(Reading time: 19 - 37 minutes)

சித்தப்பாவின் திடீர் மறைவினால் அவர்கள் பொறுப்பை குழலீயின் தந்தை ஏற்றுக்கொண்டார். இப்போது இவளும் தொடர்கிறாள் தந்தையின் கடமையை! அம்மாவையும் சித்தியையும் பார்த்துக்கொள்ள வேண்டும்!

இதற்கிடையில் தன் லட்சியங்களை அடைய வேண்டும்! இதை வருகின்ற கணவன் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதை எல்லாவற்றையும் தாண்டி இந்த ஐந்து வருடத்தில் கடந்து வந்த துன்பங்கள், பேச்சுக்கள் என்று எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு காத்திருந்ததற்கு பலன் இருக்க வேண்டும்.

இப்படியே யோசித்துக்கொண்டு புத்தகத்தை புரட்டினாள். மோபைல் வைப்ரேஷன் உணர்ந்து அதை எடுத்தவள் சலித்துக்கொண்டாள். 'இந்த அம்மாவுக்கு வேற வேலையே இல்லை' என்று எண்ணிக்கொண்டு எடுத்தாள்.

'ஹலோ குழலீ!'

சொல்லுமா...

எங்கமா இருக்க? 

லைப்ரரியில மா..

சரி. உடனே கிளம்பி வீட்டுக்கு வா

என்னம்மா அச்சு? திடீர்னு?

எதிர்வீட்டுகார் ஏதோ பேப்பர் கொடுத்தார். அதை கார்ப்பரேசன் ஆப்பீஸ்ல கொடுக்கனுமாம் இன்னைகே. நம்ம வீட்டுக்கு ஒரு காப்பி கொடுத்துருக்கார்! கொஞ்சம் சீக்கிரம் வாமா!

கடிகாரம் நேரம் மணி மூன்று என்றது!

மா. இப்போ ட்ரெயின் கூட இருக்காதே! ஒரு மணி நேரத்துக்குப் ஒரு வண்டி தான்! நான் ட்ரை பண்ணறேன்!

அதனால தான் பத்து முறை கால் செய்தேன் நீ எடுக்கவேயிலை!

‘பத்து வாட்டியா??! அப்படினா??? அப்ப இந்நேரத்தில் அம்மா ஒரு பத்து நிமிடம் அர்ச்சனை செய்திருக்கனுமே! இவ்வளவு அமைதியா பேசறாங்க! சீக்கிறமா வானு கெஞ்சறாங்க! ஏதோ சரியில்லையே! ஏதோ தப்பாயிருக்கே!' என்று மனதில் எண்ணியவாறு தொடர்ந்தாள். 

ஏதாவது பிரச்சனையா மா? ஏதோ சரியில்லை! நீ ரொம்ப அதிக படபடப்பாயிருக்க! என்ன ஆச்சு? 

அதேல்லாம் ஒன்னுமில்லை! நீ புறப்பட்டியா? சீக்கிரம் வா' என்று கூறிவிட்டு கட் செய்தார். 

ஃபோனை எடுத்து உள்ளே வைக்க போனவள் நம்பரை பார்த்துவிட்டு தன் புத்தகப்பையை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள். 

ஹலோ குழலீ!

ஹலோ வெற்றி! என்ன இந்த நேரத்துல கால்? இஸ் எவ்ரிதிங்க் ஃபைன்? யாழினி?'

இல்ல குழலீ... அது வந்து...

என்ன ஆச்சு யாழினிக்கு?!

ஒரு சின்ன ஆக்சிடன்ட்! ஏங்கிள் ஃபரக்சர்!

எப்படி? எப்போ?

இல்ல நியுயார்க் கிளம்பி வந்த அன்னிக்கே நடந்தது. பிரபுவை பார்க்க இங்க வந்த போது அவன் இங்க இல்லைல. ஃபோன் எடுக்கலை. அவனுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருந்த போது என்னை அங்க பார்த்துட்டா! படிக்கட்டுல இறங்கி வரும் போது கால் ஸ்லிப் ஆயிட்டு கீழே விழுந்துட்டா!'

என்ன வெற்றி இது? இப்போ எப்படி இருக்கா? அப்போ நீ எப்போ இந்தியா வரப்போற? ஏன் என்கிட்ட அப்போவே சொல்லலை?

இத்துணை நாள் நான், டீனா, டேவிட் எல்லோரும் தான் பார்த்துக்கிட்டோம். யாழினி அவ வீட்டுக்கு போறா இன்னும் இரண்டு நாள்ல! அப்போவே நானும் இந்தியா வரேன்! இல்ல நீ பிரப்பரேஷன்ல கவனம் செலுத்தனும்ல அதனால தான். ஆனா இப்போ மனசு கேட்காம தான் ஃபோன் செய்தேன்!

சரி ஓகே! நீ இப்போ போய் நிம்மதியா படுத்து தூங்கு. நான் விடிஞ்சதும் கால செய்யறேன்' என்று துண்டித்தாள். 

ச்ச் இந்த பிகே னால எத்தனை பேருக்கு எவ்வளவு பிரச்சனை? ஏற்கனவே நல்லா கொளுத்தி போட்டிருக்கேன். இரு உன்னை எப்படியாவது மாட்டிவிடறேன் பாரு. சாதுவான பெண்ணேல்லாம் உனக்கு கிடைக்க கூடாது! அப்படியே இருந்தாலும் வில்லியா... ஒரு பாதி நீலாம்பரி ஒரு பாதி ஸ்வர்ணா அக்கானு கலவையா மாத்திட வேண்டியது தான். மவனே நீ சிக்கினடா!' என்று மனதில் அவனை அர்ச்சித்தாள் நடக்க போவது தெரியாமல்!

வெற்றியுடன் பேசியவாறு ஒரு வழியாக இரயில் ஏறி வந்து சேர்ந்தாள். ரயில் நிலையத்திலிருந்து வண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள். மறுபடியும் கைபேசி ஒலித்தது! எந்த மொபைலை என்ன தான் செய்வது என்று எடுத்தாள். அந்தப்பக்கம் அர்ஜுன். 

ஹே வாத்து... எங்க டீ இருக்க? 

டேய் எருமை! எப்போ டா இந்தியா வந்த? எங்க எப்படி இருக்க? நான் இப்போ தான்டா லைப்ரரியில இருந்து வீட்டுக்கு போறேன். எப்படி இருக்கனு ஒரு வார்த்தை கேட்டியாடா?

வண்டி ஓட்டிட்டு பேசாத! முதல்ல ஓரமா நிறுத்து! 

சரி நிறுத்திட்டேன் எருமை!

ஒரு கல்யாணப்பையனை இப்படியா கூப்பிடுவாங்க? பொழச்சிப்போ! ஆனா நீ என்னைக்குமே வாத்துதான்! சரி இப்போ மீட் பண்ணலாமா? 

எப்போ வந்த அதை சொல்லு முதல்ல?

இன்னைக்கு காலை தான் வந்தேன். உனக்கு படிக்கனும்னா இன்னொரு நாள் பார்ப்போம். என்ன என் ஃபியான்சியை இன்ட்றோ செய்யலாம்னு இருந்தேன்! 

டேய் ப்ரியாவையா? நான் தான் உனக்கு வாட்ஸ்அப் செய்தேன்ல! அதை படிக்கலியா?

ஏய் படிச்சிட்டு உனக்கு பதில்கூட அனுப்பினேன். அதனால என்ன இப்போ?

அதனால என்னவா? டேய் மடையா புரிஞ்சிதான் பேசறியா?! அறிவிருக்கா? 

இருக்கு டார்லிங்! அதனால தான் ப்ரியாவை கல்யாணம் செய்யப்போறேன்! யாராலையும் தடுத்து நிறுத்த முடியாது!

டேய் உன்னை யாரு இப்போ நிறுத்த சொன்னா? ஆனா உன் லைஃப் ஸ்பாயில் ஆகாம நீதான் பார்த்துக்கனும்!

தெரியும்டீ பாட்டி! நீ சொன்னதை யோசிக்காம இருப்பேனா! நீ நேரல வா.. நான் சொல்லறேன்! இன்னொரு விஷயம் சொல்லவா?!

பேசிக்கொண்டே வண்டியை எடுத்துக்கொண்டு வீட்டுக்கும் வந்துவிட்டாள்! நேரம் மாலை ஐந்தரை! வாயில் கதவு திறந்தே இருந்தது.

சொல்லுடா எருமை! ஏய் இரு.. எங்க வீட்டுக்கு யாரோ வந்திருக்காங்க! அம்மா வேற ஏதோ அவசரமா வானு சொன்னாங்க! என்ன ஆச்சுனு தெரியலையே டா? சரி சீக்கிரம் சொல்லிட்டு வை நான் அப்புறமா பேசறேன்!

சரி கேளு! ப்ரி யோட எக்ஸ் லவ்ர் பிரபுவுக்கு அடுத்த மாசம் வெட்டிங்! அதுவும் எங்க கல்யாணத்திற்கு முன்னாடியே!

அப்படியா! சூப்பர்! என்றதுடன் பிரபுவிற்கு வரப்போகும் மனைவியை எப்படி வில்லியாக மாற்ற வேண்டும் என்று நினைத்ததையும் கூறிவிட்டாள் 

சரி சரி மற்றது எல்லாம் நேரில பேசலாம்.. புதன்கிழமை ஆப்பிஸில்! ஓகே பை!' என்று இணைப்பை துண்டித்தான். பேசிக்கொண்டு உள்ளே வந்தவள் வரவேற்பரையில் இருந்தவர்களை பார்த்து அதிர்ச்சியில் ஆழ்ந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.