(Reading time: 36 - 71 minutes)

 

ஹ்ம்ம்… இப்போதைக்கு உன் பெயர், மட்டுமே எனக்கு மருந்து சீதை… இன்றும் உன்னை நான் பார்க்க முடியவில்லைடா… மன்னித்துவிடு…. நீ எனக்காக மணிக்கணக்கில் காத்திருந்தும் உன்னை நான் பார்க்க முடியாத சோகத்தை எந்த பாஷையில் சொன்னாலும் அது தீர்ந்திடுமா என்ன?...

அவளை காக்க வைத்ததை எண்ணி அவனின் கண்கள் கண்ணீர் கொள்கிறது இந்த நொடியும்… கங்கை நீர் காய்ந்து வற்றி போனாலும் அவன் கண்ணீர் காயாது உள்ளதின் மர்மமும் அவன் அறியான்…

சோகத்தின் பாஷை என்ன சொன்னால் அது தீருமா?...”

கங்கை நீர் காயக்கூடும் கண்ணீர் அது காயுமா?...”

என்றெண்ணியவன் வலியுடன் இறுக கண் மூடிக்கொண்டான்… அந்த அர்த்த ராத்திரியில்….

ரவு முழுவதும் இமைகளுக்கு ஓய்வு கொடுக்காது, பொழுது புலரும் நேரம் தானாக படுக்கையை விட்டு எழுந்தாள் சாகரி…. எத்தனை சோதனை, எத்தனை தடை வந்தாலும் உங்களின் மேல் நான் வைத்த அன்பும், காதலும், பாசமும், நம்பிக்கையும் மாறாது என்றும்… சில நேரம் வானத்தைக் கருமேகங்கள் சூழ்ந்து கொண்டு கதிரவனை தரிசிக்க முடியாது செய்வது வையகத்தில் நடப்பது தான்… சிறிது நேரத்திலே மேகங்கள் விலகிவிடும்…. எனினும் வானம் விலகாது கண்ணா….

சோகங்கள் நேரலாம் பாசம் என்ன மாறுமா?...

மேகங்கள் போய்விடும் வானம் என்ன போகுமா?...”     

“நான் என்றும் வானமாய் இருப்பேன் என் ஆதவன் உங்களை தரிசிக்க…” என்று அவள் எண்ணி முடிக்கும் முன், கருமை வண்ணத்திலிருந்து நீல வண்ணத்திற்கு ஆயத்தமானாள் வான மங்கை… அவளின் சூரியன் அவளின் மனதில் உதித்த நேரத்தில் அவள் முகமெங்கும் இளஞ்சிவப்பு மஞ்சள் வண்ணம் ஆனது அவனின் வருகையால்… அதை இமை மூடாது பார்த்தவளுக்கு அவளது ஆதர்ஷ் ராமே தன்னைக் காண வந்தது போல் இருந்தது…. மெல்ல சாகரியின் முகமும் அந்த வானத்து மாது போல செந்தூரம் ஆனது…

அந்நேரம் விழி மூடி தூக்கத்தின் சாயல் இல்லாமல் படுத்திருந்த ஆதர்ஷ் ராமின் இமைகள் ஈரம் கொண்டது…. அவனின் மனக்கண்ணில் அவளது குங்கும முகத்தோற்றம் வந்து நின்றது… அந்த நொடி, அவனின் இதயத்தை காதல் தோகையைக் கொண்டு அவள் வருடியதாய் உணர்ந்தான் ஆதர்ஷ்… அவனிடத்தில் குடிகொண்டிருந்த அத்தனை சோகமும் அந்த வினாடியில் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போன மாயம் உணர்ந்தான் ஆதர்ஷ்….

ஈரமுள்ள கண்ணில் தூக்கமில்லை கண்ணே

தோகை வந்த பின்னே சோகம் இல்லையே…”

அவனின் முன் அவள் நிற்பது போலவும், அவனின் பார்வையின் வேகத்தில் அவள் முகம் ரத்தமென சிவந்து போவதையும் தத்ரூபமாக உணர்ந்தான் அவளின் ஆதர்ஷ் ராம்….

அதன் பின்னர், அவள் அலுவலகத்திற்கு உற்சாகமாய் கிளம்ப, ஆதர்ஷோ நிம்மதியுடன் துயில் கொண்டான் அவளை நினைத்தவாறு….

க் டக்…. என்று கதவு தட்டும் ஓசைக்கேட்டு “உள்ளே வாங்க…” என்றான் முகிலன்…

“இந்தாங்க சார்…. நீங்க கேட்ட ஃபைல்ஸ்…” என்ற குரல் ஒலித்ததும், இது மயூரியின் குரல் இல்லையே என்று நிமிர்ந்தவனின் முன்னால் சாகரி நின்றிருந்தாள்…

“ஓ… நீங்களா?... வாங்க வாங்க… உங்களையும் பார்த்து  பேசவேண்டுமென்று நினைத்தேன்…. நல்லவேளை நீங்களே வந்துவிட்டீர்கள்….”

“நிஜமாகவா சார்…. அப்போ உங்க வேலையை நான் குறைத்துவிட்டேன்னு சொல்லுங்க..”

“ஹ்ம்ம்.. அப்படியும் எடுத்துக்கலாம்….”

“உண்மையை ஒத்துக்கமாட்டீங்களே…. ஹ்ம்ம்… சரி விடுங்க… ஆமா என்னை எதற்கு பார்த்து பேச வேண்டுமென்று நினைச்சீங்க?...”

“லாஸ்ட் வீக் கொளுத்திப் போட்டீங்கல்ல, ஒரு சரவெடி… அதற்கு தான்….”

“ஓ… அதற்கா?... நான் கூட நேற்று ஒருத்தி பொருத்திப்போட்ட அணுகுண்டுக்கோ என்று நினைத்தேன்….” என்றாள் சிரித்தபடி…

அது அவனுக்கும் ஓரளவு புரிந்தது… இருந்தும் தெரியாதது போல், “என்ன சொல்லுறீங்க புரியலேயே….” என்றான்…

“புரிந்திருந்தால் உதவி செய்யலாமென்று நினைத்து வந்தேன்… ஹ்ம்ம்… இங்கே தான் பல்ப் எரிய மாட்டிக்குதே… சரி எரியுறப்போ வந்து உதவி பண்ணுறேன்…” என்றபடி கிளம்ப போனவளை தடுத்து நிறுத்தினது அவனது குரல்…

“தங்கச்சி… நீ கூடவா அண்ணன் பக்கம் இல்லை….?...”

“என்ன சொன்னீங்க?....”

“தங்கச்சின்னு சொன்னேன்….”

“ஹ்ம்ம் அது அப்படி வாங்க வழிக்கு… இந்த வார்த்தையை வாயிலிருந்து வரவழைக்க நான் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கு… சே….” என்றாள் சற்றே அலுப்புடன்…

“கூல் சிஸ்டர்… நான் கூல் ட்ரிங்க்ஸ் கொண்டு வர சொல்லவா?...”

“அடடா…. போதும் போதும்… உங்க கரிசனை…  முடியலை…”

“அச்சோ… நம்ப மாட்ட போலயே… ஹ்ம்ம் சரி… என்ன சொல்லுறா உன் தோழி?...”

“அவ நிறைய சொல்லுறா… பட்… அவ பக்கம் இருந்து பார்த்தால் அவ செஞ்சது சரின்னு தோணுது கொஞ்சம்….” என்று இழுத்தவளை முகிலன் குரல் தடுத்தது….

“அய்யோ…. என்ன தங்கச்சி இப்படி சொல்லிட்ட?... அண்ணன் பாவம் இல்லையா?...”

“அவசரக்குடுக்கை தானா இதிலேயும்… சொல்லுறத முழுசா கேளுங்க முதலில்… அவ இடத்தில் இருந்து யோசிக்கிறப்ப கரெக்ட் தான்…. பட் உங்க இடத்திலிருந்து பார்த்தா கஷ்டம் தான் கொஞ்சம்… அதனால…..”

“ஹ்ம்ம்… அதனால?...”

“கொஞ்சம் அவளை விட்டுப்பிடிங்க…. தானாக சரி ஆயிடுவா… இல்லை நானே அவளை சரி பண்ணுறேன்… இந்த வாரத்துல ரெண்டு நாள் போன் பேசுறதெல்லாம் ரொம்ப கொடுமை தான்.. அதிலிருந்து நிச்சயமா நான் உங்களை காப்பாத்துறேன்… கவலை வேண்டாம்… தினமும் உங்க மயூ உங்களுக்கு கால் பண்ணுவா… ஆனால் அதற்கு பல நாள் ஆகும்… சோ… ப்ளீஸ்… வெயிட்….”

“ஹ்ம்ம்… சரி தங்கச்சி….”

“இப்போ சரின்னு நல்லவங்க மாதிரி பேசினால் மட்டும் போதாது… நல்லவரா அவகிட்ட நடந்துக்கணும்… அவ என் தோழி…. நியாபகம் இருக்கட்டும்… பாவம் சின்னஞ்சிறுகளாச்சே… அதனால் கொஞ்சம் வாழ்க்கையை அனுபவிக்கட்டுமேன்னு தான் ஹெல்ப் பண்ணுறேன்னு சொன்னேன்… அத உங்களுக்கு சாதகமா எடுத்துக்கிட்டீங்கன்னா அடுத்து அவ போடுற கண்டிஷன்ஸில் இருந்து சத்தியமா நான் உங்களை காப்பாற்றமாட்டேன்… எந்த வித உதவியும் செய்யவும் மாட்டேன்… பார்த்து நடந்துக்கோங்க… என்னை எந்த உறவு முறையில் கூப்பிடுறீங்களோ அதற்கு தகுந்தபடி பக்கா ஜென்டில்மேனாக நடந்துக்கணும் சொல்லிட்டேன்… என்னப் புரிந்ததா?...” என்று அவள் ஒரு புருவம் உயர்த்தி கேட்க…

“ஹ்ம்ம்… சரிங்க சிஸ்டர்…” என்றான் பவ்யமாக…. (கண்டிப்பா தங்கச்சி, உனக்கு வரப் போகிற அந்த புண்ணியவான் ரொம்ப பாவம் தான்… அண்ணன் என்னையே இப்படி ஆட்டிவைக்கிறியே… பாவம் தான் உன்னை கைப்பிடிக்க போகிற அந்த முகம் தெரியாத என் மச்சான்) என்றான் மனதிற்குள்…

(அந்தோ…. பரிதாபமே… அவனுக்கு தான் தெரியவில்லை… அது முகிலனுக்கு தெரிந்த அவனின் ஆதி மச்சான் தான் என்பது…)

“உங்க பயம் என்னை யோசிக்க வைக்குதே… வெளில ஏதோ சொல்லிட்டு உள்ளுக்குள் ஏதோ நினைக்குற மாதிரியே இருக்கே…. உண்மைதானோ?...!!!!!!” என்று அவள் சந்தேகத்துடன் அவனைப் பார்க்க…

“அய்யோ அப்படியெல்லாம் இல்லம்மா தங்கச்சி… நீ உன் ஏழாம் அறிவையெல்லாம் உபயோகப்படுத்தாதே தாயே…” என்று கை எடுத்தே கும்பிட்டு விட்டான் முகிலன்…

“ஹ்ம்ம்… அது அந்த பயம் இருக்கட்டும்… நான் வரேன்…” என்றபடி புன்னகையுடன் சென்றவளை பார்த்துக்கொண்டிருந்தவன்,

“சரியான வாலுதான் இந்த பொண்ணு… நானே எல்லாரையும் கலாய்ப்பேன்… இவ என்னையே கலாய்க்கிறாளே… இத தான் வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்று சொல்வாங்களோ… இதை மட்டும் நான் ஆதியிடம் சொன்னேன்னா, அவன் மறுபடியும் சிரித்தே என்ன அசிங்கப்படுத்துவான்…. ஹ்ம்ம்… நண்பனிடம் என்ன அசிங்கம், மானம், வெட்கம் எல்லாம்… அவனிடம் பேசும்போது இந்த பெண்ணைப் பற்றி சொல்லலாம்…. என்று நினைத்தவன்…. அச்சச்சோ…. இவ பேரை கேட்க மறந்துவிட்டோமே…. சரி தங்கச்சின்னு சொல்லிக்கலாம்… என்றபடி விட்டுவிட்டான்….

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.