(Reading time: 46 - 92 minutes)

 

" லவ் யு ஜெய் " என்று சொல்லி அவன் மார்பில் ஒன்றிக் கொண்டாள் ..

" ஐ லவ் யு சோ மச்  புவனி " என்றவன் பாடலை தொடரவிட்டுவிட்டு அவளை கட்டிக்கொண்டான் ..

நான் என்பதில் இன் மறைந்து இம் வந்ததும் ஏனோ

போ என்பதில் போ ஒழிந்து வா வந்ததும் ஏனோ

வெட்கம் என்னை நனைக்கும் இது ஏனோ

கால் விரல் ஓவியம் எழுதுதே ஏனோ

கண்களும் கண்களும்  பொய் சொல்லும் ஏனோ

இமைக்கையில்  இடி சத்தம் கேட்டதும் ஏனோ ஏனோ

நெஞ்சுக்குள் காதல் வந்தால்

பெண் நிலவரம் இதுதானோ

ஜெய் - புவனியின் காதல் கதை இனிதாய் தொடங்கி இனி என்றென்றும் வளர வாழ்த்துவோம்..

ரு வாரம் கடந்திருந்தது .. பெரியவர்களின் முடிவின்படி புதுமண தம்பதியர் மூவருமே மறுவீடு முறைக்காக பெண்வீட்டிற்கு சென்றிருந்தனர் ..

அன்றிரவு,

( கிருஷ்ணா - மீரா - ஊட்டியில் )

அதே ஊஞ்சல்.. கிருஷ்ணன் தன்னிடம் காதலை சொல்லி தனது முதல் முத்தத்தை முத்திரையாய்  பதித்த அதே இடம் .. அன்றைய நினைவுகளில் மூழ்கி ஊஞ்சலாடிக் கொண்டிருந்தாள் மீரா ...

" மல்லிகை என் மீரா மயங்கும் பொன்னான மலரல்லவோ " என்று கைகளில் மல்லிகை பூவை சுற்றிக் கொண்டு அங்கு வந்தான் கிருஷ்ணன் .. கிருஷ்ணன் என்ற பெயர் வைத்ததாலோ என்னவோ அவன் காதலிலே மன்னனாகத்தான் திகழ்ந்தான் .. அதுவும் திருமணம் ஆனபிறகு அவனது லீலைகளுக்கு பஞ்சமா என்ன ?  இப்போதும்கூட, இதோ அவள் தலையில் பூ வைக்க வேண்டும் என்று லக்ஷ்மி அம்மா கொடுக்க அதை பவ்யமாய் வாங்கி கொண்டவன் , இப்போது அதை கைகளை சுற்றிக் கொண்டு வாசம் பிடித்தான் ..

அது ஒரு பௌர்ணமி இரவு.. பால்நிலா தன் மேகமெனும் காதலனுடன் காதல் நடனமாட, அந்த அழகை ரசித்துக் கொண்டு இருந்தாள்  மீரா .. அதை தூரத்தில் இருந்து பார்த்தவனோ பூனை போல பதுங்கி அவள் பின்னால் நின்று கொண்டான் .. லக்ஷ்மி அம்மா கொடுத்த மல்லிகை சரத்தை பிரித்து பூக்களை கைகளில் நிறைத்துக் கொண்டு அவள் எதிர்பாரா நேரம் அவள் மீது பூமழை பொழிந்தான் ..

ஒரு கணம் சொக்கித்தான் போனாள்  அவளும் . அடுத்த கணமே தன்னவனின் லீலை இது என்று  உணர்ந்தவள் பொய் கோபமாய் முறைத்தாள் .. அதற்குள் கிருஷ்ணனே

" அட என்னடா நீ . பாரு தலை எல்லாம் பூ ... " என்று சொல்லி அவள் அருகில் நெருங்கி பூக்களை ஊதினான் .. அவனின் மூச்சுகாற்று அவள் மேனியை தீண்ட

" போதும் போதும் எங்களுக்கு எடுக்க தெரியும் ..எங்களுக்கும் கை இருக்கு " என்றவள் தன் மேனியில் விழுந்த பூக்களை தள்ளிவிட முயல அவள் கைகளை பற்றி

" இருக்கட்டும் .. அதுக்காக புருஷன் நான் இருக்கும்போது உன் கைகள் இந்த வேலையை பார்க்க வேணாமே " என்று கண்ணடித்தான் .. அவள் மீது விழுந்த பூக்களை  ஒவ்வொன்றாய் எடுத்துவிட்டவன், அவளின் இதழ்களை சிறை பிடிக்க, அவன் கழுத்தை கட்டிக்கொண்டு அவனின் கேசத்தை கோதினாள்  மீரா.. பல நொடிகளுக்கு பிறகே அவளை விடுவித்தவன்  அவளை பார்த்து கண் சிமிட்டி

" நான் தான் சொன்னேன்ல .. உன் கைகளுக்கு வேற வேலை இருக்குன்னு " என்று சொல்லி கண்சிமிட்டினான் ..

அழகாய் முகம் சிவந்தாள்  மீரா .. அவளது மடியில் படுத்துக் கொண்டு கண்மூடி அந்த மோனநிலையை ரசித்தான் கிருஷ்ணன் .. அதை களைக்க  விரும்பாமல் மீராவும் மெல்லிய குரலில் ஏதோ பாடலை முணுமுணுத்தாள் ..கண் விழித்தான் கிருஷ்ணன் ..

" என்னங்க ??"

" பாடுறதுதான் பாடுற, கொஞ்சம் சத்தமா பாடினா நாங்களும் இரசிப்போம்ல.. இப்படி இரகசியமா பாடினா நான் எப்படி ரசிப்பேனாம் ? " என்றான் .

அவனது மூக்கை பிடித்து ஆட்டி செல்லம் கொஞ்சியவள், " ஆமா உங்களுக்கு ரசிக்கத்தானே திறமை பஞ்சம் ..ரொம்பத்தான் " என்றாள் ..

" அப்படியா ? என் ரசனை கம்மியா இருக்கா ? இன்னைக்கு டோசெஜ் ஏத்திட வேண்டியதுதான் " என்று கண் சிமிட்டினான் ..

" அச்சோ எதை சொன்னாலும் எடக்கு  மடக்கா பேசி வைக்கிறது .. உங்க கிட்ட பாத்திரமாவே இருக்கணும் " என்று கண்களை உருட்டினாள்  அவள் ..

" அதெல்லாம் நான் கவனிச்சுக்குறேன்.. நீ மாமாவுக்காக ஒரு பாட்டு பாடுடீ  என் பட்டு " என்று கொஞ்சினான் கிருஷ்ணன் ..

" ம்ம்ம்ம்ம் "

" 1...2...3......"

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்

உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்

விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்

எனையாளும் எஜமானே எனையாளும் எஜமானே

" என்ன அப்படி பார்க்குறிங்க , எஜமானே ? " என்றாள்  மீரா கொஞ்சலாய் .. அவள் மடியில் இருந்து எழுந்தவன் அவளை மடியில் சாய்த்துக் கொண்டான் ..

" இப்போ நான் பாடவா ? "

" ம்ம்ம் சரி "

சில நொடிகள் மௌனமாய் இருந்துவிட்டு, தனது கனீர்குரலில்  அன்பொழுக பாடினான் மீராவின் கிருஷ்ணன்.

எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல

 பூக்களின் வண்ணம் கொண்டு

பிறந்த மகளே என் மகளே

நான் வாழ்ந்தது கொஞ்சம்

அந்த வாழ்கையில் வந்துதித்து

உயிரில் கலந்தாய் என் உயிரே

உன் பூவிழி குறுநகை

அதில் ஆயிரம் கவிதயே

என்று பாடினான் கிருஷ்ணன் ..

" இப்போ ஏன் இந்த பாட்டு கண்ணா ? "

" தெரிலடா... உன்னை பார்த்ததும் உன்னுடைய இந்த கண்களை பார்த்ததும் எனக்கு இந்த பாட்டுதான் தோணுது “

"..."

" இந்த கண்கள்ல ரொம்ப நாளைக்கு பிறகு நான் நிறைஞ்ச சந்தோஷத்தை பார்க்கிறேண்டா .. இந்த நாளுக்காக நான் ரொம்ப நாள் காத்திருந்தேன் டா .. இப்போதான் எனக்கு மனசு நிறைஞ்சிருக்கு .. எந்த ஒரு ஆணாலும்  தன் மனைவிக்கு தந்தையாகிவிட முடியாது .. ஆனா அவனுக்கு மகள் பிறந்துட்டா அவனும் சிறந்த தந்தை ஆகிடுறான் ... உன் விஷயத்துல நான் உனக்கு அப்பா மாதிரி இருக்க ஆசை படுறேண்டா .. உன்னை சந்தோஷபடுத்தி பார்க்கிறதில் நான் உனக்கு அப்பாவா இருப்பேன் .. எதிர்காலத்துல கூட எனக்கு பையன்தான் வேணும் .. பெண்ணாக நீ இருந்தா போதும் " என்றான் அவன் .. ஏற்கனவே அவன் பேச்சினில் நெகிழ்ந்தவள்  குழந்தை  பற்றிய பேச்சு வந்ததும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.