(Reading time: 19 - 37 minutes)

தற்குள் வெளியே...

அப்பா.. நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்! 

என்ன சொல்லுடா? இவ தான் என் மருமக!

என் வாழ்க்கை எப்படி போனாலும் பரவாயில்லையா?

ஒன்றும் அகாது உன் வாழ்க்கைக்கு! எது வந்தாலும் குழலீ பார்த்துப்பா!

சரி உங்க இஷ்டம்! எனக்கு பேச எதுவுமில்லை!

அதற்குள் குழலீ வரவே பேச்சு நின்றது. எல்லோருக்கும் காப்பியை கொடுத்தாள்!  தனியே வைத்திருந்த டீயை பிரபுவிடம் நீட்டினாள். அந்த ஒரு நிமிடம் இருவர் கண்களும் சந்தித்தது! பார்வையிலேயே ஏதோ பேசிக்கொண்டனர்!

நீ எதாவது கேட்கனுமா மா? 

'இல்லை'என்று தலையசைக்கும் போதே மாலதி வாங்கி வந்த மல்லிகையை எடுத்து குழலீக்கு சூட்டிவிட்டு 'இந்த நிமிடத்திலருந்து நீ எங்க வீட்டு பொண்ணுமா!'

சரிங்க.. நேரா விஷயத்துக்கு வரோம்! எங்களுக்கு பெண்ணை பிடிச்சிருக்கு.. மகனுக்கும்தான்! மேற்கொண்டு நீங்க சொன்னீங்கனா பேசலாம் மா!

எங்களுக்கும் பிடிச்சிருக்குங்க உங்க குடும்பத்தையும் மகனையும்! - லஷ்மி 

சரி. மேற்கொண்டு செய்வதைப்பற்றி பேசலாம். 'எப்போ குழலீ நீ ஊருக்கு புறப்படுற?' - மாலதி

டிகம்பர் இருபது.... என்று தடுமாறினாள்.

திரும்ப வருகிற ஐடியா இருக்கா? - கீதா

இருக்கு! மேனேஜர் ப்ரமொஷன் எதிர்ப்பார்த்திருக்கேன். வந்துட்டா சென்னையில் தான். 

எக்ஸாம் க்ளியர் பண்ணாலும் சென்னை தானே! - கீதா. ஆமாம் என்றாள் குழலீ. 

உங்களுக்கு பிரச்சினை இல்லைனா திருமணத்திற்கு முந்திய நாளே நிச்சயத்தை வைத்துக்கலாம். இல்லைனா வர ஞாயிறு நல்ல நாள்தான். அன்று ஒப்புத்தாம்பூலம் மாற்றிக்கலாம். குழலீ ஊருக்கு புறப்படறத்துக்கு முன்னாடி திருமணத்தை முடிச்சிடலாம். என்ன சொல்லறீங்க?

இவ்வளவு வேகமாக அம்மாவும் அவன் குடும்பத்தினரும் அப்பாவின் நண்பர்களும் திட்டமிடுவதை பார்த்து திகைத்து நின்றாள்! அதே நிலைமைதான் பிரபுவுக்கும்! ஒருவரையொருவர் பார்த்து முறைத்துக்கொண்டிருந்தனர். அதற்குள் மற்றவர்கள் திட்டம்தீட்டி இவர்களை சிக்கவைக்க நாளும் குறித்துவிட்டனர்! 

கீதா எழுந்துவந்து குழலீயருகில் அமர்ந்து மெல்லிய குரலில், 

'அண்ணி..அண்ணி.. அப்புறமா எங்க அண்ணனை நல்லா சைட் அடிக்கலாம்! இப்போ கொஞ்சம் எங்களையும் கவனிங்க!'

அவள் குரல் கேட்டு சுயநினைவுக்கு வந்தவள், பேசியவற்றை கவனித்துவிட்டு முகம் செம்மையுற புன்னகைத்தாள் குழலீ!

அய்யோடா! வெட்கப்படறீங்களா?! ரொம்ப க்யூடா அழகா இருக்கீங்க! இப்படியே சிரிச்சுக்குடே இருங்க! இந்த டேட்ஸ் ஓகேவா பார்த்து சொல்லுங்க?

அப்போது தான் கவனித்தாள் தான் எவ்வளவு நேரமாய் பிகேவை வைத்தக்கண் வாங்காமல் பார்த்திருக்கிறோம் என்று! 

லஷ்மியும் தான் பேசிக்கொண்டிருந்தார். 'ஒரு முப்பத்தைந்து பவுன் போடுவேன்ங்க! அத்துடன் இரண்டு கிலோ வெள்ளி. மாப்பிள்ளைக்கு பத்து பவுன். திருமண செலவு...'

'உங்க பெண்ணுக்கு நீங்க என்ன செய்ய விரும்பறீங்களோ உங்க இஷ்டம். நாங்க எதுவும் கேட்கலை, கேட்கவும் மாட்டோம்! திருமண செலவை பகிர்ந்துக்கலாம்! என்ன சொல்லறீங்க?' என்றார் மாலதி.

அப்போ நாள் முடிவு செய்துடலாமா? இரு குடும்ப மனத்திருப்திக்காக வர ஞாயிற்றுக்கிழமை ஒப்புத்தாம்பூலம் செய்திடலாம் இங்கேயே உங்க வீட்டிலேயே! 

இன்று வெள்ளிக்கிழமை. அப்போ ஒரு நாள்தான் இருக்கு இடையில்! அதுக்குள்ள எப்படி? நெருங்கிய சொந்தம் மட்டும் கூப்பிட்டா போதுமா?' - குழலீயின் அம்மா.

சரிங்க. மார்கழிக்கு முன்னாடி இருக்கிற மூஹுர்த்தம்ல டிசம்பர் பன்னிரண்டாம் தேதி தான் இரண்டு பேர் ஜாதகத்துக்கும் பொருந்தி வருது! அதனால அதற்கு முன்தின நாள் நிச்சயதார்த்தம் வைத்துட்டு பன்னிரண்டாம் தேதி நாலரை டூ ஆறு மூஹுர்த்தம்ல திருமணம்! அன்னைக்கு ஈவ்னிங் வரவேற்பு! இனி மண்டபம், சாப்பாடு, பத்திரிக்கை மற்ற வேலைகள் தான் இருக்கு!

பேசியதை கேட்டு 'அம்மா!!' என்று திகைத்தாள் குழலீ. 

என்ன ஆச்சு குழலீ டேட்ஸ் எதாவது பிரச்சினையா? என்றார் அம்மா.

அம்மா எனக்கு எக்ஸாம் டிசம்பர் பத்தாம் தேதியிலிருந்து ஆரம்பம்! புதன்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் பதினான்காம்நாள் வரை தொடர்ந்து ஐந்து நாள் எக்ஸாம்! டிசம்பர் 12 முக்கியமான எக்ஸாம்! நான் இப்போவிட்டா எப்பவுமே எழுத முடியாது மா! ஒன்னு அடுத்த மாதம் வைங்க இல்லை இந்த பேச்சை இதோட நிறுத்திருங்க!' என்றாள் குழலீ. 

அவள் கூறியதை கேட்டு அனைவரும் பேச்சற்று போனார்கள். ஒருவர் மட்டும்  அங்கே மாட்டியிருந்த புகைப்படம் ஒன்றை கவனித்துவிட்டு ஏதோ தீவிர சிந்தனையில் இருந்தார்! (யாரு நம்ம பிரபுதான்!) யோசித்து இந்த பிரச்சினைக்கு முடிவு கூறிய போது எல்லோருடைய மனதிலும் முகத்திலும் ஆனந்தம்! பூங்குழலிக்கோ பேரதிர்ச்சி!!!

தொடரும்...

Episode # 05

Episode # 07

{kunena_discuss:833}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.