(Reading time: 23 - 46 minutes)

 

" ஹா ஹா .. எல்லாம் தெரியும் ... பாட்டியை முன்னாடி அனுப்பி உன்னை தூக்கிகிட்டு வரும்போது உன் கன்னத்தை தொட்டு விளையாடிக் கிட்டு  இருந்த கூந்தலை  நான் ஊத்தி விட்டப்போ என் மூச்சு காத்து பட்டு உன் முகம் லேசாய் சினுங்கியதே .. அப்போவே தெரிஞ்சு போச்சு .. அதுக்கு பிறகு பாட்டி ஆரத்தி எடுக்கும்போது என்னமோ நீ நழுவி விழ போகிற மாதிரி  உன்னை கொஞ்சம் இருக்கமா பிடிச்சு தூக்கினேனா அப்பவும் நீ மாட்டிகிட்ட .. கொஞ்ச நேரம் உன்னை தவிக்க விடணும்னு தான் அம்மு கிட்ட பேச்சு கொடுத்துகிட்டே உன்னை என் கைல வெச்சுகிட்டு இருந்தேன் .. இது போதுமா இல்லை இன்னும் வேணுமா டார்லிங் "

" அச்சோ மது .. போதும் போடும் " என்று அவள் வேறு புறம் திரும்பி கொள்ள,

" அடடே இருந்தாலும் என் ஹனி இப்படி வெட்கபட்டு என்னை சோதிக்கிறாலே  " என்றான் கிறக்கமாய் ..

" ஏன் உங்க கை கால் என்ன கட்டியா போட்டு இருக்கு " என்று கேட்டு வைத்தவள் அவன் கைகளுக்கு சிக்காமல் எழுந்து  ஓடினாள் .. கடற்கரை மணலில் அவள் பாத சுவடுகள் அருகே தனது சுவடுகளையும் பதித்து அவளை துரத்தி ஓடி , சிறிது நேரத்தில் அவளை தூக்கி சுற்றினான் மதியழகன் ..

" ஐ லவ் யூ ஹனி ... ஐ லவ் யு சோ மச் " என்றான் .. அவன் கழுத்தில் கைகளை மாலையாய் கோர்த்து விழிநோக்கி

" ஐ லவ் யு டூ " என்றாள்  தேன்நிலா ...  .. ஏற்கனவே  திட்டமிட்டு வைத்திருந்தது போலவே அன்று மாலை ஷாந்தனுவை அழைத்து வந்தான் மதி .. நாளையில் இருந்து தேன்நிலா  தனது வீட்டிற்கு சென்று விடுவாள் என்ற ஏக்கமும் அவனை வாட்டாமல் இல்லை .. இருந்தாலும்  ஒன்றாய் இருக்கும் தருணங்களை சேர்த்து வைக்க எண்ணினான் .. ஒவ்வொரு மணி நேரமும் ஏதாவது ஒரு பரிசு பொருளை  தந்து கொண்டே இருந்தான் ..  இறுதியாய் பல நாட்களுக்கு பிறகு அவன் தந்தை ஆசையாய் வாங்கி தந்த கிட்டாரை அவளுக்காக வசித்து பாடலும்  பாடினான் ...

ஏப்ரல் மாதத்தில் ஓர் அர்த்த ஜாமத்தில்

என் ஜன்னல் ஓரத்தில் நிலா நிலா

கண்கள் கசக்கி நான் துள்ளி எழுந்தேன்

அது காதில் சொன்னது ஹாலோ ஹலோ

நிலா நிலா கை வருமா

நிதம் நிதம் சுகம் தருமா ??

அவளை பார்த்து மிக பொறுமையாய் ஒவ்வொரு வார்த்தைகளையும் உணர்ந்து பாடி அவளையும் ரசிக்க வைத்தான் .. அன்றைய இரவு அவனை பிரிய மனம் இல்லாமலே வீடு திரும்பினாள்  தேன்நிலா ... அவளை போல அவனுக்கும் அப்படித்தானே இருக்கும் எண்ணியவள் ஓடி சென்று தன் அறையின் ஜன்னல்  பார்த்தாள் ..அவளது எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் அங்கு நின்று அவளுக்கு கை அசைத்தான் மதியழகன் .. ஒரு புன்னகையுடன் போனை எடுத்தவள் அவனுக்கு மெசேஜ் அனுப்பினாள் ..

" நிலா நிலா கை வருமே

நிதம் நிதம் சுகம் தருமே "

நிறைந்த புன்னகையோடு வீடு திரும்பினான் மதியழகன் ..

காலச்சக்கரம் யாருக்கும் காத்திருக்காமல் சுழன்றது.. மதியழகன் - தேன்நிலாவின் காதல் உறவு வளர்பிறையாய் தினம் தினம் வளர்ந்து ஒளி  வீசியது .. முகில்மதி இன்னமும் அன்பெழிலனிடம் தூரமாகவே இருந்தாள் ... கதிரேசன் காவியதர்ஷினியின் நம்பிக்கைக்குரிய தோழனாய் மாறி போனான் ... மித்ரா தனது மாமா நாராயணன், அத்தை லக்ஷ்மி, அன்பெழிலன், சிவா, ரஞ்சன் இப்படி தன் கூட்டணியுடன் சேர்ந்து ஷக்தியின் பிசினஸ் விஷயத்தில் பல ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தாள் .. ஷக்தியும்  இந்தமுறை சங்கமித்ராவிடம் மனம் விட்டு பேச முடிவு எடுத்திருந்தான் .. புத்தாண்டும் பிறந்தது ..

சரியாய் பன்னிரண்டு மணியில், தேன்நிலாவின் கன்னத்தில் திருட்டுத் தனமாய் இதழ் பதித்திருந்தான் மதியழகன்.. அவளது முகம் செவ்வானமாய் சிவக்ககே, அதே நேரம் மனோவும் போனை வைத்துவிட்டு அங்கு வந்தார் ...

" என்னாச்சு பேபி ?"

" இல்லப்பா ... அது .. " என்று அவள் திணறும்போதே அவளுக்கு இன்ப அதர்ச்சி தர அங்கு வந்தார் பாட்டி .. பாட்டி  புறம் திரும்ப அப்பாடா என்று இருந்தது அவளுக்கு .. மெல்லிய குரலில்  மிரட்டினாள்  அவள் ..

" மது " 

" சொல்லு  பேபி "

" என்னது நான் உங்களுக்கு பேபியா ?"

" இது  என்னடா அநியாயமா இருக்கு .. என் மாமனார் மட்டும் கூப்பிடுறார் நான்  கூப்பிட கூடாதா ? இரு   அவரையே  கேட்குறேன் .. மாமா " என்று சத்தமாய் கூப்பிட்டான் மதியழகன் .. நிலா அவனது  வாயை மூட எத்தனிக்கும் முன்னே மதியின் குரல் அவரை எட்டி இருந்தது .. பாட்டி , பாக்கியம் , நிலா மூவருமே அவர்களை பார்த்து நின்றனர் .. ( அடுத்து என்ன  ஆச்சுன்னு அடுத்த எபிசொட் ல சொல்றேன் சொல்றேன் ... ஹீ ஹீ )

ன் வீட்டு வாசலில் நின்று காவியாவுடன் பேசி கொண்டு இருந்தான் கதிரேசன் ..

" ம்ம்ம்ம் உங்களுக்கு என்ன நியு யெர்  கிபிட் வேணும் கதிர்  ?"

" ஹா ஹா பரிசு கொடுக்குற பழக்கமும் இல்லை வாங்குற பழக்கமும் இல்லை தர்ஷினி "

" அடடே இப்படி  சொல்லி எனக்கு கிபிட் கொடுக்காம இருக்கணும்னு ப்ளான்  போடுற மாதிரி இருக்கே " என்றாள்  அவள் குறும்புடன் ..

" ஹா ஹா போங்கங்க நான் அப்படி எதுவும் மீன் பண்ணி சொல்லல " என்றான் கதிரேசனும் பவ்யமாய்..

" சரி சரி நானும் உங்களால் கொடுக்க முடியாத கிபிட் கேட்க மாட்டேன் . உங்களால கொடுக்க முடிஞ்சதை தான் கேட்பேன் " என்று பீடிகை போட்டாள்.. அவளது பீடிகையில்  ஆடித்தான் போனான் கதிரேசன் (  அவ்வளோ நல்லவரா பாஸ் நீங்க ? )

அவளோ அசால்ட்டாய்

" பெருசா ஒன்னும் இல்லை கதிர் .. நீங்க என்னை நீ வா போன்னு  ஒருமையில் கூப்பிடனும் அதான் நான் கேட்க வந்தது " என்றாள் ...

" இவ்ளோதானே கூப்பிட்டா போச்சு " என்று இயல்பாய் சொன்னவனுக்கு அப்போதுதான் மூச்சே சீரானது .. இன்னும் சிறிது நேரம் பேசிவிட்டு போனை வைத்தாள்  காவியா .. நாளை அவனை நேரில் பார்த்து இன்ப அதிர்ச்சி  தர வேண்டும் என்று முடிவெடுத்தவள் " நான் வீட்டுல இருக்கேன் " என்று அவன் சொன்னதின் அர்த்தத்தை புரிந்து கொள்ள வில்லை .. அவன் சென்னையில் தான் இருக்கிறான் என்று எண்ணிக் கொண்டு , நாளை அவனை பார்ப்பதற்கு தயாரானாள் ... ஒருவேளை தெரிந்திருந்தால் அவளுக்கு நடக்கவிருக்கும் ஆபத்து தடுக்க பட்டிருக்குமோ ? ( அப்படி என்ன நடக்க போகுது ? அடுத்த எபிசொட் ல சொல்றேன் )

ன்பெழிலன் தந்த மோதிரத்தை அணிந்து விடியோ காலில் இருந்தவனிடம் காட்டினாள்  முகில்மதி...

" சூப்பரா இருக்கு டா " என்று சொன்ன அன்புக்கு கண்கள்கலங்கியது .. அதை கவனித்த முகிலா

" என்னாச்சு எழில் ?" என்றாள் ..

" இல்லடா  நீ எப்பவும் நான் வாங்கி தந்ததை போட மாட்டியே .. அதான் இதை எதிர்பார்க்கல .. இந்த மோதிரம் எடுக்கும்போது கூட நீ போட  மாட்டியான்னு ஏக்கமா பீல் பண்ணேன் "

அவனை அள்ளி அணைத்து  கொள்ள வேண்டும்போல இருந்தது அவளுக்கும் .. இருந்தாலும் அதை வெளிபடுத்த விரும்பவில்லை .. மெல்லிய குரலில்

" இன்னும் கொஞ்ச நாள் டைம் கொடுங்க எழில் " என்றாள்  இறைஞ்சளுடன் ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.