(Reading time: 19 - 38 minutes)

ஹா ஹா .. நம்ம வீட்டுலையே அவருக்கு பிறகு எனக்கு ரொம்ப ஸ்பெஷல் சந்தோஷ் தான் அத்தை .. பேரில் இருக்குற சந்தோஷத்தை எல்லாரு முகத்திலும் கொண்டுவர்ற கேரக்டர் ... சந்தோஷ் எப்பவும் சந்தோஷமா இருக்கணும் "

" ஹ்ம்ம் உன்னை மாதிரி அவனுக்கும் நல்ல பொண்ணா  அமைஞ்சிட்டா எனக்கு நிம்மதி சைந்தும்மா "

அதற்குள் அவர் அருகில் வந்தவன் " அதானே ரெண்டு பொண்ணு ஒன்னு சேர்ந்தா, எப்படியும் பையனின் சந்தோஷத்தை கெடுக்குறதை பத்தி தானே பேசுவிங்க ? " என்றான் விளையாட்டாய் ..

" சும்மா சொல்லனும்னு சொல்லாதடா சந்து .. ஏன் உங்கண்ணியை  கல்யாணம் பண்ணிகிட்டு நான் சந்தோஷமா இல்லையா " என்றான் சுபாஷ் காதலுடன் மனைவியை பார்த்துக் கொண்டே .. சந்தோஷோ

" டேய் அண்ணா, அது என்னுடைய காபி கப் ... இங்க கொடு " என்று அவனிடம் இருந்து பிடுங்கினான் சந்தோஷ் ..

" என்ன பழக்கம் இது சந்தோஷ் .. இந்நேரம் அவன் ஷர்ட் எல்லாம் பாழாகி இருக்கும் .. அறிவு இருக்கா டா உனக்கு "

" விடுங்கம்மா .. அவனை பத்திதான் உங்களுக்கு தெரியும்ல .. அவனுடைய பொருளை அவன் எப்பவும் ஷேர்  பண்ணிக்க மாட்டான்னு "

" எல்லாத்துலயும் நம்பர்1 ஆ இருக்குற உன் தம்பி இதுல மட்டும் ஏண்டா பிடிவாதமா இருக்கான் ?" என்று கேட்டவரின் குரலும் உள்ளே போயிருந்தது .. ரகுராமன் அவரை சமாதனம் படுத்தும் முன்னே சந்தோஷ்

" அம்மா, நல்லா யோசிச்சு பாருங்க ..நான் என்ன கண்மூடித்தனமாகவா பிடிவாதம் பிடிக்கிறேன் ? எது எனக்குன்னு முடிவாகுதோ அது எப்பவும் எனக்குன்னு நினைக்கிறதுல என்ன தப்பு ? நான் என்னதான் பிடிவாதமா இருந்தாலும் எனக்கு புடிச்ச பொருளை நான் பத்திரமா தானே வச்சுக்குறேன் ? இதுனால யாருக்கு என்ன பிரச்சனை  வர போகுது ?"

" அதில்லை சந்தோஷ் .. நீ இன்னமும் சின்ன பையன்தான் .. இந்த குணத்தை நீ எல்லா விஷயத்துலயும் காட்டினா அது உன் சந்தோஷத்தை பாதிக்க வாய்ப்பு இருக்கு கண்ணா "

தாய், மகன் இருவரின் பேச்சையும் கேட்டுக் கொண்டிருந்த ரகுராமன் இதற்கொரு முற்றுபுள்ளி வைக்க எண்ணினார் ..

" சரி சரி அதெல்லாம் அவன் பார்த்து நடந்துப்பான் .. ஜானும்மா பசிக்கிதுடா.. உன் பிறந்த நாள் அதுவுமா என்னை இப்படி பட்டினி போடலாமா ? "என்று சோகமாய் கேட்டார் ..

அதற்கு பலனாய் " என்னங்க நீங்க ? முதலிலே சொல்றது இல்லையா ? வாங்க சாப்டலாம் .. சைந்தவி, சுபாஷ் சீக்கிரம் வாங்க .. சந்தோஷ்  இந்த வேஷத்தை கலைச்சிட்டு சீக்கிரம் ப்ரெஷ் ஆகிட்டு வா " என்று அனைவரையும் அவசரபடுத்திக் கொண்டே சமையலறை சென்றார்.

" தேங்க்ஸ் அப்பா " என்று ரகுராமனின் கன்னத்தில் முத்தம் பதித்துவிட்டு ஓடினான் சந்தோஷ் ..

சோ சந்தோஷ் தான் ஹீரோ ... தனக்கு  சொந்தமானது மேல அதிக உரிமை காட்டுற இவனது குணம் நம்ம சாஹித்யாவையும் அவளது நட்பையும் ஆட்டிப் படைக்குமா ? பொறுத்திருந்து பார்ப்போம்!

அன்றிரவு,

காலையில் இருந்த கலகலப்பிற்கு எதிர்மாறாய் கலவரமாய் இருந்தது அர்ஜுனின் வீடு. கோபத்தில் இரண்டிரண்டு படிகளாக மாடி ஏறி சென்ற சாஹித்யா, தனது அறை  கதவை வேகமாய் சாத்திய சத்தம் கீழே இருந்தவர்களின் காதில் கணீர்  என்று ஒலித்தது .. எப்போதும் இவள் இப்படி செய்தால் அருள் தான் முதல் ஆளாய் மேலே சென்று அவளை கண்டிப்பான் .. ஆனால் இன்று அவனே அதே அளவு கோபத்தில் இருக்க, ஏதும் சொல்லாமல் நால்வரையும் முறைத்தான் .. அடிக்குரலில்

" நான் சத்யாவை மீறி இந்த ஒரு விஷயத்தில் மட்டும்தான் உங்களுக்கு சப்போர்ட் பண்ணுறேன் ..அதுவும் அவ நல்லதுக்காகத்தான் .. ஆனா நீங்க என்னடான்னா அவ மனசு கஷ்டப்படுற மாதிரி வார்த்தைய விடுறிங்க ? அவளை பத்தி நல்லா தெரியும்தானே ? அவள் மத்தவங்களை மன்னிகிறதே பெரிய விஷயம் .. அவளா மனசு இறங்கி மன்னிப்பு தந்தாதான் உண்டு .. இதுல நீங்க வேற அவளால மறக்க முடியாத மாதிரி வார்த்தைய கொட்டுறிங்களே ? மூணாவது மனுஷங்க இப்படி சொல்லிருந்தா கூட அவ சும்மா இருந்திருப்பா .. பெத்தவங்க நீங்க இப்படி சொல்லலாமா ? " என்றவன் அவர்களின் முகத்தை ஏறிட்டான் .. வேதனையில் இருந்தனர்  நால்வரும் . இதற்குமேல் அவனுக்கும் கோபத்தை காட்ட விருப்பம் இல்லைதான் .. இறுதியாய் உறுதியான குரலில் " நான் எப்படியாவது பேசி அவளை சமாதனம் பண்ணுறேன் .. ஆனா இப்படி பேசுறது இதுவே கடைசியா இருக்கட்டும் " என்று அவர்களை எச்சரித்துவிட்டு அவளது அறையை நோக்கி ஓடினான் அருள்மொழிவர்மன் .. (அப்படி என்னத்தான் நடந்துச்சு ? சில நிமிடங்களுக்கு முன்பு ..... அப்படியே எல்லாரும் மேல பாருங்க )

அருளும் சத்யாவும் எப்போதும் போல கோவிலுக்கு சென்றுவிட்டு, கடற்கரையில் சிறிதுநேரம் நடந்துவிட்டு வீடு திரும்பினர் . இரவு மணி ஏழை தாண்டி விட்டதால் பணியாட்கள் அனைவரும் வீடு திரும்பிவிட்டனர் ..

" கேட் சாத்தி இருக்கே சத்யா ?"

" மணி அண்ணா வீட்டுக்கு போயிருப்பார் அருள் .. சரி இரு .. சின்ன கேட் திறந்திருக்கும் .,.. நான் உள்ள போயி மெயின் கேட் திறக்குறேன் " என்று காரிலிருந்து இறங்கினாள்  சாஹித்யா .. இரண்டடி எடுத்து உள்ளே வந்தவளுக்கு வழக்கமான குறும்புத்தனம் எட்டிப் பார்க்க" என்ன நாம இன்னைக்கு ரொம்ப நல்ல பொண்ணா  இருக்கோம் ? அப்பறம் இது நம்ம சத்யா தானான்னு அருள்கு சந்தேகம் வந்திடுமே ....அவனே வந்து கேட்டை திறந்துகிட்டும் " என்று சிரித்துக் கொண்டே வீட்டினுள் சென்று விட்டாள் .. துள்ளி குதித்து அங்கு வந்தவளை  வரவேற்றது அவர்களின் திருமண பேச்சுதான் ..

" அருள் கூட சரி சொல்லிடுவான் ஆனா சத்யா ?"என்று கவலையாய் சொன்னார் சுமித்ரா ..

" அதுக்காக சும்மா இருக்க முடியுமா சுமி ? இப்போவே நம்ம பொண்ணுக்கு வயசு 22 ஆகபோகுது .. அவ பிரண்ட்ஸ் எல்லாரும் ஒவ்வொருத்தரா கல்யாணம் பண்ணிட்டு இருக்காங்க தானே ? " - சுஜாதா

" அதுக்காக எல்லாம் நான் கல்யாணம் பண்ணிக்க முடியுமா சுஜிம்மா ? ஓஹோ இதுக்காகத்தான் நீங்க எல்லாரும் கோவிலுக்கு வரலன்னு சொன்னிங்களா ?" - என்றாள்  சாஹித்ய முகம் சிவக்க ..

" சத்யா குட்டி .. நீ எப்போ ??"

" நீங்க ஒன்னும் என்னை கொஞ்ச வேணாம் அப்பா .. எதுக்காக இந்த முடிவு ? ரவியப்பா நீங்க கூட இவங்க கூட கூட்டு சேர்ந்துட்டிங்க  இல்ல ? "

" அப்படி இல்லை குட்டிமா .. கல்யாணம் பண்ணிகிறதுல  உனக்கென கஷ்டம் டா ? "

" என்ன கஷ்டம்ன்னா  எல்லாமே கஷ்டம்தான் .. இன்னொரு தடவை இந்த பேச்சை எடுக்காதிங்க "

" எடுத்தா  என்னடி பண்ணுவ ? "

" சுமி நீ சும்மா இரும்மா " - அர்ஜுன்

" நீங்க முதலில் அவளுக்கு செல்லம் கொடுக்குறதை நிறுத்துங்க .. பெத்த பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்க நாம யாரை கேட்கணும் .." என்று அவரும் கோபத்தில் குரல் உயர்த்த, அன்னை மகள் இருவருக்கும் வாக்கு வாதம்  நீண்டது .. சத்யாவிற்காக காத்திருந்தவன், தானாகவே கதவு திறந்து உள்ளே நுழையும் நேரம், செல்போன் ஒலிக்க , அதை பேசிவிட்டு வீட்டினுள் நுழைந்தான் .. சரியாய் அதே நேரம் சுமித்திராவும்

ஆமாடி ...நீயும் சந்தோஷமா இருக்காத, அருளையும் சந்தோஷமா இருக்க விடாதே .. உன்னால அவனும் ஒண்டி கட்டையாவே இருக்கட்டும் .. எங்களுக்கும் வயசாகும் .. நாங்க போயி சேர்ந்திடுவோம் .. உன்னை அவன் பார்த்துப்பான் .. ஆனா அவனுக்குன்னு யாரும் இல்லாமல் தனியா நிற்பான் ..அதை நீயே பார்த்து ரசி ...அவன் லைப் உன்னாலதான் மாற போகுது " என்று கோபத்தில் வார்த்தையை விட்டார் .. வீட்டில் திருமண பேச்சு சில நாட்களாக அடிப்படுவது அருளுக்கும் தெரியும் .. முதலில் ஆட்செபித்தவன் சத்யாவின் எதிர்காலத்திற்காக சம்மதித்தான் .. ஆனால், அதில் இவளுக்கு இவ்வளவு பெரிய மாற்று கருத்து இருக்கும் என்றும், சுமித்திரா இப்படி பேசுவாள் என்றும் அவன் எதிர்பார்க்கவே இல்லை .. அவன் மட்டுமென்ன, மற்ற நால்வருமே கூட எதிர்பார்க்கவில்லைதான் ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.