(Reading time: 15 - 30 minutes)

 

டாக்டர்ஸ் சொல்றது இல்லையா...இந்த குழந்தை வேண்டாம் அடுத்ததை வச்சுகிடலாம்னு.....”

“உயிரோட இருக்கிற குழந்தைய இப்படி யார் சொன்னாலும் அவங்க பேய்தான்...பிசாசு தான்... “

“லூசு...”

“நீ வெளிய போ.....நீ என் அம்மா இல்ல....என் அம்மா நல்லவங்க...”

“உன் நல்லதுக்குதான் சொல்றேன் தயா...அந்த பிள்ளையால ரொம்ப கஷ்டபடுவ....”

“என் நல்லதுக்காக நீ செத்த பிறகும் கவலைப்படுவன்னா உயிரோட இருக்கிற நான் என் பிள்ளைக்காக கஷ்டபட்டுட்டு போறேன்..”

“பேயை தனக்குள்ள வச்சிருக்க உன் பிள்ளை கஷ்டபடுமே....”

“குறையே இல்லாம பிறக்கிற யாராவது கஷ்டபடமாட்டாங்கன்னு நிச்சயம் இருக்கா..?.அப்படி பார்த்தா பிறக்கிற அத்தனை பேரும் கஷ்டபட்டுதான் ஆகனும்...அப்பனா மொத்ததிற்கு பிள்ளையே வச்சுகாமதான் போகனும்...எனக்கு என் பிள்ளை வேணும்..”

அணைப்பிற்கு உட்பட்டாள் தயனி. அணைத்தது யார் என்பது அவளுக்கு தெளிவாக புரிந்தது. அவள் கணவன்.

“இது என் அம்மா இல்ல...பேய்.......” அணைப்பிற்கு உட்பட்டவள் புலம்பினாள்.

“ம் தெரியும்...” சூடேறி இருந்த அவள் தளிர் தேகம் தலைவனின் அணைப்பிற்குள் கொதிப்பிழக்க தொடங்கியது.

“அது போய்ட்டா..”

“இங்க எதுவும் இல்ல...”

விழி திறந்து பார்த்தாள். அறை வெளிச்சத்தில் ப்ரகாசமாக தெரிந்தது.

எதுவோ ஒரு புரிதல் உள்ளுக்குள் தயனிக்கு.

ப்படியும் இந்த பேய்கூட்டம் தவிர்க்க சொல்வது குழந்தையைத்தான்.

அவசரமாக அந்த மரகத வீணையைப் பற்றி தன் கணவனுக்கு தெரிவித்தவள், அவள் அம்மா சுட்டி காட்டிய அந்த அலமாரியை அது காண்பித்த முறையில் திறக்க, அந்த சாவித்துவரத்தில் சமத்தாக பொருந்தி திறந்தது அந்த சாவி.

சில அதிமதிப்புள்ள நகைகள், விலை மதிப்பற்ற கற்கள், ஒரு கற்றை பணம் மற்றும் சில டாகுமெண்டுகள். சிறு டைரி.

அவசரத்தில் இவைகளை மட்டும் எடுத்துக் கொண்டு ஒருவர் தப்பித்து ஓடினாலும் வாழ்நாளுக்கும் போதும். ஒற்றை மகளின் பாதுகாப்பிற்காக பலவற்றையும் ஏற்பாடு செய்த அப்பாவின் வேலை இது.

அந்த டைரியில் இந்த மரகத வீணை பற்றி ஒரு குறிப்பு இருந்தது.

இவ் வீணையில் செத்தவன் பிழைக்கவும், இருப்பவன் சாகாமல் இருக்கவும் செய்யும் ரகசியம் இருக்கிறது என்ற நம்பிக்கை இருக்கிறது என்றது அது.

ஆக அபிஷேக்கின் அம்மா வந்ததின் நோக்கம் இதுதானா?

அபிஷேக்கின் தந்தையை காப்பாற்ற என அவர் வெறித்தனமாக முயன்றிருக்கிறார் என்றாலும் அதற்காக தாயற்ற இவளின் தந்தையை கொன்றதை எப்படி நியாயப் படுத்த?

மரணத்தின் வலி அறிந்த அவர்  இயல்பில் வரும் மரணத்தைகூட தடுக்க அல்லவா போராடி இருக்க வேண்டும்....மாறாக....?

பிறந்தால் பிள்ளைக்கு வலிக்கும் என நினைத்து பிறக்கும் முன்னமே, தனக்கு தீங்கு எதுவும் செய்யாத, வலித்தாலும் வாய்விட்டு அழமுடியாத அரும்பு பிஞ்சை அடி வயிற்றில் இருக்கும் போதே அக்கு வேர் ஆணி வேராய் வலிக்க துடிக்க பிய்த்தெரியும் பாதகத்திற்கும் இந்த அத்தை செய்ததற்கும் என்ன வித்தியாசம்??

ஒருவேளை....இப்படி இருக்குமோ? 

இவள் அம்மாவாக வந்ததே இவள் அத்தைதானோ????

தொடரும்

Episode # 08

Episode # 10

{kunena_discuss:762}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.