(Reading time: 19 - 37 minutes)

முதலில் பார்த்தவர் கனகராஜ் தான்.

இதோ குழலீயே வந்துட்டாளே! அட வாமா. உனக்காக தான் காத்துக்கிட்டிருந்தோம்!

அங்கிள்... நீ...ங்க... வாங்க வாங்க!

அவர் அருகில் இருந்த பெண்மணியை எங்கேயோ பார்த்ததுபோல் இருந்தது. மேலும் ஒரு ஜோடி அமர்ந்திருந்தனர். இவர்களை தவிர நாகராஜனும் தந்தையின் மற்றொரு நண்பர் ஆறுமுகமும் இருந்தார்கள். தாயும் தம்பியும் எதிர்திசையில் அமர்ந்திருந்தனர்.

இப்படி வா என்று கண்களால் மிரட்டினார் அம்மா.

பரவாயில்லைங்க இருக்கட்டும் என்றார் கனகராஜ். பிறகு அவர் அருகிலிருந்த மனைவி மாலதியையும் மகள் கீதா மற்றும் மறுமகன் ராஜ்குமாரை அறிமுகம் செய்து வைத்தார்.

கையை கூப்பி வணக்கம் வைத்தாலும் குழலீக்கு ஒன்றும் புரியவில்லை. எதற்காக திடீரென இவர்கள் எல்லோரும் வந்திருக்கிறார்கள்! அவர் கூறிய மாலதியையும் கீதாவையும் எங்கேயோ பார்த்த ஞாபகம்!

மாலதி தான் நினைவுகூர்ந்தார்!

ஏன் மா பூங்குழலீ தானே உன் பெயர்! என்னை நினைவிருக்கா? பத்து வருஷத்துக்கு முன்னே ஒரு செயின் திருடன்கிட்ட இருந்து நகையையும் என்னையும் காப்பாற்றுனாயே!

ஆங்ங்.. இப்போ நினைவு வந்துட்டு ஆன்டீ! எப்படி இருக்கீங்க? நீங்க அங்கிளோட வைஃப்னு இப்போதான் தெரியும்!

நான் நல்லா இருக்கேன் மா! அவ என் பொண்ணு உனக்கு தெரியும்ல?

ம்ம்..' என்று கேள்வியாய் அவர்களை நோக்கினாள். 'சரி நான் போய் ஃபேரஷ் ஆயிட்டு வரேன் அங்கிள்' என்றுவிட்டு உள்ளே சென்றாள். அவளை தொடர்ந்து அவள் தாய் லஷ்மியும்!

ஏன்டீ உனக்கு வர இவ்வளவு நேரமா? எப்போ வர சொன்னேன் இப்போ வர? மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வருவதுக்குள்ளே வந்திடுவனு பார்த்தா? இரு அவங்க கிளம்பட்டோம் அப்போ இருக்கு உனக்கு!' என்றவாறு குழலீயை தயார்படுத்தினார்.

மாப்பிள்ளையா??? என்னதான் மா நடக்குது இங்க?

உன்னை பெண் பார்க்க வந்திருக்காங்க! நீ பேசினியே அவங்க பையனுக்கு பார்க்க வந்திருக்காங்க!

பையன் யாரு என்ன ஏதுனு விசாரிக்காம வர சொல்லிட்டீங்க? நான் பையனை பார்க்கனும். அப்புறம் தான் மற்றது எல்லாம்.

போதும் போதும். இப்போ பாரு. வெளியில தான் இருக்காரு. நாம தான் முன்னமே பையன் போட்டோவை பார்த்துட்டோமே! சரி சீக்கிரம் வா' என்றுவிட்டு சென்றார்.

வரவேற்பரையில் பேச்சுக்குரல் கேட்டது! இந்த குரலை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே என்று யோசித்தவள் ஒரு நிமிடம் அப்படியே நின்றுவிட்டாள். அட.. அறிவு கேட்ட மனமே! பிரபு குரல் போல யாருக்குமே இருக்காதா? (அப்போதுகூட அவன் நினைப்புதான்!)

வரவேற்பரையில்... அப்போது தான் வீட்டிற்குள் வந்தமர்ந்தான் பிரபு. 'பொண்ணு வந்தவுடனே நாங்க கூப்பிடரோம் அப்போ புறப்பட்டு வா! நாங்க நாலு பேரும் முன்னாடி போறோம்!' என்றக்கூறி தான் வந்தனர் அவன் பெற்றோர்.

வெளியே நின்றுக்கொண்டிருந்த ஆக்டிவாவை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது! 'ஏன் குழலீ போல வேற யாருமே வண்டி வைத்திருக்க மாட்டாங்களா' (குழலீயின் நினைவுதான் இங்கேயும்!) என்று எண்ணிக்கொண்டு வரவேற்பறையை ஒரு நோட்டம் விட்டான்.

நல்ல கலைரசனையுடன் அலங்கரிக்கப்பட்ட ஒரு அறை! ராயல் லுக் தருகின்ற மர சோப்பா...அருகில் பெரிய மர பிரோ ஒன்று முழுவதும் புத்தகங்கள்! அதற்கு எதிர் சுவற்றில் 55 இன்ச் ஏல் இ டீ டிவி கேமிங் கன்சோல் ஹோம் தியேட்டருடன்! வண்ணக்கலைப் பொருட்கள் இருந்த ஷோ கேஸ்! சுவற்றில் இருந்த குடும்ப புகைப்படங்கள்! ஊஞ்சல் பலகை மாட்டும் சங்கிலி சுருட்டப்பட்டு மேலே அதற்கான கொக்கியில் தொங்கவிடப்பட்டு இருந்தது. உள்ளே நுழைந்தவுடன் பார்க்குமாறு நேராக அடுத்த அறை வாசலின் மேலே பெரிய அளவிளான பிள்ளையார்பட்டி விநாயகர் படம் அதற்கான மரியாதையுடன் மாட்டப்பட்டு இருந்தது!

ஒரு முறை பார்த்தற்கே கருத்தில் இவை அனைத்தும் பதிந்தது! 'பரவாயில்லை நல்ல இரசனையுள்ளவர்கள் தான்!' என்று எண்ணிக்கொண்டான். இதை கவனித்த அருள்மொழி,

'எல்லாம் அக்காவின் கைத்திறமை தான். அக்காவுக்கு இதில் எல்லாம் ஆர்வம் அதிகம்' என்றான் பொதுவாக!

யாராய் இருந்தாலும் ஒரு கை பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணியவாறு பூங்குழலீ வந்தாள். எளிமையான புடவையில் தலையில் ஜாதிமல்லிகையுடன் மெல்லிய பொன் நகைகளுடன் ஒப்பனை எதுவும் இல்லாமல் பார்ப்பதற்கு ஒரு இந்திய பெண்ணின் அழகு எதுவேன்று சொல்லாமலே புரிந்தது! 

நிலத்தைப்பார்த்து நடக்கும் வழக்கமே இல்லாததால் நேராக அங்கே அமர்ந்திருந்தவரகளை பார்த்து வணக்கம் வைத்தாள்! அங்கே அமர்திருந்த பிரபுவை பார்த்ததும் அதிர்ச்சியானாள். ஆனால் உடனே சுதாரித்து உணரச்சிகளை முகத்தில் காட்டாமல் மரைத்து வைத்தாள்.

'இவன் தான் மா எங்க மகன் பிரபு.' என்றார் கனகராஜ். 

'வணக்கம்' என்றாள் குழலீ. 

பிரபுவின் அதிர்ச்சி அவன் முகத்தில் தெளிவாக தெரிந்தது! எவ்வளவு கஷ்டப்பட்டு உணர்ச்சிகளை அடக்க முயன்றாலும் கொஞ்சம்தான் பலன் இருந்நது! 

இது தான்டா பொண்ணு! பெயர் பூங்குழலீ! எம் எஸ் சி, எம் பி ஏ! டீம் லீடாமா நீ? 

ஆமாம்...அங்கிள்!

ஆப்பீஸ்???

இப்போ யூஸ் ல இருக்கேன். சென்னைல தான் ஆப்பீஸ்! 

'வேகேஷனா மா?' - மாலதி

ஆம்.. இல்லை எக்ஸாம் எழுத வந்தேன்' என்று திக்கிதின்றாள். 

என்ன எக்ஸாம்? - கீதா

ஐ ஏ ஸ் மேயன்ஸ்!

ஓ! குட். வெரி குட்' என்றனர். பிரபு வாயை திறக்கவில்லை! 

ஏன் குழலீ என் மகன்கூட எதாவது தனியா பேசனுமா? எதாவது கேட்கனுமா? - கனகராஜும் மாலதியும்!

உங்க மகன்கிட்டையும் ஒரு வார்த்தை கேட்டுடூங்க!' என்றார் ஆறுமுகம். 

'என்ன பிரபு எதாவது பேசனுமா...?' - மாலதி

காப்பி எடுத்துட்டு வரேன் என்று குழலீயை உள்ளே அழைத்து சென்றார் லஷ்மி!

உள்ளே..

மா...?

என்னடீ? உனக்கு அந்த பையனை பிடிச்சிருக்குனு ஏற்கனவே சொல்லிட்டியே! அப்புறம் என்ன?

அம்மா?! நான் எப்போ சொன்னேன்?

முதலில் போட்டோ பார்த்தப்போவே சொன்னியே! 

எனக்கு இந்த பையன் வேண்டாம் மா.. நீங்க யாரை சொன்னாலும் பரவாயில்லை! இவன் வேண்டாம் மா! 

நான் முடிவு பண்ணிட்டேன். இவர்தான் மாப்பிள்ளை! 

அம்மா! 

'இதை எடுத்துட்டு போய் அவங்ககிட்ட கொடு!'

ஒரு கப் காப்பியை எடுத்து வைத்துவிட்டு தனக்காக அம்மா போட்டு வைத்திருந்த டீயை எடுத்து வைத்துக்கொண்டு நடந்தாள். விசித்திரமாக பார்த்தார் லஷ்மி!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.