(Reading time: 44 - 88 minutes)

 

வன்  அந்த பாடலை பாடவும் கண்களில் மின்னலுடன் அவனை நோக்கினாள் நித்யா.. அது அவளுக்கு மிகவும் பிடித்த பாடல் .. அவளின் பார்வையின் அர்த்தத்தை தப்பாக புரிந்து கொண்டவன், தொடர்ந்து பாடிகொண்டே அவளுக்காக பாடல் வரிகளை தன் தொலைபேசியில் தேடிகொண்டிருந்தான் ....

கார்த்தி : கொட்டும் மழை முடிந்த பிறகும்

                 கொடிகளின் இலையில் இருந்து

                 கொட்டுகின்ற மழையின் துளிகள்

                 தாளகதி சொல்லுமே

                 அதை கண்டு தெளி மனமே

அவன் தேடுவதற்குள் அவளே பாடி அவனுக்கு அதர்ச்சியை தந்தாள் நித்யா.. அவளின் வெற்றி புன்னகை அவன் முகத்திலும் புன்னகையை வரவழைத்தது...

நித்யா : குடங்களை குளத்தில் நிறைத்து

               குமரிகள் நடக்கும் பொழுது

               குடத்துக்குள் தளும்பும் அலைகள்

               சப்தஸ்வரம் சொல்லுமே

கார்த்தி : நமக்கெலாம் சங்கீதமும் மொழிகளும் வேறன்ரோ?

                பறவைக்கும்  விலங்குக்கும் சங்கீதமே மொழியன்றோ ?

நித்யா : பெண்ணின் கையோடு வலையொலி சங்கீதம்

               பெண்ணின் காலோடு கொலுசொலி சங்கீதம்

கார்த்தி : அந்த வளையும் கொலுசும் ஸ்வரங்கள்

                உனக்கு  சொல்லி  தரவில்லையா

கார்த்தி : துள்ளி வரும் குழந்தை எடுத்து

                 அள்ளி வைத்து அணைக்கும் பொழுது

                பிஞ்சு பிள்ளை நெஞ்சை நனைப்பது சின்ன சுகம் அல்லவா ?

                அது நெஞ்சுக்கழகல்லவா ?

                இதயங்கள் எரியும்பொழுது

                இதயத்தை  புரிந்த ஒருத்தி

               இரு விழி விரல் நனைப்பது சின்ன சுகம் அல்லவா?

                 சுற்றமெல்லாம் போன பின்னும்

              தனிமைதான் சின்ன சுகம்

               வெண்ணிலவு போன பின்னும்  வெட்டல்வெளி சின்ன சுகம்

நித்யா : இந்த சங்கீதம் காயத்துக்கு சின்ன சுகம் .,..

               பிள்ளை சந்தோசம் காலத்துக்கும் சின்ன சுகம்

கார்த்தி : ஒரு  ஆனந்த பூங்காற்றை அள்ளி தருவது இசை இசை அல்லவா?

கார்த்தி & நித்தி : சோலைக்குயில் பாடும் சொல்லி கொடுத்தது யாரு ?

                  பூமி என்னும் கிண்ணம் இசையில் நிறைந்து வழியுதம்மா

                  இதயம் துடிப்பதே இசை லயத்தில் அல்லவா ?

                  அதை உள்ளே கேளு நீயும் பாடு

கார்த்தி- நித்தி பாடி முடித்ததும் எழுந்த கரகோஷம் அந்த ஆடிட்டோரியத்தையே நிரப்பியது .. என்னதான் கோபமாக இருந்தாலும் அந்த நொடியில் நித்யாவால் கார்த்திக்கை பார்த்து சிரிக்காமல் இருக்க முடியவில்லை .. அந்த சந்தர்ப்பம் பயன்படுத்தி கார்த்திக் " பிரண்ட்ஸ்??? "என்று கேட்டு கை நீட்ட,

தலையை இடதுபுறம் சரித்து  அழகாய் சிரித்து " யா " என்று கை குலுக்கினாள் நித்யா ..

ன்று மாலை,

" ஹே நித்தி "

" .. "

" என்ன நீ பாட்டுக்கு போற ? "

" ஓ சாரி சீனியர் சார் ?? "

" சீனியர் சார்??? ஷாபா ..என்னம்மா ரொம்ப கோவமா ? "

" பின்ன நீங்க பண்ணதுக்கு சந்தோஷமா வரும் " என்னதான் அவள் மரியாதையாய் பேச முற்பட்டாலும் அவளுக்கு அது  சுலபமாக வரவில்லை என உணர்ந்தவன்

" ஹே லூசு .. நான் அப்பவும் இப்பவும் எப்பவும் உனக்கு கார்த்தி தான் .. இந்த சீனியர் அது இதுன்னு நீ மரியாதை எல்லாம் தர வேணாம் .. அண்ட் நானும் உன்னை ஏமாத்தணும்னு  நெனைக்கல .. நீதான் ...... " என்று சொல்ல வந்தவன் அவளின் பார்வையை பார்த்து நிறுத்தினான் ...

" ஏன் நிறுத்திட்ட ?? சொல்லு , நீதான் ஏமாந்துட்டன்னு சொல்ல போறியா ? "

" அதான் சாரி சொல்றேனே நித்தி .. எக்சுவல்லா ப்ரண்ட்ஸ் குள்ள நன்றி, மன்னிப்பு இரண்டுக்குமே இடம் இல்ல.. தப்பு பண்ணாலும் செல்லமா தண்டிசிட்டு  விட்டுடனும்.. பட் நீதான் .. " என்று சோகமாய் சொன்னவனை பார்த்து சிரித்தாள் நித்யா...

" கார்த்தி கார்த்தி ..உன்கிட்ட போயி கோபப்படனும்னு நெனச்சேன் பாரு எனக்கு பேராசைதான் ... பட் அதுக்காக உனக்கு தண்டனை இல்லாமல் விட மாட்டேன் .."

" அடிப்பாவி "

" எஸ் .. உனக்கு பனிஷ்மண்ட் உண்டு "

" ஹ்ம்ம் சொல்லு என்ன பண்ணனும் "

" உன் செல்போன் கொடு "

" மறுபடியும் முதல்ல இருந்தா "

" கொடு கார்த்தி "

" ஓகே பாய் "

" ஹே என்னது"

" நாளைக்கு காலை வரை உன் செல்போன் உன்கிட்ட இருக்காது ... யாரு கால் பண்ணாலும் நானும் எடுக்க மாட்டேன் .. ஒரு 12 மணி நேரம் போன் இல்லாமல் இரு .. இதுதான் என் பணிஷ்மன்.. "

" ஓகே டா .. நாளைக்கு பார்க்கலாம் "

" ஹே என்ன உடனே ஓகே சொல்லிட்ட ? "

" அது ஏன்னு இன்னொரு நாளு சொல்லுறேன் "

" சரி பாய் கார்த்தி"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.