(Reading time: 23 - 46 minutes)

 

 " ன்னும் பார்த்து கொண்டிருந்தாள்  என்னாவது?

இந்த பார்வைக்கு தானா பெண் ஆனது ?

நான் கேட்டதை தருவாய் இன்றாவது " என்று சன்னமாய் பாடினாள்  தேன்நிலா ..  அவளது பாடலும், கண் சிமிட்டலும் அவனை நடப்புக்கு கொண்டு வந்தது ..

" ஹே என்னை எப்படி தெரியும் ...சொல்லு குட்டிமா .. எனக்கு இப்போவே தெரிஞ்சாகனும் " என்றான் அடம் பிடிக்கும் குரலில்.

" சொல்றேன் ...சொல்றேன்..இதுக்கு மேலயும் நாளை கடத்துற ஐடியா ல நானும் இல்லைப்பா .. ஏதோ இப்போகூட நானா குச்சியை எடுத்து மிரட்டவும்தான் சாருக்கு காதலை  சொல்லனும்னு தோணுது .. இதுல நான் வேற  லேட் பண்ணினா நமக்கு நேரா அறுபதாம்   கல்யாணம்  தான் நடக்கும் "

" ம்ம்ம்ம் எனக்கு எதுவா இருந்தாலும் ஓகே தான் குட்டிமா ... உன்னோடு நான் வாழனும் அது போதும் எனக்கு "

" இப்படி பேசி பேசித்தான் மது என்னை உங்க பின்னாடியே சுத்த வெச்சிங்க "

" யாரு நானு ??"

" பின்ன யாராம் ? எனக்கு உங்களை spark fm la அட்வைஸ் அழகனா எப்பவோ தெரியும்... அப்போ இருந்தே எனக்கு உங்க குரலில் ஒரு ஈர்ப்பு .. என்னம்மோ எனக்கு மட்டும் ரொம்ப அடிக்கடி கேட்ட மாதிரியே இருக்கும் உங்க குரல் .. "

" ம்ம்ம் அப்பறம் ?"

" அப்பறம் உங்க சிந்தனை .. சிரிக்க வெச்சுகிட்டே நிதர்சனத்தை ஆராயுறது.. ரொம்ப அப்டேட்டட் ஆ பேசுறது .. உங்க பேச்சில்  கருத்தும்  இருக்கும் குறும்பும் இருக்கும் "

" ..... "

" ஒரு நாள் நீங்க எப்படி தான் இருப்பிங்க அப்படின்னு தெரிஞ்சுக்க ரொம்ப கியுரியோசிட்டி வந்துச்சு .. கூகள் பண்ணி பார்த்தேன் பட் கண்டுபுடிக்க முடில .. அப்பறம் spark fm  கே வந்தேன் .... "

" நம்ம radio station கா ?... உன்னை நான் அங்க பார்த்ததே இல்லையே "

" எப்படி பார்த்திருக்க முடியும் நான் விசாரிச்சப்போ நீங்க அங்க இல்லைன்னு சொன்னாங்களே .. "

" ச்ச வடை  போச்சே "

" ஹ்ம்ம் …..ஆனா அப்போவே தெரியும் எனக்கு அந்த ரேடியோ ஸ்டேஷன் இன் ஒவ்னர் நீங்கதான்னு .. ரிசப்ஷன்ல இருந்த போட்டோ பார்த்துகிட்டே இருந்தேன் .. அப்போதான் ஒரு பொண்ணு, என்ன மேடம் எங்க பாஸ் ஐ தேடி வந்திங்க, இங்கயும் அவரு போட்டோவே பார்க்குறிங்க நு என்னை ஒரு மாதிரி சுவாரஸ்யமா பார்த்து கேட்டாங்க .. அவங்க கிட்ட பொய் சொல்லி தப்பிக்கிறதுக்குல  அம்மாடியோவ் " அன்றைய நினைவில் பெருமூச்சு விட்டாள்  தேன்நிலா ..

லேசாய் சிவந்திருந்த அவள் கன்னங்களை வருடித் தந்தான் மதியழகன் .. அவன் ஸ்பரிசத்தில் மேலும் கன்னம் சிவந்தாள்  தேன்நிலா ..

" ம்ம்ம் அப்பறம் ??"'

" அப்பறம் என்ன விழுப்புரம் தான்!!! ரெண்டு மூணு நாளில் உங்களை கண்டுபிடிச்சு தூரத்தில் இருந்தே பார்த்துட்டேன் .. அது என்னம்மோ நான் உங்க ரசிகைன்னு சொல்லி அறிமுகம் ஆகிக்காமல் உங்களை பத்தி தூரத்தில் இருந்தே தெரிஞ்சுக்கணும்னு நெனச்சேன் .. அட்வைஸ் அழகன் பத்தி நிறைய தெரிஞ்சுகிட்டேன் .. ஷாந்தனு , தர்ஷினி அக்கா, அம்மு பாட்டி, அப்பறம் பக்கத்து வீடு எதிர்வீடுன்னு நீங்க உறவு வெச்சு கூப்பிடுற எல்லாரையும் கொஞ்சம் கொஞ்சம் எனக்கு தெரியும் .... ஒரு புக் படிக்க படிக்க அதில் ஆர்வம் மிகுதி ஆகுற மாதிரி உங்களை பார்க்க பார்க்க நிறைய ரசிச்சேன் .. ஆனா நமக்கும் டாக்டர்ன்னு ஒரு கடமை இருக்கே "

" .."

" அதனால அப்பபோ உங்களை தேடுறதை கம்மி பண்ணிக்க வேண்டிய சூழ்நிலை .. அப்படி ஒருநாள் தான், ஷாந்தனு என்கிட்ட பேசினது .. அவன் என்கிட்ட பேசும்போதே என் கண்ணு உங்களை தேடினுச்சு .. நீங்க இல்லன்னதும் அவன் கிட்ட உங்களை பத்தி போட்டு கொடுத்தேன் .. டென்ஷன் பண்ணினானா ?"

" டென்ஷனா ? படுத்தி எடுத்துட்டான் தாயே "

" ஹா ஹா ஹா ... பின்ன நிலான்னா சும்மாவா ?? அப்பறம் நீங்க லிப்ட் கேட்டப்போ எனக்கு செம்ம ஹாப்பி .. அதுவும் நீங்க அப்படி பேசின விதம் .. என்னால அந்த ஆச்சர்யத்தை விவரிக்கவே முடில ... யூ  நோ மது? நான் பொதுவாகவே நினைப்பேன் , லைப் பார்ட்னர் நம்மளை விட சிந்தனையில் முதிர்ச்சி உள்ளவரா இருந்தாலும் போர் அடிக்கும், பொறுப்பே இல்லன்னா போர் வெடிக்கும் ரெண்டுக்கும் எதிர்மாறா ப்ரண்ட்லி  ஆ .. ஈடு கொடுத்து சண்டை போடணும் அதே நேரம் சமாதானமும் ஆகணும்னு நெனைப்பேன் ..அன்னைக்கு உங்க கிட்ட வாய்கொடுத்து சண்டை போடுறதை மனசுக்குள்ளே ரொம்ப ரசிச்சேன் .. தெரியுமா ? "

வியந்துதான் போனான் மதியழகன் .. பெண்ணின் மனம் கடலை விட ஆழமானது என்பதை அப்போதுதான் ஏற்றுகொண்டான் .. அவள் அவனை அதிகம் நேசிப்பாள்  என்று அவன் நம்பினான் தான் .. ஆனால் தனக்கு முன்பே  அவள் தன் மீது காதல் கொண்டிருப்பாள் என்று அவன் நினைக்கவே இல்லை .. அவனது மனநிலை அறியாமல் நிலாவும் தொடர்ந்து பேசினாள் ...

" ஆனா அப்பா கூட வந்தப்போ உங்களை அங்க எதிர்பார்கவே இல்லை மது .. ரொம்ப ஷாக் ஆகிட்டேன் .. எனக்கே கொஞ்சம் வியப்பா தான் இருந்துச்சு ,...இவ்வளவு நாள் தொடர்ந்து வந்தும் எப்படி இதை தெரிஞ்சுக்காம  போயிட்டேன்னு .. மதியழகனாய்  நீங்க இருந்த இடம் எனக்கு நமக்குள்ளே பெரிய இடைவெளியை தந்துட்ட மாதிரி பீல் தந்துச்சு "  அவளுக்கு பதில் சொல்ல எத்தனித்தான் மதியழகன் .. அதற்குள் அவளே ,

" ப்ளீஸ் மது ... அந்த எண்ணம் உருவான வேகத்துலேயே மறைஞ்சு போச்சு .. பட் அந்த அதிர்ச்சியை தாங்க முடியாமதான் அன்னைக்கு உங்க கிட்ட கோபமா பேசிட்டேன் ... சாரி டா "

" இட்ஸ் ஓகே குட்டிமா "

" படவா ..நான்தான் வேணும்னே சாரி கேட்டா நீ உடனே ஓகேன்னு சொல்லுவியா ?  இந்நேரத்துக்கு ச்ச ச்ச அப்படி இல்லைட உன்மேல என்ன தப்புன்னு என்னை பார்த்து கேட்டிருக்க வேணாமோ ?"

" ஹா ஹா கேட்டுட்டா போச்சு ஆனா அதுக்கு முன்னாடி இன்னும் ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்லிடுவியாம் .. "

" என்ன மது ?"

அதற்கு பதிலை அவன் பாடல் வரிமூலமே சொன்னான் ..

" சுடிதார் அணிந்து வந்த சொர்கமே

என் மீது காதல் வந்தது 

எப்போது என்று கொஞ்சம் நீ  சொல்வாயா ?

நீ சொல்வாயா ? நீ சொல்வாயா ?"

" ஹஹாஹஹா பாட்டாவே பாடியாச்சா ? ஹ்ம்ம் எப்போ வந்துச்சு " என்று நெற்றி பொட்டில் தட்டி யோசித்தவள்

" ஹாஆன் .. எங்க வீட்டு வாசலில் நின்னு உள்ளே வர அனுமதி இருக்கா மகாராணி , அப்படின்னு இருபோருளில் கேட்டிங்களே அப்போவே வந்துச்சு " என்றாள் ..

" ஓஹோ நான் கூட இந்த வீட்டுக்கு உன்னை தூக்கிட்டு வந்தப்போ மயக்கமாகவே இருக்குற மாதிரி நீ நடிச்சியே  அப்போ வந்துச்சுன்னு நெனச்சேன் செல்லம் " என்றான் குறும்பாய் ..

" அச்சச்சோ அது உங்களுக்கு தெரிஞ்சு போச்சா மது ?" என்று திருதிருவென விழித்தாள்  தேன்நிலா .. ஆம், முத்தையாவிடம் , அவளை தன்னவள் என்று அறிமுகப்படுத்தும்போதும், பாட்டியிடம் வழக்காடிக் கொண்டே அவளை பூமாலை போல கைகளில் ஏந்தி இருந்த போதும், அவன் அவளிடம் காதல் ரகசியங்கள் பேசிக் கொண்டிருந்தபோதும்  அவள் மயங்கி இருந்ததை போல நடித்து கொண்டுதான் இருந்தாள்  ..  ( அடிப்பாவின்னு சொல்லாதிங்க .. நம்ம மதி சார் நிலாவை விட ஷார்ப் பாருங்க )

" எப்படி கண்டுபுடிச்சிங்க மது "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.