(Reading time: 9 - 18 minutes)

 

"மா!"

"அதுக்கு பக்கத்துல இருக்கிற வீடு தான்!"

"சரி பாட்டி! தேங்க்ஸ்..."

"அங்கே போறதா இருந்தா கூட யாரையாவது கூட்டிட்டு போ!"

"ஏன்?"

"கூட்டிட்டு போ!"-ஏன் அவர் அவ்வாறு கூறுகிறார் என்று அவனுக்கு புரியாமல் இல்லை.வேறு எதற்கு உளவு பார்க்க தான்!!!

"சரி பாட்டி!"-ஷைரந்தரி ரகசியமாக சிவாவிடம்,

"ஏன் சார் அதுக்குள்ள அவசரம்?"என்றான்.சிவா, ஒன்றும் புரியாதவாறு விழித்தான்.

"என்ன?"

"உன் கல்யாணத்துக்கு ஜாதகம் பார்க்க தானே போற?"

".............."

"முதல்ல அப்பாக்கிட்ட சொல்லலாம்,அப்பறமா இது எல்லாம் பண்ணலாம்ல?"

"எது பண்ணாலும் அம்மூ....அது உனக்காக தான்!உன்னை தவிர வேற எதைப் பற்றியும் அதிகமாக கவலை இல்லை."-இம்முறை ஷைரந்தரி விழித்தாள்.

"என்னாச்சு?"

"குழப்பிட்ட!"

"நானே தெளிவு படுத்துறேன்.அது வரைக்கும் என்கிட்ட சொல்லாம எங்கேயும் வெளியே போகாதே!"

"சரி!"

"ம்..."

"சிவா!"

"என்னடா?"

"அண்ணி ரொம்ப நேரமா உன்கிட்ட பேசணும்னு காத்துக்கிட்டு இருக்காங்க..."

"என்ன விஷயம்?"

"நீ தான் கேட்கணும்!"

"வெளியே போயிட்டு வந்து பேசிக்கிறேன்!"

"சிவா நீ பண்றது நல்லா இல்லை.என்ன நினைச்சிட்டு இருக்க நீ?இது மாதிரி எல்லாம் அவங்களை கஷ்டப்படுத்தாதே சிவா!"

"குட்டிம்மா!நான் அவளுக்காக தான் அவக்கூட பேசாம இருக்கேன்."

"என்ன?"

"ஆமா...இது அமெரிக்கா இல்லை.இஷ்டத்துக்கு ஒரு பையன்,ஒரு      பொண்ணுக்கிட்ட பேசுறதுக்கு...நம்ம ஊருக்குன்னு ஒரு கலாச்சாரம் இருக்கு!ஒரு நண்பனா ஒரு    பொண்ணுக்கிட்ட பேசலாம்...மனசுல காதலை வச்சிட்டு பேசுறது நல்லா இருக்காது...அவ இந்த கலாச்சாரத்துல வளர்ந்தவ என்னால அவளுக்கு எந்த கெட்ட பேரும் வர கூடாது!"-ஷைரந்தரி கண்கள் மிளிர்ந்தன.

"என்னாச்சும்மா?"

"நான் இன்னும் நீ கோபத்துல தான் இருக்கன்னு நினைத்தேன்.நீ சொல்றது நியாயம் தான்.ஆனா,அவங்களை அப்படியே ஒதுக்குறா மாதிரி பண்ண கூடாது."

"நான் பேசுறேன்மா!கண்டிப்பா நான் பேசுறேன்.உன் அண்ணிக்கிட்ட சொல்லு....அவ யாருக்காவது மனைவி ஆகணும்னா,அது எனக்கு மட்டும் தான்.அவளை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்னு சொல்லு சரியா?"

"ம்..சரி!"-ஷைரந்தரியின் முகம் பிரகாசித்தது.

சிவாவிற்கு இனி தான் பல வேலைகள் இருக்கிறது. அவன் எழுந்து சென்றான்.அவன் எதிரில்,பார்வதி வந்தாள்.அவனை கண்டவுடன் நின்றவளின் அருகே சில நொடிகள் நின்றான்.எதையும் பேசவில்லை.அழுத்தமான பார்வை ஒன்றை பார்த்தான்.அதில்,அவளுக்கு என்ன விளங்கியதோ!அமைதியாக தலை குனிந்தாள்.சிவா,அவளை கடந்து சென்றான்.

சிவா,நினைத்தாற் போல நீலக்கண்ட்ச்சாரியாரை சந்திந்தான்.அர்ஜீனை தன்னுடன் அழைத்து சென்றிருந்தான்.

"வாப்பா சிவா!"

"வணக்கங்க!நான் உங்ககிட்ட சில விஷயத்தை பற்றி கேட்கணும்!முக்கியமான விஷயம்..."

"தெரியும் என்னைக்காவது நீ வருவன்னு!"

"எப்படி?"

"தெரியும்!உன் தங்கச்சி விஷயமா தான் நீ வந்திருக்கணும் தெரியும்!"-சிவா,பிரம்மித்து பார்த்தான்.

"நான் புது சூழ்நிலையில வளர்ந்தவன்.என்னால, ஷைரந்தரியை சுற்றி நடக்கிற எந்த விஷயத்தையும் ஏத்துக்க முடியலை. அவளுக்கு என்ன நடக்க போகுது?

அவளுக்கு ஒண்ணும் ஆகாதுல்ல?"-அவர்,பலமாக சிரித்தார்.

"நவீன நாகரிக உலகம் கண் முன்னாடி தெரியுற பொய்யை நம்புது. கண்ணுக்கு தெரியாத உண்மையை நம்ப மாட்டிங்குது!"

"புரியலை."

"ஷைரந்தரி உன் தங்கச்சின்னு யார் சொன்னது?அவ...ஒன்பது கிரகங்களும் ஒரே நேரத்துல சந்திக்கும் போது ஜெனனித்தவள். ஆதிசக்தியோட மறு அவதாரம்."-அதிர்ந்து போனான் சிவா.

"பாவத்தால சூழப்பட்டிருக்கிற இந்த ஊருக்கு விமோர்சனம் தர அவதரிச்சவ!"

"என்ன சொல்றீங்க?"

"ஷைரந்தரியோட முன்ஜென்மம் பற்றி தெரியுமா உனக்கு?கிட்டத்தட்ட 1800 வருஷத்துக்கு முன்னாடி நடந்த கதை தெரியுமா உனக்கு?"-அர்ஜீனும், சிவாவும் மாறி மாறி பார்த்து கொண்டனர்.

"இதே பாஞ்சாலபுரத்தோட இளவரசியாக பிறந்தவ அவ!!!பல தாந்திரிகள், ரிஷிகள் பண்ண வேள்வியில பிறந்தவ அவ!"

"வேள்வியிலா?"

"ஆமா....அப்போ ஆண்,பெண் இன சேர்ப்பை விடுத்து,ஆண்டவன் தர திவ்ய பிரசாதத்தை ள்வீகரிக்க ஆசைப்பட்டாங்க!அப்படி பிறந்த பல குழந்தைகள் சரித்திரத்தையே மாற்றினாங்க!

அப்படி பிறந்தவ ஷைரந்தரி!"

"அப்போ அவ மறுபடியும் பிறந்ததன் நோக்கம் என்ன?"

"விட்டுப்போன பாசம்,அவளால தரப்பட்ட சாபம்!இதை நிவர்த்தி பண்ண!"

"சாபமா?"

"அவ தந்த சாபத்தை அன்னிக்கு கங்கை நீரை வர வைத்து நிவர்த்தி பண்ணாலே!      ஞாபகமில்லையா?"

"அது அவ தந்த சாபமா?"

"சில கதைகள் முழுசா தான் தெரிந்துக்கணும்!!!கேட்கிற அளவுக்கு பொறுமை இருக்கா?"

"சொல்லுங்க....எனக்கு அவ தான் முக்கியம்!"-அவர் சிரித்துக் கொண்டே கூறினார்.

1800 வருடங்களுக்கு முன்பு...

 மாமன்னர் மகேந்திர வர்மர் வாழ்க!!!வாழ்க!!!-கர கோஷங்கள் பல்லவ தேசத்து மன்னனை வரவேற்றன.(இவை யாவும் கற்பனையே!)

ரதத்தில் கம்பீரமாய் வீற்றிருந்தார் மகேந்திர வர்மர்.

அவரது ரதம் நேராக கோட்டைக்குள் சென்றது.

அவர்,அவசரமாக மகாமந்திரி அழைத்தார்.

"வீரனே!மகாமந்திரியை வர சொல்வாயாக!"

"அப்படியே அரசே!"-சிறிது நேரம் கழித்து மகேந்திரரை தனிமையில் சந்தித்தார் மந்திரி பூபதி விக்கிரமன்.

"சக்கரவர்த்தி புகழ் ஓங்குக!அழைத்தீர்களா அரசே!"

"ஆம் மாமந்திரி!காஞ்சியில் பார்த்தீபனின் போர் குறித்து செய்தி உண்டோ?"

"தங்களின் மருமகனாயிற்றே!வெற்றி முரசை கொட்டிவிட்டான் அரசே!"

"மெய் தான் உரைக்கின்றீரா?நாம் வாகை சூடி விட்டோமா?"-மகிழ்ச்சியில் கொப்பளித்தார் மன்னர்.

"மெய் தான் அரசே!"

"மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி!"

"அரசே!வேதியர்கள் வளர்த்த வேள்வி,இன்றிரவோடு நிவர்த்தி ஆக போகிறது. தாங்கள் வேண்டியதைப் போல திவ்ய புதல்வியை ஸ்வீகரிக்க சிறந்த நேரம் மன்னா!"

"அப்படியே ஆகட்டும் மந்திரியாரே!"-இனி இன்றிரவு வேள்வியில் உதிக்க போகிறாள் பெண்ணொருத்தி!!!!

தொடரும்

Go to Episode # 07

Go to Episode # 09

{kunena_discuss:751}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.