(Reading time: 23 - 46 minutes)

 

" லைப் லாங் டைம் இருக்கு முகிலா " என்றான் ..

" நாளைக்கு சென்னை போகிறேன் முகிலா .. பத்திரமா இருப்ப தானே ?" என்றான் அவன் .. மனதளவில் கொஞ்சம் கலங்கி போனாலும் , புன்னகையை இழுத்து பிடித்து இதழில் நிறுத்தி

" கண்டிப்பா .. ஆல் தி பெஸ்ட் " என்றாள் .. ஷக்தி வீட்டிகுள் வந்ததுமே முகில்மதிக்கு  ஏதோ உள்ளுணர்வு தோன்றியது .. யார் சொன்னது , காதலர்கள் மட்டும்தான் ஒருவரின் அருகாமையை உணர முடியும் என்று ? ,இதோ   ஷக்தி மாடிப்படி ஏற தொடங்கியது முகில்மதி பரவசமாகினாள் ...

" எழில் "

"என்னடா ?"

" இல்லை .. எனக்கு ..  யாரோ வர்ற மாதிரி இருக்கு " என்றாள் ... அவனுக்குமே அந்த நேரத்தில்  அவளிடம்  அதிகம் பேசுவது சரி என்று தோன்றாததால்

" சரிடா .. நாளைக்கு பேசலாம் .. காலையில் நான் வீட்டுக்கு வரேன் " என்று சொல்லி பேசி முடித்தான் .. இருவருக்குமே தெரியாது , அவர்களின் இடைவெளி மிக விரைவிலேயே குறைய போவது !!

னதறையில்  இருந்து வெளிவந்த முகிலா வாசற்கதவை திறக்கவும் கதிர் போனை வைத்து திரும்பவும் சரியாய் இருந்தது .. ஷக்தியை  எதிர்பார்த்தவள் கதிரை பார்த்ததும் அதே ஏமாற்றத்தில்

" நீதானா ?" என்றாள்  சலிப்பாய் ..

" அடிபாவி.. வாலு ... இவ்வளவு நாள் கழிச்சு பார்க்குறோம் இப்படித்தான் என்னை கூப்பிடுவியா" என்றான் போலியான கோபத்தில்..

" டேய் சாரி டா .. ஷக்தி அண்ணா வந்த மாதிரி இருந்துச்சு டா " என்றாள் ...

அவளை கூட்டிக்கொண்டு மித்ராவின் வீட்டை நோக்கி நடந்தான் கதிர் .. " இப்போ எதுக்கு அத்தை வீட்டுக்கு போறோம் ?" -முகிலா

" ஷ்ஷ்ஷ்ஷ் சர்ப்ரைஸ் " என்றவன் அவளுடன் மாடிப்படி ஏறினான் ..

அங்கு ஷக்தியின்   அணைப்பில், தேக்கி வைத்த  கண்ணீரை  கரைத்து   கொண்டிருந்தாள் சங்கமித்ரா... ஷக்தியை  நிமிர்ந்து பார்த்து தன்னிலை உணர்ந்து நின்றாள்  மித்ரா .. அவனும் அவளை அதிகம் இம்சிக்காமல்

" ஹேப்பி நியு யெர்  டீ லூசு அத்தை பொண்ணு " என்றான் ..

அவளும் " உனக்கும் என்னுடைய வாழ்த்துகள் டா ஷக்தி மாமா " என்றாள் ...

" உன்கிட்ட " என்று ஷக்தி பேச தொடங்கும்போதே முகில்மதியின் கொலுசொலி .கேட்டது . அது வைஷ்ணவியோ என்று எண்ணியவள் ஷக்தியை விலகி நடந்தாள்  ..

" என்னாச்சு மித்ரா ... ?"

" அக்கா வரா நினைக்கிறேன் "

" அதுகென்ன இப்போ ?"

" அதுக்கு என்னன்னு உனக்கு தெரியாதா ? " என்று கேட்காமல் கேட்டாள்  அவள் பார்வையாலே...

" அப்பறம் பேசலாம் "

" மித்ரா நில்லு " என்றவன் அவளது கரம் பிடித்து தடுத்து நிறுத்தினான் ..

" கையை விடு ஷக்தி .. "

" நீ போகமாட்டேன் சொல்லு ..விடுறேன் "

" முடியாது "

" அப்போ நானும் கையை விட மாட்டேன் .. "

" விடாதே ஷக்தி .. விட்டுடாதே .. என்னை கை விட்டுவிடாதே " என்று கெஞ்சியது அவளது காதல் மனம் .. இங்கு நடக்கும் போராட்டம் தெரியாமல் கதிர் முகில்மதியை அழைத்து வர , இத்தனை நாட்கள் பாராமல் இருந்த தமையனை பார்த்ததும் ஓடி சென்று

"அண்ணா " என்று அவனை கட்டிக் கொண்டாள் ...தங்கையின் தலையை ஆதரவாய்

வருடி "  ஹை செல்லம் " என்றான் ஷக்தி .. அவன் கைகளை விடுவித்த நேரம் , அங்கிருந்து   கிட்ட தட்ட ஓடி வைஷ்ணவி மீது மோதி நின்றாள்  மித்ரா.. சத்தம் கேட்டு அனைவரும் அவர்களை பார்க்க, வைஷ்ணவி முகத்தில்  மிளிர்ந்த மகிழ்வில் குழம்பி போயினர் அனைவரும் .. ஷக்தி உட்பட !!

ஆத்திரமா ? பொறாமையா ? ஆயாசமா ? பரிதவிப்பா ? சொல்ல முடியாத கலவை உணர்வில்  ஒரு பார்வையை வைஷ்ணவி புறம் வீசி விட்டு சென்றாள் சங்கமித்ரா  ... ( கிட்ட தட்ட சில்லுனு ஒரு காதல்ல  சூர்யாவை பூமிகா கிட்ட விட்டுட்டு போகும்போது ஜோதிகா ஒரு லுக் விடுவாங்களே ..அது  மாதிரி ..)

மித்ராவின் விலகல் ஷக்தி எதிர்பார்த்தது என்றாலும்   அதை எப்படி சரி கட்ட போகிறோம் என்ற கவலை எழாமல் இல்லை ... அதே நேரம் வைஷ்ணவின் பார்வை சொல்லும் வாசகம் என்ன ? எதையும் முளையிலே கிள்ளிவிடுவது  நல்லது என்று உணர்ந்தவன் முகில்மதி, கதிரேசன், வைஷ்ணவி மூவரையும் பார்த்து பொதுவாய் 

" உங்க கிட்ட நான் கொஞ்சம் பேசணும் " என்றான் .. இங்கு இவன்  சில திட்டங்களை தீட்டிக் கொண்டிருந்த நேரம் மித்ரா அவனை விட்டு தூரம் போக திட்டம் தீட்டி கொண்டிருந்தாள்  .... வெல்ல போவது யார் ??? (போக போக  தெரியும் ) 

தொடரும்

Episode # 09

Episode # 11

{kunena_discuss:777}

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.