(Reading time: 44 - 88 minutes)

 

" ந்த அளவுக்கு நீ என்னை வெறுக்குற மாதிரி நடந்துகிட்டேனா கார்த்தி ? " அவளின் தழுதழுத்த குரல் அவனை நிமிர்ந்து அவள் முகம் பார்க்க வைத்தது .. அழுது வீங்கி இருந்த முகமும்,  உறக்கம் தொலைத்த விழிகளுமாய், கலைந்த ஓவியமாய் நின்றிருந்தாள் நித்யா ... நான் முதல் முதலில் பார்த்தவளா இவள் ? என்று தன்னையே  கேட்டுகொண்டான் கார்த்திக் .. அவளின் இறைஞ்சல் பார்வையிலேயே கரைந்து போனவனாய்

" ஹேய் நித்திமா என்னடா ஆச்சு ? " என்று அவள் முகவாயை திருப்பி  கனிவான குரலில் கேட்டான் கார்த்தி ..

அவன் விழிகளுக்குள் விழி கலந்தவள், " கார்த்தி நான் ................." என்று பேச முடியாமல் அழுது அவன் நெஞ்சில் சாய்ந்தாள்....

அதுவரை தேக்கி வைத்த காதலும் " இனியும் நான் காத்திருப்பதை இல்லை .. " என்று விட்டு மனதிலிருந்து பொங்கி எழ, அவள் வெடித்து அழுதாள்...

" என்னாச்சும்மா "

"..."

" நித்தி ப்ளீஸ் ... ஏதாச்சும் பேசு .. நீ இப்படி அமைதியா இருந்தா நான் என்ன நினைப்பேன் ? "

" யாரு ஏதும் சொன்னாங்களா ? ....வீட்டுல்ல யாருக்கும் உடம்பு சரி இல்லையாமா? "

" நான் .. நான் ............"

" சொல்லு நீ "

" நான் செத்துபோயிடுறேன் கார்த்தி " என்ற அவளின் கன்னத்தை மின்னல் வேகத்தில் அவனின் விரல்கள் பதம் பார்த்தன ...  விழி இடுங்க

"  ஹேய் திமிரா டி உனக்கு ? ஏற்கனவே என் அம்மா அப்பா ரெண்டு பேரும் போயி சேர்ந்துட்டாங்க .. இப்போ நீயும் சாகலாம்னு இருக்கியா ?"

" கார்த்தி ????"

" என்ன கார்த்தி ? சொல்லு என்ன கார்த்தி ?  நான் சொன்னது கேக்கலையா ? ஆமா என் அம்மா அப்பா இப்போ உயிரோடு இல்ல .. தூக்கத்துலே இறந்துட்டாங்க .. அதன் பிறகு நான் தனியாத்தான் இருந்தேன் ..என் தனிமையை எரிச்சு பல பேருக்கு சந்தோசம் தந்தேன் .. நான் தொலைச்ச நிம்மதியை இசை மூலமா மத்தவங்களுக்கு  தரலாம்னு இருந்தேன் ..அப்படித்தானே என் வாழ்க்கையும் போனிச்சு .. நீ வர்ற வரை எனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்குனு நான் நெனைச்சே பார்க்கல "

" கார்த்தி "

" அன்னைக்கு நீ என்னை பார்த்த முதல் நாளே, ' உன்னை எப்படி நான் தனியா விடுவேன்னு ' நீ கேட்டது ஞாபகம் இருக்கா ? "

"ம்ம்"

" அந்த வார்த்தைதான் என்னை உன்னோடு பழக வெச்சது ... நான் தொலைச்ச என் குடும்பம் உன் உருவத்தில்  இருக்குறதா  எனக்கு தோணிச்சு .. ஆனா நான் உன்னோடு நட்போடுதான் பழகுனேன் .. பட் என்னையும் மீறி என் மனம் உன் மீது காதல் வயப்பட்டது .... எஸ் ... ஐ லவ் யு நித்தி ....நீதான் என் உலகம் என் லைப் நு நெனைக்கிறேன் ஆனா நீ சாக போறேன்னு சொல்ற ? வா வா போயி ஒண்ணா சாகலாம் வா " என்று அவளின் கை பற்றி இழுத்தான்.. ஒரு வேகத்தில் கையை உதறியவள் மண்டியிட்டு அமர்ந்து அழுதாள்... " அவளின் வேதனையை புரிந்து கொள்ள முடியாமல் தவித்தான் கார்த்திக் .. ஆதரவாய் அவள் தலை கோதினான் ..

" கார்த்தி "

" ம்ம்"

" நானும்தான் உன்னை " என்றவள் மீண்டும் அழ....

" ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்........ உனக்கு கஷ்டம் தர்ற எதையும் பேச வேணாம் நித்தி .. என்னாலே நீ அழறதை பார்க்க முடியலை டா "

" ப்ளீஸ் சொல்றதை கேளு கார்த்தி " என்றவள் தனது காதலையும் தன் தந்தையின் வார்த்தைகளையும் சொன்னாள்... அவள் எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக புனனகையுடன நின்றிருந்தான் அவளின் கார்த்தி ...

" அட கிறுக்கி "

" ஹேய் "

" இதுக்குதான் அழுதியா ? சி போ டீ ... நான் பயந்தே போய்ட்டேன் "

" கார்த்தி ?? "

" கார்த்திதான் ..உன் கார்த்தி தான் மை டியர் க்ரையிங் பேபி ..லூசு  பொண்ணு "

" யார் நான் லூசா ? "

" பின்ன இல்லையா ? "

" அப்பறம் எதுக்கு நீ லூசு பொண்ணை லவ் பண்ற ? "

" லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே

லூசு பையன் உன்மேலத்தான் லூசா சுத்துறான் "

" கார்த்தி என்ன விளையாடுறியா ? "

" ம்ம்ஹ்ம்ம்ம்ம் இல்ல நீதான் விளையாடுற பேபி "

" தெளிவா பேச கூடாதுன்னு முடிவு பண்ணிட்டியா நீ ? "

" ஹா ஹா .. மக்கு பெண்ணே... இது என்ன வயசு ? படிக்கிற வயசு... இந்த வயசுல எந்த அப்பாவாச்சும் பெண்ணோட காதலுக்கு சாபோர்ட் பண்ணுவாரா ? "

" சோ ? "

" சோ என்ன சோ ? உன்னை இப்போ என்காரெஜ் பண்ண வேணாம்னு அப்படி சொல்லி  இருக்கலாம் ... உன் படிப்பு முடிஞ்சு மாப்பிளை பார்க்கும்போது நம்ம காதலை சொன்னா போதும் .. அது வரை நம்ம காதலை மனசுல பொத்தி வெச்சு வெறும் நண்பர்களாகவே இருப்போம் "

" ஒருவேளை அப்பா ஒத்துக்கலேனா ? "

" நோ ஆதர் வே ...அவரு காலில் விழுந்துட வேண்டியதுதான் "

" ஹா ஹா ஹா "

" ஹப்பாடி  சிரிச்சுட்டா பா என் செல்ல லூசு "

" போதும் உடனே ட்ரேக் மாறாதே .. எனக்கு டென்ஷனா இருக்கு ? "

"அச்சோ அவசரப்பட்டுடியே கார்த்தி "

" என்ன ? "

" இல்ல இப்போதைக்கு ப்ரண்ட்ஸ் ஆ மட்டும் இருப்போம்னு சொல்லிட்டேனே .. இல்லன்னா "

" இல்லன்ன ? "

" உன் டென்ஷன் குறைய கட்டிபிடி வைத்தியம் பண்ணிருக்கலாம் "

" அடபாவி கேடி .. நீ இப்டிலாம் வேற பேசுவியா ? பக்கத்துல வந்தா  கொலை விழும் "

" ஹா ஹா சவால் எல்லாம் கார்த்திக்கு சமோசா சாப்பிடுற மாதிரி .. இப்போவே  உன் சவாலை ஏற்று கிட்ட வரவா ? " என  அவன் நெருங்கவும் அவனுக்கு ஒழுங்கு காட்டிவிட்டு ஓடினாள் நித்யா ...

இருவருக்குமே மனம் நிறைந்திருந்தது.. காதலை சொன்ன நிம்மதியா ? அதை ஏற்ற நிம்மதியா ? அல்லது எதிர்காலத்தின் கனவா ? என்ன என்றே தனித்தனியாய் பிரித்தெடுக்க முடியாத இன்ப உணர்வில் பறந்தனர் நம் காதல் குயில்கள் ..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.