(Reading time: 12 - 24 minutes)

 

னால்,பலனில்லை...

மந்திர கோஷம் உச்சநிலையை அடைந்தும் பலனில்லை...

கல்பனா துவண்டு போனாள்.

அங்கிருந்து ஓர் குரல்...

"அம்மா! இறங்க மறுக்கிறாளே! பொண்ணு எதாவது தப்பு  பண்ணியிருக்காளா??"-கேள்வி பறந்து வந்தது.ஈஸ்வரிக்கு இது சாதகமாகவே அமைந்தது.

"யாருக்கு தெரியும்?இந்த காலத்து பசங்களை நம்பவே முடியறது இல்லை."-கூடி இருந்தவர்களுக்கு குழப்பமாய் போனது.

மற்றவர்களின் விஷமமான பேச்சு,காதில் இரும்பை உருக்கி ஊற்றின....

எவ்வளவு முயன்றும் பலனில்லை,கல்பனா மயங்கி விழுந்தாள்....

பூஜை பலன் அற்றன...

திருவிழா நின்றது.

கண்களில் கண்ணீர் கசிய அமர்ந்திருந்தாள் கல்பனா.

யுதீஷ்ட்ரன் அவளிடத்தில் வந்தமர்ந்தான்.

"கல்பனா!"

"நான் எந்த தப்பும் பண்ணலைண்ணா!!

நடந்த விஷயத்துல நான்..."

"டேய்! செல்லம்...! விடுடா!எனக்கு தெரியும் என் கல்பனா பரிசுத்தமானவள். கண்டவன் அப்படி தான் சொல்வான்...விடும்மா! இனி,எவனாவது வாயை திறக்கட்டுமே! நான் பார்த்துக்கிறேன்."

அந்நேரம் அசோக் வர,

"அசோக்! கல்பனாவை கொஞ்ச நாள் நம்ம பண்ணை வீட்டிற்கு கூட்டிட்டு போ!"

"ஏன்?"

"அவ கொஞ்ச நாள் அங்கே இருக்கட்டும்.எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு!

இல்லைன்னா...நானும் வருவேன்!"

"சரிடா...!"-கல்பனாவின் மனம் மாற,அவளை அழைத்துச் சென்றான் அசோக்.

ரண்டு நாட்கள் நன்றாக சென்றன...

ஆனால்,

அன்று......

"ஏ...கல்பாக்கம் சாப்பிடலையா?"

"..............."

"ஓய்..!என்ன பேச மாட்ற?"

"ஒண்ணுமில்லைண்ணா!"

"இது மாதிரி இருக்காதே! அப்படி என்ன ஆயிடுச்சு??

நம்ம ஊர் அம்மனுக்கு,உன் மேல இறங்க கொடுத்து வைக்கலை!"

"போங்கண்ணா!"

"ஏ...நிஜமாகடி!"-திடீரென ஏதோ அரவம் கேட்க திரும்பினான்.யாருமில்லை...

"கல்பனா...! நீ ரூம்க்கு போ!"

"என்னாச்சுண்ணா?"

"போ!"-அவள் உள்ளே செல்ல திரும்பி இரண்டடி எடுத்து வைத்தப் போது,பலமான ஒரு பொருள் அவள் தலையில் தாக்கியது.

"கல்பனா!"-என்று அசோக் சுதாரிப்பதற்குள்...அவன் தலையில் அடி விழுந்தது.

தூணின் மறைவில் இருந்து வெளியே வந்தான் வினய்...

அசோக்கிடம் சென்று,

"என்னமோ பெரிசா சவால் விட்ட??உன் தங்கச்சியை தொட முடியாதுன்னு!!ஆ...

இப்போ,இந்த நிமிஷம் உன் கண் முன்னே அவளை எனக்கு சொந்தமாக்கி காட்டுறேன் பார்க்கிறீயா?"-அசோக் தனது சுய நினைவை இழந்தப்படி நின்றான்...

பின்,வினய்,கல்பனாவிடம்...

"அன்னிக்கு உன் அண்ணனை துணைக்கு கூட்டிட்டு வந்த???இன்னிக்கு,அவன் கண் முன்னாடியே உன் வாழ்க்கை சர்வ நாசமாக போகுது பார்!"-அவளை நெருங்கினான்.கல்பனா,

"அம்மா!"-என்று அலறினாள்.

"அம்மாவா?ஓ..நீ அந்த அம்மனை தாயா ஏற்றவள் தானே!ஏ..இவளை,அந்த கோவிலுக்கு இழுத்துட்டு வாங்கடா! எந்த அம்மன் என்னை தடுக்கிறான்னு பார்க்கலாம்!"-கல்பனாவின் கரத்தினை பற்றி இழுத்து சென்றனர் இருவர். அசோக்கை இழுத்து சென்றனர் இருவர்.

கோவில் வாயிலில் நிலை தடுமாறி விழுந்தவளை,தலைமுடியை பிடித்து இழுத்து சென்றான் வினய்.

காளிகா தேவியின் முன்னே அவளை விடுவிடுத்தான்.

"கூப்பிடு! கூப்பிடுடி! எந்த அம்மன் உன்னை காப்பாற்ற வருவான்னு பார்க்கலாம்...!"

"அம்மா!"-கண் முன் விரிந்த காட்சியை கண்டு அந்த காளியே இரத்த கண்ணீர் வடித்தாள்.

"கல்பனா!"-அலறினான் அசோக்.

"ன் கண் முன்னாடியே,அந்த பாவி...என் தங்கச்சி வாழ்க்கையை நாசம் பண்ணான்!!!அவ கதறினா,கெஞ்சினா.....

கடைசியில இந்த உலகத்தை விட்டே போயிட்டா!"-சிவா,கண்கள் கண்ணீரை வடித்தன.

தாங்க முடியாத வலிக்கு ஆளானான்.

"அப்பறம்...நான் மயக்கமானேன்.எங்களை பண்ணை வீட்டில கொண்டு வந்து விட்டு,என் தங்கச்சி வாழ்க்கையை நானே சீரழிச்சேன்னு சொல்லி! எங்க வீட்டில வேலை செய்தவங்களை அதுக்கு சாட்சி சொல்ல வைத்து!!!"-பேச்சு வராமல் திணறினான் அசோக்.

சிவா,ஆறுதலாய் அவன் தோள் மீது கை வைத்தான்.

"என் குடும்பம் கூட என்னை நம்பலை...நான் சொல்ல வருகிறதை யாரும் ஏற்று கொள்ளவில்லை....என் தங்கச்சி பவித்ரமானவள்...

அவ,எந்த கலங்கமும் இல்லாதவள்...கல்பனாக்கு அப்பறம் ஷைரந்தரி என்னை நம்பினாள்.எனக்கு அவக்கிட்ட கல்பனா தான் தெரிந்தாள்.அவளுக்கு, எதுவும் ஆக கூடாது!! நடந்த உண்மை இதான்!"-அனைத்தையும் கூறி முடித்தான் அசோக்....

அன்று ஷைரந்தரி வந்திருந்தால்...இதெல்லாம் நிகழ்ந்திருக்காது...

அவள் பெயர் கூறி நடத்தப்பட்ட நாடகம் என்பதால்,பழி அவளை சார்ந்தது...

நடந்தவற்றை கேட்டு கொண்டவை சிவாவின் செவிகள் மட்டுமல்ல...

யுதீஷ்ட்ரனின் செவிகளும் தான்!!!

சிவாவை அழைக்க வந்தவன்,

அசோக் கூறியவற்றை கேட்டு கண் கலங்கி நின்றான்...

"கவலைப்படாதே அசோக்! கல்பனாக்கு நியாயம் கிடைக்கும்...

உன் மேல எந்த தப்பும் இல்லைன்னு தெரிய வரும்!"- ஆறுதல் அளித்தான் சிவா.

யுதீஷ் மௌனமாய் கீழே இறங்கி வந்தான்.

சோபாவின் மீது அமர்ந்திருந்த,தன் தாயின் மடி மீது அமைதியாக படுத்தான்.

"என்னடா கண்ணா?என்னாச்சு?"

"ஒண்ணுமில்லைம்மா! ஒரு மாதிரியா இருக்கு!"

"கண்ட நேரத்துல ஊர் சுற்றாதேன்னா கேட்கிறீயா?பார்...ஜலதோஷம் பிடிச்சிருக்கும்!"

"..............."

"அம்மா??"

"என்னடா?"

"ஒண்ணுமில்லைம்மா!"-பேச்சு வரவில்லை அவனுக்கு.

உடன் பிறந்த தமையனை, நம்பாமல்,அவனை இத்தனை நாளாய் வெறுத்தோமே!!!

செய்யாத தவறுக்கு தண்டனை ஏற்றானே அவன்.

உத்தமனை         அவமானப்படுத்தினேனே??

இந்த பாவத்தை எங்கு துடைக்க போகிறேன்.

பல போராட்டங்கள் யுதீஷ்ட்ரனின் மனதில்!!!!

வாழ்வில் பல்வேறு நிலைகளில் நாமும் இதே போல தான்.

உண்மையானது,கண் முன்னே விரிந்திருந்தாலும், நம் மனமோ சல்லாபம் தரும் மாயை தன்னை நம்புகிறது.

சினம்,அகக்கண்ணை மறைத்து நம் அறிவை மழுங்க செய்யும் போது...

நாம் மாயையை,மெய் என நம்புகிறோம்..

தொடரும்

Go to Episode # 12

Go to Episode # 14

{kunena_discuss:751}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.