டை மாட்டிக் கொண்டு ஒரு பாடலை ஒலிக்க விட்டாள். அவள் நேரமோ என்னவோ அவளுக்காகவே பாடுவது போல் அந்த பாடல் துவங்க, மாற்ற மனம் இன்றி கண் மூடி அமைதியாக கேட்டு கொண்டிருந்தாள்.     

நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா
உயிரே விலக தெரியாதா
மயங்க தெரிந்த கண்ணே உனக்கு
உறங்க தெரியாதா
மலர தெரிந்த அன்பே உனக்கு மறையதெரியாதா
அன்பே மறைய தெரியாதா
நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா
உயிரே விலக தெரியாதா

எடுக்க தெரிந்த கரமே உனக்கு கொடுக்க தெரியாதா
இனிக்க தெரிந்த தமிழே உனக்கு கசக்க தெரியாதா
படிக்க தெரிந்த இதழே உனக்கு முடிக்க தெரியாதா
படற தெரிந்த பனியே உனக்கு மறைய தெரியாதாபனியே
மறையதெரியாதா
நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா
உயிரே விலக தெரியாதா

கொதிக்க தெரிந்த நிலவே உனக்கு குளிர தெரியாதா
குளிரும் தென்றல் காற்றே உனக்கு பிரிக்க தெரியாதா
பிரிக்க தெரிந்த இறைவா உனக்கு இணைக்க தெரியாதா
இணைய தெரிந்த தலைவா உனக்கு என்னை புரியாதாதலைவா
என்னை புரியாதா
நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா
உயிரே விலக தெரியாதா…..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.