(Reading time: 30 - 60 minutes)

 

" ப்பாவுக்கு அப்படி என்ன வெறுப்பு ஆகாஷ் மேல ? "

" அது ரொம்ப சின்ன கதை அண்ணா"

" அதையும்தான் சொல்லேன் "

" அப்பா லெக்சரரா இருந்த காலேஜ்லதான் ஆகாஷ் படிச்சாரு .. அப்போ ஒரு தடவை அவரின் பிரண்டுக்கும் இன்னொரு ஸ்டுடென்ட் கும் எதோ சண்டை .. அவங்களை தடுக்குறேன்னு ஆகாஷ் அங்க போனபோது அந்த பையனின் தோளில் கை வெச்சு ஏதோ பேச வந்தாரு , அதே நேரம் அவருக்கு பின்னாடி இருந்த பையன் ' டேய் கொன்னுடுவேன் உன்னைய ' அப்படின்னு கத்தவும் தூரத்தில் இருந்து அதை பார்த்த அப்பா எல்லா தப்புமே ஆகாஷ் மேலன்னு நெனச்சுகிட்டாரு ... அதுக்கு பிறகு அப்பாவும் ஆகாஷும் மீட் பண்ணுற எந்த சிட்டிவேஷனும் அவ்வளவு சுமூகமானதாக அமையல .. அதுனாலே அப்பாவுக்கு அவரை பிடிக்கலையாம் "

"...."

" என்ன அண்ணா அப்படி பார்க்குறிங்க ? "

" நான் காதல் சடுகுடு படம் பார்க்கலன்னு நெனச்சியா தங்கச்சி ? "

" அண்ணா??? "

" பின்ன என்னடா ? அப்பா ஒரு லெக்சரர் ...காலேஜ்ல பலதரப்பட்ட பசங்களை பார்த்திருப்பாரு ... படிக்கிற பருவம் வேற அதற்கு பிறகு இருக்குற லைப் வேறன்னு அவருக்கு தெரியாதா என்ன? இதுல வேறேதோ ரீசன் இருக்கு "

" நீங்க என்ன நினைக்கிறிங்க அண்ணா? "

" அதை பிறகு சொல்லுறேன்..முதல்ல நீ ப்ரெஷ் ஆகிட்டு ஆகாஷ் கூட கல்யாண பத்திரிகை ஆர்டர் கொடுக்க போ"

" அதெல்லாம் எதுக்கு அண்ணா ? "

" இது பாரு சுப்ரியா .. இது உங்க லைப் ல ரொம்ப பெரிய நாள் .. இன்னைக்கு ஏதோ பிரச்சனைன்னு நீங்க அதை ஒதுக்கிடலாம் .. ஆனா சில வருஷத்துக்கு அப்பறம் மனசு எங்கும் டா .. பல தடைகள் தாண்டி கல்யாணம் பண்ண போறீங்க ..அது கண்டிப்பா கிரேண்டா சந்தோஷமா இருக்கணும் .. அதிகம் யோசிக்காமல் சந்தோஷமா  இரு சரியா ? "

தன் பிறகு அதிவேகமாய் செயல்பாட்டான் அர்ஜுனன் .. சுப்ரியாவிடம் பேசி அவளின் தந்தையை பற்றி தெரிந்து கொண்ட  அர்ஜுன் அடுத்ததாய் சந்தித்தது நம்ம சுப்ரியாவின் தந்தை பிரபாகரனை தான் ..

அந்த ஷாப்பிங் மாலில் தன் மனைவியுடன் வந்திருந்தார் பிரபாகரன் .. அவர் செல்லும் இடங்களில் எல்லாம் பின்தொடர்ந்த அர்ஜுனன் அவரை நேரடியாக பார்த்த தருணங்களில் முகம் சுளித்தான் ..

" என்னங்க "

" என்ன பத்மா "

" நம்ம  முன்னாடி போகுதே அந்த ப்ளூ கலர் ஷர்ட் தம்பி "

" ம்ம்ம்ம் "

" அந்த தம்பி உங்களை அடிகடி முறைச்ச மாதிரி இருந்ததே ? யாரது? "

" நீயும் அதை கவனிச்சியா ? "

" ஆமாங்க .. யாரது ? "

" எனக்கும் தெரியல பத்மா ... விடு .. இந்த காலத்து பசங்க இப்படித்தான் "

அதற்கு பிறகு வாயை திறக்கவில்லை பத்மா ... அவருக்கு தெரியும் இந்த பேச்சை தொடர்ந்தால் நிச்சயம் சுப்ரியா - ஆகாஷை பற்றி பேச்சு வரும் என்று .. அதனாலேயே அமைதியாய் தன் கணவரை பின் தொடர்ந்தார்..  அவர்களிருவரும் ஒரு ஹோட்டலில் அமர்ந்து உணவிற்கு ஆர்டர் கொடுக்க அவர்களின் எதிரில் அமர்ந்தான் அர்ஜுனன் .. தொலைபேசியில் பார்த்துக்கொண்டே அமர்ந்தவன் எதிரில் அவர்களை பார்த்ததும், மீண்டும் முகம் சுளித்து கொண்டு " ச்ச " என்றுவிட்டு எழுந்து போக எத்தனித்தான் ..

" தம்பி "

" .... "

" நானும் பார்த்துகிட்டு இருக்கேன் .. பார்க்குற இடத்தில் எல்லாம் முகத்தை திருப்பிகிட்டு போற நீ ? யாரு பா நீ ? "

" நான் யாராக இருந்தா என்ன? உங்ககிட்ட நான் பேசணும்னு அவசியம் இல்ல "

" அவசியம் இல்லன்னா எதுக்கு எங்களை தொடர்ந்து வரணும் " என்று வெடுக்கென கேட்டார் பத்மா ..

" அம்மா , நான் யாரையும் தொடர்ந்து வரல ..எனக்கு எங்க போகணுமோ அங்கதான் போனேன் .. இப்போ கூட இங்க இருக்க புடிக்காமல் எழுந்து தான் போறேன் "

" அதான் ஏன்னு கேக்குறோம் "

இதுதான் சமயம் என்று மீண்டும் அவர்களின் முன் அமர்ந்தான் அர்ஜுனன் .. இருவரிடத்திலுமே தீர்க்கமான பார்வையை செலுத்தியவன், பிரபாகரனை பார்த்து அவர்களின் காலேஜின் பெயரை சொல்லி

" நீங்க அங்கதானே வேலை செய்றிங்க ? " என்றான் ...

" ஆமா அதுகென்ன ? "

" அதுக்கு என்னவா ? இப்படி கேட்க உங்களுக்கு நெருடலாக இல்லையா ? "

" என்ன சொல்றே ? எனகென்ன நெருடல் ? நான் என்ன பண்ணேன் ? "

" நீங்க என்ன பண்ணிங்களா ? உங்க காலேஜ்ல முன்னாடி மாணவர்களுக்கு போதை பொருள் விற்றது மறந்து போச்சா ? "

அவன் கேட்ட விதத்தில் விக்கித்து  போயினர் இருவரும் .. அவர்களின் காலேஜில் ஒரு இளம் லெக்சரர் ரகசியமாக போதை பொருள் விற்றது உண்மைதான் .. அந்த உண்மை போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு  அந்த காலேஜிற்கே அவப்பெயர் வந்ததும் உண்மைதான் ... ஆனால் அதற்கும் பிரபாகரனுக்கும் என்ன சம்பந்தம்? அதிலும் அந்த பிரச்சனை நடந்து முடிந்து 5 வருடங்கள் ஆக போகிறது ... சொல்ல போனால் அந்த செய்தியை பற்றி இப்பொழுது யாரும் பேசுவது கூட இல்லை .. அப்படி இருக்கையில் இந்த புதிதானவன் இதை காரணம் காட்டி தன்மீது கோபம் காட்டுவது அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது ..அதுவும் செய்யாத குற்றத்திற்கு அவமானப்படுகிறோம் என்பதை போல உணர்ந்தவர் ரௌத்திரமானார் ....

" நீ பேசுறதே முட்டாள்தனமா இருக்கு .. அப்படி ஒரு விஷயம் நடந்தது உண்மைதான்... ஆனால்  அதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம் ? "

" ஏன் இல்லை ? நீங்க அந்த காலேஜில் தானே வேலை பார்க்குறிங்க ? திருடனுடன் சேர்பவன் போலிஸ் ஆவானா ? அதே மாதிரி அந்த மாதிரி இடத்தில்  சேர்ந்த நீங்களும் அப்படித்தானே இருப்பிங்க ?"

" புல் ஷிட் ..... நீ அளவுக்கு மீறி பேசுற ? என்ன தைரியம் உனக்கு என்கிட்ட இப்படி பேசுறதுக்கு ? இது பாரு உன்கிட்ட லாம் நான் நல்லவன்னு நிரூபிக்கனும்னு அவசியம் கிடையாது .. ஆனா ஒன்னு எதையும் தீர விசாரிச்சு முடிவெடுக்கணும் தம்பி .. இப்படி முதல் கோணல் முற்றிலும் கோணல்னு போனா நீ ரொம்ப வருத்தபடுவ ... "

" அப்படியா ? அப்படின்னா நான் வருத்தப்பட மாட்டேன் ...நீங்கதான் வருத்தபடுவிங்க  ! " ( ஆமா அர்ஜுன் நீங்கதான் வருத்தபடாத வாலிபர் சங்க தலைவர் ஆச்சே ...ஹா ஹா..இந்த இடத்துல உன் காமெடி தேவை இலன்னு நீங்க சொல்றது புரியுது சோ நான் உத்தரவு வாங்கிகிறேனுங்க )

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.