(Reading time: 46 - 92 minutes)

 

" ஹா ஹா செல்போன் எடுக்கும்போது தொட்டு பார்த்தென் .. பெட்டி டக்குனு இருந்தச்சு அப்போவே தெரியும் நீ இந்த வேலைய ந்தான் பார்த்து இருப்பன்னு "

" சூப்பர் .. காப்பி எப்படி கண்டுபிடிச்சிங்க ?"

" இந்த அர்த்த ராத்திரியில் வேற யாரு இளவரசி சுட சட காப்பி போடுவாங்க ?"

" சரி எப்படி தடுமாறாமல் நடந்து வந்திங்க ? "

" ..."

" சொல்லுங்க "

" இதுக்கு  பதில் உனக்கே தெரியும் "

" இருந்தாலும் நீங்களே சொல்லுங்க "

" அட என் செல்ல பொண்டாட்டி, நீ கண்கட்ட வச்சு இருந்தியே  ஒரு துணி , அதை கட்டுறதும் ஒண்ணுதான் கட்டாததும் ஒண்ணுதான் .. பொங்கலுக்கு உரியடிக்கிற போட்டிக்கு மட்டும் இந்த துணியை கொடுத்தோம் வெச்சுக்க, அவ்வளோதான் "

" ஹீ ஹீ அதுவா .. நீங்க கீழே விழுந்திட கூடாதேன்னுதான் அந்த மாதிரி துணி வெச்சேன் "என்று அசட்டு சிரிப்பு சிரித்தாள் சுபத்ரா .. சட்டென ,

" அப்போ எல்லாமே உங்களுக்கு சாதகமா அமைஞ்சிருச்சு போங்க " என்று முகம் திருப்பி கொண்டாள்  சுபத்ரா...

" சுபீ செல்லம் .. நானே உன்பக்கம் இருக்கும்போது, நீ ஜெயிச்சா என்ன நான் ஜெயிச்சா என்ன டா ? " என்றான் காதலுடன் ..

" அப்படியே இன்னொரு விஷயமும் கேளு சுபிம்மா .. நானும் அம்மாவும் இங்க , உன் வீட்டுலையே " என்று சொல்ல வந்தவனின் இதழை தன் வசமாக்கினாள்  சுபத்ரா ...

" வேண்டாம் அர்ஜுன் .. இனி உங்க வீடுதான் நம்ம வீடு .. அதுதன எனக்கும் வீடு .. நான் என் அத்தையோடுதான் இருப்பேன் " என்றாள்  .

" எப்படிடீ  திடீர்னு மாறிட்ட ? அத்தை உன்கிட்ட சொன்ன வார்த்தைகள் உன்னை இப்படி மாற்றிருச்சா ?”

" அப்படியே ஆமாம்னு சொல்ல முடியாது அதுவும் ஒரு காரணம் தான் .. ஆனா முழு காரணம் நம்ம கல்யாணம்தான் "

" ..."

" உங்க பக்கத்துல நான் இருந்தும், கல்யாணத்துக்கு எல்லாம் தயாராகி இருந்தும், அய்யர்  கெட்டிமேளம் சொல்லியும்  கண்ணாலேயே மாங்கல்யம் கட்டவா ன்னு  நீங்க என்கிட்ட சம்மதம் கேட்டிங்களே , அப்போவே தெரிஞ்சுகிட்டேன் அஜ்ஜு  என்னுடைய மொத்த குடும்பமும் உங்க உருவில் தான் என்னோடு இருப்பாங்கன்னு " என்றாள்  சிலிர்ப்புடன் .. அவளின் சிலிர்ப்பை உணர்ந்து தோளோடு அவளை அணைத்தான் அர்ஜுனன் ..

“ அப்போ மட்டும் இல்லை அஜ்ஜு , எப்போதுமே என்னுடைய தேவையை முன்னுறுத்தி நடக்குற உங்களுக்கு நான் பதிலாய் என்ன செய்ய போறேன் ? அதான் நீங்க எனக்கு கொடுக்குற அன்பை நான் நம்ம குடும்பத்தில் காட்டலாம்னு முடிவு பண்ணிட்டேன் .. நாம இருக்குற சூழ்நிலை சந்தோஷமானதாக இல்லைன்னா அதைதான் மாற்றி அமைக்கணும் . அதை விட்டுட்டு சந்தோசம் இருக்குற விஷயத்தை தேடி ஓட கூடாது .. நானும் என் குடும்பம்னு ஓடி போகமால் , நம்ம குடும்பத்தை பார்த்துக்க போறேன் .. அது மட்டும் இல்லை ..அத்தையும் இந்த முடிவிற்கு காரணம் .."

" அம்மாவா ? "

" ஆமா அஜ்ஜு .. எல்லாருக்குமே அவங்கவங்க வீட்டில் தான் முழு சுதந்திரம் இருக்கும் . எனக்காக நீங்களும் அத்தையும் அங்கு வந்திட்டா, அத்தையின் சுதந்திரம் பறிபோயிடும் .. அது என் மாமா வாழ்ந்த வீடு . அவரு அத்தைக்காக ஆசையாய் கட்டியவீடு .. அதை விட்டுட்டு அத்தை எப்படி வருவாங்க ? பாவம் இல்லையா அர்ஜுன் ?" என்றாள்  அவள் உண்மையான வருத்தத்துடன் .. பெருமிதமாய் சுபியை பார்த்தான் அர்ஜுன் . அவளை முதல்நாள் பார்த்த அதே குழந்தைத்தனம் அவள் முகத்தில் இருந்தது .. இருப்பினும் அவளது செயலிலும் சிந்தனையிலும் தான் எத்தனை முதிர்ச்சி .. ஓர் ஆண் திருமணத்திற்கு பிறகும் கூட அப்படியேதான் இருக்கிறான் .. ஆனால் பெண்ணுக்கு திருமணம் என்பது எத்தனை பெரிய மாற்றத்தை தருகிறது ..

" இவள் என்னவள் .. எனக்காகவே தன் வாழ்வை மாற்றிக் கொண்டவள் .. என் வாழ்வை தனது வாழ்வை கருதுபவள் .. இவளே என் கண்ணின் மணி .. " என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான் அர்ஜுன் .. விழியாலே காதல் அம்புகளை தொடுத்தான் .. அவளின் மனைவியும் அவன் தொடுத்த அம்புகளை தனது பார்வையால் பூமாலையாக மாற்றி அவனுக்கு சூட்டினாள் ... அவள் கேட்காமலே அவளுக்காக பாடினான் ..

பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில்

கடற்கரை மணலில் இருப்போமா ?

மௌனத்தின் மொழியின் மயக்கத்தின் நிலையில்

கதை கதையாக படிப்போமா ?

கதை கதையாக படிப்போமா ?

கம்பன் தமிழோ பாட்டினிலே சங்க தமிழோ மதுரையிலே

பிள்ளை தமிழோ மழலையிலே நீ பேசும் தமிழோ விழிகளிலே

நெஞ்சம் முழுதும் கவிதை எழுது  கொஞ்சும் இசையை பழகும் பொழுது

துள்ளும் இளமை பருவம் நமது தொட்டுத் தழுவும் சுகமோ புதிது

கண் பார்வையே உன் புதுப்பாடலோ

பொன் வீணையே உன் பூ மேனியோ

இப்படியாய் அவர்கள் அனைவருக்குமே வாழ்கை மிக சுவாரஸ்யமாய் காலச்சக்கரதிற்கு இணையாக வேகமாய் பயணித்தது ..

று  மாதங்களுக்கு பிறகு,  அவர்களின் வாழ்வில் என்னென்ன மாற்றங்கள்ன்னு  பார்ப்போமா ?

ஊட்டி....

" நித்தி "

" கார்த்தி ..."

" நீயும் போகணுமாடா ?"

" அச்சோ  ரெண்டு நாள்ல நீயும் அங்க வந்திடு டா ... வந்துருவ தானே ? "

" கண்டிப்பாடி மக்கு .. உன்னை அவ்ளோ தூரம் விட்டுட்டு நான் எப்படி இருப்பேன் "

" அப்போ நம்ம மியுசிக் பேண்ட் ?”

" ப்ரவீன்  பார்த்துப்பான் " என்றான் கார்த்தி .. ப்ரவீன்  அவர்களின் காலேஜ் நண்பன் தான் .. நித்யா கார்த்தி இருவரும் உருவாக்கிய " இசை மொட்டுக்கள் " என்ற இசைக் குழுவில் அவனும் முக்கியமான உறுப்பினர் .. அப்படி நித்யா எங்கதான் போறா ?? சொல்றேன் வாங்க ....

" நித்து  ரெடியா ? " என்றபடி அங்கு வந்தான் ஆகாஷ் ..

" ம்ம்ம்கும்ம்ம் பொண்டாட்டியை பார்க்க எவ்வளோ ஆர்வம் ? " என்று முணுமுணுத்தான் சிவகார்த்திகேயன் ..

" என்ன மச்சான் புலம்பல் ஜாஸ்த்தியா இருக்கு ??"

" நீ சுப்ரியை பார்க்க போற சரி .. நித்தி இப்போவே எதுக்குடா ? நானே அவளை ரெண்டு நாள் கழிச்சு கூட்டிடு வரேன் டா "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.