(Reading time: 21 - 41 minutes)

" கோபமும் பாசத்துடைய வெளிப்பாடு தானேங்க ... பெரியவ விட மித்ராவுக்கு விளையாட்டுத்தனம் ஜாஸ்தி ..,.அதுனாலத்தான் அப்படி நடந்துகிட்டேன் .. மத்தபடி எப்படி எனக்கு பாசம் இல்லாமல் போகும் ? அதுவும் பெரியவ சின்னவ  ரெண்டுபேருமே இப்போ நம்மோடு இல்லை .. என்னைக்காவது தானே அவங்களை பார்த்துக்க முடியுது " என்ற தாயின் கண்களில் கண்ணீர் ..

" ஷ்ஷ்ஷ்ஷ் அழாத சித்ரா .. எனக்கு மட்டும் சுலபமாகவா இருக்கு ? இருந்தாலும் என்ன பண்ணுறது சொல்லு ? .. நீ அழாத எனக்கு கஷ்டமா இருக்கு .. எனக்கு குடிக்க காபி கொண்டு வரியா ?" என்று வேண்டுமென்றே பேச்சை மாற்றினார் தேவசிவன் ..

" சரிங்க .. " என்ற சித்ராவும் சமையலறைக்கு  செல்ல " அண்ணா " என்றபடி அங்கு வந்தார் லக்ஷ்மி ..

" வாம்மா ... "

"  அண்ணி எங்கண்ணா ? "

" வந்துட்டேன் லக்ஷ்மி .. "

" அண்ணி இன்னைக்கு நீங்க சமையல் எதுவும் பண்ண வேணாம் .. எல்லாரும் நம்ம வீட்டுலையே சாப்பிடலாம் .. "

" என்ன லக்ஷ்மி திடீர்னு ?"

" இல்ல மித்ராவுக்கு பிடிக்கும்னு இன்னைக்கு விதம் விதமா சமைச்சேன் .. அதான் .... " என்று அவர் தொடரும்ம்முன்னே

" அதான் எங்களுக்கு விருந்தா ஆன்டி " என்றபடி ஸ்டைலாய் வந்தான் அன்பெழிலன் ..

" வா அன்பு .. "

" வர்றது இருக்கட்டும் .. ஆனாலும் இதெல்லாம் அநியாயம் ஆன்டி ... நம்ம மித்ராவுக்கு தான் விருந்தா எனக்கெல்லாம் ஒன்னும் கிடையாதா ?"

" நீதானே அன்பு எங்களுக்கு கல்யாண விருந்து தரனும் ? இப்படியே சிங்களா காலத்தை ஓட்டிடலாம் பார்க்குறியா  ?" என்றார் தேவசிவன் ..

" ம்ம்ம்கும்ம்ம் உங்க வீட்டு தேவதை வழி விட்டாதானே ?" என்று முனுமுனுத்தவன்

" கண்டிப்பா கூடிய சீக்கிரம் விருந்து வெச்சிடலாம் அப்பா " என்றான் ....

மதியழகனை  வழியனுப்பிவிட்டு தனதறையில்  நுழைந்தாள்  தேன்நிலா .. மதியுடன் சங்கமித்ராவை பற்றி பேசிக்கொண்டு வந்ததையே அசைப்போட்டாள் ..

" எல்லா கெட்டதுலயும் ஒரு நல்லது இருக்கும் பேபி .. அன்னைக்கு மித்ரா வீட்டை விட்டு வந்ததால் தானே நீயும் அவளும் தோழிகள் ஆனிங்க ? எனக்கும் ஒரு செல்ல தங்கச்சி கிடைச்சா ? அதை நினைச்சு சந்தோஷப்படு .. எதுவும் நம்ம கை மீறி போயிடல ..டோன்ட் வொர்ரி " என்று  மதி சொன்னதே அவள் காதில் ரீங்காரிமிட்டது ..தன்னையும் மீறி அவளது எண்ணவோட்டங்கள் பின்னோக்கி நகர, சென்னை போன மித்ரா என்ன ஆனாங்க என்ற  உண்மையை சொல்ல வேண்டிய நேரம் வந்துருச்சு .. வாங்க நாம காலச்சக்கரத்தை பின்னே நகர்த்தி செல்வோம் ..

பேருந்து கம்பிகளில் முகத்தை புதைத்து கொண்டு வானத்தை வெறித்து கொண்டிருந்தாள் சங்கமித்ரா .. எந்த தைரியத்தை இப்படி ஒரு முடிவெடுத்தோம் என்று அவளுக்கே மலைப்பாக இருந்தது. இயல்பிலே தன்னோடு இருக்கும் தன்னம்பிக்கையும் குறும்புத்தனமும் கூட இதற்கொரு காரணமாய் இருக்கலாம் என்று சமாதானமும் செய்து கொண்டாள் .. அதையும் தாண்டி அவளது முடிவில் இருந்தனர் இரு ஆண்கள் .. ! ஷக்தியும்  அவளது தந்தையும் !..

எத்தனையோ நாட்கள் எட்டாகனிபோல இருந்தவன் இன்று அவள் நினைத்து பார்க்கும் முன்னே தன் மனதை அவளுக்குத் தர சித்தமாய் இருந்தான். அவள் கொண்டாடி வேண்டிய தருணம் அது.. எனினும் அந்த தருணத்தில் அனைவருமே மகிழ்ச்சியாய் இருந்திருக்க வேண்டும் என்று அவள்  எதிர்பார்ப்பதில் என்ன தவறு ? ஒருவேளை அன்று அங்கு வைஷ்ணவி இருந்திருந்தால் நிச்சயம் அவளிடம் சம்மதம் வாங்கிவிட்டு ஷக்தியுடன்  இணைந்திருப்பாள் மித்ரா .. ஆனால் இப்படி வலுவான காரணம் இல்லாமல் உடன் பிறந்தவள் விலகி செல்லும்போது தன்னால் எப்படி முழுமனதுடன்  ஷக்தியுடன்  இணைய முடியும் ? ஷக்தியின்  சந்தோஷத்திற்காக  ஒவ்வொன்றாய் பார்த்து பார்த்து யோசித்து முடிவெடுப்பவள் இன்று அவளது கண்ணீருக்கே காரணம் ஆகி விட்டாளே  ! என்றெண்ணியவளின் கன்னங்களில் கண்ணீரின் ரேகை !

இன்னொரு பக்கம் அவளது தந்தை மீது அவள் கொண்ட நம்பிக்கை .. கிட்டதட்ட  தேவசிவமும் ஷக்தியைப்  போலத்தான் .. அதிகம் பேசுபவர்கள் இல்லை என்றாலும் தன்னை சுற்றி நடப்பதை துல்லிதமாய் கணித்து வைப்பவர் அவர்.. நிச்சயம் இந்த சிக்கலான சூழ்நிலையை அவர் சுமூகமாய் சீர்படுத்துவார் என்று நம்பிக்கை வைத்தாள்  மித்ரா .. அதே நம்பிக்கையில் தான் இன்று தனியாய் வீட்டை விட்டு புறப்பட்டாள் ... ஆனால் அவளே அறியாத உண்மை, அவள் வந்த பேருந்தை தொடர்ந்து கொண்டிருந்த அன்பெழிலனின் கார் .. கோபத்தின் உச்சியில் இருந்தான் அன்பு .. இருப்பினும் ஷக்தியின்  வார்த்தைக்காகவே அவளை தடுக்காமல் பின்தொடர்ந்து கொண்டிருந்தான் .. இவை அனைத்தும் அறியாமல் மித்ரா கண் மூடிய நேரம் அவள் தோழி இனியா அவளை அழைத்தாள் ... இனியாவும் சங்கமமித்ராவும் ஒரே கல்லூரியில் படித்தனர்.. சில காரணங்களினால் அதே கல்லூரியில் படிப்பை தொடர முடியாமல் சென்னையில் படித்துக் கொண்டிருந்தாள் இனியா..

" ஹெலோ மித்ரா "

" சொல்லு இனியா ?"

" அப்பாகிட்ட பேசிட்டேன் டீ.. நாங்க வந்து உன்னை பிக் அப் பண்ணிக்கிறோம் .. சாப்பிட்டியா நீ ?"

" ம்ம்ம்ம் "

" நீ சொல்லுற விதத்தில் தெரியுது டீ லூசு "

" தெரியுதுல அப்பறம் ஏண்டி கேட்குற ?"

" ஹே நானும் லாயர் தான் ..இந்த பாயிண்ட் புடிச்சு பேசுற வேலை எல்லாம் நம்மகிட்ட வேணாம் டார்லிங் அதையும் பார்க்கலாம் "

சிறிது நேரம் தோழியிடம் பேசிவிட்டு போனை வைத்த மித்ரா கொஞ்சம் நிம்மதியாய் உணர்ந்தாள்  .. சொன்னது போலவே அவளை அதிகம் காத்திருக்க தனது வீட்டுக்கு அழைத்து சென்றாள்  இனியா...

" நான் கெஸ்ட் ஹவுஸ் ல தங்கிகிறேன் இனியா ப்ளீஸ் "

" ஹே ...ஏன் இப்படி படுத்துற மித்ரா ..எவ்ளோ சொன்னாலும் கேட்கமாட்டியா ? நீ என் ரூம் ல தங்கிக்கோ என் கூடவே இரு  " என்றாள்  இனியா அன்புடன் ..எத்தனை நாட்கள் பேசாமல் இருந்தாலும் அதை கணக்கில் கொள்ளாமல்  அரவணைக்கும் குணம் தாய்மைக்கும் நட்பிற்கும் மட்டுமே உரியது .. அதை கண்முன்னே உணர்ந்தவள் இனியாவை அணைத்துக்  கொண்டு கண்ணீர் வடித்தாள் ..

" ப்ளீஸ் இனியா .. எனக்கு கொஞ்சம் தனியா இருக்கனும்..  புரிஞ்சுக்க டீ " என்றாள் ... சிறிது நேரம் யோசித்தவள் பிறகு

" சரி உன் இஸ்டம் ....பட் அங்க ஷோபா ன்னு ஒருத்தவங்க இருப்பாங்க... அப்பா கம்பனியில் வேலை செய்றாங்க .. நீ அவங்ககூடதான் தங்கணும் .. உனக்கு ஓகே யா? என்றாள் ...

" ம்ம்ம் ஓகே டீ "

" உன்னை புரிஞ்சுக்கவே முடில மித்ரா.. யாரோகூட ஒரே வீட்டில் இருப்ப ஆனா என்னோடு இருக்க மாட்ட அப்படித்தானே ? "

" இனியா ....."

"சரி சரி வா .. "

" ஷோபா அக்கா "

" வா இனியா "

" அக்கா இவ என் தோழி மித்ரா .. கொஞ்ச நாள் இங்கதான் இருப்பா .. உங்களுக்கு எதுவும் சிரமம் இல்லையே"

மேடிட்ட வயிறுடன் தாய்மை நிறைந்த புன்னகையுடன் நின்றிருந்த ஷோபாவோ மித்ராவின் கைகளை உரிமையை பற்றிக்கொண்டு

" நான் இங்க தனியா தானே இருக்கேன் ? எனக்கும் ஒரு பிரண்ட் கிடைச்ச மாதிரி இருக்கும் .. தாராளமா இருக்கட்டும்  இனியா " என்றாள் .. மித்ராவிற்கோ அவளை பார்க்கும்போது வைஷ்ணவியின் ஞாபகம் வந்தது . அவளுக்கும் கிட்டதட்ட வைஷ்ணவியின் வயதுதான் இருக்கும் ..அதனாலோ என்னவோஅவளிடம் பேசவும் பழகவும் மித்ராவிற்கு தயக்கம் இல்லை .. இரண்டு நாட்கள் கடந்து இருந்தது.. ஒரு சின்ன வேலை விஷயமாக பெற்றோருடன்  வெளியில் சென்றிருந்தாள்  இனியா .. என்றும் இல்லா திருநாளாய் சென்னை அன்று அடைமழை ..

மழையை ரசித்து கொண்டிருந்த மித்ரா, ஏதோ தவறி விழும் சத்தம் கேட்டு ஓடி வந்தாள் ... ஷோபா பாதி மயக்கத்தில் இருக்க, அவளது செல்போன் தரையில் விழுந்தது ..

" அக்கா " என்றவாறே ஓடிவந்தவள் சிதறி விழுந்த செல்போனை அவசரமாய் சரி செய்துவாறே ஷோபாவிடம் பேச முயற்சித்தாள் ..

" அக்கா என்ன பண்ணுது சொல்லுங்க ?"

" டா .... டாக்டர் கூப்டு " என்று திக்கி திணறி பதிலளித்தாள்  ஷோபா ...

அவசரமாய் அவளது தொலைப்பேசியை துலாவிய மித்ரா " டாக்டர் தேன்நிலா  " என்று பதிவு செய்து வைத்திருந்த அந்த எண்ணை  அழைத்தாள் ...

சோ நம்ம தேனும் சங்குவும் மீட் பண்ண போறாங்க ..அடுத்து என்ன நடக்க போகுதுன்னு அடுத்த எபிசோட்ல சொல்றேன் .. பை பை ....

தொடரும்

Episode # 13

Episode # 15

{kunena_discuss:777}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.