(Reading time: 9 - 17 minutes)

 

"வர் என் காலேஜ் சீனியர்!காலேஜ்ல அடிக்கடி இவரை பார்ப்பேன்!"

"லவ்வா?"

"ஐயோ! இல்லைங்க....

காலேஜ்ல பொண்ணுங்க எல்லாம் அப்படி தான் சொல்லி,ஒரு பிரச்சனையை உருவாக்கி,அவரை டிஸ்மிஸ் பண்ற அளவுக்கு போச்சு!"

"அடப்பாவி!!!இதைப் பற்றி மூச்சே விடலையே! தடியா...வீட்டுக்கு வாடா!

இன்னிக்கு நீ சமாதி தான்!"-என்று எண்ணிக் கொண்டாள் நிலா.

"இப்போ என்ன அவன் அதுக்காக பிரச்சனை பண்றானா?இரு...டேய்!"

"ஐயோ இல்லைங்க!"

"இல்லை...அவன் பண்ணாலும் பண்ணுவான்.நீ சும்மா இரு!டேய்...!இங்கே வாடா!"-விஷ்வா சுற்றும் முற்றும் பார்த்தான்.

"அங்கே என்னடா பார்வை?உன்னை தான் வா!"-அவன் குழப்பத்தோடு வந்தான்.

"என்னடா?இந்த பொண்ணுக்கிட்ட பிரச்சனை பண்றதுக்கு இவ பின்னாடி சுத்துறீயா?"-அவன்,நானா??என்பது போல பார்த்தான்.

"டேய்! உன்கிட்ட தான்டா கேட்கிறேன்!"-என்று அவனை பார்த்து கண்ணடித்தாள்.அவன்,ஏதோ புரிந்தவனாய்,

"ஏன்?இந்த பொண்ணு பின்னாடி சுத்தக் கூடாதுன்னு சட்டமா இருக்கு?"

"கேட்க கேள்விக்கு பதில்!"

"ஆமா...சுத்துறேன் தான்! அதுக்கு என்ன இப்போ?"-வைஷ்ணவி அதிர்ச்சியாக பார்த்தாள்.

அதற்குள் அங்கு கூடியிருந்தவர்களில் ஒருவன்,

"ஏன்டா?பொண்ணு பின்னாடி,சுத்தறது மட்டும் இல்லாம...அதை தைரியமா வேற சொல்ற?"

"பொண்ணு பின்னாடி சுத்தாம,உன் பின்னாடியா சுத்தறது?கேள்வி கேட்கணும்னா தனியா வா!!!பதில் சொல்றேன்."-கேள்விக் கேட்டவன் அமைதியானான்.

"டேய்! திமிர் பிடிச்சவனே! உனக்கு அவ்வளவு திமிரா?"

"அதான்,திமிர் பிடிச்சவன்னு சொல்லிட்ட...அப்பறம் என்ன?திமிரான்னு கேள்வி வேற?"

"கூடக்கூட வேற பேசுற?"-சண்டை முற்றுவதை கண்ட வைஷ்ணவி,

"என்னங்க ப்ளீஸ் வாங்க!"-என்று வெண்ணிலாவின் கரத்தை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றாள்.

"என்னம்மா?என்னாச்சு?"

"இல்லைங்க...என்ன இருந்தாலும்,காலேஜ் ரேகிங்ல என்னை காப்பாத்தினாரு! எனக்காக காலேஜ் விட்டே நிற்கிற அளவுக்கு போயும்..அதையும் தாங்கினாரு!"

"அப்போ உனக்கு அவனை பிடிக்குமா?"

"பிடிக்கும்...ஆனா,மற்றது எல்லாம் இல்லை!"

"ஓஹோ!சரிங்க மேடம்..."-வெண்ணிலா,விஷ்வாவின் பக்கம் திரும்பி கண்ணடித்தாள்.

"திவ்யா!"

"ஆ...என்னங்க?"

"என்னம்மா யோசிச்சிட்டு இருக்க?"

"ஒண்ணுமில்லைங்க.."

"சொல்லுடா!நீ ஏதோ மாதிரி இருக்க...சொல்லு!"-கணவனின் அன்பான கேள்விக்கு செவி சாய்த்தாள் திவ்யா.

"அவளை பார்த்தேன்!"

"யாரும்மா?"

"வெண்ணிலா!"

"..................."

"கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லைங்க...ரொம்ப சந்தோஷமா இருக்கா! நினைத்துக் கூட பார்க்கலை!ச்சே..!"

"திவ்யா! விடும்மா...அவ தான் அப்படிப்பட்டவள்.நீ ஏன் அவளுக்காக இப்படி இருக்க?"

"ப்ரியாவை கூட அவ கவனிக்கலை.அவ எல்லாம் ஒரு பொண்ணா?"

"இதோப்பாரும்மா...! அவ தகுதி அவ்வளவு தான்...நீ ஏன் கவலைப்படுற?அப்பறம்...வயிற்றில வளர்கிற என் குழந்தைக்கு தானே பாதிப்பு??"-திவ்யா வெட்கத்தோடு தலை குனிந்தாள்.

"ரோஹித் சாப்பிட்டானா?"

"சாப்பிட்டு தூங்கியாச்சு! நீங்க தான் லேட்!"

"அப்படியா?சரி...வா எனக்கு பசிக்குது,சாப்பாடு எடுத்து வை!"

"சரிங்க...இதோ வரேன்!"-கணவனின் அன்பான ஆணைக்கு இணங்கி அவனோடு சென்றாள்.

குழப்புகிறதல்லவா?வெண்ணிலா மீது இவர்கள் ஏன் வெறுப்படைய வேண்டும்??     அப்படியென்றால்...அவள், இவர்களுக்கு     பரிச்சியமானவளா??எந்த வகையில்???ஏன் இப்படி வெறுப்பை இவர்கள் உமிழ்கின்றனர்???

அப்படி என்ன நமது கதாநாயகி தவறிழைத்தாள்?

காண்போம்...

"...நிலா!"

"என்னடா?"

"எப்படி அவ கூட பேசுன?"

"யார் கூட?"

"வைஷு!"

"ஓ...வைஷு??"

"சொல்லுடி!"

"ஒண்ணே ஒன்னு தான் சொல்றதுக்கு!"

"என்ன?"

"அந்தப் பொண்ணு செட் ஆகுறது கஷ்டம்"

"என்னய்யா சொல்ற?"

"ஆமாய்யா!அந்த பொண்ணு எனக்கு தெரியும்! நீ சொன்ன மாதிரி...அந்த பொண்ணு நல்லவள், அமைதியானவள்,அடக்க ஒடுக்கமானவள் தான்!"

"பின்ன?"

"ஆனா,அவ அம்மாவோட ஸ்டூடண்ட்டு!"

"என்னது?"

"ஆமாடா! எப்படி அவளை தெரியும்னு கேட்டல்ல??இப்படி தான்...12 வது வரைக்கும்,அம்மா வெர்க் பண்ண ஸ்கூல் டாப்பர்.அம்மாவோட பிரியமான மாணவி வைஷ்ணவி!"

"ஏ...பொய் சொல்லாதேயா!"

"உன் மேல சத்தியமா விஷ்வா!"

"..............."

"உண்மையில் அவளை லவ் பண்றீயா?"

"ம்....அவளை ரொம்ப பிடிக்கும்.இப்போ,அத்தைக்கு தெரிந்தால்        கஷ்டப்படுவாங்க!"

"அப்போ நிலா இருக்கா!"

"என்னய்யா சொல்ற?"

"நான் எல்லாருக்கும் ஒரு வரம் தருவேன்.அதாவது, என்கிட்ட இருந்து எல்லாரும் ஏதாவது ஒரு விஷயத்தை சாதிக்கலாம்! உனக்கு தெரியும் தானே!"

"ம்..."

"அப்போ,நீ இதை சாதிக்கலாம்!"

"ஆனா?"

"யாமிருக்க பயமேன்?"

"நீ இருக்கறது தானே பயமே!"

"எது?"

"சும்மா...!"

"ம்...அது!"-அவளோடு பேசிப்படியே எதிர் வீட்டை கவனித்தவன் திடீரென,

"அதே கார்!"-என்றான்.

"எதே கார்?"

"நான் சொன்னேன்ல, ஒருத்தன் கார் மேல மோதினேன்னு அதே கார் தான் நிலா இதோ!"

"இதை கவனி,இந்த கவனத்தை உன் வேலையிலோ,வைஷ்ணவி மேலேயோ காட்டி இருந்தா?உருப்பட்டிருப்ப..."

"சரி...சரி...விடு!"-வெண்ணிலா அந்த வீட்டை பார்த்தாள்.மனம் இறுக்கமானதை போன்ற உணர்வு!!காரணம் அறியவில்லை அவள் மனம்...

காரணம்...

அறியப்பட தான் முடியுமா??

கனவுகளில் சகலத்தையும் அடக்கும் மனமாயிற்றே...

அடங்குமா            கன்னிகையிடத்தில்?????

அடங்க மறுத்தது...

மனித மனதில் ஆழமாய் பதியும் ஒன்றில் காதலும்,வஞ்சமும் மிக முக்கியமான ஒன்றாகும்.

அதாவது,காதல் கொண்ட மனம் தன் துணையை எவ்வாறு மறக்க முடியாமல் துடிக்கிறதோ??

அதைப் போல...வஞ்சம் கொண்ட மனம் தன் பகையை பழிக்க,பழி வாங்க துடிக்கும்...

அப்படி இருக்க??

ஒரு காதலிப்பதும், வஞ்சிப்பதும் ஒன்றோடு ஒன்று வேறுப்பட்டதா?அல்லது...ஒன்றானதா??

மனதில் அன்பு என்ற உணர்வு..

கூடும் பொழுதினில்...

காதலானது வெற்றி பெறுகிறது.

அதே அன்பு தன் நிலை மறக்கும் பொழுதினில்...

அதை வஞ்சமாய் உருவெடுக்கிறது.தன் நெருக்கமானவர் மீது,குறையும் அன்பே,நமது மனம் வஞ்சம் என வேஷம் என திரிக்கிறது...அப்படி இருக்க...மனதின் பேச்சையும் நாம் பல நேரத்தில் மீற நேர்கிறது அல்லவா??

எனில்...

அன்பு,வஞ்சம் இவை வேறுப்பட்டவையா??ஒன்றானவையா???

சிந்திந்து பாருங்கள்...

விடை உங்களுக்கே ஒளியாய் வெளிப்படும்.

தொடரும்

Episode # 03

Episode # 05

{kunena_discuss:821}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.