(Reading time: 46 - 92 minutes)

 

( ர்ஜுன் - சுபி - சுபத்ராவின் வீட்டில் )

" அஜ்ஜு  ....அஜ்ஜு " என்று அவனை தேடி கொண்டே அவர்களது அறைக்கு வந்திருந்தாள் சுபத்ரா .. அவர்களின் கட்டில் மீது ஒரு பரிசு பெட்டி இருந்தது .. இந்த முறை பெரிதாய் ஆச்சர்யமில்லை.. திருமணம் நடந்த தினம் இருந்து இன்று வரை தினம் ஒரு புடவையை அவளுக்கு பரிசாய் தந்து கொண்டிருந்தான் அவளது ஆசை கணவன் .. எங்கே அவன் என்று தேட, அவன் குளிக்கும் ஓசை கேட்டது ..  " இந்த அர்த்த ராத்திரில எதுக்கு குளிக்கிறார் ? "என்று எண்ணியவள் சட்டென எழுந்த யோசனையில் சில ஏற்பாடுகளை செய்துவிட்டு அங்கிருந்து சென்றாள் .. குளித்துவிட்டு வெளியே வந்தவன் அந்த பெட்டி அப்படியே இருப்பதை பார்த்தான் ..

" இந்நேரத்துக்கு நம்ம இளவரசி இங்கு வந்திருக்கணுமே .. எங்க போனாள்  ?" என்று அவன் எண்ணும்போதே  அவனது செல்போன் சிணுங்கியது .. " என் போன் எப்படி பெட்டி பக்கத்துல வந்தது ? " என்று முணுமுணுத்தவன்  அந்த மெசேஜை படித்தான் ..

" அஜ்ஜு  இது ஒரு கேம் .. இருக்குற கொஞ்ச நஞ்ச மூளையை பயன்படுத்தி ரெடி பண்ணிருக்கேன் .. சோ அதிரடி அர்ஜுனை வந்து என் ப்ளானை  சொதப்பாமல், பொறுமையா விளையாடுங்க .. நான் கொடுக்குற இன்ஸ்ட்ரக்ஷன் படிதான் நீங்க நடக்கணும் .. "

" சரிங்க இளவரசி "  என்று பதில் அனுப்பினான்..

" ஓகே .. நான் என்ன கலர் புடவை கட்டி இருக்கேனோ, அதே மாதிரி டிரஸ் அப் பண்ணிட்டு  டைனிங் டேபல் வாங்க "

அவள் தினமும் அவன் பரிசாய் அளித்த புடவைதான் அணிவாள் .. நேற்று இரவு அவன் தந்தது நீல நிற புடவை .. ஆனால் அவனோ வெள்ளை நிற ஷர்ட் அணிந்து  கீழிறங்கி வந்தான் .. " நல்லவேளை  எல்லாரும் தூங்குறாங்க " என்று பெருமூச்சு விட்டான் ... அவனை தூரத்தில் இருந்து கண்காணிக்கும் சுபியோ  " ஹே திருட்டு பூனை " என்று அவனை செல்லமாய் திட்டி " அழகு அஜ்ஜு  " என்று சொல்லி காற்றில் முத்தத்தை பறக்கவிட்டாள் .. ஆனால்  அவன் வெளியில் செல்வதற்கு தயாராவது போல கிளம்பியதை அவள் கவனிக்கவில்லை .. அடுத்த மெசேஜ் வந்தது ..

" இங்க டேபல் மேல இருக்குற மூணு கப்ஸ் ல காப்பி  இருக்கு .. எது நான் போட்டதுன்னு கண்டுபிடிச்சு அதை குடிச்சு முடிங்க "

கொஞ்சம் அலறித்தான் போனான் அவன் .. சுபி போட்ட காப்பியா ??? ருசித்து பார்த்தான் .. மூன்றுமே அவள்தான் போட்டிருந்தாள் ..நல்லவேளை, ருசிப்பதற்காக  கொஞ்சம் கொஞ்சமாய் மூன்று கப்களில் ஊற்றி வைத்திருந்தாள் அவள் .. அதை குடித்து முடித்தான் .. காற்றில் பறந்து வந்தது சுபத்ராவின் இரண்டாம் முத்தம் .. அடுத்த மெசேஜ் ..

"  ப்ரிட்ஜ் ல ஒரு குட்டி பாக்ஸ் இருக்கும் எடுங்க "

அவனும் சமையலறையில் ப்ரிட்ஜில் தேடி பிடித்து ஒரு பெட்டியை எடுத்தான் .. அதை திறந்து பார்த்தான் .. கருப்பு நிறத்தில் ஒரு துணி இருந்தது .. மூன்றாவது முத்தமும் பறந்து வந்தது ..

" அஜ்ஜு  இந்த துணியை கண்ணுல கட்டிகிட்டு தடுமாறாமல் நம்ம வீட்டு வாசலுக்கு வாங்க  " அவளின் குறும்பு தனத்தை எண்ணி சிரிப்புதான் வந்தது அர்ஜுனனுக்கு .. அவன் நினைத்தால் அனைவரையும் சுற்ற வைப்பான் .. ஆனால் இன்றோ அவனது மனைவி, அவனை விட இளையவள் தனது காதலால் அவனை சுற்ற வைத்தாள் .. அவள் சொன்னது போல, கண்களை கட்டிக் கொண்டு வெளியில் வந்தான் .. அவன் கண்களை இரு கைகளால் பொத்திக் கொண்டாள் சுபி ...

" அஜ்ஜு " என்று சொல்லி பின்னாலிருந்து அணைத்தப்படி நின்று கன்னத்தோடு கன்னம் இழைத்தாள் ...

" என்னடீ ஆச்சோ உனக்கு ? நான் பண்ண வேண்டியதை எல்லாம் நீ பண்ணுற ? " என்றான் கிறக்கமாய் .

" ச்சு சும்மா இருங்க " என்றவள் அவனுடன் அங்கு நடந்து வந்து கண் கட்டை அவிழ்த்தாள் ..

இதழில் புன்னகை பெரிதாக அந்த தோட்டத்தை பார்த்தான் அர்ஜுனன் .. வெள்ளை நிற ரோஜாக்கள், நடுவில் பூத்திருக்க, அதை சுற்றி பல வண்ணங்களில் ரோஜாக்கள் இருந்தன ..

" ஹே கண்மணி அந்த வைட் ரோஸ் ? " என்று அவன் ஆவலாய் அவள் முகம் நோக்க, அவன் கைகளுக்குள் அடக்கமாகி அவன் கணத்தில் இதழ் பதித்து,

" என் அஜ்ஜு  எனக்கு கொடுத்த முதல் பரிசு .. இந்த பூக்கள்  வளர்ற மாதிரி நம் உறவும் தொடரும்னு சொல்லி கொடுத்தது .. நீங்க சொன்ன மாதிரியே பூக்களும் வளர்ந்து, மலர்ந்து மனம் முழுக்க மணம்  கமழ்ந்திருச்சு " என்று சொல்லி அவனை கட்டிக் கொண்டாள்  ...

" ஆமா அஜ்ஜு  நீங்க எப்படி " என்று அவள் கேள்வி கேட்கும்முன்னே அவள் இதழ்களை சிறைபிடித்து அவளை மூச்சு வாங்க வைத்தான் ..

" அஜ்ஜு  " என்று அவள் ஏதோ சொல்ல வர மீண்டும் அதையே தொடர்ந்தான் .. அவளது அழகிய முகம், குங்குமமாய் சிவந்தது ..

" ஹே பொண்டாட்டி "

" ம்ம்ம்ம்ம் ?"

" வா போலாம் "

" எங்க ?"

" இப்போ என் சர்ப்ரைஸ் " என்று கண் சிமிட்டினான் .. அவன் கார் நிறுத்திய இடம் கடற்கரை ..

" பீச் கு .. இந்த நேரத்துலயா ?"

" ஹே மக்கு இளவரசி இன்னைக்கு பௌர்ணமி "

ஆம், பௌர்ணமி அன்று கடற்கரைக்கு செல்ல வேண்டும் என்பது அவளது குட்டி குட்டி ஆசைகளில் ஒன்று .. என்றோ அதை சொன்னவளே அதை மறந்துவிட்டாள் .. ஆனால் அர்ஜுனன் அதை மறக்காமல் இதோ கொண்டு  நிறைவேற்றியே விட்டான் .. அவள் அவனை ஆச்சர்யமாய் பார்க்க, அவன் அவள் புறம் வந்து கார் கதவை திறந்து விட்டான் ...

" வாங்க இளவரசி "

"...."

" என்னடா ?""

" என்னால நடக்க முடியாது "

" அதுகென்ன என்னால முடியுமே " என்ற அர்ஜுனன் அவளின் ஆசைக்கேற்ப, அவளை தூக்கி கொண்டு வந்து  கடற்கரை மணலில் அமர்ந்தான் .. அவனது மடியில் பிள்ளை போல அவளை ஏந்தி இருந்தான் ..

" அச்சோ அஜ்ஜு  விடுங்க நான் உட்காருறேன் .. யாராச்சும் பார்த்திட போறாங்க "

" இந்த நேரத்தில் ஜிவி  பிரகாஷ் படத்துல வர்ற டார்லிங் கூட டூயட் பாடிக்கிட்டுதான் இருக்கும் "

" அதுக்காக என்னை மடியில் வெச்சு டூயட் பாடணுமா .. முதலில் என் கேள்விக்கு பதில் சொல்லுங்க " என்று சொல்லி அவனருகில் அமர்ந்துக் கொண்டாள் ...

" ஏண்டி இந்த கேள்வி கேட்குற பழக்கத்தை  விடவே மாட்டியா ?

" ஹா ஹா அதுக்கு நீங்க கொஞ்சம் தெளிவா நடந்துக்கணும் "

" சரி சரி கேள்வியை கேளு செல்லம் .. நமக்கு நிறைய வேலை இருக்கு " என்றான் கண்சிமிட்டி ...

" இந்த வைட் கலர் புடவை இப்போ நீங்க கொடுத்த பெட்டியில தானே இருந்தது ? நான்தான் உங்களுக்கு சர்ப்ரைஸ் தரணும்னு வெறும் பெட்டியை வெச்ச இடத்திலேயே வச்சுட்டேனே .. அப்பறம் எப்படி கரெக்டா வெள்ளை கலர் ஷர்ட் போட்டிங்க ? "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.