(Reading time: 23 - 46 minutes)

 

ப்படி பட்ட  பெண் புயலை அன்பினால் சிக்க வைத்துவிட்டு கைகட்டி வேடிக்கை பார்ப்பவனை என்ன செய்வது ? பாட்டி தொடங்கி பணியாள்  வரை அனைவரிடமும் தனது மனதை திரைபோட்டு காட்டுபவன், சம்பந்தபட்டவள் கண்முன்னே இருக்கும்போது அமைதியாய் போவானேன் ??

இன்னொரு புறமோ, நாளை அவளது வீட்டிற்கு சென்று விடுவாளே என்ற ஏக்கம் .. அவளுக்கு பிடித்தது போலவே இயற்கையுடன் ஒன்றி இருந்த அந்த வீட்டில் அழகும், அவள் மீது அன்பு மழை பொழியும் அவர்களின் மனதின் அழகையும் விட்டு போக  அவளுக்கும் மனமில்லையே... !

" எதுவா இருந்தாலும் நேரடியா சொல்லு நிலா ? "

" யாரு நானு ? நான் நேரடியா சொல்லுனுமா ? நீங்க நேரத்தான் நடக்குறிங்க  சார் ?" என்றாள்  பற்களை கடித்து  கொண்டாள் ..அவனோ அவள் அருகில் நடக்கும் உற்சாகத்தில் அப்படியே நின்று, பின் நிதானமாய் நடந்து வந்து

" நேரத்தானே நடக்குறேன் பேபி ? உன் கண்ணுக்கு நான் நண்டு மாதிரி தெரியுறேனோ " என்று கேட்டு வைத்து அவளின் அனல் பார்வையை பெற்றுக் கொண்டான் ..

" ப்ச்ச்ச் .. நான் உள்ள போறேன் "

" ஏன் நிலா என்ன ப்ராப்ளம்  ?"

" என்ன ஏன் நிலா தேன்  நிலான்னு ?  நீங்கதான் மது என் ப்ராப்ளம் " என்றவளின் குரலில் உள்ளே போயிருந்தது .. அவனோ " ஆஹா மேடம் செம்ம கோபத்தில் இருந்திருந்தா இந்நேரம் வாடா போடா டால்டான்னு எனக்கு மரியாதை மழையில் நனைய வெச்சிருப்பா .. இப்போ இவ பேசறதை பார்த்தா அவ்ளோ கோபம் இல்ல போல " என்று பெருமூச்சு விட்டான் .. அதற்குள் அவளே

" டேய் நான் இங்க உன் முகத்தை பார்த்துகிட்டு இருந்தா , நீ வானத்தை பார்த்து என்னடா பண்ற ? குரங்கு , லூசு .. மடையா …. எல்லாத்தையும் நான்தான் சொல்லனுமா ?" என்று சொல்லி அருகில் இருந்த விறகை எடுத்து அடிக்க தொடங்கினாள் ..

" ஐயோ ..நிலா .. ப்ளீஸ் பேசி தீர்த்துக்கலாம் .. ஐயோ சத்தியமா வலிக்குதுடீ ...வேணாம் டீ .. ஐயோ அம்மா " என்று துள்ளி குதித்து ஓடினான் மதியழகன் ..

" ஓடு ஓடு .,... நல்ல ஓடு ... இவனே வந்து லிப்ட் கேட்பான் , ஜொள்ளு விடுவான் , கவிதை எழுதுவான் , சாக்லேட் கொடுப்பான் , எனக்கு தெரியாதுன்னு நெனச்சு சின்ன பசங்களோடு பிளான் போட்டு முத்தம் ... முத்தம் கொடுப்பான் " என்று மூச்சிரைக்க அவன் செய்த ஒவ்வொன்றையும் பட்டியலிட்டு அடித்தாள் ...

" ஹே அந்த கிஸ்  மேட்டர்  தெரிஞ்சுடுச்சா ? "

" கிஸ்  மேட்டரா ? மவனே நீ பண்ண ஒவ்வொரு வண்டவாளமும் எனக்கு தெரியும் .. சாந்தனு யாரு, அட்வைஸ் அழகன் யாரு, spark FM  யாரோடது ? எல்லா உண்மையும் எனக்கு தெரியும் " என்று சொல்லி கொண்டே மீண்டும் அடிக்க வந்தலின் கைகளை சிறை பிடித்து அவளை தன் கைவளைவுக்குள் கொண்டு வந்து நிறுத்தி விழி நோக்கினான் மதியழகன் ..

" நிஜம்மாவா ?"

" என்ன ...நிஜம்மாவா ?? முதலில் என்னை விடுங்க " என்று அவன் அண்மையில் திக்கி தள்ளாடி பேசினாள்  தேன்நிலா .. அவனது மூச்சு காற்றின் உராய்வில்  கரைந்தே போகும் நிலையில் இருந்தாள் அவள் ... அவளது இன்ப அவஸ்தையை ரசித்தவன் மேலும் இடைவெளியை குறைத்தான் ..

" ஹனி ........ என் ஹனி " என்று அவனுக்கே கேட்காத குரலில் அவளை அவன் அழைக்க கண் மூடி கிறங்கி நின்றாள்  தேன்நிலா .. " இதற்கு மேலும் எதற்கு வார்த்தையால் பேசுகிறாய் ?"  என்று கேட்காமல் கேட்டன துடிக்கும் அவளது இதழ்கள் .. அதை கண்டுகொண்டவன், மிக மிருதுவாய் தங்களது இதழ் சங்கமத்தை தொடக்கி வைத்தான் .. அவனை தடுக்கும் வகை அறிந்து அமைதி காத்தாள்  தேன்நிலா .. தன்னிலை அறிந்தும் விலகாமல் இருந்தான் மதியழகன் .. மதியும் நிலவும் ஸ்பரிசத்தினால் காதலை உணர்த்திக் கொண்டு இருந்தனர் ..

ஒருவரின் அணைப்பினில்   மற்றொருவர் புதியதொரு உலகத்தில்  பயணித்து கொண்டு இருந்தனர். ஒரு பெரிய அலை வந்து அவர்களை நனைக்க   இருவருமே இயல்புநிலைக்கு வந்தனர் .  முதல் முறை வெட்கத்தில் முகம் சிவந்தாள்  தேன்நிலா , அவளை அதிகம் இம்சிக்காமல் அதே நேரம் அவளை விலகியும் இருக்காமல் அவளது கை கோர்த்து நடந்தான்  மதியழகன். தேன்நிலா  மீது கொண்டுள்ள நேசத்தை அந்த இறுக்கமான கை பிணைப்பிலேயே  உணர்த்தினான் மதியழகன், இருவருக்குமே  எதுவும் வாய் திறந்து பேச தோன்றவில்லை.... மௌனமே அங்கு காதல் இறங்கியது.. நிலாவின் கை பிடித்துக் கொண்டே மணல் மீது அமர்ந்தான் மதியழகன்..

" என்ன  லுக்கு ?"

"ஐ  லவ் யு  ஹனி "

" சொல்லுடா .. இதை இப்போ சொல்லு .. ஊரு முழுக்க  சொல்லி முடிச்ச பிறகு சொல்லு ... திருடா "

" ஹா ஹா ஹா ... . நான் திருடன் ஆன கதை இருக்கட்டும் .,. நீ திருடியா இருந்திருக்கியே அந்த கதையை முதலில் சொல்லு "  என்றான் ஆழ்ந்த குரலில் .. முகத்தில் மென்மை  படர அவனைபார்த்திருந்தாள்  தேன்நிலா ...

" எப்படி இருக்கேன் செல்லம் ? இந்த ரதிக்கு ஏற்ற மாறனா இருக்கேனா ?" என்று கண்ணடித்தான் அவன் ..

அவனது குறும்பான பார்வையில் இயல்பு நிலை பெற்றாள்  தேன்நிலா ...

"  பண்ணுறது எல்லாமே கள்ளத்தனம் .. இதில் இவர் மாறனாம் ... ரொம்பதான் " என்று முகத்தை திருப்பி கொண்டவளுக்கு தான் செய்த கள்ளத்தனங்களை எண்ணி சிரிப்புதான் வந்தது ..

" ம்ம்ம்கும்ம்ம் உங்க சிரிப்புக்கு காரணம் என்னன்னு சொன்னா நாங்களும் சிரிப்போம் லே "

" ஹா ஹா பெண்களின் சிரிப்பிற்குள் ஆயிரம் அர்த்தம் இருக்கும் ..அது ஆண்களுக்கு புரியாது "

" அம்மாடியோவ் பெண்ணியம் பேசுற ஆளா நீ ? "

" ஹ்ம்ம் ஆமா உங்களை பார்க்குறதுக்கு முன்னாடி " என்றாள்  அவள் காதலுடன் ..

" நிலாம்மா "

" ம்ம்ம்ம் ?"

" உனக்கு என்னை எவ்ளோ பிடிக்கும் ? "

" பிடிக்கிறதுக்கு அளவு கோள்  இருக்கா மது ?? எனக்கு உங்களை என் உயிரளவு பிடிக்கும் போதுமா ? "... கொஞ்சம் இடைவெளி விட்டு  " மதியழகன் மீது எனக்கு காதல் வந்தது என்னவோ அவரோடு பழகின பிறகுதான் .. ஆனா ஈர்பும் மரியாதையும் அழகன் மீது எனக்கு எப்பவோ வந்த ஒன்னு " என்றாள் .. அவளது பேச்சில்  கொஞ்சம் கண்கலங்கித்தான் போனான் மதி . தன் பெற்றோரிடம்  சண்டை போட்டு பிரிந்தவனுக்கு அவர்களின் புதல்வன்  என்ற அடையாளம் ஏனோ கசந்தது. அவனது வாழ்க்கை துணையாய் வருபவள் அவனை அவனுக்காக மட்டுமே நேசிப்பவளாய் இருக்க வேண்டும் என்றே அவன் விரும்பினான் .  இன்று தனது முழு அடையாளம் தெரியும்முன்னே அவள் மனதில் அவன் மீது  நேசம் விதைந்து என்பதை அறிந்து மிகவும் மகிழ்ந்துதான் போனான் ...

" ஹே அப்போ உனக்கு என்னை முன்னாடியே தெரியுமாடா " என்று கேட்டான் ஆசையாய் ... நிலாவோ  ஸ்டைலாய்

" பின்ன, தேன்நிலான்னா  சும்மாவா மது ? நீங்க என்னை பார்க்குறதுக்கு முன்னாடியே நான் உங்களை நிறைய தடவை பார்த்திருக்கேனே " என்றாள்...

" அடிப்பாவி கேடி .... இதோ எப்போ இருந்து ? அப்போ ஏன் நீ எதுவும் சொல்லவே இல்லை ?"

" ஹா ஹா இப்படி ஒரு நாள் உங்க பக்கத்துல உட்கார்ந்து நீங்க ஆச்சர்ய படுறதை ரசிச்சு உண்மையை சொல்லலாம்னு நெனச்சேன்  மை டியர் மக்கு பையா " என்றபடி செல்லமாய் அவன் மூக்கை பிடித்து ஆட்டினாள் ... தேன்நிலாவின்  கண்களுக்கு அவன் எப்படி தெரிகிறான் என்பது அவள் மட்டுமே அறிந்த ஒன்று .. ஆனால் அவளது இந்த ஸ்பரிசத்தில் தன் சிறுவனாக மாறி விட்டோமோ என்று அவனுக்கே சந்தேகம் வந்தது.. என்னதான் ஓர் ஆண்  கம்பீரமானவன், திறமைசாலி, யாரையும் சார்ந்து இருக்காதவன் என்றாலும் கூட ஒரு பெண்ணின் உண்மையான காதலின் முன் அவன் சிறு குழந்தையாய் தான் மாறி விடுகிறான் .. இங்கும் மதியழகன் சிறுபிள்ளை போல அவளை காதலுடனும் ஆச்சர்யத்துடனும் நோக்கினான் ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.