(Reading time: 30 - 60 minutes)

 

" ... "

" எனக்கு நீயும் உன் உணர்வுகளும் உன்னை சார்ந்தவங்களும் ரொம்ப முக்கியம் ப்ரியா... அதுனாலத்தான் இவ்வளவு பிரச்சனையிலும் கோபத்தில் கூட நான் மாமா அத்தையை பத்தி தப்பாக ஒரு வார்த்தை பேசினது இல்ல...அந்த அளவுக்கு நான் அவங்க மேலயும் அன்பு வெச்சிருக்கேன் .. நீ உன் வீட்டுக்கு ஒரே பொண்ணு .. ஒரு மருமகனாக அமர்த்தலான உறவு இல்லாமல் மகனாக உன் குடும்பத்தில் ஒருத்தனாய் இருக்கத்தான் எனக்கும் விருப்பம் .. ஆனா , அதுல அத்தை மாமாவுக்கு விருப்பம் இல்ல... அண்ட் அவங்க சொல்லுற காரணத்தையும் மனமார ஏற்றுகொள்ள முடியலை..அதுனாலத்தான் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைச்சேன் டா... என்னை பிரிஞ்சு நீயும்  உன்னை பிரிஞ்சு நானும் இருக்குறது எவ்வளவு கொடுமைன்னு எனக்கு தெரியும் ..அந்த வலியை உனக்கு கொடுக்க கூடாதுன்னுதான் உன்னை திருமணம் செஞ்சுக்க விரும்புறேன் .... "

" தெரியும் ஆகாஷ் "

" 3 வருஷம் முன்னாடி அப்பா இறந்துட்டாங்க .. நான் காதல்னா என்ன ? என்பதை அப்பா அம்மா கிட்டதான் கத்துகிட்டேன் .. என் அப்பா அம்மாவை எப்படி பார்த்தாரோ அதே மாதிரி உன்னை கவனிச்சுக்கணும் காதலிக்கனும்னு நெனைக்கிறேன் .. அப்பா இறந்த பிறகு அம்மா எங்களுக்காக தைரியமாக இருக்குற மாதிரி இருந்தாலும் மனதளவில் அவங்க உரைஞ்சுதான் போய்ட்டாங்க ... அவங்க எப்போ தூங்குறாங்க எப்போ எழுறாங்க நே தெரியாது ... காதலின் பிரிவு எவ்வளவு வலின்னு நான் தினமும் அம்மாவை பார்த்தே தெரிஞ்சுகிட்டேன் .. அப்படி இருக்கும்போது அதே வழியில் அதே நிலையில்  என்னாலே உன்னை கற்பனை பண்ணி பார்க்க முடியாது சுப்ரீ.... ஆனா நீ இப்படி அவங்களை நெனச்சு அழும்போது எனக்கு உயிர் போற மாதிரி வலிக்கிறது டா " என்று தெளிவான குரலில்  ஆரம்பித்த ஆகாஷ் வேதனை நிறைந்த குரலில் பேசினான் ... அவன் குரலில் இழையோடிய சோகம் அவளையும் வாட்டியது .. தனது கண்ணீர் எந்த அளவிற்கு அவனின் மனதை வாட்டுகிறது என்பதை உணர்ந்தவள் தன்னையே கடிந்துகொண்டாள். அவள் மனதை அவளே தேற்றுவதற்குள்ளே அவனின் கரங்கள் அவளின் கண்ணீர் துளிகளை துடைத்திருந்தன .. மெல்ல புன்னகைத்த சுப்ரியா

" அத்தான், நான் அம்மா அப்பாவை நெனச்சு வருந்துறேன் தான் .. அது பெண்களுக்கே உள்ள இயல்பான உணர்வு .. நமக்கு அவங்க சம்மதத்தில் கல்யாணம் ஆகி புகுந்த வீட்டிற்கு வரும்போதும் கூட நான் இப்படிதான் அழுவேன்... அது ரொம்ப இயல்பானது .. அதற்காக எனக்கு நம்ம அவசர கல்யாணத்தில் விருப்பம் இல்லன்னு அர்த்தம் இல்லை.. அதுவும் அத்தை முன்னிருந்து ஆசிர்வதிச்சு, கிருஷ்ணா அண்ணாவின் குடும்பமும் இங்க வர போறாங்க , இப்படி எல்லாருடைய ஆசிர்வாததுல நடக்குற கல்யாணம் எனக்கு சந்தோசம் தான் .. என் கண்ணீர் உங்களை எப்படி கலங்க வைக்கிறதுன்னு நானே பார்த்துட்டேன் .. இனி என் கண்கள்  உங்களை மீறி அழாது .. சரியா ? " என்று அழகாய் சிரித்தாள் ... மனதில் இன்னும் பாரம் இருந்தாலும் கூட தனக்காக அவள் இயல்பாய் சிரிப்பத்தை கண்டு நெகிழ்ந்தவன், அவளை தோளோடு அணைத்துகொண்டான் ... அந்த மோனநிலையே அவர்களுக்கு போதுமானதாக இருந்தது ...

அதே வேளையில், அர்ஜுனன் சுபத்ரா இருவரையும் துரத்தி பிடித்து விளையாடி கொண்டிருந்த நித்யா, ஆகாஷ் -சுப்ரியா இருக்கும் நிலையை கண்டு வேண்டுமென்றே அவர்களிடம் ஓடினாள்.

" அச்சோ பூஜை வேளையில் கரடி மாதிரி வந்துட்டேனா ஆகாஷ் ? " என்று வேண்டுமென்றே அவள் கேட்க,

" அதென்ன மாதிரி ? கரடியேதான் " என்றான் பற்களை கடித்தபடி ... அதற்குள் அங்கு வந்த அர்ஜுனன் ,

" ஹே ஆகாஷ் , நித்துவை கரடின்னு சொல்லாதே " என்றான் ..

" அப்படி நல்ல எடுத்து சொல்லுங்க பிரின்ஸ் .. அப்படியாவது இந்த மரமண்டையில ஏறுதா பார்ப்போம்" என்றாள்...

சுபத்ராவோ " அது அப்படி இல்ல நித்து, குரங்கை கரடின்னு சொல்ல வேணாம்னு என் அர்ஜுன் சொல்றாரு " என்று அவளை சீண்டினாள்...

" பிரின்ஸ் உங்க ஆளு சொல்றது நிஜம்மா ? "

" நிஜம்மா தெரியலை பட் பொய் இல்ல குரங்கே "  என்று அர்ஜுன் சொல்லவும் மீண்டும் அவர்களை துரத்தினாள் நித்யா . இப்படியாய் அனைவரும் ஓடி பிடித்து விளையாட ( இப்போ தெரியுது பா எப்படி நம்ம ஹீரோ ஹீரோயின் எல்லாரும் ஸ்லிம் ஆ இருக்காங்கன்னு.. இப்படி ஓடி பிடித்து விளையாடினா அப்படித்தானோ ??? )

" என்னாச்சு சுப்ரியா ? "

" ஒன்னும் இல்லையே அண்ணா"

" அர்ஜுன்கிட்டையே பொய்யா ? "

" அண்ணா ? "

" அம்மா அப்பா ஞாபகம் வந்துடுச்சா  டா ?"

" ஆமா அண்ணா .... எல்லா பேரன்ட்ஸ் மாதிரி அவங்களும் என்னை நல்லாத்தான் வளர்த்தாங்க .. ஆனா இந்த காதல் விஷயத்துல மட்டும் என்னை கை விட்டுட்டாங்க "

" அப்போ நீ உன் காதலை விட்டுட்டு அவங்களோடு போய்டு.. சிம்பல் தானே ? "

" என்ன பேசுறிங்க அண்ணா? "

" தமிழ்தான் தங்கச்சி "

" கிண்டல் பண்ணாதிங்க அண்ணா ... ஐ எம் சீரியஸ் ..."

" ரைட்டு விடு ...."

" என்ன விடுறது அண்ணா? நீங்க என்னை என்னனு நெனைச்சிங்க ? "

" அதை நீயே சொல்லேன் "

" அண்ணா ....."

" ....."

" இது பாருங்க அண்ணா.. என் அம்மா அப்பா எனக்கு எவ்வளவு முக்கியமோ அப்படித்தான் ஆகாஷும் .. "

" ஹ்ம்ம் "

" சிரிகாதிங்க அண்ணா... நான் ஒன்னும் பேச்சுக்காக சொல்லல .. ஒருவேளை நான் சரியான காரணத்தை  சொல்லாமல் என் அம்மாகிட்ட அப்பாவை விட்டுட்டு  என்னோடு வாங்கம்மான்னு  சொன்னா அவங்க வந்திடுவாங்களா? நானும் அப்படித்தான் .. நான் விதியை நம்பி அவரை விரும்பல அண்ணா.. விதி எப்படி அமைஞ்சாலும் அதை கடந்து அவரை கை பிடிக்கணும்னு முடிவெடுத்து தான் காதலிச்சேன் ... இன்னைக்கு இந்த பிரச்சனைக்கு நான் அமைதியாக அழுவதற்கு காரணம் எனக்கு ரெண்டு பேருமே வேண்டும் அதுனாலத்தான் .. ஒரு பக்கம் என்னை பாசமா வளர்த்த அம்மா அப்பா.. இன்னொரு பக்கம் ஆகாஷ் ..நான் யாரு முக்கியம்னு பார்க்க விரும்பல..ஏன்னா அது அர்த்தமற்ற பேச்சு ... எப்படியும் ஒரு பையனுக்கு என்னை கட்டி கொடுக்கத்தானே போறாங்க .. அது ஆகஷா இருந்தா என்ன தப்பு ? அதான் என் கேள்வி .. அதுக்கு அவங்க சொல்லுற காரணம் சரி இல்லை .. அதுனாலத்தான் நான் அவங்களை எதிர்க்க வேண்டியதாக இருக்கு .. மற்றப்படி நான் அவங்களை கஷ்டப்படுத்த நினைக்கல.. அதே நேரம் இந்த கல்யாணத்தை நான் ஒரு கட்டாயமாகவும் நினைக்கல...மனதளவில் நான் ஆகாஷை எப்பவோ மணந்துட்டேன் அண்ணா "

" ஹா ஹா ஹா "

'" என்ன அண்ணா மறுபடியும் சிரிக்கிறிங்க ? "

" அட என் மக்கு தங்கச்சி .. உன் காதலில் எனக்கு எந்த சந்தேகமும் இல்ல.. ஆனால்  உன் முடிவில் நீ எந்த அளவுக்கு தெளிவா இருக்கன்னு தெரிஞ்சுக்கத்தான் இப்படி சிரிச்சேன் ... கவலையே படாதே அதான் அர்ஜுன் வந்தாச்சுல ... இனி எல்லாமே சரி ஆகிடும் .. பட் எனக்கொரு டவுட் ..."

" என்ன அண்ணா? "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.