(Reading time: 12 - 24 minutes)

 

"ன்ன பண்றீங்க நீங்க?விடுங்க..."-திணறினாள்.

"என்ன நீ?ஊர்ல இருக்கிற எல்லா பொண்ணையும் பின்னாடி சுற்ற விட்டவன்,உன் பின்னாடி சுத்துறேன்.கவனிக்காம போற?"

"நீங்க பேசுறது சரியில்லை.கையை விடுங்க!"

"வெளிப்படையாகவே சொல்றேன்.நீ எனக்கு வேணும்...அன்னிக்கு முதல் முதலில் உன்னை பார்த்த போதே...ப்பா!சொல்ல தெரியலைடி!"

"சொல்லி தான் பாரேன்!"-அசோக் அங்கே வந்தான்.

"அண்ணா!இவர்...."-பேச முடியாமல்,அழுதாள்.

"கையை எடுடா!"

"அசோக்."

"கையை எடு!"

"நீ யார்கிட்ட பேசுறன்னு தெரியுதா?"

"கையை எடுக்கலைன்னா,கையை வெட்டிவிடுவேன்!"-என்றான் அருகிலிருந்த அரிவாளை சுட்டியப்படி...

வினய் கையை எடுத்தான்...

கல்பனா,அசோக்கின் பின்னால்,தஞ்சமடைந்தாள்.

"நீ போம்மா!"

"அண்ணா!"

"போ!"-கல்பனா பதற்றத்தோடு    சென்றுவிட்டாள்.

"இதோப்பார்! உனக்கு கடைசி மரியாதை... மறுபடியும் இப்படி பண்ணா...!சாகடிச்சிடுவேன்!"-எச்சரித்து விட்டு போய் விட்டான் அசோக்.

அடிப்பட்ட பாம்பானது,பழி வாங்க துடிக்கும் அல்லவா??

துடித்தது....

சரியான சந்தர்பத்தை எதிர்நோக்கியது.

அதற்கு உதவியாய் பரமேஸ்வரியை நாடியது.

அவர்,அதற்கான சந்தர்பத்தை உருவாக்கினார்.

ர் திருவிழாவில்...

"ஊர் திருவிழாக்கு ஷைரந்தரி வர முடியாதுன்னு  சொல்லிட்டாளாம்!"

"ஏன் தாத்தா?"

"எதோ பரீட்சையாம்! அதுவும்,இல்லாம...டிக்கெட் கிடைக்கறது கஷ்டமாம்!"

"அப்போ,இந்த வருஷம் அம்மனை கல்பனா மேல இறக்கிடலாம்!"-கூறியப்படி உள்ளே நுழைந்தார் பரமேஸ்வரி.

"என்னங்க சொல்றீங்க?நம்ம அம்மன் என்ன சாதரணமானவளா? அவளை வலுக்கட்டாயமா யார் மேலையும் இறக்க முடியாதே!"

"கல்பனா,பரிசுத்தமானவள் தானே!!!அப்பறம் என்ன?"

"இதோ பாருங்க...நீங்க பேசுறது சரியில்லை!"

"இல்லைங்க...நான் தவறா பேசலை,அம்மனை வரவழைக்கிறோம்னு,வாக்கு தந்திட்டு அதை நடத்தாம போனா,பெரிய அழிவு வருமே!"

"................."

"ஊருக்கு கெடுதல் வரணும்னா,உங்க இஷ்டம்!நான் கிளம்புறேன்!"-நெருப்பை கொளுத்திவிட்டு போய்விட்டார்....

"துக்கு அப்பறம், திருவிழாவும் வந்தது!"

"என்ன நடந்தது?"

"அந்த பாவிங்க..."-பேச்சில்லாமல் திணறினான் அசோக்.

"கோவில்ல இருக்கிற அம்மனை மந்திரசக்தியால கட்டி போடணும்!"

"என்ன சொல்ற பாட்டி?அது...முடியுமா?"

"அகிலத்தையே அடக்கி ஆளுக்கின்ற,அந்த ஆதிசக்திக்கும் துர்நேரம் வரும்! கணக்குப்படி,நாளை இரவு பன்னிரண்டு மணிக்கு  அந்த நேரம் ஆரம்பித்து, இரண்டு மணி நேரம் நீடிக்கும்."-இவற்றை கூறியது,முன்      அத்தியாயங்களில் வந்த அந்த அகோரி.

"நிஜமாகவா?"

"ஆம்....நாளை அந்த அம்மனை அந்த ராகுகால நேரத்துள் நான் கட்டுப்படுத்தினால்...

மீண்டும் நான் விடுவிக்கும் போது மட்டுமே அவளால் விடுப்பட முடியும்!"-கூறிவிட்டு பலமாக சிரித்தான்.

"நாளை முதல் பாஞ்சாலபுரம் நமது காலடியில்!"

அந்த ராகுகால நேரமும் வந்தது...

ஊரே திருவிழாக் கோலம் பூண்டிருக்க..

உலகையே அரசாளுபவளை

அடக்க ஏற்பாடுகள் நடந்தன...

வேத மந்திர கோஷங்கள்,ஒரு பக்கம் ஒலிக்க,

அதர்வண மந்திர கோஷங்கள் மறு பக்கம் ஒலித்தப்படி இருந்தது.

பன்னிரண்டை தாண்டியது காலம்.

இனி,அமங்கல ஆத்மாவிற்கு கொண்டாட்டமே!!!

தைரியமாக கோவிலில் பிரவேசித்தான் அந்த அகோரி!!!!

ராகுகால நேரத்தில் ஏற்படும் அனைத்தும் துர் நிகழ்வுகளும் நடந்தேறியது.

கோரமான பல மந்திரங்களை படித்தவன், பெரும் வேள்வியை எழுப்பினான்.

வௌவால்களும், கோட்டான்களும்  அதை சூழ தொடங்கின.

பவித்ரத்தீயும்,தீயசக்திக்கு அடங்கி தான் போனது.

மிகுந்த நேரம் கழிந்து...

அந்த அக்னி,ஒரு மந்திர கயிற்றை ஈன்றெடுத்தது.

அதைப் பற்றியவன்,மீண்டும் மந்திரங்களை கூறி,அதை முடித்தான்.அம்மனை சுற்றி இருந்த தீபங்கள் அணைய,வௌவால்கள் அவளை சூழ்ந்தன.

வானின் மழையும் உஷ்ணமாய் பெய்தது.

நான்முகி,நாயகி,பார்வதி, பைரவி,பர்வத புத்திரி கட்டுப்பட்டு அடங்கினாள்....

அப்போது ஷைரந்தரியின் நிலை எப்படி இருந்திருக்கும்???(இது அசோக் கூறியதல்ல...)

கண்களில் இருள் சூழ...

மூச்சுக் கூட விட முடியாதப்படி திணறினாள் ஷைரந்தரி..

தலை கனத்தது...கூற முடியா வலி உடலெங்கும் ஊடுருவியது...

கண்கள் கலங்கின...

மண்டியிட்டு அமர்ந்தாள் அக்கன்னிகை...

எதிரில்...தீப ஒளி அணைந்து கரும் புகை வெளியானது...

"கட்டுப்பட்டு அடங்கினாள்!"-என்றான் கோரி.

"இந்த கயிறை அம்மனை சுற்றி கட்டி மேலே மலர்களை வைத்து மூடுங்க..."-மற்றும் ஒரு கயிரை தந்து இதை அவள் காலடியில் புதையுங்கள்...இனி,இவள் கற்சிலை தான்!"-அவ்வாறே நடந்தேறியது....

றுநாள் காலை....

கல்பனா கோவிலின் உள்ளே பிரவேசித்தாள்...

பாவம்...நடக்க இருக்கும் விபரீதத்தை அறியாமல்...

மனதில் பயமும்,கர்வமும் சூழ்ந்திருந்தன....

"ஐயா..!!பொண்ணை கூட்டிட்டு வாங்க!"-மனதில் எழுந்த மகிழ்ச்சி தன் பேத்தியின் மீது பாஞ்சாலபுரத்தின் தேவி இறங்க இருக்கிறாள்....

"கல்பனா...வாம்மா!"

-பூஜைகள் தொடங்கின...

மந்திரங்கள் ஒலித்தன...

மஞ்சள் நீரால் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது...

கல்பானாவிற்கும் அப்படியே!!!

முகத்தில் மஞ்சள் பூசப்பட்டது...

நெற்றியில் குங்குமம் நிறைந்தது...

கல்பனாவின் உடல் சிலிர்த்தது...

ஆனால்,எந்த பலனும் இருக்கவில்லை...

மஞ்சள் பொடி அவள் மீது தூவப்பட, அவள் துடித்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.