(Reading time: 23 - 45 minutes)

 

'டேவிட் போதும்.. பேசுங்கனு சொல்லிட்டு நாம இங்கேயே இருக்கக்கூடாது. வா போகலாம்.. குழலீ உனக்கும் வேலை இருக்கல... எழுந்து போ... எல்லாம் சரியாகிடும்... எவ்வளோ பார்த்துட்டோம் இத பார்க்க மாட்டோமா?. ஆனா ஒன்னு வெற்றி நீ இவளை கல்யாணம் பண்ண சம்மதம் சொல்லிருந்தனா lifelong பலியாடு தான். உன் புண்ணியம் இவளே வேண்டாம்னு சொல்லிட்டா.. தப்பிச்சடா சாமி. ஆனா எந்த ஆடு சிக்கப்போகுதோ... பாவம்டா அந்த பையன்!'- டீனா

சூழ்நிலையை இலகுவாக்க முயன்றதன் பயன் குழலீயின் முகத்தில் சிறியதாக ஒரு புன்னகை மலர்ந்தது. சிரித்துக்கொண்டே.. 'ஆமாம் ஆமாம் கண்டிப்பா தப்பிச்சடா வெற்றி.. இவ்வளவு தயக்கம், பயம் எல்லாம் நமக்கு ஆகாதுடா.. கவிஞனா இருந்தா மட்டும் போதாது டியர்... எதுவாக இருந்தாலும் ஓபனா பேசறது நல்லது.. மனசுல வை.' எழுந்து தன் அறை நோக்கி கைபேசியில் அருள்மொழியை அழைத்தவாறே சென்றாள்.

ஏதோ அதிசயத்தை பார்ப்பதுபோல் வைத்தக்கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் பிரபு! என்ன பெண் இவள் இரண்டு மணி நேரத்தில் எவ்வளவு உணர்ச்சிகள் எவ்வளவு குழப்பங்கள், எவ்வளவு ஏற்ற இறக்கங்கள்! அத்துனணயும் சமாளித்து இதோ இப்போது போறாளே?! என்ன பிறவி இவள்?? ஏமோஷன்சை கொஞ்சமா வெளியில் காட்டி நிறைய மனசுக்குள் போட்டு புதைத்துவிடுகிறாளே! (இவ்வளவு பேச்சு பேசினா ஆனா கொஞ்சமா ஏமோஷன் காட்டுறாளா??) ஆமா.. கொஞ்சமா தான் காட்டுறா!!!.இவளுக்கு எப்படி இத்துணை முதிர்ச்சி!!

ருள்மொழியிடம் பேசிவிட்டு நேரே டீனாவை தேடி சென்றாள். கொஞ்சம் தலைவலிப்பதுப் போல் இருந்தது... நன்றாக முகம் கழுவிட்டு துடைத்து பொட்டிட்டு பின்னலை தளர்த்திப்பின்னிக்கொண்டு வெளியில் வந்தாள். புடவையை மாற்றும் எண்ணமே இல்லாமல். மனதை ஏதோ நெருடிக்கொண்டிருந்தது. வருவது வரட்டும் அப்போ பார்த்துக்கொள்ளலாம் என்று டீனாவை தேடினாள். அவளை காணவில்லை. நேராக சமையலறைக்கு சென்றாள். மணி ஏழு என்றது கடிகாரம்.

‘காப்பியா? இல்ல டீயா?? சரி டீ போடுவோம்’. மற்றவர்களும் எதுவும் குடிக்கவில்லையே என்று அவர்களுக்கு காப்பி மிஷினை ஆன் செய்து காப்பி தயாரித்தாள். தனக்கென்று பாலையும் தண்ணீரையும் ஒன்றாக கலந்து டீ தயாரிக்க போனாள். ஏதோ நினைவு வந்தவளாக இன்னும் ஒரு கப் வருமாறு மாற்றினாள். ஒருபுறம் இதை செய்துக்கொண்டே மறுபுறம் சுடாக வெங்காயம் மற்றும் தக்காளியில் (!!!) பஜ்ஜி தயாரித்தாள். அதற்குள் டீனா இவளை தேடி வந்தாள். ஒருபுறம் தட்டில் பஜ்ஜியை எடுத்து வைத்துவிட்டு எல்லோருக்கும் கப்பில் காப்பியை ஊற்றினாள்.

என்ன டீ பண்ணற... ஹய் சூப்பர்டா... கம கம காப்பி... ம்ம்... சூடா பஜ்ஜி.... தேங்கஸ் டீ... இது உனக்காக செல்லம்...' என்று குழலீயை இறுக இணைத்துக்கொண்டு கன்னத்தில் இதழ்களை பதித்தாள்.

ஏய்… இதேல்லாம் டேவிட் அண்ணாகிட்ட வெச்சிக்கோ என்ன?

கேட்டுக்கொண்டே மறுகன்னத்திலும் அதையே செய்தாள்.

அண்ணா காப்பாதுங்க ப்ளீஸ்... அச்சோ அண்ணா....டேவிட் னா.... ஏய் விடு டீ.. அருள்மொழி பார்த்தான் நான் தீர்ந்தேன். 'ஏன்கா எப்போதும் பொன்னுங்க தான் உன்னை இப்படி லவ் பண்றாங்க..!!!. ஆனா பசங்க கிட்டயிருந்து இப்படி ஒரு பார்வை கூட உன் மேல் விழறதில்ல…??? இது சேரியில்லையே.. அக்கா' என்று இழுப்பான்..

அதுதானே.... - என்று இழுத்தாள் டீனா

ஒரு வேளை பசங்களுக்கு உன்னை பார்த்தா இப்படி தோணலியோ என்னமோ??? ஏன் டீ இதுவரைக்கும் ஒரு பையன் கூட உன்கிட்ட வந்து பரப்போஸ் செய்ததில்லையா??? பேசிக்கொண்டே காப்பி பஜ்ஜி ட்ரேகளை ஆளுக்கு ஒன்றாக எடுத்துக்கொண்டு வந்தனர்.

எல்லோரும் காப்பி கொடுத்துக்கொண்டிருந்தாள் குழலீ. டீனாவுக்கு ஒரு புன்னகை மட்டுமே விடையானது..

'என்ன?? இதுவரைக்கும் இல்லையா??'

'இல்ல டீனா... அதுக்கு கொஞ்சம் அழகாய் இருக்கனுமே!'

எல்லோரும் அவளை பார்த்தனர். அவளது மனதின் வலியின் வெளிப்பாடு..

'இல்லைங்க குழலீ...நான் காப்பி குடிக்க மாட்டேன்.' என்றான் பிரபு. ட்ரேயில் மீதம் இரண்டு கோப்பை மட்டுமே இருந்தது.

'இது காப்பி என்று நான் சொன்னேனா.. டீ தான்...

'இல்லைங்க குழலீ...

இருங்க இருங்க... மிஷின் டீ இல்லை... பாலில் தண்ணீர் கொஞ்சம் கலந்து அதிலேயே டீ இலைகளை போட்டு சர்க்கரை ஒரு ஸ்புன் துக்கலாக என தயாரித்த டீ தான். நான் டீ போட்டதினால பயப்பட வேண்டாம் நன்றாக தான் இருக்கும். தைரியமாக குடிக்கலாம்!'

பிரபுவோ அதிர்ச்சியில் உறைந்து பார்த்தான்.

என்ன ஆச்சு பிரபு??? – டேவிட்

'இல்ல.... வந்து... ம்ம்.. ஒன்னுமில்லை...'

என்ன ஆச்சு மிஸ்டர் பிரபு??? டீ இப்படி பிடிக்காதா??? இல்லை...இங்க இப்போ நடந்த பிரச்சனைல எனக்கு தலைவலியே வந்துடுத்து. மைன்ட் கொஞ்சம் டல்லாய் இருந்தது.. அதற்கு காப்பியை விட இப்படி ஒரு டீ தான் பெஸட். மனசுக்கு கொஞ்சம் புத்துணர்ச்சி வரும். அவங்க இரண்டு பேர்கூட பேசி உங்களுக்கும் தலைவலி கண்டிப்பா வந்திருக்கனுமே?? அதான் இன்னும் ஒரு கப் அதிகமா டீ வைத்தேன். – குழலீ

வதனி... மதிவதனி.. சீக்கிரமா வா. இவ நல்ல மூட் ல இருக்கும் போதே மெனுவை கொடுத்திடலாம்.- டீனா

இல்ல வெளியே போய் சாப்பிடலாமே- பிரபு.

இல்லை ஒரு ஒன் ஹவர் நேரம் கொடுங்க. சமைச்சு முடிச்சிடுவேன்.

சரிடா.. சீக்கிரமா முடிச்சிடு...உனக்காக இந்த கொடுமையை தாங்குறோம்... ஆனா இதுக்காக எங்களுக்கு நீ நாலு பாட்டு பாடனும்...என்ன ஒகே வா. அப்படினா ஜுட்…- டேவிட்.

அண்ணா... என்னமோ ஒரு முடிவு பண்ணிடீங்க... சரி. ரொம்ப சந்தோசமா இருக்கீங்க போல !

மெனுவும் கொடுக்கப்பட்டது. ம்ம்ம்... நம்ம திறமைக்கு டெஸ்ட் போல இருக்கே? ஆனா அண்ணா யாராவது கொஞ்சம் உதவிக்கு வரனுமே? சில மைன்யுட் வேலை எல்லாம் இருக்கு... அண்ணியை...

அட என்னடா... டீனாவை னு கேட்டிருந்தனா யோசிச்சு இருப்பேன். அண்ணியை ஒரு வார்த்தையை போட்டுட்ட... ம்ம்ம் சரிடா.

ஹி ஹி.. என்ன அண்ணா உடனே விட்டுக்கொடுத்திட்டீங்க? ச்சச கொஞ்சம் விளையாடலாம்னு பார்த்தேன்.. இல்ல வேண்டாம் னா நான் பார்த்துக்கிறேன். ராம் நீ மட்டும் கொஞ்சம் வந்து உதவி பண்ணு...

இதோ வர்ரேன் குழலீ...- ராம் நானும் வர்ரேன் குழலீ – மதிவதனி

சரி வா...

ராம் நான் உன்கிட்ட ஒன்னு சொல்லனும்.. – குழலீ

'நான் யார்கிட்டவும் எதுவும் கேட்கவும் மாட்டேன்.. எதுவும் சொல்லவும் மாட்டேன்! என்னையும் நம்பலாம் குழல்!' – ராம்

புன்னகைத்துக்கொண்டே 'தேங்கஸ்... தேங்கஸ் டா நண்பா!' என்றாள் பூங்குழலீ!

'என்ன கேட்க கூடாது? என்ன சொல்லக்கூடாது??' குரல் வந்த திசையைப்பார்த்து இருவரும் உறைந்தனர்!

தொடரும்...

Episode # 01

Episode # 03

{kunena_discuss:833}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.