(Reading time: 7 - 14 minutes)

 

 ஷெஷாங்கன் மகிழ்ச்சி

இது முதலனுபவம்

சுக அனுபவம்

சுயம் சாகும்

சுந்தர அனுபவம்

காதல் வைபவம்

காற்றாய், காட்டாறாய்

காயம் நீங்கி, சிறகு விரிக்கும்

இவன் மனோரதம். (8)

 

மனகாயம் மாற்றினாள்

மையல் காயம் சாற்றினாள்

காயம் செய்து காயமாற்றும்

காரிகை இவள் வைத்திய முறை

சுகம், சுகந்தம், தொடுவானம், மண்வாசனை.

மாருதம் அவன் அகத்தில்

மந்தகாசம் வெளி முகத்தில். (9)

 

ஷெஷாங்கன் நறுமீன் பற்றி அறிய முயல்தல்

(உரையாடல்)

மங்கை இவள் பெயர் என்ன?

நறுமீன் என் நாமம்.

நறுமீன் நீ நட்சத்திரம், இனி நதி என்பேன் நான்.

புரியாது பார்த்தாள் பெண்.

உப்பிட ஆளுண்டு உணவிட தாயுண்டு

நட்பிட நண்பனில்லை நாம் இனி நட்பு.

அந்நிய ஆணுடன் அருகில் நின்று அறியாதவள் நான்.

உப்பும் வேண்டாம்; நட்பும் வேண்டாம்; நன்றி வருகிறேன் நான்.

நதியை பெற்றவர் எவர்? எங்குளர்?

நங்கை மனம் கவர, மணம்கோர நல்வழி காண முயன்றான் அவன்.

நதி மூலம் மழை பெய் ஸ்தலம்

நறுமீனை பெற்றவர் இறைவன் கைவசம்.

எவ்வூர் உன் ஊர்? எத்தெய்வம் உன் தெய்வம்?

தன் நதியை இனம் காண முயன்றான் நிலமாள்பவன்.

அடி தொடும் இப்பூமி என்னது இந்நொடி

நடந்தால் மாறிவிடும் மறுநொடி. நான் நாடோடி

பெயரற்றவன் என் பெரும் தெய்வம்

அறிய கேட்டால் {tooltip}நான் நானாக இருக்கிறேன்{end-link}ஜெகோவா என்பதின் பொருள்{end-tooltip} என்பான். 

தன் அடையாளம் மறைக்க அத்தனையும் செய்தாள் பெண்

உபயம் அவள் அம்மையப்பன் அண்ணன் மொர்தகன். (10)

 

ஷெஷாங்கன் பதில்

வாட்போர் கண்டதுண்டு

இவ் வாய்ப்போர் சுகப்போர்

தொடர்ந்திட துடிக்குது மனம்.

நின் விழியோ நித்திரை வசம்.

வெள்ளி கட்டிலுண்டு, பசும்பால் உண்டு

துயில்வாய் சுகமாய் இன்று இங்கு (11)

 

நறுமீன் பயம்

விழிகள் வேல் கொண்டது

கைகள் தன் துகில்.

கால்கள் பின்னிட்டது

தேகம் வியர்வை கடல்

மனம் முறையிட்டது

‘கோ’ வென கதறிட்டது

உயிர் வலி வசம். (12)

 

ஷெஷாங்கன் வார்த்தைகள்

குயில் பெட்டை இடாது முட்டை

காகைதன் சிறு கூட்டில்

ஆண் குயில் கூடு காண

அதன் பேடு அங்கிடும் {tooltip}அண்டம்{end-link}முட்டை{end-tooltip}

அது என் தேசம்.

உரிமையில்லா உறவு காணாது என் எல்லை. {tooltip}மீறுங்கால்{end-link}மீறினால்{end-tooltip}

சிரம் செல்லும் மண்தரை, சரீரம் வல்லூறு இறை.(13)

 

நறுமீன் நிலை

அவன் விழி கண்டவள்

அதன் மொழி கண்டவள்

சென்று சுருண்டாள்

கேள்விகுறி என கட்டிலினில்.

நின்று கண்டவன் சிறு புன்னகையுடன்

நடையிட்டான் வெளி நோக்கி

மனம் பின்னிட்டு அவள் வசம் தான்விட்டு.(14)

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.