(Reading time: 9 - 17 minutes)

2nd august 2004

பொழுது புலர்ந்தது, லக்ஷ்மி அம்மாள் மெல்லிய குரலில் விஷ்ணு சஹாஸ்ரனமம் சொல்லி கொண்டே வாசல் தெளித்து கோலம் போட..மீராவிற்கு முழிப்பு தட்டியது. மீராவிற்கு அம்மாவின் இந்த மெல்லிய குரலில் எழுந்திரப்பது மனதிற்கு அந்த நாளின் தொடக்கத்திற்கு உற்சாகமாக இருக்கும்.சிறிது நேரம் அம்மாவை ரசித்து விட்டு அன்றைய வேலைகளை மனதிற்குள் பட்டியலிட்டால்.அப்பா வாக்கிங் சென்றுருக்க வேண்டும். வீடு இவ்வளவு அமைதியாக இருந்தாலே அப்பா வெளியில் என்று புரியும் ,அவர் இருந்தால் நொடிக்கு ஒரு தரம் அம்மாவை கூப்பிட்டு கொண்டே இருப்பார். அம்மாவும் அலுக்காமல் அனைத்திற்கும் பதில் சொல்லுவார். மீராவின் அப்பா புருஷோத்தமன். வெகு இயல்பான மனிதர். மனைவி பெண்ணின் மீது உயிரையே வெய்த்து இருப்பவர் .மீராவிற்கு தெரிந்து அவர் அனாவசியமாக வெளியில் செல்லவும் மாட்டார். லக்ஷ்மி அம்மாள் சமையல் தவிர வெளியில் அவர் சாப்டுவதும் மிக அரிது.அப்பாவிற்கு ஒரு அட்டவணை உண்டு. காலை 4:30 மணி வாக்கிங் சென்று விடுவார்.6 மணி வருவார். கண்டிப்பாக லக்ஷ்மி அவருடன் காபி அல்லது டீ அருந்த வேண்டும். அதன் பின்னர் சிறிது நேரம் மெல்லிய ஒலியில் வயலின் அல்லது flute இசை கேட்பார்.8 ஆனதும் குளியல் முடித்து கந்த ஷஷ்டி கவசம் சொல்லி முடித்து லக்ஷ்மி அம்மாள் நெற்றியில் குங்கமம் வெய்த்து விட்டு மீரா எழுந்து குளித்து இருந்தால் அவளுக்கும் நெற்றியில் இட்டு விட்டு சாப்பிட வருவார், இதுதான் வேண்டும் என்று எல்லாம் அவர் demand செய்ததில்லை. அம்மா என்ன செய்து இருந்தாலும் முதல் வாய் மீராவிற்கு கொடுத்து விட்டு சாப்பிடுவார். லக்ஷ்மி அம்மாள் அருகிலேயே இருக்க வேண்டும் கடைசி வாய் லக்ஷ்மி அம்மாளுக்கு கொடுத்து விட்டு ஆபீஸ் செல்ல தயார் ஆவார். அவர் உடுத்த, எடுத்து செல்ல எல்லாம் தயார் நிலையில் இருக்கும். அலுவலகம் அவர் கிளம்பினால் மணி 9:30 என்பதை யாரும் கடிகாரம் பார்க்காமலே சொல்லாம். அதே போல் மாலை 7:00 மணி என்பதை புருஷோத்தமன் கார் வந்தால் தெரிந்து கொள்ளலாம்.அதன் பிறகு 8:00 மணிக்கு சாப்பிடுவார். ஒரு மணி நேரம் நிதானமாக ஏதும் நியூஸ் சேனல் இல்லையேல் லக்ஷ்மி அம்மாளுடன் எதாவது பேசி கொண்டிருப்பார். அதன் பிறகு மீரா இருந்தால் அவளுடன் சிறிது நேரம் எதாவது அரட்டை அடிப்பார். அவள் வர தாமதம் ஆனால் ஊஞ்சலில் அனந்த சயனம் கொள்வார். லக்ஷ்மி மெதுவாக அவர் காலை பிடித்து விட்டு கொண்டு மெல்லிய குரலில் ஏதும் பாடி கொண்டிருப்பார். அழகான அமைதியான இந்த தாம்பத்தியத்தின் ராகம்தான் மீரா.

வழக்கம் போல் குளித்து தயார் ஆகி அப்பாவிடம் குங்கமம் வெய்த்து கொண்டு காலை உணவை முடித்து அம்மா அப்பாவிடம் " அம்மா நான் ஹாஸ்பிடல் போய்ட்டு கண்ணன் பார்த்துட்டு அப்டியே ஆபீஸ் போறேன், ஈவெனிங் ஆபீசெலேர்ந்து கிளம்பும்போது கால் பண்றேன்,டைம் கரெக்டா இருந்த சேர்ந்து ரங்காச்சாரி போய்ட்டு வந்துடலாம் ஓகே, bye பா என்று சொல்லி தனது காரில் கிளம்பினாள்.

லக்ஷ்மி லாஸ்ட் டைம் அரக்குல காட்டன் புடவை எடுக்கணும்னு சொன்னியே இப்போ கிடைச்ச வாங்கிக்கோ அப்டியே அங்க மல்லிப்பூ நன்னா இருக்கும் வாங்கிக்கோ, நானும் இன்னிக்கு மீட்டிங் சீக்ரம் முடிஞ்சா உங்க கூட join  செஞ்சுக்கறேன், என்று சொல்லி புருஷோத்தமனும் கிளம்ப, லக்ஷ்மி அம்மாள் முருகா இப்டியே அமைதியா வாழ்கை போக கூடவே இரு என்று வேண்டி கொண்டு அடுத்த அடுத்த வேலைகளை செய்ய ஆரம்பித்தார்.,

வேண்டுவது எல்லாம் நடந்து விடுமா என்ன !!!!

தொடரும்

Episode # 01

Episode # 03

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.